Designed by Enthan Thamizh

தீபாவின் பேரவை கலைக்கப்பட்டதா😳⁉



ஜெயலலிதாவின் ⚰மறைவிற்கு பின்னர், அதிமுக தொண்டர்கள் சசிகலாவின் ஊடுருவலை வெறுத்து ஜெ.வின் அண்ணன் மகளான தீபாவிடம் தஞ்சம் அடைந்தார்கள்👍. மீதமுள்ள தொண்டர்கள் ஓ.பி.எஸ். அணியில்👬 இணைந்தார்கள். இதனையடுத்து தீபா மக்களுக்கு நல்லது செய்யப்போவதாக வாக்குறுதி அளித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா என்ற பேரவையை தொடங்கினார். வரும்🗳 இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக தகவல்களும் 📰வெளியானது. தற்போது திடிரென்று தீபாவின் கணவர் மாதவன் கருத்துவேறுபாடு காரணமாக வெளியேறி புது கட்சியினை தொடங்க போவதாக இன்று அறிக்கை விடுத்தார்🔈. இதனை தொடர்ந்து, தீபா பேரவை தொடங்கிய நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்😳. இதனை தொடர்ந்து தீபா பேரவை தொடங்க காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் தற்போது தீபா பேரவையை கலைக்க முடிவு செய்து நிர்வாகிகளுக்கு✍ கடிதம் எழுதியுள்ளாராம். இது தொடர்பாக நாளை திருவானைக்காவலில் நடைபெறும் ஆலோசனை 🤔கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்🔈. திருச்சியில் தீபா பேரவை கலைக்கப்படுவது போல தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த பேரவை கலைக்கப்படும்😯 என தெரிகிறது. மேலும், தீபா பேரவையை கலைக்கும் நிர்வாகிகள் ஓ.பி.எஸ். அணியில் இணைய👍 திட்டமிட்டுள்ளனர். இது தீபாவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்😟 என்ற தெரிகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக