Designed by VeeThemes.com

*🅾❇மனைவி இறந்த இரண்டே மாதங்களில் கமல் ஹாஸனின் அண்ணன் மரணம்*🔴



 மனைவி இறந்த இரண்டு மாதங்களில் சந்திர ஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

கமல் ஹாஸனின் சகோதரர் சந்திரஹாஸன்(82) மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அனு ஹாஸனின் வீட்டில் அவர் தங்கியிருந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

கமலின் இரண்டாவது அண்ணனான சந்திர ஹாஸன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேனல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார். தம்பி கமலுடன் சேர்ந்து படங்களை தயாரித்து வந்தார்.

சந்திர ஹாஸனின் மனைவி கீதாமணி கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். மனைவி இறந்த 2 மாதங்களில் சந்திர ஹாஸனும் இறந்துள்ளார்.

அனு ஹாஸனுக்கு நிர்மல் ஹாஸன் என்ற சகோதரர் உள்ளார்.l

சந்திர ஹாஸன், நிர்மல் ஹாஸனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை கடந்த ஆண்டு கமல் சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக