Designed by Enthan Thamizh

1965 - ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படம் 7 திரையரங்குகளில் வெள்ளிவிழா கொண்டாடி தமிழ் திரையுலகில் புதிய சாதனை படைத்தது. . எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்தவரை அந்த சாதனை முறியடிக்கப் படவில்லை. படத்தி்ன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. படத்தில் நடித்த கலைஞர்கள் பேசினார்கள். இறுதியில் எம்ஜிஆர் பேசினார். அவர் பேசுவது மக்களுக்கு தெளிவாக கேட்பதற்காக மேடையில் ஏற்கனவே இருந்த மைக்குடன் இன்னொரு மைக்கும் வைக்கப்பட்டது. படத்தில் வில்லனாக நடித்த குருசாமி நம்பியார் நிஜத்தில் தமாஷ் பேர்வழி. அவர் வேடிக்கையாக,.. ''இது அநியாயம்.. நாங்கள் பேசும்போது ஒரு மைக். எம்ஜிஆருக்கு மட்டும் 2 மைக்கா..." என்று கலகலப்பூட்டினார். எம்ஜிஆர் சமயோசிதமாக,.."எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் நான் மட்டும்தான் இரட்டை வேடம். அதனால்தான் எனக்கு 2 மைக்.."என்றார்.சிரிப்பாலும் கரகோஷத்தாலும் அரங்கு அதிர்ந்தது..😀