சில்லென்ற தென்றல் காற்றே,
சிலுசிலுக்கும் மேனியில் படாதே,
என்னழகைக் கண்டு மயங்கும்,
என்னவள் இங்கு வந்து சேரட்டும்.
மெல்லிசை கொலுசு பாடும்,
மெல்லிய பாதம் நோகும்!
அடி ஒன்று எடுத்து வைத்த பின்னே,
அடியவள் பாதம் வருடி விடுவாயே!
புல்லில் படிந்த பனிநீரால்,
பாதத்து மண்ணைக் கழுவி விடு!
பாதையில் மலர்ந்த பூக்களால்,
பாவைக்கு மலர் கம்பளம் விரித்துவிடு!
மரத்தடியில் படுத்துறங்கும் சருகுகளை,
மல்லுக்கட்டி இடம் பெயர்த்துவிடு!
நுண்மணல் தரையில் பரப்பி,
நூதனமாய் மகரந்தம் தூவிவிடு!
காதல் ஜோடி அன்பைப் பரிமாறும்வரை,
கண்ணிமைக்காது காவல் காத்து நிற்பாயே!
மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தை,
மூடிய முகத்துடன் மும்மரமாய் கண்கானிப்பாயே!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக