Designed by Enthan Thamizh

பாலாற்றில் தடுப்பணை🏗கட்டுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு🔈 இல்லை-சீரும்😡 விவசாயிகள்



காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர்🚰ஆதாரமாக விளங்கி வரும்💧பாலாற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன😳. இந்நிலையில் அரசு தாக்கல் செய்த 📜பட்ஜெட்டில் தடுப்பணை அமைப்பதற்கு நிதி 💸ஒதுக்கீடு மற்றும் தடுப்பணை திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும்🔈 வரவில்லை என்பதால்🏛அரசின் மீது விவசாயிகள் கடும்😠அதிருப்தியில் உள்ளார்கள். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது என்னவென்றால்🎙, "தடுப்பணை இல்லாததால் மழைநீர்🌊கடலில் வீணாகக் கலக்கிறது. மேலும், நிலத்தடியில் கடல் நீர் ஊடுருவியுள்ளதால் கரையோர🏝விவசாய நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது😱. இதனால், ஆற்றில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்👍. பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது😟. வாழ்வாதாரமான விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாததால், தினசரி குடும்ப தேவைக்காக கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது😳. அதனால், அரசு விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும். பாலாற்றங்கரையோர கிராமங்களில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்😠." இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்🔈.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக