#தினம் ஒரு சிந்தனை!!!
என் நண்பர் ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதனால் கோவில்களுக்கு செல்ல மாட்டார். கோவில்களில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் குறித்துக்கூட ஒரு நாள் என்னிடம் கிண்டலடித்தார். சமீபத்தில் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். ஒரு வெள்ளி டம்ளரில் துளசி தீர்த்தம் வைத்து வீட்டில் அனேவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். நான் ஒன்றும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் பார்வை அவருக்குப் புரிந்த்து. உடனே அவர் என்னிடம் "இப்பவும் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எங்கள் குடும்ப டாக்டர் தான் இதுமாதிரி குடிக்கச் சொன்னார். சமீபத்தில் பெய்த மழையால் வீட்டில் அனைவருக்கும் கடும் சளி, இருமல், காய்ச்சல்னு ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க. அதனால் குடும்ப டாக்டரிடம் சென்றோம். "இந்த சீசன் முழுக்க துளசி ஒரு கைப்பிடி சாப்பிடுங்க. துளசி ஊறிய தண்ணீரையும் குடிங்க"ன்னு சொன்னார். அதையும் வெள்ளி டம்ளரில் குடித்தால் இன்னும் நல்லதாம். ஏன்னா வெள்ளி ஆண்டி பேக்டீரியல் கொண்ட உலோகமாம். தண்ணீரில் இருக்கும் நோய் எற்படுத்தும் பாக்டீரியாக்களை எல்லாம் வெள்ளம் அழிச்சிடும்னு சொன்னார். நம்ம வீடுகளில் இருக்கும் காஸ்ட்லியான வாட்டர் ப்யூரிஃபையர்களிலும் பெரிய பெரிய வாட்டர் டாங்குகளிலும் குறிப்பா மருத்துவமனைகளிலும், ஏன் பெரிய நீச்சல் குளங்களிலும் கூட தண்ணீரை சுத்தப்படுத்த வெள்ளி தான் உபயோகப்படுத்தறாங்களாமே. நம்ம ஊர்ல மட்டுமில்லை. உலகம் முழுக்க அமெரிக்காவில் கூட குடிதண்ணீரைச் சுத்தப்படுத்த வெள்ளி உபயோகிக்கறாங்களாம்" என்று ஒரு பெரிய லெக்சரோ கொடுத்தார்.
அவர் பேசியதைக் கேட்க சந்தோஷமாக இருந்த்து. அவ்ர் இன்டர்நெட் உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர். டாக்டர் சொன்னவுடன் அவர் அது பற்றி இன்டர்நெட்டிலும் தகவல் சேகரித்திருப்பார். வெள்ளி போலவே தாமிரப் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் குடிக்கும்போதும் அதுவும் தண்ணீரில் இருக்கும் கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை கொல்கிறது. இன்னும் முக்கியமாக ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் இவற்றையும் கன்ட்ரோலில் வைக்கிறது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் தாமிரப் பாத்திரத்தில் வைத்த தண்ணீரைக் குடித்தால், அது நம் குடலை சுத்தம் செய்து நம் உடலில் நச்சுத் தன்மைகளையும் நீக்கும். எனவே தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதிகாலையில் எதையும் சாப்பிடும் முன்பு வெறும் வயிற்றில் குடியுங்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். தாமிரப் பாத்திரத்திலேயோ வெள்ளிப் பாத்திரத்திலேயோ கிருமிகள் நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான தண்ணீரில், துளசியை ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றுல் சாப்பிடும்போது இந்த மழை மற்றும் குளிர் சீசனில் ஏற்படும் இளைப்பு, சைனஸ், சளி, காய்ச்சல் என்று அத்தனை பிரச்னைகளுமே நம்மை வந்து அண்டாமல் தூரப் போகிறது. ஒருவேளை ஏற்கனவே பாத்திருந்தாலும் கூட அதை விலகிப் போக செய்கிறது. அதைத்தான் அந்த மருத்துவர் நண்பருக்கு சொல்லியிருக்கிறார்.
சரி. நண்பர் வீட்டில் வெள்ளி டம்ளர் இருக்கிறது. அல்லது தாமாரப் பாத்திரம் இருக்கிறது. அவை வாங்கும் வசதி இல்லாதவர் வீட்டில் அவர்களுக்கு யார் தருவது. அதே போல் நண்பரி, அவற்றின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொண்டதால் அதன் வேல்யூவைப் புரிந்து கொண்டு தினமும் தொடர்ச்சியாக அதே போல் செய்து குடிக்கிறார். தன் குடும்பத்தினரையும் குடிக்கச் செய்தார். அந்த வேல்யூ புரியாத, அல்லது கல்வியறிவு இல்லாத சாதாரண மக்கள் என்ன செய்வார்கள். அவர்களுக்கும் இந்த சீசனில் உடம்புக்கு பாதிப்பு வரும் இல்லையா. பேசாமல் ஒரு ஏரியாவுக்கோ அல்லது ஒரு ஊருக்கோ கொடுக்கும்படி ஒரு பெரிய வெள்ளி அல்லது தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் துளசி இலைகளை ஊற வைத்து அதை அந்த ஊரில் எல்லோரையுமே அழைத்துக் கொடுத்தால்......அப்போது எல்லோருக்குமே இந்த சீசனின் பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரு நல்ல பாதுகாப்பான வழி கிடைக்குமே.
கரெக்ட். அதைத்தான் கோவில்களில் செய்தார்கள். கோவில்களில் துளசி தீர்த்தம், வெள்ளி அல்லது தாமிரப் பாத்திரத்தில் தான் வைத்து வழங்கப்படும். கை நிறைய மூன்று முறை பிடித்துக் குடிக்கும் அளவு என்பது ஒருவருக்கு போதுமானதாக இருக்கும். அதிகாலையில் வேறு எதுவும் சாப்பிடாமலேயே மார்கழி மாத சீசனில் துளசித் தண்ணீர் கோவில்களில் வாங்கி அருந்துகிறோம் அதனஅ அர்த்தம் புரியாமலேயே. நம்மை ஆரோக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழ வைக்கும் பல நல்ல விஷயங்கள் ஆன்மீகத்துடன் தம்பந்தப்படுத்தி சொல்லப்பட்டதற்குக் காரணமே, அனைவரும் அதை ஸ்ட்ரிக்டாக கடைபிடிப்பார்கள் என்பதால்தான். அது எந்த மதமும் நம்மோடு கலக்கும் முன்பே தொன்றுதொட்டு இருந்த நம் வாழ்வியல்முறை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக