Designed by VeeThemes.com

🐆 சிறுத்தையால் நெல்லை மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்😱



நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட 🏠வீடுகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 3⃣ ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் புகுந்து வருகின்றன. வயல்கள் மற்றும் தோட்டங்களில் விளைவிக்கப்படும் நெல், வாழை, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திவிடுகின்றன😟. நூற்றுக்கும் மேற்பட்ட 🐐ஆடு, 🐮மாடு, 🐶நாய் வளர்ப்பு விலங்குகளை தூக்கிச் செல்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது பொதுமக்கள், வனத்துறையினரை தடுத்து நிறுத்தி, சிறுத்தை வருவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வலியுறுத்தினர். வனவிலங்குகளால் உயிருக்கு ஆபத்து ஏற்ப்டுமோ என்று அச்சம் இருப்பதாகவும், அதிகாரிகள்👮 உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக