Designed by VeeThemes.com

*🅾❇டோரா நயன்தாராவுக்காக எழுதப்பட்ட கதை*🔴


இயக்குனர் சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி உள்ள படம் டோரா. நயன்தாரா தான் படத்தின் முதன்மையான ரோல். அவரின் தந்தையாக தம்பி ராமய்யாவும், வில்லனாக ஹரீஷ் உத்தமனும் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் சிவா மெர்வின் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் கதை நயன்தாராவுக்காக எழுதப்பட்டது என்கிறார் இயக்குனர் தாஸ் ராமசாமி. அவர் மேலும் கூறியதாவது:எனது குருநாதர் சற்குணத்தின் அனைத்து படங்களிலும் நான் உதவியாளராக இருந்தேன். தனியாக படம் இயக்குவதற்கு ஸ்கிரிபிட் தயார் செய்து கொண்டிருந்தபோது குருநாதர் அழைத்து "என்னிடம் நயன்தாரா கால்ஷீட் இருக்கிறது. அவருக்கு ஒரு கதை எழுத முடியுமா என்று கேட்டார்.

அப்போது அவர் நடித்த மாயா படம் வெற்றி பெற்றிருந்த நேரம். அது போன்ற கதைகளை அவர் விரும்புவதாக கேள்விப்பட்டேன். அதை மனதில் வைத்து டோரா கதையை உருவாக்கினேன்.ஏற்கெனவே பேய் படங்களை பார்த்து மக்கள் சலித்துப்போய் இருக்கிறார்கள். அதனால் இது சாதாரண பேய் படமாக இருக்க கூடாது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து காரை பேயாக மாற்றினேன்.

காரை பேயாக வைத்து தமிழிலும், ஹாலிவுட்டிலும் சில படங்கள் வந்திருக்கிறது. அந்த சாயலும் இருக்க கூடாது என்று மிகவும் சிரமப்பட்டு இதை உருவாக்கினேன். காரும் படத்தின் முக்கிய கேரக்டராக வரும். நயன்தாராவின் கேரக்டர் பெயர் பவளக்கொடி.

ஆண்கள் போன்று உடை அணிவது மட்டுமல்லாமல் ஆண்களை போன்ற வீரமானவராகவும் நயன்தாரா கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. பேய் படமாக இருந்தாலும், இதை ஒரு பெண்ணின் துணிச்சலை பேசும் படமாகவும் கொள்ளலாம். நயன்தாரா, எனது குருநாதர் சற்குணம் படம் பார்த்து பாராட்டினார்கள். ரசிகர்களும் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக