Designed by Enthan Thamizh

அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே . மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல
விரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே. 

மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி  குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம்.  கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு. 

ஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ''ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா'' என்று கோபாலனை அனுப்பினார். 

அவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான். வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்திரி என்கிற வியாதிக்கார நம்புதறி காத்திருந்தார். ஏன் அவன் இன்னும் வரவில்லை? 

சற்றைக்கெல்லாம் அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி

''என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா? ''

'' ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது'' என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது'' 

''அப்படி என்ன ஜோசியர் சொல்லி விட்டார்?''

கோபாலன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி ''புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்'' என்றான். 

''குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம்  செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார். 

அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன். 
நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ?'' கோபால குட்டன் அழாத குறையாக சொன்னான். 

பட்டத்திரி யோசித்தார். அவருக்கு சிரிப்புவந்தது. ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.

மனம் சந்தோஷம் அடைந்தது. ''கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கோ''

''ஏய், இதென்ன அக்கிரமம். நான் வரமாட்டேனாக்கும்'' என்றான் கோபாலன். உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது. நான் ஒப்புத்துக்க மாட்டேன். உங்களுக்கு வேணா எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாபத்துக்கு நான் துணை போக விரும்பலே.'' ரொம்ப கோபத்துடன் கோபாலன் கத்தினான். 

பட்டத்திரி என்ன சமாதானம் பண்ணியும் கோபாலன் கோபம் அடங்கவில்லை. '' ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா'' என்று திருப்பித் திருப்பி சொல்லி கடைசியில் கோபாலன் ஒரு வழியாக அமைதியானான். 

''ஜோசியன் சொன்னது நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே. அதற்கு அர்த்தம் வேறே. ''மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்'' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான். 

''மத்ஸ்யம் தொட்டு'' என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன். நீ என்ன பண்றே. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.'' அப்பாடா, கடைசியில் சுலபமாக வாத நோய் குணமாக ஒரு பரிகாரம் கிடைத்ததே என்ற சந்தோஷம் அவருக்கு. 

''ஒ, நான் ஒரு முட்டாளாக்கும் . இப்படி ஒரு அர்த்தமோ இதுக்கு. அதுவும் நம்பூதிரி, அதுவும் குருவாயுரப்பன் கோவில்லே உள்ளே மீனை வாயில் வைத்துக்கொண்டு............'' என்று அந்த ஜோசியன் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்ஜிண்டுட்டேன். நம்பிவிட்டேன் . அதாக்கும் கோபம் வந்துது. ''

பட்டத்திரிக்கு இன்னுமொரு சந்தோஷம் என்ன வென்றால் அவருடைய குரு கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று. அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது. 

''நாராயண பட்டத்திரிக்கு எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன ? '' என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர். 

நடக்க முடியாதே பட்டதிரிக்கு. ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்துத் கொண்டு குருவாயூர் சென்றனர். ''எப்போ குருவாயூர் வரும், எப்போ நாராயணனைப் பார்ப்போம்'' --- பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளைக் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம்'' என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். '' ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' -- அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர். 

தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள்,  அனைவரும் அவனைத் தொழ வருவார்களே. அவர்களில் ஒருவராக பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.

பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்? இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி. 

அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, '' என் கண்ணா'' என பக்தியுடன் கதறினார்.  சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை. 

அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ''ஏ உன்னிக் கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!'' என்று கதறுகிறார். 

'' இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா'' என்று அழுது கண்ணீர் மல்குகிறார். 

அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம்

'' சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு'' என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .

குருவாயூரப்பன் சும்மாவா இருப்பான் ? அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை வேலை செய்து, அவருக்கு வாத ரோகத்தை வேறு கொடுத்து இழுத்து வந்திருக்கிறான். முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான் .

''நாராயண பட்டத்திரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா ?''

'' அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? ''

'' பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா ?. பட்டத்திரி. நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி'' என்று கூறி கிருஷ்ணன் அனுக் ரஹம் செய்கிறார். 

(இப்பொழுதும் குருவாயூர் ஆலயத்தில் 'நாராயண பட்டத்ரி மண்டபத்தில்' உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.)

அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, 'நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்'' என்று எழுதி வைத்திருக்கின்றனர். சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், ''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ''பட்டத்ரி மண்டபம்'' என்று பேர்'' குருவாயுரப்பனே கூறினார்.)

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.

'' நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க, 
'' உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்'' என்று குருவாயூரப்பன் கூறுகிறான். 
'' நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்''

ஒரு முக்ய விஷயம். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார். 

குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம் 

"ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்" 


⭐சசிகுமார் அடுத்தாக 'குட்டிப்புலி' இயக்குனர் 🎬முத்தையா இயக்கத்தில் 🎥'கொடி வீரன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் ⭐சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் 👿ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சசிகுமார் தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.   


சேலம் அருகே தாரமங்கலம் வழியாக, பல கோடி ரூபாய்💰 மதிப்புள்ள மரகத லிங்கம்🙏 கடத்தப்படுவதாக 👮போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பால்பண்ணை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த 🚗காரை மறித்து 👮போலீசார் சோதனையிட்டனர். அதில் 7⃣ கிலோ எடை கொண்ட பச்சை மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.25 கோடி💰 இருக்கும் என ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். இதுதொடர்பாக காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 5⃣ பேர் கைது⛓ செய்யப்பட்டனர்.   


 மனைவி இறந்த இரண்டு மாதங்களில் சந்திர ஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

கமல் ஹாஸனின் சகோதரர் சந்திரஹாஸன்(82) மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அனு ஹாஸனின் வீட்டில் அவர் தங்கியிருந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

கமலின் இரண்டாவது அண்ணனான சந்திர ஹாஸன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேனல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார். தம்பி கமலுடன் சேர்ந்து படங்களை தயாரித்து வந்தார்.

சந்திர ஹாஸனின் மனைவி கீதாமணி கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். மனைவி இறந்த 2 மாதங்களில் சந்திர ஹாஸனும் இறந்துள்ளார்.

அனு ஹாஸனுக்கு நிர்மல் ஹாஸன் என்ற சகோதரர் உள்ளார்.l

சந்திர ஹாஸன், நிர்மல் ஹாஸனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை கடந்த ஆண்டு கமல் சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சந்திர ஹாசனின் மனைவி கீதா மணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார். பரமக்குடியில், 1936-ம் ஆண்டு பிறந்த சந்திர ஹாசன் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.  
*Professional Ethics:* 😜

தொண்டன்: எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் ஐஞ்சாயிரம் தர்றீங்க?
வாங்கிட்டு போடலன்னா?"

தலைவன்: "அட...விடுடா...
வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? 
குடிப்பான்.
அவன் குடிக்குற பார் நம்மளது.

ஓவரா குடிச்சா குடல் வெந்து ஆஸ்பத்திரி சேர்வான்.
ஆஸ்பத்திரியும் நம்மளது.

அதுவும் இல்லாட்டி--ஸ்கூல்-காலேஜ் பீஸ் கட்டுவான்.இது ரெண்டுமே நம்மளது...

கவலப்படாத-எங்க சுத்துனாலும்,நம்ம பணம் நம்மட்ட வந்துரும்...

என்ன நடுவுல ஒரு ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும்... அவ்வளவு தான்...

*#படித்ததில்  நொந்தது..*😂 😅 


நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட 🏠வீடுகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 3⃣ ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் புகுந்து வருகின்றன. வயல்கள் மற்றும் தோட்டங்களில் விளைவிக்கப்படும் நெல், வாழை, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திவிடுகின்றன😟. நூற்றுக்கும் மேற்பட்ட 🐐ஆடு, 🐮மாடு, 🐶நாய் வளர்ப்பு விலங்குகளை தூக்கிச் செல்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது பொதுமக்கள், வனத்துறையினரை தடுத்து நிறுத்தி, சிறுத்தை வருவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வலியுறுத்தினர். வனவிலங்குகளால் உயிருக்கு ஆபத்து ஏற்ப்டுமோ என்று அச்சம் இருப்பதாகவும், அதிகாரிகள்👮 உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


ராஜமௌலி இயக்கத்தில்🎬 பிரபாஸ், 💃அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் 'பாகுபலி-2'. இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு பெரும் சாதனையை அடைந்துள்ளது😳. இதனையெடுத்து, இப்படத்தின் வெளியீடு தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது😍. வரும் ஏப்ரல் 28ந் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வ🤗 தகவல் வந்துள்ளது. மேலும், இதில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் 'பாகுபலி-2' முற்றிலும் புதுமையான முறையில் ஐமேக்ஸ் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிட போகிறார்களாம். 



இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. தமிழக விவசாயிகளுக்கு🏛 மத்திய அரசு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்😯. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ராஜலட்சுமி என்ற விவசாயி🔈 கூறுகையில், "எங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி மத்திய 🏛அரசிடம் கொடுத்தோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைகளை கண்டுக்கவில்லை😟. நாலு நாட்களாக பசியும் பட்டினியுமாய் உள்ளோம்😟. பனியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டத்தில் இருந்த 4 பேரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம்😳. எங்கள் மரணத்தை😢 பார்த்தாவது உங்களுக்கு ஈவு இரக்கம் வருமா?", என்று கூறியுள்ளார். இந்தநிலையில் இன்று மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணா இவர்களுது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததாகவும், அதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கை விட்டதாகவும் கூறப்படுகிறது😳.


மணி அடித்து பூஜை 
செய்வது என்பது நாம் 
அனைவரும் அறிந்த ஓன்று .
அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன . 

பூஜை ஆரம்பிப்பதற்கு 
முன்னால் மணி அடித்தால், 
அந்த மணி சப்தம் கேட்டதும் 
வீட்டில் எதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் 
அது வெளியே ஓடிவிடும்.

துர்தேவதை, 
போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; 
அதனால், மணியடித்து 
அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.

ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும்
ஒருவேளை வந்து விடலாம். 
அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், 
அவை இருக்குமிடத்தில் தெய்வங்கள் வரமாட்டார்கள்! தினமும் மணி அடிப்பதால் 
அந்த மணி துர் சக்திகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதோடு மட்டுமில்லாமல், 
தேவர்களையும், 
தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் 
போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அதனால்.! 
மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். பூஜையின்போது, 
இறைவனுக்கு படையல் போடுவதை நைவேத்யம், நிவேதனம் என்று சொல்வர். நிவேதனம் என்ற சொல்லுக்கு அறிவித்தல் என்று பொருள். 
அந்த அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே மணியாகும்.

கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் 
கொண்டே இருக்கும். 
அப்படி கோயில்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, 
இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் கிராமத்தை விட்டு ஓடி விடும்.

இத்தகைய சிறப்பு மிக்க அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் 
கூறுகின்றன ! 

இந்த பூஜா மணியின் 
அதிதேவதை வாசுதேவர் !

மணியின் நாக்குக்கு 
     அதிதேவதை சரஸ்வதி ! 

அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியன்.!

நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன் !

எனவே , 
மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

காண்டா மணி 
    பூஜைக்கான மந்திரம்:

"ஆகமார்த்தம் துதேவாநாம்  
     கமநார்த்தம் து ரக்ஷஸாம்
      காண்டாரவம் கரோம்யத்ய
        தேவதாஹ் வானலாஞ்ச நம:"

உள்ளத்தில் தூய்மையான 
உணர்வு எழுவதற்கும், 
தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அப்போது சொல்லும் 
ஸ்லோகத்தின் பொருள். 

மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, 
அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

                       நன்றி

   அழகிய கிராமத்திற்கு
ஒரு முனிவர் வந்திருந்தார்
.ஊருக்கு மத்தியில் இருந்த
மரத்தடியில் அமர்திருந்தார்
.யாருமே ஊரில் அவரைக்
கண்டுகொள்ளவில்லை . முனிவர்
அல்லவா ?
கோபத்தில் சாபமிட்டார் அந்த
ஊருக்கு .." இன்னும்
50வருடங்களுக்கு இந்த
ஊரில் மழையே பெய்யாது
.வானம் பொய்த்துவிடும் " … இந்த
சாபம் பற்றி கேள்விப்
பட்ட அனைவரும் என்ன
செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின்
காலடியில் அமர்ந்து
மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு
விமோசனம்
கிடையாது என்று
கூறிவிட்டார் முனிவர்
.வேறு வழியின்றி
அனைவருமே அவரின்
காலடியில் அமர்ந்து இருந்தனர் …
மேலிருந்து
இதைக் கவனித்த பரந்தாமன்
தனது சங்கினை எடுத்து
தலைக்கு வைத்து
படுத்துவிட்டான்
( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை
வரும் என்பது
நம்பிக்கை ). இன்னும் 50
வருடங்கள்மழை பெய்ய
வாய்ப்பில்லை என்பதால்
இனி சங்குக்கு ஓய்வு
என்றே வைத்து விட்டான் …) அந்த
ஊரில் ஒரு அதிசயம்
நடந்தது …
ஒரே ஒரு உழவன்
மட்டும் கலப்பையைக்
கொண்டு தினமும்
வயலுக்குச் சென்று வந்து
கொண்டிருந்தான் .அவனை
அனைவரும் பரிதாபமாகவே
பார்த்தனர் .மழையே
பெய்யாது எனும்போது
இவன் வயலுக்கு போய் என்ன
செய்யப் போகிறான் என்ற
வருத்தம் அவர்களுக்கு … அவனிடம்
கேட்டே விட்டனர் . நீ செய்வது
முட்டாள்தனமாக
இல்லையா என்று ..அதற்கு
அவனின் பதில்தான்
நம்பிக்கையின் உச்சம் "' 50
வருடங்கள் மழை பெய்யாது
என்பது எனக்கும் தெரியும் .
உங்களைப் போலவே நானும்
உழுதிடாமல் இருந்தால் 50
வருடங்கள் கழித்து உழுவது
எப்பிடி என்றே எனக்கு
மறந்து போயிருக்கும்
..அதனால்தான் தினமும் ஒருமுறை
உழுது
கொண்டு இருக்கிறேன் "
என்றான் .
இது வானத்தில் இருந்த
பரந்தாமனுக்கு கேட்டது
.அவரும் யோசிக்க ஆரம்பித்தார் .."50
வருசம்
சங்கு ஊதமால் இருந்தால்
எப்பிடி ஊதுவது என்று
மறந்து போயிருமே ".என்றே
நினைத்து சங்கை எடுத்து
ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி
இடித்தது …மழை பெய்ய
ஆரம்பித்தது …நம்பிக்கை
ஜெயித்து விட்டது .
" தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் "
"Self confident never fail"
வெற்றி நிச்சயம் !!



நீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே சேர்ந்து அருணாச்சலத்தை வலம் வருமாம்!!! 

இதற்குக் காரணம், அத்தனை கோடிப் பிறவிகளுக்கும் முற்றுப்புள்ளி இடும் ஆன்மசாதனமே அண்ணாமலை கிரிவலம் என்பதால்தான்!
நமது பிரபஞ்சத்தில் அருணாச்சலமான திரு அண்ணாமலையில் மட்டுமே இது சாத்தியமாகும்.இது நிகழ்ந்தாகிப் பிறவிப்பெரும்பயன் அடைய வேண்டுமென்றால், பவுர்ணமி தினம் போன்று மாதசிவராத்திரி நாளிலும் அருணாச்சல கிரிவலத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
நன்றி:பக்கம் 11,ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜனவரி 2010 மாத இதழ்.


காலம்,தேசம், அண்டம் என்ற பரிமாணங்களைத் தாண்டியவர்கள் சித்தர்கள்!

ஒருமுறை திருமூலர் ஆகாய மார்க்கமாகப் பறந்து அண்டம் (உதாரணமாக மில்கிவே என்பது நமது அண்டம்.நமக்கு அருகில் இருக்கும் அண்டத்தின் பெயர் அண்ட்ரோமேடா.நம்மிடமிருந்து 2000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.அதாவது விநாடிக்கு 3 லட்சம் கி.மீ.வேகத்தில் செல்லும் ராக்கெட்டில் இங்கிருந்து புறப்பட்டால், அங்கே செல்ல 2000 வருடங்கள் தான் ஆகும்.நாம் வாழும் சூரியக்குடும்பம் இருப்பது பால்வழித்திரள் எனப்படும் மில்கிவே அண்டத்தில் அதாவது கேலக்ஸியில்.நமது வீடான பால்வழித்திரளின் அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள் தான்.நமது பால்வழித்திரளின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒளிவேகத்தில் பயணித்தால் 1,00,000 ஆண்டுகள்தான் ஆகும்.பிரமிப்பாக இருக்கிறதா?இந்தத்தகவல்களை மதிப்பிட்டுக்கூறியிருப்பது நமது வானியல் விஞ்ஞானிகள்.ஆக,இந்த விஞ்ஞானிகளையும்,உங்களையும்,என்னையும் படைத்த கடவுள் எப்பேர்ப்பட்டவராக இருப்பார்!?!)விட்டு அண்டம் செல்ல உதவும் 'சொரூப மணி' என்னும் பாதரஸ மணியினை வாயிலும், 'கமலி' என்ற மணியினைக் கையிலும் எடுத்துக் கொண்டு ஜோதியே வடிவான அண்டவெளியில் பாய்ந்தாராம்.

பலப் பல அண்டங்களில் பலப் பல சித்தர்கள் வாழ்வதைப் பார்த்து வியந்து அவர்களிடம் ஆசி பெற்றுச் செல்லும் போது ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு அண்டத்தில் இருந்த சித்தர்களில் ஒருவர் திருமூலரின் கவுனமணிக் குளிகையைப் பார்த்துவிட்டுத் தருவதாகக் கேட்டிருக்கிறார்.

திருமூலரும் அதை நம்பி அவரிடம் கவுனமணிக்குளிகையைத் தந்தார்.அவர் அதைப் பயன்படுத்தி பல அண்டங்களுக்கு ஓடி மறைய முயன்றார்.திருமூலரும் தன்னிடமிருக்கும் மற்றொரு குளிகைமூலமாக மிகவும் சிரமப்பட்டு விரட்டிப் பிடித்து அந்த கவுனமணிக் குளிகையை திரும்பப் பெற்றார்.அவரை அந்த அண்டத்திலேயே விட்டுவிட்டுத் திரும்பிவிட்டார்.

திருமூலர் தான் பயணித்த அண்டங்களைப் பற்றி பல பாடல்களில் விவரிக்கிறார்.
ஒரு அண்டத்தில் பல சித்தர்களைக் கண்டிருக்கிறார்.அவர்களைக் கையால் தொட்டால் கைகளில் தட்டாமல் கை உடலுக்குள் சென்று வந்திருக்கிறது.மற்றொரு அண்டத்தில் உள்ளவர்கள் வெண்சங்கு நிறத்தில் இருக்கிறார்கள்.இன்னொரு அண்டத்தில் தண்ணீருக்குள் வாழ்ந்து வருகிறார்கள்.இவ்வளவு அண்டங்களையும் சுற்றிப்பார்த்த திருமூலர் நமது பூமியில் ஜீவசமாதியானது நாம் செய்த புண்ணியமே!



திருமூலர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் ஆடுதுறைக்கு அருகில் இருக்கும் சாத்தனூர் என்ற இடத்தில் உள்ள ஐயனார் கோவிலில் அமர்ந்திருந்தார்.அங்கிருக்கும் அரசமரத்தடியில் அமர்ந்து திருமந்திரம் எழுதியுள்ளார்.இந்தக் கோவிலின் பின்புறம் ஜீவசமாதியாகியுள்ளார்.

இவ்விடத்தைப் புதுப்பிக்க சில அன்பர்கள் முயன்றபோது,பூமியின் உள்ளே தண்ணீர் நிரப்பப் பட்ட கமண்டலம் ஒன்றும்,யோக தண்டம் ஒன்றும்,ருத்ராட்ச மாலை ஒன்றும் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.தற்போது இந்த இடத்தில் சில அன்பர்கள் தியான மண்டபம் கட்ட முயன்றுவருகிறார்கள்.திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
இவரது குருநாதர் நந்தீசர்.
இவரது சீடர் போகர்.
நன்ரி:ஜோதிட பூமி பக்கம் 49,50,மார்ச் 2008.
சாய்ந்து சுற்றும் பூமியே நேராய் நம்மை தாங்கிப் பிடித்து வழிநடத்துகையில்...
நேராய் நடக்கும் நம்மால் நாலு பேருக்கு உதவியாய் இருந்து வாழ வழிநடத்த முடியாதா என்ன?

சிந்திப்போம்...
நல்விடியலாகட்டும்!!!
அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

அச்சமின்மையே ஆரோக்கியம்!

பின்குறிப்பு: 
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன். 
அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!

😄😃😊😝😜😛
வளையக் கூடியது தான் இருந்தாலும் வளைந்து கொடுக்காமல் வம்பிழுத்துவிடுகிறது.. *நாக்கு..!*
தோல்வியுற்ற காதல் என்பது இந்த உலகத்திலே இல்லையென்பேன் கர்வத்துடன்.காரணம் அதுவும் கூட வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் இருவரில் ஒருவரது உள்ளத்தில்.....
.
.
 ஒருதலை ராகமாக!
ஆங்கில மொழியில் America, Japan, Bhutan, Srilanka, Bangladesh, Nepal மற்றும் Pakistan நாடுகளின் பெயர்கள் அவ்வாறே உச்சரிக்கிறோம் ஆனால்  Bharath (பாரதம்) மட்டும் India என்று ஏன் உச்சரிக்கின்றன? 
உங்களுக்கத் தெரியுமா India வின் விரிவாக்கம் என்னவென்று?... ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரிப்படி India என்பதன் பொருள்
I-INDEPENDENT 
N-Nation
D-Declared
I-IN
A-AUGUST
(India)
99% இந்தியர்களுக்கும் இது தெரியாது.....
அனைவரையும இத்தகவல் சென்றடய நீங்களும் பகிருங்கள்....😬
என்னைத்  துரத்தும்
 உன் கண்களுக்கும்,
 உன் கண்களைத் துரத்தும் என் காதலுக்கும், இடையில் காணமல் போனது
 என் வெட்கம்..!


காதலுக்காக 
ஒரு ஆண் கண்ணீர்
சிந்தும் போதும்..

அதே காதலுக்காக
ஒரு பெண் கண்ணீரை
மறைக்கும் போதும்..

அந்த காதல் 
அழகாகிறது ...
ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால்... அது ஆண்களுக்கு வாய்ப்பு அல்ல, 
அது ஆண்களின் பொறுப்பு...
..
""""""""""""""""""""""""""""""""""
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத்  தேடி அமர்ந்தேன்.. 

விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து நம் இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்..  
நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..

எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி ...

ஒரு மணி நேரம் சென்றிருக்கும்..
அப்பொழுது ஒரு அறிவிப்பு.. 

மதிய உணவு தயார்.. சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது...எனக்கு பின்னால் இருந்த ராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உ டைந்து போ னேன்.. 

ஏன்...சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும்.. அங்கு இறங்கி உண்ணலாம் ..விலை குறைவாக இருக்கும்

ஆமாம்..உண்மை.

இதை கேட்ட பொழுது.... மனது மிகவும் வலித்தது...உடனே
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்.. 

அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்.. 

நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்...நான் வெட்கப்படுகிறேன் எனக்கூறி இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்.. 
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..

சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தழும்ப என் கைகளை பிடித்து குலுக்கி,  இது  ஒரு மிகப்பெரிய கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே என்று சொல்லி சென்றார்.

ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..

முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..

விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...

இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..

காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்...

இந்த இளம் வீரர்கள் குடும்ப பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு..தன்னடைய  உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை பாது காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை...
இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் 
வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடுவதுடன் அவர்களை தெய்வங்களாகவும் பூஜிப்பதுடன்.அவர்களுக்காக கோயில் கட்டி வணங்குவது போன்ற செயல்களால் தங்களது வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருக்கின்றர்கள்..என்பது
மிகுந்த வேதனை...

கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்,
 ஓட்டு போட்ட மக்களை  ஏமாற்றும் அரசியல்வாதிகள்...மற்றும் லஞ்சம்  வாங்கும் அதிகாரிக்ள் கூட இந்த இராணுவ வீரர்களை  நினைத்துக்கூட  பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது....

எம் தேசத்து என் இளைஞனே..என் சகோதரனே...
நம் தேச நலன் காக்க 
வெளியே வா.....

ஜெய் ஹிந்த் *


சில்லென்ற தென்றல் காற்றே, 
சிலுசிலுக்கும் மேனியில் படாதே, 
என்னழகைக் கண்டு மயங்கும், 
என்னவள் இங்கு வந்து சேரட்டும். 

மெல்லிசை கொலுசு பாடும், 
மெல்லிய பாதம் நோகும்! 
அடி ஒன்று எடுத்து வைத்த பின்னே,
அடியவள் பாதம் வருடி விடுவாயே! 

புல்லில் படிந்த பனிநீரால், 
பாதத்து மண்ணைக் கழுவி விடு! 
பாதையில் மலர்ந்த பூக்களால், 
பாவைக்கு மலர் கம்பளம் விரித்துவிடு! 

மரத்தடியில் படுத்துறங்கும் சருகுகளை, 
மல்லுக்கட்டி இடம் பெயர்த்துவிடு! 
நுண்மணல் தரையில் பரப்பி, 
நூதனமாய் மகரந்தம் தூவிவிடு! 

காதல் ஜோடி அன்பைப் பரிமாறும்வரை, 
கண்ணிமைக்காது காவல் காத்து நிற்பாயே! 
மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தை, 
மூடிய முகத்துடன் மும்மரமாய் கண்கானிப்பாயே!

கனவுகள் காதலுக்குள் தொலைந்ததடி 
தொலைந்த நினைவுகள் கூட்டி காலம் கடந்ததடி.. 
செல்ல சண்டைகளும், பட்ட காயங்களும் கனிபோல் இனித்ததடி
காலம் கடந்ததும் அதன் வடுக்கள் வலிக்குதடி..
நிலவொலியில் 
உன்முகம் 
கண்டேன் 
முழுமதி எதுவென வியந்தேன் 
நிலவு கூட உன் முகம் 
கண்டு விலகி ஓடும்... 

அழகிலே நிலவை 
தோற்கடித்தாய் 
காதலில் என்னை காணாமல் 
செய்தாய் 
நான் கட்டிய கூட்டில் 
சிட்டு குருவியாய்... 

வாழ்நாளில் உயிரின் ஓசை 
உன்னில் காதலாய் ஓட 
என்னில் மட்டும் நீங்காமல் 
ஜென்ம ஜென்மாய் நீ 
காதல் தொடர்வாய்...
ஒரு முதலாளி Zoo ஒன்றை ஆரம்பித்தார். நுழைவுக் கட்டணம் ரூ.100. யாரும் வரவில்லை. பிறகு ரு.50, ரூ.20 என்றார். யாரும் வரவில்லை. அனுமதி இலவசம் என்றார். கடுமையான கூட்டம். எல்லோரும் உள்ளே வந்த பிறகு, புலிக் கூண்டைத் திறந்து விட்டு, வெளிக் கேட்டைப் பூட்டி விட்டார். வெளியே வர வேண்டுமானால் 303ரூ கட்டணம் என்றார். அந்த முதலாளிதான் Jio முதலாளி..
ஒரு ஊர்ல...
ஒரு வெங்காயம், ஒரு தக்காளி,
ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.
ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.

அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு.

அதை கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க.

சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்கு கிளம்பினாங்க.
போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில ஆக்ஸிடண்ட் ஆகி தக்காளி நசுங்கி செத்துப் போச்சு.

அதை பார்த்து வெக்ஸ் ஆன வெங்காயம், கதறி கதறி அழுதது.
தனியாகி போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி, "உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம்.
இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா...?" ன்னு கேட்டு,
"ஓ..." ன்னு அழுதுச்சு.

அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், "சரி..., இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க" ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதான படுத்தினாராம்.

(ஸோ..., இனிமே யாராச்சும், "வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது" ன்னு கேட்டா, 'திருதிரு'ன்னு முழிக்காம, சோகமான இந்த திக் ஃப்ரெண்ட்ஸ் கதைய தெரியப்படுத்துங்க) ok va....deal ah...


*சாப்பிட கூடாதவை*

நுங்கு
சர்க்கரை
சாக்லெட்
கரும்பு
ஜஸ் கிரீம்
பால்கட்டி (பன்னீர்)
மாம்பழம்
சீத்தாபழம்
பலாப்பழம்
சப்போட்டா
வாழைப்பழம்
காம்பளான்
திரட்டுபால்
குளுகோஸ்
சேப்பங்கிழங்கு
உருளைகிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு
உலர்ந்த திராட்சை
குளிர் பானங்கள்


*அளவோடு சாப்பிடலாம்*

அரிசி
அவல்
ஓட்ஸ்
சோளம்
கேழ்வரகு
கோதுமை
பார்லி அரிசி
வேர்க்கடலை
பாதாம் பருப்பு
முந்திரிபருப்பு
மக்காச்சோளம்

*அளவில்லாமல் சாப்பிடலாம்*

கீரை
தக்காளி
காராமணி
வாழைத்தண்டு 
வாழைப்பூ 
பாகற்காய்
சுரைக்காய்
பீர்க்கங்காய்
வெங்காயம்
கத்தரிக்காய்
பூசணிக்காய்
அவரைக்காய்
பப்பாளிக்காய்
கோவைக்காய்
வெள்ளரிக்காய்
வெண்டைக்காய்
முருங்கைக்காய்
கொத்தவரங்காய்
சீமைகத்தரிக்காய்
முட்டைகோஸ்
வெள்ளை முள்ளங்கி 

முடிந்த அளவு பகிருங்கள்.....!!!


கடந்த ஒரு வாரமாக நடிகை💃ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணராஜ் ராய், மும்பை லீலாவதி🏥மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்😳.மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையிலும் அவரது உடல் நலனில் எந்தவித முன்னேற்றமும் இல்லை😱.இதனால் அப்பா செல்லமான ஐஸ்வர்யா தன் தந்தையின் நிலையை கண்டு பெரும் சோகத்தில் ஆழுந்துள்ளாராம்😟.சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இரவு முழுவதும் கண் விழித்து மருத்துவமனையிலேயே பொழுதை கழித்துக்கொண்டிருக்கிறாராம்😯. ஐஸ்வர்யா இப்படி தன்னையே மறந்து சோகத்தில் இருப்பது அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கு கவலை அளித்துள்ளதாம். 😒


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விளை நிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும் மற்றும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர்🚰ஆதாரமாக விளங்கி வரும்💧பாலாற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாலாறு பாதுகாப்பு கூட்டமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன😳. இந்நிலையில் அரசு தாக்கல் செய்த 📜பட்ஜெட்டில் தடுப்பணை அமைப்பதற்கு நிதி 💸ஒதுக்கீடு மற்றும் தடுப்பணை திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும்🔈 வரவில்லை என்பதால்🏛அரசின் மீது விவசாயிகள் கடும்😠அதிருப்தியில் உள்ளார்கள். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது என்னவென்றால்🎙, "தடுப்பணை இல்லாததால் மழைநீர்🌊கடலில் வீணாகக் கலக்கிறது. மேலும், நிலத்தடியில் கடல் நீர் ஊடுருவியுள்ளதால் கரையோர🏝விவசாய நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது😱. இதனால், ஆற்றில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்👍. பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது😟. வாழ்வாதாரமான விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாததால், தினசரி குடும்ப தேவைக்காக கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது😳. அதனால், அரசு விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும். பாலாற்றங்கரையோர கிராமங்களில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்😠." இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்🔈.


இந்தியன் மைகேல் ஜாக்சன்🎩பிரபுதேவா தற்போது பாலிவுட்டில் பிஸியாக 🎥படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்🙂. அண்மையில் ஏ.எல். விஜய்🎬 இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் தமன்னா ஜோடியாக👫 நடித்து வெளி வந்த படம்🎥'தேவி'. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டு பெரும் வெற்றியடைந்தது😍.இதனை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக தகவல்கள்💻 தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. எனினும், இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்🤔.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா⚰மரணத்திற்கு பின், அவர் நின்று வெற்றியடைந்த ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல்🗳அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி இரு தரப்பாக⚡பிளவுற்ற நிலையில், 'இராட்டை 🌱இலை' சின்னம் யாருக்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது😳. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது👍. இதற்கிடையில், நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக டி.டி.வி. தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்🔈. இதை தொடர்ந்து. தேனியில் பேட்டி🎙அளித்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம்,"அதிமுக கட்சியின் விதிப்படி, டி.டி.வி. தினகரன் இடைத்தேர்தலில்🗳போட்டியிடுவது செல்லாது. மேலும், 'இரட்டை🌱இலை' சின்னம்🚫முடக்கப்படாது, அது எங்கள் அணிக்கே வந்து சேரும்👍.குடும்ப அரசியல் கூடாது என்பதை முன்னிறுத்தியே எங்கள்🔈 பிரச்சாரம் நடக்கும்", என அறிவித்தார்.

சிம்பு தற்போது நடித்து கொண்டிருக்கும்🎥 படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. இந்த படத்தை மைகேல் ராயப்பன்💸 தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன்🎬 இயக்குகிறார். இதில்💃 ஸ்ரேயா, தமன்னா, சந்தானம், மகத், வி.டி.வி. கணேஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்😯. 3⃣ கெட்டப்.களில் சிம்பு இப்படத்தில் நடித்துள்ளார்😳. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா🎹 இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு நடித்துள்ள ஒரு கதாபாத்திரத்தின் பெயரே 'அஸ்வின் தாத்தா'. தற்போது இந்த கேரக்ட்டரின் டீஸர் வெளியிட பட்டுள்ளது👍.  
டீஸர் இதோ😍: https://goo.gl/SmK8zi



மொத்தம், 70 தொகுதி களை கொண்ட உத்தர கண்டில், பா.ஜ., 57 தொகுதி களில் வென்று,✨அபார வெற்றி பெற்றது. ஆனால், ஆளும் கட்சியான காங்கிரஸிற்கு வெறும் 11 தொகுதிகளே கிடைத்தன😟. இதை தொடர்ந்து இன்று நடந்த பதவியேற்பு விழாவில், உத்தரகண்ட்💺முதல்வராக திரிவேந்திர ராவத் பதவியேற்றுக்கொண்டார்🙂. அவருக்கு கிருஷ்ண காந்த் பால் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புபிரமாணமும் செய்து வைத்தார்👍. முதல்வர் பதவியேற்பினை தொடர்ந்து அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் நடந்தது😯. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத், பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்🤗.

நடிகர்,🎬 இயக்குனர், 👯நடன இயக்குனர் என்று திரையுலகில் பல பரிமாணங்கள் எடுத்துள்ள லாரென்ஸ் தனது சொந்த வாழ்க்கையில் பலருக்கு உதவும் வகையில் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்👍 என்பது அனைவரும் அறிந்ததே😍. ஏழை, எளிய, வசதியில்லாத பல மாணவ, மாணவியர்களுக்கு 📚படிப்பினை வழங்குகிறார். மேலும். தனது அறக்கட்டளை மூலம் பலருக்கு💉 சர்ஜெரி செய்து வைக்கிறார். இதனால் பல பேருடைய உயிர் காப்பற்றப்பட்டுள்ளது👍. இவ்வாறு இருக்கையில், ராகவா லாரன்ஸின் அறக்கட்டளை குறித்து💻 இணையதளத்தில் அவதூறு பரப்பும் வகையில்📹 வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது என தகவல் பரவியுள்ளது😯. இணையதளத்தில் இவ்வாறு தவறான கருத்துக்களை பரப்பும் வகையிலான📹 வீடியோக்களை வெளியிடுவோர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்😠 என லாரன்ஸ் நற்பணி மன்ற நிர்வாகியான சங்கர் அவர்கள் காவல்துறை ஆணையரிடம் புகார் 📜அளித்துள்ளார்.


உத்தரபிரதேசம் சட்டசபை🗳 தேர்தலில் 325 தொகுதிகளில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை 💐பெற்றுள்ளது. இந்நிலையில் யாரை 💺முதல்வராக அறிவிப்பது என்ற குழப்பத்தில் டெல்லியில் பா.ஜ., மூத்த நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொடர்ந்து ஆலோசித்தனர்🤔. முதலில், அந்த மாநிலத்தின் பா.ஜ., தலைவர் கேசவ் மவுரியாவுக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது😳. ஆனால், தற்போது உ.பி.,யை சேர்ந்த ஆதித்யாநாத்தை முதல்வராக்க பா.ஜ., முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி😯 உள்ளது. மேலும், துணை முதல்வராக மவுரியா, மற்றும் தினேஷ்சர்மா ஆகியோர் பதவியில் நிர்ணயிக்க படுவார்கள் என்றும் கூறப்படுகிறது🙂. கோர்காநாத் மடத்தின் சாமியாராக இருந்த யோகி ஆதித்யாநாத் சிறந்த பார்லிமென்டேரியன் என்று பெயர் பெற்றவர்👍, இவரது பேச்சு🎙 அனல் பறக்கும் விதமாக இருக்கும்😳 என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர்🎬 இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பிரமாண்ட திரைப்படம்🎥'2.0' முடிவடைந்து விட்டது. சில மாதங்களுக்கு முன்னரே, வசீகரன் மற்றும் சிட்டி ரோபோவின் கதாபாத்திரங்களுக்கு 'டப்பிங்'ங்கும் கொடுத்துவிட்டார், நமது சூப்பர்ஸ்டார்👍.இந்நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படம் 'கபாலி' படத்தின் இயக்குனர்🎬பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தனது வுண்டெர்பன் நிறுவனத்தின் மூலம் 💸தயாரிக்கவிருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே🤗. '2.0' படத்தை முடித்த பின் இந்த புதிய படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என கடந்த வருடம் 2016.ஜூலையில் அறிவிக்கப்பட்டது🔈. அதன்படி, தற்போது இப்படத்தின்🎥படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி, தமிழ்✨புத்தாண்டு அன்று துவங்க உள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் தற்போது வந்துள்ளது😍.

புதிய பிளாஸ்டிக் 💶ருபாய் நோட்டுகளை புழக்கத்தில் கொண்டுவர மத்திய🏛அரசு முடிவு செய்துள்ளது. இதனையெடுத்து பரிசோதனைக்காக பிளாஸ்டிக் ரூ.10 நோட்டுகளை 5⃣ மாநிலங்களில் வெளியிடபப்பட போகிறது. இதனை குறித்து நாடாளுமன்றத்தில்✍எழுத்துபூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கூறுவது என்னவென்றால்," நிதித்துறை அமைச்சகம் புது ரூ.10 நோட்டுகளை பிளாஸ்டிக்கில் அச்சிட இந்திய 🏦ரெசெர்வ் வங்கியிடம் அனுமதி வாங்கியுள்ளது👍. பருத்தி மூலக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட பழைய நோட்டுகளைக் காட்டிலும், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அதிக காலத்துக்கு உழைக்கும்👍.வங்கி நோட்டுகளின்💶ஆயுட்காலங்களை நீட்டிப்பதற்காக 🌎உலகளாவிய வங்கிகள்🏦அனைத்தும் புதிய தொழில்நுட்பங்களை மேற்கொண்டுள்ளது😯. குறிப்பாக நோட்டுகள் உருவாக்கத்தில் பிளாஸ்டிக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது🙂'' என்று தெரிவித்துள்ளார்🔈. ஏற்கனவே பிப்ரவரி, 2014-ல் இந்த பிளாஸ்டிக் நோட்டின் அறிக்கை🔈 தெரிவித்தபோது தேர்ந்தெடுக்கப்பட்ட 5⃣மாநிலங்களான கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர் முதலியன நகரங்களே இம்முறையும் தேர்ந்தெடுக்கப்படுமா❓ என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.


தமிழில் அஜித் நடித்து வெளிவந்த 'வீரம்' திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'கட்டமராயுடு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது😍. வரும் 24ந் தேதி இப்படம் வெளிவரவுள்ளது👍. இந்நிலையில் இந்த படம் தமிழகத்திலும் நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது😍. இதற்கு முன்னர் தமிழகத்தில் நேரடி தெலுங்கு🎥 படங்கள் படைத்த சாதனைகளை, கட்டமராயுடு முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது😳. சிரஞ்சீவியின் 'கைதி நம்பர் 150 தான்' 70 லட்சம் மற்றும் மகேஷ் பாபுவின் பிரம்மோட்சவம் 2.39 கோடி வசூலை நேரடி தெலுங்குப் படம் தமிழகத்தில் இப்படங்கள் ஈட்டியுள்ளது. இந்த இரண்டு சாதனைகளையும் கட்டமராயுடு முறியடிக்கும் என்று திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு 😱எழுந்துள்ளது.

இயக்குனர் சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி உள்ள படம் டோரா. நயன்தாரா தான் படத்தின் முதன்மையான ரோல். அவரின் தந்தையாக தம்பி ராமய்யாவும், வில்லனாக ஹரீஷ் உத்தமனும் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் சிவா மெர்வின் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் கதை நயன்தாராவுக்காக எழுதப்பட்டது என்கிறார் இயக்குனர் தாஸ் ராமசாமி. அவர் மேலும் கூறியதாவது:எனது குருநாதர் சற்குணத்தின் அனைத்து படங்களிலும் நான் உதவியாளராக இருந்தேன். தனியாக படம் இயக்குவதற்கு ஸ்கிரிபிட் தயார் செய்து கொண்டிருந்தபோது குருநாதர் அழைத்து "என்னிடம் நயன்தாரா கால்ஷீட் இருக்கிறது. அவருக்கு ஒரு கதை எழுத முடியுமா என்று கேட்டார்.

அப்போது அவர் நடித்த மாயா படம் வெற்றி பெற்றிருந்த நேரம். அது போன்ற கதைகளை அவர் விரும்புவதாக கேள்விப்பட்டேன். அதை மனதில் வைத்து டோரா கதையை உருவாக்கினேன்.ஏற்கெனவே பேய் படங்களை பார்த்து மக்கள் சலித்துப்போய் இருக்கிறார்கள். அதனால் இது சாதாரண பேய் படமாக இருக்க கூடாது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து காரை பேயாக மாற்றினேன்.

காரை பேயாக வைத்து தமிழிலும், ஹாலிவுட்டிலும் சில படங்கள் வந்திருக்கிறது. அந்த சாயலும் இருக்க கூடாது என்று மிகவும் சிரமப்பட்டு இதை உருவாக்கினேன். காரும் படத்தின் முக்கிய கேரக்டராக வரும். நயன்தாராவின் கேரக்டர் பெயர் பவளக்கொடி.

ஆண்கள் போன்று உடை அணிவது மட்டுமல்லாமல் ஆண்களை போன்ற வீரமானவராகவும் நயன்தாரா கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. பேய் படமாக இருந்தாலும், இதை ஒரு பெண்ணின் துணிச்சலை பேசும் படமாகவும் கொள்ளலாம். நயன்தாரா, எனது குருநாதர் சற்குணம் படம் பார்த்து பாராட்டினார்கள். ரசிகர்களும் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். 

இளவட்ட ஹீரோக்களிடம் உங்களுக்கு பிடித்தமான தமிழ் நடிகர் யார் என்று கேட்டால், விஜய், அஜித் என இரண்டு பேரின் பெயரையும் சொல்வார்கள். யாராவது ஒருவரை மட்டும் குறிப்பிட்டால் மற்றொருவர் கோபப்படுவாரோ என்கிற எண்ணம்தான் அதற்கு காரணம். ஆனால், இந்த விசயத்தில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் விஜய் அண்ணாதான் என்று தைரியமாக சொல்லி விஜய்யிடம் தனக்கு பிடித்த விசயங்களையும் பட்டியலிடுகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இப்படி விஜய்யின் ரசிகராக இருந்து சாதாரண ரசிகர்களைப்போன்று அவருக்கு ஒன்று என்றால் ஜி.வி.பிரகாஷ் வரிந்து கட்டுவதால், இப்போது விஜய்யின் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷ் நடித்த படங்கள் திரைக்கு வருபோதும் விஜய் படங்களுக்கு போஸ்டர் ஒட்டி வரவேற்பு கொடுப்பதுபோன்று ஜி.வி., படங்களுக்கும் கொடுக்கிறார்கள்.

அந்தவகையில் நேற்று திரைக்கு வந்துள்ள ஜி.வி.பிரகாஷின் புருஸ்லீ படத்திற்கு கட்அவுட், போஸ்டர் என ஒட்டியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.இதுஒருபுறம் இருக்க, இப்படியொரு மோசமான படத்திற்கு விஜய் ரசிகர்கள் போஸ்டர் எல்லாம் ஒட்டி கொண்டாடுவதை சமூகவலைதளங்களில் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்


பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.

இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் வெளியிடப்பட்டதில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது.

நான்கு மொழிகளிலும் சேர்த்து இதுவரை யூடியூப் இணையத்தளத்தில் 6.50 கோடி (65 மில்லியன்) தடவை பாகுபலி 2 டிரெய்லர் பார்க்கப்பட்டுள்ளது.

இது ஒரு இந்திய சாதனைதான். இதுவரை வெளிவந்த எந்தவொரு இந்தியத் திரைப்படத்தின் டிரெய்லரும் இத்தகையை எண்ணிக்கையை எட்டியதில்லை. அதேபோல முதல் 24 மணி நேரத்தில் உலகளவில் அதிக தடவை பார்க்கப்பட்ட டிரெய்லர்கள் வரிசையில் 13-வது இடத்தைப் பிடித்தும் சாதனை செய்துள்ளது.

கோலிவுட்டை பொறுத்தவரை தற்போதெல்லாம் ஒரு படமாவது ஹிட் ஆகுமா என்ற நிலை உருவாகிவிட்டது. வெள்ளிக்கிழமை வந்தாலே சந்தோஷம் போக, இந்த வாரம் எந்த மோசமான படம் வருமோ? என்ற நிலை ஆகிவிட்டது. இந்நிலையில் உச்ச நடிகர்களின் மிகப்பெரும் தோல்வி படங்கள் எது தெரியுமா?
ரஜினிகாந்த்- லிங்கா (150 கோடி வசூல் செய்தும், அதிக தொகுக்கு விற்று நஷ்டத்தை அடைந்தது)
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement
கமல்ஹாசன்- உத்தமவில்லன்(சில பிரச்சனைகளால் படம் தாமதமாக வெளிவந்து நஷ்டத்தை அடைந்தது)
அஜித்- பில்லா 2(அஜித் திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்கில் ரிலிஸாகி மோசமான திரைக்கதையாம் பெரும் நஷ்டத்தை கொடுத்தது)
விஜய்-புலி (விஜய்யின் வித்தியாசமான முயற்சிக்கு கிடைத்த பெரும் தோல்வியாக அமைந்தது)
விக்ரம்- 10 எண்றதுக்குள்ள (ஐ வெற்றியால் அதிக தொகைக்கு எடுத்து பெரும் தோல்வியை கொடுத்தது)
சூர்யா- அஞ்சான் (லிங்குசாமி-சூர்யா காம்போ முதன் முறை நம்பி வாங்கி பெரும் தோல்வியடைந்த படம்)
தனுஷ்- தங்கமகன் (வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கூட்டணி என்று நம்பி வாங்கிய படம் தோல்வியை சந்தித்தது)

ஓரிரு மாதங்களுக்கு முன், சிங்கம்3 படத்தின் விளம்பரத்திற்காக சூர்யா கேரளா சென்றிருந்தார்.
அப்போது சூர்யாவை ஒரு விஜய் ரசிகர் சந்தித்துள்ளார்.
மாற்றுத்திறனாளியான இவர், தான் வரைந்த ஓர் ஓவியத்தை விஜய்யிடம் கொடுக்குமாறு சூர்யாவிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் சூர்யாவின் 2D என்டர்டெயிண்மெண்ட் நிறுவன இயக்குனர் ராஜ்சேகரபாண்டியன் அவர்கள் விஜய்யை சந்தித்து அந்த ஓவியத்தை கொடுத்துள்ளார்.
அந்த பரிசைப் பெற்றுக் கொண்ட விஜய், சூர்யாவுக்கு தனது நன்றிகளை தெரிவித்தாராம்.
Vijay thanks Suriya for giving his fans art gift


ஜெயலலிதாவின் ⚰மறைவிற்கு பின்னர், அதிமுக தொண்டர்கள் சசிகலாவின் ஊடுருவலை வெறுத்து ஜெ.வின் அண்ணன் மகளான தீபாவிடம் தஞ்சம் அடைந்தார்கள்👍. மீதமுள்ள தொண்டர்கள் ஓ.பி.எஸ். அணியில்👬 இணைந்தார்கள். இதனையடுத்து தீபா மக்களுக்கு நல்லது செய்யப்போவதாக வாக்குறுதி அளித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா என்ற பேரவையை தொடங்கினார். வரும்🗳 இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக தகவல்களும் 📰வெளியானது. தற்போது திடிரென்று தீபாவின் கணவர் மாதவன் கருத்துவேறுபாடு காரணமாக வெளியேறி புது கட்சியினை தொடங்க போவதாக இன்று அறிக்கை விடுத்தார்🔈. இதனை தொடர்ந்து, தீபா பேரவை தொடங்கிய நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர்😳. இதனை தொடர்ந்து தீபா பேரவை தொடங்க காரணமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் தற்போது தீபா பேரவையை கலைக்க முடிவு செய்து நிர்வாகிகளுக்கு✍ கடிதம் எழுதியுள்ளாராம். இது தொடர்பாக நாளை திருவானைக்காவலில் நடைபெறும் ஆலோசனை 🤔கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்🔈. திருச்சியில் தீபா பேரவை கலைக்கப்படுவது போல தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் இந்த பேரவை கலைக்கப்படும்😯 என தெரிகிறது. மேலும், தீபா பேரவையை கலைக்கும் நிர்வாகிகள் ஓ.பி.எஸ். அணியில் இணைய👍 திட்டமிட்டுள்ளனர். இது தீபாவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்😟 என்ற தெரிகிறது.
அழகு
மட்டும்,
எப்படியோ
ஓடிவந்து,
ஒட்டிக்கொள்கிறது...
உனக்கே 
கூட தெரியாமல்,
எடுக்கப்பட்ட
உனது,
புகைப்படங்களிலும்..!
காய்ச்சல்
வந்தவனுக்கு,
மட்டும்தான்
தெரியும்..
கொளுத்தும்
வெய்யிலுக்குள்ளும்,
கொஞ்சம்
குளிர்
இருக்குமென்பது..!
எனை தள்ளிவிட்டு நீ நடந்தால்
என் இதயத்தில் இனம் புரியாத பயம்
எந்தன் கரங்களை பிடித்துக்கொண்டால்
அட என்னுள் தோன்றும் கோடி சுகம்...
பிரம்மனுக்கு வேலை கூடியதால், 
தாயை படைத்தான்..., 

எமனுக்கு...
வேலை கூடியதால், 
காதலியைப் படைத்தான்...
##என் நேசம் உண்மை என்று புரிவதற்கு
      விளக்கங்கள் தந்தால் நீடிக்கும் 
      உறவுகள் தேவையில்லை.....😢😢😢😢😢

   ##எப்போது வேண்டமானாலும் 😢
      பிரிந்து செல்லலாம் 
      மகிழ்ச்சி உடன்......😊😊😊😊😥😥😥
சமைக்க 
தெரியாதென்கிறாய்.
உன்னைக் கண்டால்
பசியெடுக்காத
என்னிடம் !!

காதல் ஒரு அழகான உணர்வு,
காதல் ஒரு அழகான உறவு,
காதல் ஒரு அன்பான பந்தம்,
காதல் ஒரு இன்பமான வலி,
காதல் இரு விழிகளின் கடிதம்,
காதல் இரு இதயங்களின் மௌனம்,
மொத்தத்தில் காதல் ஒரு உயிர்...
கண்டனத்துக்குரிய
கவிதைகளை
நீ கண்டுக்காத போதும்,

காதலுக்குரிய
கவிதைகளை 
நீ கண்ணடிக்கும் போதும்
விரைவாக எழுதி விடுகின்றேன்.

கவிஞர் இவனா !!

பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள். தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.
எனவே அவர் தர்மருடன் மலைநாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். அவ்விட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள். தர்மர் அவளிடம், "தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்துவிட்டீர்களே,'' என ஆச்சரியமாகக் கேட்டார்.
அதற்கு அந்த பெண்மணி, ""எங்கள் நாட்டில் ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுமுறை பயன்படுத்துவதில்லை,'' என அலட்சியமாக சொல்லிவிட்டு போய்விட்டாள். அந்நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன்.
அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர். கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி, "இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்,'' என்றார்.
மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை. "கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை.
எல்லோரிடமும் செல்வம் குவிந்துகிடக்கிறது. எனவே "பிச்சை' என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் "தர்மம்' என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை.
எனவே அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை. இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவே தான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர். இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப்பார்க்க வெட்கப்படுகிறேன்,'' என்றார்.
தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலைகுனிந்தார் தர்மராஜா. தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலைகுனியத்தான் வேண்டும்.