"சுதந்திரதினம், குடியரசு தினம் இந்த ரெண்டு நிகழ்சிக்கு மட்டுமே நாமெல்லாம் இந்தியர்னு உணர்வு பொங்க பொங்கறோம் fb, watsappனு மெசேஜ் போடறோம்.. ரெண்டுக்கும் என்ன வித்யாசம்?
"மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே....
"டிவிலே 67 வது குடியரசுனு சொல்றாங்க... குடியரசுனா மக்களாட்சினு அர்த்தம்..
"சுதந்திரம் கிடைச்சப்போ, பிரிட்டிஷ் அரசு, இந்தியாவுக்கு டொமினியன்அந்தஸ்து தான் குடுத்தது. அப்போ, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். பிறகுதான் இந்திய அரசியலமைப்பு 1949 நவ., 26ல் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏத்துகிட்டு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. அதிலிருந்து இந்தியாவில் மக்களாட்சி தொடங்கியாச்சு.
பிரிட்டிஷார் நியமனம் பண்ணிய கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.குடியரசு என்பதன் நேரடி பொருள் மக்களாட்சி. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். இப்படி மக்களாட்சி நடக்கிற நாடு எல்லாமே குடியரசு நாடுனு சொல்றோம்".
"நவம்பர்ல ஓகே சொல்லியாச்சுலே, அப்போ ஜன 26 எதுக்கு செலக்ட் பண்ணிணாங்க .. "
" 1930, ஜன., 26ல், லாகூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுல..
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றே தீர்வது என்ற தீர்மானம் நிறைவேத்தினாங்க. அதோட நினைவாக தான், ஜன., 26ம் தேதியை, இந்திய குடியரசு தினமாக, அரசியல் நிர்ணய சபை முடிவு செஞ்சாங்க".
குடியரசுதின_வாழ்த்துக்கள் ...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக