இன்று அமெரிக்கா தொலைக்காட்சியில் ஒரு அதிசய மற்றும் அதிர்ச்சியான செய்தியும் கூட..
NASA-விஞ்ஞானிகள் நிலவை ஆராய்ந்துகொண்டிருந்த போது அதில் ஒரு மனித உடல் இருப்பதற்கான அறிகுறியை கண்டார்கள்..
இன்னமும் சற்று விரிவாக ஆராய்ந்ததில் அது மனித உடல்தான் என உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்... அதன் வயது 2 நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும் தெரிகிறது
இந்த செய்தி அனவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது..
உடனே உலக விஞ்ஞானிகள் அனைவருக்கும் தகவல் பரிமாறப்பட்டிருக்கிறது..
நிலவில் தண்ணீர் இருந்ததை உலகிற்கு முதன்முதலில் கண்டுபிடித்து அதை உறுதி செய்த இந்திய விஞ்ஞானிகளின் பெருமுயற்சியால் இறந்த உடல் நிலவில் இருந்ததற்கான புதிர் விடுபட்டிருக்கிறது.
இறந்து கிடந்த உடல் ஒரு வயதான பெண்மணியின் உடல் என இந்திய விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.
மனிதர்களே நிலவுக்கு போக பிரம்மபிரயத்தனம் பண்ணவேண்டியிருக்கும் இந்த காலத்தில் இந்த பாட்டி எப்படி நிலவுக்கு போனார்கள் என்று விஞ்ஞானிகள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கையில்.
அனைவரையும் உலுக்கிய அந்த உண்மை புலப்பட்டது..
அந்தப் பாட்டி வேறு யாருமல்ல... நிலவில் வடை சுட்டுக்கொண்டிருந்த ஆயா பாட்டிதான் அது..
இதைக்கேட்டவுடன் காலையிலிருந்தே மனசு சரியில்லை...
....வடை போச்சே. :P :P
0 கருத்துகள்:
கருத்துரையிடுக