உத்தரபிரதேசம் சட்டசபை🗳 தேர்தலில் 325 தொகுதிகளில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை 💐பெற்றுள்ளது. இந்நிலையில் யாரை 💺முதல்வராக அறிவிப்பது என்ற குழப்பத்தில் டெல்லியில் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொடர்ந்து ஆலோசித்தனர்🤔. முதலில், அந்த மாநிலத்தின் பா.ஜ., தலைவர் கேசவ் மவுரியாவுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது😳. ஆனால், தற்போது உ.பி.,யை சேர்ந்த ஆதித்யாநாத்தை முதல்வராக்க பா.ஜ., முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி😯 உள்ளது. மேலும், துணை முதல்வராக மவுரியா, மற்றும் தினேஷ்சர்மா ஆகியோர் பதவியில் நிர்ணயிக்க படுவார்கள் என்றும் கூறப்படுகிறது🙂. கோர்காநாத் மடத்தின் சாமியாராக இருந்த யோகி ஆதித்யாநாத் சிறந்த பார்லிமென்டேரியன் என்று பெயர் பெற்றவர்👍, இவரது பேச்சு🎙 அனல் பறக்கும் விதமாக இருக்கும்😳 என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக