Designed by VeeThemes.com

*🅾❇ஜி.வி.பிரகாசுக்கு போஸ்டர் ஓட்டிய விஜய் ரசிகர்கள்*🔴


இளவட்ட ஹீரோக்களிடம் உங்களுக்கு பிடித்தமான தமிழ் நடிகர் யார் என்று கேட்டால், விஜய், அஜித் என இரண்டு பேரின் பெயரையும் சொல்வார்கள். யாராவது ஒருவரை மட்டும் குறிப்பிட்டால் மற்றொருவர் கோபப்படுவாரோ என்கிற எண்ணம்தான் அதற்கு காரணம். ஆனால், இந்த விசயத்தில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் விஜய் அண்ணாதான் என்று தைரியமாக சொல்லி விஜய்யிடம் தனக்கு பிடித்த விசயங்களையும் பட்டியலிடுகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இப்படி விஜய்யின் ரசிகராக இருந்து சாதாரண ரசிகர்களைப்போன்று அவருக்கு ஒன்று என்றால் ஜி.வி.பிரகாஷ் வரிந்து கட்டுவதால், இப்போது விஜய்யின் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்கள் திரைக்கு வருபோதும் விஜய் படங்களுக்கு போஸ்டர் ஒட்டி வரவேற்பு கொடுப்பதுபோன்று ஜி.வி., படங்களுக்கும் கொடுக்கிறார்கள்.

அந்தவகையில் நேற்று திரைக்கு வந்துள்ள ஜி.வி.பிரகாஷின் புருஸ்லீ படத்திற்கு கட்அவுட், போஸ்டர் என ஒட்டியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.இதுஒருபுறம் இருக்க, இப்படியொரு மோசமான படத்திற்கு விஜய் ரசிகர்கள் போஸ்டர் எல்லாம் ஒட்டி கொண்டாடுவதை சமூகவலைதளங்களில் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக