சேலம் அருகே தாரமங்கலம் வழியாக, பல கோடி ரூபாய்💰 மதிப்புள்ள மரகத லிங்கம்🙏 கடத்தப்படுவதாக 👮போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பால்பண்ணை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த 🚗காரை மறித்து 👮போலீசார் சோதனையிட்டனர். அதில் 7⃣ கிலோ எடை கொண்ட பச்சை மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.25 கோடி💰 இருக்கும் என ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். இதுதொடர்பாக காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 5⃣ பேர் கைது⛓ செய்யப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக