சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கு
சென்று வந்த பிறகு குறிப்பிடுகையில்
"நான் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் இந்தியாவை விரும்பினேன்" என்றார்.
உடனே எல்லோரும் சிரித்தார்கள்.
பார்த்தீர்களா சுவாமி விவேகானந்தருக்கு
கூட அமெரிக்கா சென்று மாட மாளிகைகளை பார்த்து வந்தவுடன் இந்தியா இப்போது பிடிக்காமல் போய் விட்டது என்று....
சுவாமிஜி பேச்சை தொடர்ந்தார், "வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் இந்தியாவை விரும்பினேன்,
வெளிநாடுகள் சென்று திரும்பிய பிறகு இந்தியாவை வணங்குகிறேன்" என்றார்.
இந்தியாவை போல் அழகான
அற்புதமான உறவு முறைகளை
எங்கும் பார்க்க இயலாது.
அதனால்தான் அவர் அமெரிக்காவில்
"சகோதர சகோதரிகளே" என்றதும்
அத்தனை கைத்தட்டல் எழுந்தது.
உறவுகளுக்காகவும், அன்பிற்காகவும் மேற்கத்திய நாடுகளில் ஏங்குகிறார்கள்.
மனநல மருத்துவமனைகள்
அயல்நாடுகளில் பெருகுகிறது.
இந்தியாவில் நம்மிடையே இருக்கும் உறவுகள்தான் மிகுந்த மகிழ்ச்சியை
கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.
சமீப காலங்களில் நாம் அத்தகைய
உறவுகளுக்கு மதிப்பளிப்பதை மறந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.
நான் ஒரு ஆட்டோவின் பின்னால் படித்தது "வீட்டின் பெயரோ
'அன்னை இல்லம்',
அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்" ////
0 கருத்துகள்:
கருத்துரையிடுக