Designed by Enthan Thamizh

பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே நரை முடி பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரையின் காரணமாக நரை முடி வந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால் சிலருக்கு மயிர்கால்களில் உள்ள முடிக்கு நிறமளிக்கும் மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோ சைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருக்கும். இவ்வாறு மெலனின் அளவு குறைந்தால், கூந்தலும் நரைக்க ஆரம்பிக்கும். பொதுவாக இத்தகைய நரைமுடியானது 30 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது. இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன.

உடனே எந்த கடையில் கிடைக்கும் என்று யோசிக்க வேண்டாம். அவை அனைத்துமே வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடியவை தான். மேலும் இந்த வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், முடிக்கு எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருப்பதோடு, முடி நன்கு அடர்த்தியாக, நீளமாக மற்றும் ஆரோக்கியமாக வளரும். இப்போது நரைமுடியை தடுக்கக்கூடிய இயற்கை சிகிச்சை முறைகள் என்னவென்று கொடுத்துள்ளோம்.

குறிப்பாக இத்தகைய சிகிச்சைகள் ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவானவையே. சரி, அதைப் பார்ப்போமா!!!

ஹென்னா ஹேர் பேக்: ஹென்னா மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்கை முடிக்கு போட்டால், நரைமுடி பிரச்சனையை நிச்சயம் தவிர்க்க முடியும். அதற்கு ஹென்னா பொடியில், 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, கூந்தல் முழுவதும் தடவி ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால் முடியின் நிறம் மாறுவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ப்ளாக் டீ: நரைமுடியைப் போக்குவதற்கு ப்ளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, முடியில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்காமல், முடியை நீரில் அலச வேண்டும்.

கறிவேப்பிலை: அனைவருக்குமே கறிவேப்பிலை நரைமுடியைப் போக்கவல்லது என்பது நன்கு தெரியும். இருப்பினும் சிலர் நம்பிக்கையின்றி, அதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். எனவே நரைமுடி போகவேண்டுமெனில், கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடியானது கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

முளைக்கீரை சாறு: கருமையை இழந்த முடிக்கு, மீண்டும் கருமையை கொடுப்பதற்கு முளைக்கீரை சாற்றினை முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். இதனால் முடி நன்கு வளர்வதோடு, கருமையோடும், பட்டுப் போன்றும், மென்மையாகவும் வளரும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காய் முடியை கருமையாக்குவதில் மிகவும் சிறந்த ஒரு பொருள். எனவே நெல்லிக்காய் சாற்றில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து முடிக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தலானது இழந்த கருமையை மீண்டும் பெறும்

வாழையிலையில் உணவைச் சாப்பிடுவது நமது பாரதக் கலாச்சாரம். தவிர, ஆரோக்கியமானது, ருசியானது, ஆயுளை வளர்க்கும் நல்ல பழக்கமும்கூட, தோலுக்குப் பள்பளப்பும் உண்டாகும். செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாட்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

சாப்பிடு முன் தரையில் லேசாக நீர் தெளித்து, இலையின் மேல் நுனி உண்பவரின் இடப்பக்கமும், அடி வலப்பக்கமும் இருக்குமாறு விரிக்க வேண்டும். பின்பு இலையில் சிறிது நீர் தெளித்து கையால் துடைத்து, ஒரு சொட்டு நெய் இலையில் தடவி அதன்மேல் உணவு பதார்த்தங்களைப் பரிமாற வேண்டும். இலை நுனியில் உப்பு, ஊறுகாய், பச்சடி, பொரியல், கூட்டு, வடகம், வடை, சித்ரான்னம், அப்பளம், சுத்த அன்னம், பருப்பு அதன்மேல் நெய் விட்டு மூன்று தொன்னைகளில் தனித்தனியே குழம்பு, ரசம், பாயசம், மோர் வைக்க வேண்டும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

உறவினர்களை மேற்கு நோக்கி அமர்த்தியும், சாதுக்கள், ஞானிகளை வடக்கு நோக்கி அமர்த்தியும் உணவு பரிமாற வேண்டும். கெட்டுப் போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழையிலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில் ஒரு புதிய நிற நீர் உற்பத்தியாகி இலையில் ஒட்டாமல் வடிந்துவிடும். இதனை வைத்து உணவின் விஷத்தன்மையை அறியலாம். ஆகையால்தான், எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலைவாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அல்சர் நோயினால் பாதிப்படைந்தவர்கள் தொடர்ந்து வாழையிலையில் சாப்பிட்டால் இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் உள்ள புண்களைக் கரைத்து புதிய செல்களைத் தோற்றுவிக்கும் தன்மை வாழை இலைக்கு உண்டு. ஆகையால்தான் தீக்காயம் ஏற்பட்டால் வாழையிலையால் சுற்றுவது வழக்கம். உணவு சாப்பிட்ட பின் இலையை நம்மை நோக்கி மடிக்க வேண்டும். இதற்கு உணவு நன்றாக இருந்தது. நம் உறவு நீடிக்க வேண்டும் என்று அர்த்தம். சாப்பாடு நன்றாக இல்லை என்றால் முன்பக்கமாக மடிக்க வேண்டும்.

அறிவியல் விளக்கம்: நாம் சாப்பிடப் பயன்படுத்தும் வாழையிலையில் உடல் எடை கூடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் செம்புத் சத்துகள், கண்களைப் பாதுகாத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் குடற்புண்களை ஆற்றும் பீனால், ரத்தம் உறைவதை ஊக்குவிக்கும் வைட்டமின் கே, புற்றுநோய் காரணிகளை அழிக்கும் சாலிசிலிக் அமிலம் ஆகியவை உள்ளன. வாழை இலையில், நீர் தெளித்து, அதன்மேல் நெய் தடவி, சூடான உணவுகளை வைக்கும்போது மேற்கண்ட சத்துகளெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து வருவதால் தொண்டையில் தோன்றும் அலர்ஜியைத் தடுத்து நம் ஆயுளைக் கூட்டுகிறது.

temple.dinamalar.com

இறைவனை ஐந்து முறைகளில் நமஸ்காரம் செய்யலாம்.

அவை ஏகாங்கம், துவியாங்கம்,திரியாங்கம், பஞ்சாங்கம், அஷ்டாங்கம்

#ஏகாங்கம் : தலையை மட்டும் தாழ்த்தி வணங்குதல்.

#துவியாங்கம் : வலக்கையை மட்டும் குவித்து தலையில் வைத்து வணங்குதல்.

#திரியாங்கம் : தலையின் மீது இரண்டு கைகளையும் குவித்து வணங்குதல் ்

#பஞ்சாங்கம்: தலை, 2 கைகள், 2முழங்கால்கள் ஆக ஐந்தும் தரையில்பொருந்தும்படி வணங்குதல். (இந்த நமஸ்காரம் பெண்களுக்கானது.)

#அஷ்டாங்கம்: தலை, 2 கைகள், 2 கால்கள்,மோவாய், 2 தோள்கள் ஆகிய எட்டும் தரையில் படும்படி வணங்குதல்(இதை பெண்கள் செய்யக்கூடாது).


.
அந்த விருந்தை அளித்த பணக்காரரின் உணவு மேஜையில் பலவித தட்டுகள்... தங்கம், வெள்ளி, பீங்கான் என வகைவகையாக இருந்தன.
.
"நான் தினம் ஒரு தட்டு வீதம் 30 நாளைக்கு 30 தட்டில் சாப்பிடுவேன்' என்றார் அந்தப் பணக்காரர்.
.
"எங்கள் நாட்டில் சிறு கிராமத்தில் இருக்கும் ஏழை கூட ஒரு வேளை சாப்பிட்ட தட்டில் மறுமுறை சாப்பிட மாட்டான்' என்றார் காமராசர் .
..
பணக்காரர் உட்பட அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியமாக, "எப்படி?' என்று கேட்டனர்.
...
"அது வாழை இலை' என்றாராம்...😜😜😜

My request ....

"பிளாஸ்டிக்' கை தவிர்ப்போம்",

"இயற்கை'யை ரசிப்போம்"


ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது

விளக்கம் 
ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிரே நீ கேட்க்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். நாள் தவறாமல் ஒவ்வொரு வேலையும் உன்னையை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.


ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும்

விளக்கம் 
பல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர் திரும்ப இந்த பூமிக்கு வருவதில்லை, பல முயற்சி செய்தாலும் இறப்பை தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க/தப்பிக்க முடியாது. இறப்பு உறுதியாக இறுதியில் வரும். ஆதலால் நமக்கு மட்டும் என்று சேர்த்து வைக்காமல் நம்மால் முடிந்த பொருள்களை அடுத்தவருக்கு கொடுத்து நாம் வாழ வேண்டும் .


ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து

விளக்கம் 
கால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெரும் மணலாக ஆறு வற்றி போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போலே நல்ல மனம் படைத்தோர், நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் பொது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள்.


ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.

விளக்கம் 
உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருப்பினும் , விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் நம்மிடம் சேராது, ஆதலால் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதர் இவர் என்ற மரியாதையை முதலில் சம்பாத்தியம் செய்யுங்கள்.

மெத்த படித்த விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..

கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள்,
அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..

ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..

ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..

மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.

தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..

இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு
வெட்கி தலை குனிந்தான்..

நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,

ஆம்..நண்பர்களே..,

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;

உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.

அதே ஒரு தீக்குச்சியினால்
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்

எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

நல்லதையே நினைப்போம்..


1. Bombay Lassi
8, bahar agan st, anna salai, Ellis road, behind Devi theatre, triplicane.
1) Samosa - Ritchie St. of Mt. Road Behind India Silk House ( Rs.10/- for 2 samosas)

2) Kachodi/ Kachori: After noon & Evening time at Kasi Chetty St and Patni Plaza on NSC Bose rd. Amazing Kachodi with corn flakes and chutney.

3) Idly : Thattu idly at Vaishnava Idly kadai - Ormes road kilpauk

4) Badaam Milk: Kakda Ramprasad at Mint St. Sowcarpet

5) Bread Omlette : Outside Alsa Mall Egmore.

6) Bread Bajji: Govindapanaickan St (Near Transformer) Sowcarpet

7) Paya Appam: Golden cafe early morning at 4 AM at Waltax Road.

8) Butter Chicken : Hotel Paramount - Ormes Rd. Kilpauk

9) Biriyani:
Saidai Fathima (chicken),

Periamedu Kaleem & Akbar mess & pallavaram sandhai road (mutton),

Adambakkam Chukka bai  (Beef),

Olive Oil Chicken Briyani - Aahaa Khokkrakho Briyani ch-78, K.K Ng - Cook Ananda Rajesh

10) Chola Battura: Loiee - Tambaram

11) Bun Butter Jam : Mount Road Buharis

12) Bhel Puri : Ajnabi's Egmore Fountain Plaza

13) Set Dosa Vada Curry: Dasa Dosa counter - Express Avenue

14) Dal Pakwan : Sidhi Vinayak Sweets Kilpauk

15) South Indian Non Veg Meals (Chettinadu): Hotel Guru - Mahabalipuram

16) Molaga Bajji (Chilly Bajji - North Indian Style) : Ajab Mithai Ghar - Alagappa Road

17) Fish Fry: Tawa Fish Fry at Moonrakers - Mahabalipuram

18) Veg Upma : Woodlands canteen - Nardagana Sabha - TTK Rd.

19) Veg Meals ; Madras Hotel Ashoka - Egmore

20) Beeda/Paan : Nitya tambool - Besant Nagar - Near eden Restaurant

21) Aloo Paratha: Pait pooja - Thoraipakkam

22) Pizza: Superstar Pizza Perungudi

23) Paav Bhaji : Novelty - Mint St. Sowcarpet.
                                                                                          24) Moingaa (Burmese noodles with vazhai thandu fish bone soup unlimited) , Aththoe ( Burmese noodles with porikadalai podi ) Masala Muttai (boiled egg stuffed with golden fried onion and Burmese masala ) available opposite to Burma Bazaar behind GPO .
                                                       25)Chinna vengaayam ooththappam with thakkaali chutney and Malli chutney in north Usman road Murugan Iddly Kadai.

26)Beef tail soup, Beef payaa, Beef chukka fry - Adambakkam chukka bai.                                

27)Beef Phaal, Beef Kabab, Beef Sheek - Mubarak Dhasamahal ottery                                        

28)Tea - Tambaram Butts          

29)Milk Shakes - Saravana bhavan             30)Channa Masala & other chats - Adyar Ananda Bhavan Adyar Branch.           

31)Bassundhi & Masala Milk - Devi theatre backside gate.

32)Vanjaram Fish - Tamil Nadu fisheries dept vehicle - Marinaa beach
                                              33)Beef gravy with evening tiffins - Porur Bai shop
                                              34)Masala Dosai - Data udipi Hotels
                                              35)Cofee - Saidai Gowri Nivas

36)Fish Meals , Shawarma - Cresent Nungambakkam.

37)Veg Mini Meals - Sangeetha Hotels
                                              38)Sambar - Nungambakkam Raj Bhavan - only in non A/C dining

39)Jigirthandaa -  Dindukkal Thalappakatti

சிரிக்காம படிங்க.....

நீங்க எவ்வளவு தூரம் சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியும் னு பார்க்கலாம். நல்ல அருமையான தமிழ் நடை.

காதலிக்கு 👩🏽 ஓர் கடிதம்! ✉

அன்பே!
நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

'அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங் காலம் சந்திக்கலாம்' என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்ன போது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி 5 மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது..

'எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!'
என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.

மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.
அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.

சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு
பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன்.
அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் 50 ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.

ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சினை என்பதைக் கண்டுகொண்டேன்.
வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…
அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது...

தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…
வயசாச்சில்ல…
என தன் திருவாய் மலர்ந்தார்.

திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார்.
அப்பாடா, முடித்துவிட்டார் என்ற ஆசுவாசத்தை
' ஒரு கஸாடா' என்ற வார்த்தையில் உடைத்தார்.
கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோயிலில் உண்டைக் கட்டிக்கு காத்திருக்கும் கோயில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் 6 வித்தியாசங்கள் கூட இல்லை..

'தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா' என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.'

'சார்,
நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்' என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். '

அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச
'ஆனந்த பவனுக்கு'
வந்தது நீங்க இல்லையா தம்பி?!'
என ஆச்சர்யமாக அவர் கேட்டபோது தான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். "

"தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க
ஒன்னு பண்ணுங்க…
நாளக்கி சாயங்காலம் 'அன்னபூர்ணா' வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்"
என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்
துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,

இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல்
இறையருளால் தப்பித்த உன்னுடைய,
முன்னாள் காதலன்.. 😜


எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு

விளக்கம் 
எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.

எதில் 😄மகிழ்ச்சி!!!

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு 🎈🎈பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு 🎈பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய 🎈பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், 'ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் 🎈யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்' என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,'இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை'.

'நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்'.

இந்த நாள் அனைவருக்கும் சந்தோஷமாய் மலரட்டும் ..!! 😄😄😃😃😃😃

கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...
மனைவி : "வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்"!.
கணவன் : "ஏன்?... என்னாச்சு"..?..
மனைவி : "இன்றைக்கு ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,...நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்"! ...
கணவன் : "சரி"...!
மனைவி : "இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது..!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி"!.
கணவன் : "(கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சு விட்டுட வேண்டியதுதானே"!.
மனைவி : " மன்னிக்கிறதா?..அந்த பேச்சுக்கே இடமில்ல.
எங்க அந்த உருட்டு கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)
(வாசலிலிருந்து வந்த மகன்...) மகன் : " யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா"!..
அப்பா : "ஏண்டா"..?
மகன் : "நான்தான் கோபத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா"!!
அப்பா : "அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே., அய்யய்யோ ... இப்ப நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்..! செய்யாத குற்றத்துக்கு நாயா, பேயா அலைய வைக்கிறாங்களே..... இத கேட்க நாதியில்லையா"....

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World's Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது
அறிவியல் உண்மை ( ஆன்மீகம் )

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா?

இல்லை,

பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.

அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.

மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.

அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"

என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..

படித்ததும் பகிரவும். இது இந்து மதத்தின் உண்மை.

ஒரு பெண்மணி செல்லப் பிராணிகள் விற்கும் கடையில், மிகவும் அழகான கிளி ஒன்றைப் பார்த்தாள். அதன் விலை வெறும் 50 ரூபாய் என்று எழுதியிருந்தது.!

"ஏன் இவ்வளவு குறைவான விலை, இத்தனை அழகான கிளிக்கு?"

"அது ஒண்ணுமில்லைம்மா, இந்தக்கிளி முன்னாடி ஒரு விபச்சார விடுதியில இருந்துது. சமயத்துல ரொம்ப கெட்ட கெட்ட வார்த்தையாப் பேசிடுது." என்றாள் அந்தக் கடை உரிமையாளர்.

சற்று யோசித்த அந்தப் பெண்மணி, கிளியை விட மனமில்லாமல், வாங்கி, வீட்டுக்குக் கொண்டு சென்று, ஹாலில், கிளிக்கூண்டை தொங்கவிட்டு,....

... எதாவது பேசுமா என்று பார்த்தாள்.
அந்தக் கிளி நிதானமாக அந்த ஹாலை சுற்றிப் பார்த்துவிட்டு,...

"புது வீடு,... புது மேடம்!" என்றது!

கிளி என்ன அர்த்தத்தில் சொல்கிறது என்று புரிந்தாலும்,...

"இது ஒண்ணும் கெட்ட வார்த்தையில்லையே!" என்று சமாதானமானாள்.

அப்போது அங்கு வந்த அந்தப்பெண்மணியின் இரண்டு டீன் ஏஜ் மகள்களைப் பார்த்து,...

"புது வீடு,... புது மேடம்,... புதுப் பொண்ணுங்க!!" என்றது கிளி !

தர்மசங்கடத்திலும், அந்த கிளி முன்பு இருந்த இடத்தை நினைத்து, மூவரும் வாய்விட்டு சிரித்தனர்.

சிறிது நேரம் கழித்து, அந்தப்பெண்மணியின் கணவர் சேகர், உள்ளே நுழைந்தார்.

கிளி அவரைப்பார்த்து,... "ஹாய் சேகர்" என்றது!
---------------------------------- செத்தான் சேகரு!

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒரு சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு அறிவிக்க சொன்னான்

" வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை" சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .

நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் . ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .

நமசிவாய என்றார் ஒருவர் .

ஓம் சக்தி என்றார் மற்றவர் .

உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.

ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .

எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .

அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து " மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம்", பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .

இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .

சில வருடங்களுக்குப்பின் . . .

திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது. 

தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .

நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ளஎண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .

இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .

தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .

அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.

உடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.

" மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்"

இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.

மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் ,

ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான் . . . .

'இந்த நிலை மாறும்'

அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .

தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.

தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.

அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.

மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.

இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .

நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.தான்அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.

மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .

இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் . அந்த மனிதன், மன்னா , "வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே "

மன்னன் : "ஆமாம் அது உண்மைதான் அன்பரே "

அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .

ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.

சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .

'இந்த நிலை மாறும்'

இதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .

நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் !

அன்பின் நண்பர்களே , உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது . சந்தேகம் வேண்டாம் , இதில் வேறு கருத்தில்லை , உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை . ஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.

'இந்த நிலை மாறும்'

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் ....😄😃😀😊👍👍

நெஞ்சைத் தொட்ட பதில்!
-----------------
செட்டி நாட்டு வீதியொன்றில் கீரைவிற்றுகொண்டு செல்கிறாள் ஒருபெண். வீட்டு வாசலில் மகனோடுஅமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள்.

" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"

" ஓரணாம்மா"

"ஓரணாவா....? அரையணாதான்தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா".

" அதெல்லாம் முடியாது.அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்தத் தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தபெண் கூடையை எடுத்துக்கொண்டுசிறிது தூரம் சென்றுவிட்டு,
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா"என்கிறாள்

"முடியவே முடியாது. கட்டுக்குஅரையணாதான் தருவேன்"... என்று தாய் பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையைக் கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
வாங்கிக் கொண்டு கூடையை தூக்கிதலையில் வைக்க போகும் போது கீழேசரிந்தாள்.

"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலையா...?" என்று அந்த தாய் கேட்க,

"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்றுகூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லிகளையும், அவற்றிற்குத் தேவையான சட்னியையும் வைத்துக் கொண்டு வந்தாள். "
"இந்தா சாப்பிட்டுவிட்டுப் போ" என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும்பார்த்துகொண்டிருந்த அந்தத் தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனீங்க..ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....? என்றுகேட்க

அதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று நெத்தியடியாகக் கூறினாள்.

நெஞ்சைத் தொட்ட அந்தப் பதில், அன்று முழுவதும் மனதையே சுற்றி வந்தது.


உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு

விளக்கம் 
கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் ?


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்

விளக்கம் 
நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.


எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு

விளக்கம் 
கண் தெரியாத குருடன் , மாங்காய் அடிக்க முயற்சி செய்து அவன் கையில் வைத்திருந்த கோலை இழப்பதை போல், ஒருவன் காலம் அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அவனிடன் உள்ளதையும் இழக்க நேரிடும். நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேலை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலை தொடங்க வேண்டும்.

இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு

விளக்கம் 
நிலையில்லாத இந்த உடம்பை, மெய் என்று கருதி அதற்கு அனைத்தும் செய்கிறாயே, மெய் என்று கூறும் உடல் பொய் என்பதை உணர்ந்து, வறியவருக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் ஈகை செய்க, மக்கள் ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் சொர்க்கம் உங்களுக்கு வாசல் கதவை திறக்கும்


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி

விளக்கம் 
உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.


புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

விளக்கம் 
மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கு
சென்று வந்த பிறகு குறிப்பிடுகையில்
"நான் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் இந்தியாவை விரும்பினேன்" என்றார்.

உடனே எல்லோரும் சிரித்தார்கள்.

பார்த்தீர்களா சுவாமி விவேகானந்தருக்கு
கூட அமெரிக்கா சென்று மாட மாளிகைகளை பார்த்து வந்த‌வுடன் இந்தியா இப்போது பிடிக்காமல் போய் விட்டது என்று....

சுவாமிஜி பேச்சை தொடர்ந்தார், "வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் இந்தியாவை விரும்பினேன்,

வெளிநாடுகள் சென்று திரும்பிய பிறகு இந்தியாவை வணங்குகிறேன்" என்றார்.

இந்தியாவை போல் அழகான
அற்புதமான உறவு முறைகளை
எங்கும் பார்க்க இயலாது.

அதனால்தான் அவர் அமெரிக்காவில்
"சகோதர சகோதரிகளே" என்றதும்
அத்தனை கைத்தட்டல் எழுந்தது.

உறவுகளுக்காகவும், அன்பிற்காகவும் மேற்கத்திய நாடுகளில் ஏங்குகிறார்கள்.

ம‌னநல மருத்துவமனைகள்
அயல்நாடுகளில் பெருகுகிறது.

இந்தியாவில் நம்மிடையே இருக்கும் உறவுகள்தான் மிகுந்த மகிழ்ச்சியை
கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

சமீப காலங்களில் நாம் அத்தகைய
உறவுகளுக்கு மதிப்பளிப்பதை மறந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.

நான் ஒரு ஆட்டோவின் பின்னால் படித்தது "வீட்டின் பெயரோ
'அன்னை இல்லம்',
அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்" ////

மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது, ஏன் ?
தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான். வியாழன் கிரகம் ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும் காலம் 12 ஆண்டுகள். வியாழன், சூரியன், பூமி, நிலவு, மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் என ஐந்தும் ஒரே நேர்கோட்டில் வருவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை. அதுவும் மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று இணைவது சிறப்பானது. அதனால்தான் மாசிமகம் எனப்படுகிறது.
மகம் என்பது இந்திய வானியலில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரப் பிரிவுகளுள் 10 ஆவது பிரிவு ஆகும்.
சிங்கராசியில் அமைந்துள்ள இந்த நட்சத்திரக்கூட்டத்தின் அமைப்பு கீழே.
கும்பகோணத்தில் உள்ள மகாமக குளமும் இந்த சிங்க நட்சத்திர அமைப்பை ஒட்டியே கட்டப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.
நட்சத்திர சிங்கத்தின் உடல், வயிற்றுப்பகுதியை மையமாகக்கொண்டு கட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். என்ன ஒரு விண்ணியல் அறிவு அவர்களுக்கு.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றும் வியாழன் மக நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கும் போது சூரியன் கும்ப நட்சத்திரக்கூட்டத்தில் இருப்பதால் இவ்வூர் கும்ப-கோணம் என்றே அழைக்கப்படுகிறத

👉👉👉 நாம் பல பழமொழிகளை அவ்வப்போது பேச்சு வழக்கில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பல பழமொழிகளை இப்போது தவறுதலாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

👉👉👉 உண்மையான பழமொழி என்ன? அவற்றில் சிலவற்றை காண்போம்

🐺🐺🐺"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

👉👉👉 சரியான பழமொழி :
*************************
👌👌👌 "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

விளக்கம் :
************

இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.

கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.

கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.

மற்றும் சில பழமொழிகள்:
*******************************

1.👨👩 ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.

👌👌👌 ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.

2.🐾🐾🐾🔰🔰🎻🎼🎺🎹 படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
************** **************

👌👌👌 படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.
*************** ***************

3.💉💊💉 ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
*******

👌👌👌 ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொண்டவன் அரை வைத்தியன் (கொண்டவன் என்றால் வைத்திருப்பவன்) - சரி.
********

4.🐴🐴🐴 நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.
*****

👌👌👌 நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.
******
🐾🐾🐾 ( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு...
🐾🐾🐾அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...
🐾🐾🐾ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )

5.🌂🌂🌂 அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.

👌👌👌 அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.

மாறுவோம்...பிறரை மாற்றுவோம்....
🙌

ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பார்வதி கேட்டார்
"ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களா? ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை " என கேட்டார்.
சிவன் சொன்னார் "அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா" என அழைத்து சென்றார்
கங்கைக்கரையினை அடைந்த சிவன் "நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் " என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்
உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி "பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்க" என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையனை நின்றார்கள்.
சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான்.
மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உடன் பார்வதி அன்னை " அப்பா நீ பாவமே செய்யவில்லை யா? " என வினவினார்.
அவன் சொன்னான்" எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கேன் ....
அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன் நம்பி செய்தேன்.
அவ்வளவுதான் அம்மா" என்றான்.
முதியவர் சொன்னார் " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்.
நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை "
என சொல்லி அழைத்து சென்றார் நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கும் ....

சூப்பர்....
ஒரு பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்... வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏராளம் பாம்புகள் தேவைபடுகிறது. நீங்கள் ஒரு பாம்பை பிடித்து தந்தால், 10 ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாய் வீதம் வாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
அதனால் மக்களுக்கு அதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது. உடனே அந்த பணக்காரர், இனி
பாம்பை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் .ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல்
எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்ப்பதே அரிதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்துபோய்விட்டது.
அந்த பணக்காரர் விடவில்லை. இப்போது 50
ரூபாய் தருவதாக அறிவித்தார். உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்துகொடுத்தார்கள். இப்போது பாம்பே இல்லாத நிலையாகிவிட்டது.
அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை. மேலும்பாம்பு கிடைப்பது அரிதாகிவிட்டதால் 200 ரூபாய் தருவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தான் அவசரமாக இன்னொரு தொழில் விஷயமாகமற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில்
வந்து வாங்கி கொள்கிறேன். அதனால் உங்களால் முடிந்த அளவு பிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி, நான் வரும்வரைக்கும் என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லி சென்று விட்டார்.
அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டு..."மக்களே இங்கே பாருங்கள் நீங்கள் பிடித்து தந்த அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும் அதற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இல்லை. அதனால் நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்களை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிறது என்று அவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன். அவர் வந்ததும், இதே பாம்பை நீங்கள்
அவரிடம் 200 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள்" என்று சொன்னார்.
உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்தபணத்தில் பாம்பை போட்டி போட்டுக்கொண்டு வாங்கிகுவித்தார்கள். எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளைவருகிறார் அதனால் நான் இன்று போய் விடுகிறேன் என்று சொல்லி கிளம்பி சென்று விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை.. அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....!
இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்புகள் மட்டும்தான்....!
@ஸ்டாக்மார்க்கெட் எப்படி செயல்படுகிறது...எனக்கும் புரிந்தது அதை எப்படி சொல்றதுன்னு புரியாம இருந்தேன்..... இவர் தெளிவா சொல்லிருக்கார்...

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?
😜
பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

பாடல்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

விளக்கம்:

பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும் தா

இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நல்வழிகளையும் உரைப்பதால் இந்நூல் நல்வழி என அழைக்கபடுகிறது. நல்வழி ஔவையாரால் இயற்றப்பட்ட நூல் ஆகும்.

மானிடர் அனைவரும் நல்வழி செல்ல நல்வழிப் பாடல்கள் இங்கு பொருள்,மற்றும் மொழிபெயர்ப்புடன் தொகுக்கப்பட்டுள்ளது.

கோயில் ஒன்றில் கடவுளின் நகைகள் திருட்டுப் போய்விட்டன.

கோயில் பொறுப்பாளர் கடவுளை நோக்கி "உன் நகைகளையே காப்பாற்றிக் கொள்ள சக்தி இல்லாமப் போச்சே.. நீ ஒன்றுக்கும் உதவாதவன்" என்று கடவுளைப் பார்த்து புலம்பினார்.

அப்போது அங்கே வந்த யோகி ஒருவர் அவரைப் பார்த்து "டீக்கடை வாசலில் நீ பன் தின்று கொண்டிருக்கும் போது அதைப் பிடுங்கிக் கொண்டு யாராவது ஓடினால் துரத்திப் போய் திரும்பப் பிடுங்குவாயா?" என்று கேட்டார்.

கோயில் பொறுப்பாளர், "இல்லை" என்றார்.

"உன் பேனாவைப் பிடுங்கிக் கொண்டு யாராவது ஓடினால்?"

"அப்போதும் மாட்டேன்"

"செண்ட்டு பாட்டில், சிகரெட் பெட்டி இப்படி ஏதாவது என்றால்?"

"என்ன பேசறீங்க? என் கிட்ட இருக்கிற காசில் லட்சக்கணக்கான பன், செண்ட்டு, பேனா வாங்கலாம். இதற்கெல்லாமா நான் துரத்துவேன்?"

"உனக்கு ஒரு வீடும் ஒரு காரும் கொஞ்சம் பணமும் சொந்தம். கடவுளுக்கு இந்த உலகமே சொந்தம். அவரவர் லெவலுக்கு ஏற்றார்போல் அவரவர் விட்டுக் கொடுக்கிறார்கள்"

(தட்சிணேஸ்வர் கோயிலில் நகைகள் திருட்டுப் போன போது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கருத்தின் அடிப்படையில் கொஞ்சம், மசாலா சேர்த்து ஜவர்லால் எழுதிய குட்டிக் கதை) முகநூலில் இருந்து
...

#தினம் ஒரு சிந்தனை!!!

என் நண்பர் ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.  அதனால் கோவில்களுக்கு செல்ல மாட்டார்.  கோவில்களில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் குறித்துக்கூட ஒரு நாள் என்னிடம் கிண்டலடித்தார்.  சமீபத்தில் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.  எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம்.  ஒரு வெள்ளி டம்ளரில் துளசி தீர்த்தம் வைத்து வீட்டில் அனேவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்.  நான் ஒன்றும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் பார்வை அவருக்குப் புரிந்த்து.  உடனே அவர் என்னிடம் "இப்பவும் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.  எங்கள் குடும்ப டாக்டர் தான் இதுமாதிரி குடிக்கச் சொன்னார்.  சமீபத்தில் பெய்த மழையால் வீட்டில் அனைவருக்கும் கடும் சளி, இருமல், காய்ச்சல்னு ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க.  அதனால் குடும்ப டாக்டரிடம் சென்றோம்.  "இந்த சீசன் முழுக்க துளசி ஒரு கைப்பிடி சாப்பிடுங்க.  துளசி ஊறிய தண்ணீரையும் குடிங்க"ன்னு சொன்னார்.  அதையும் வெள்ளி டம்ளரில் குடித்தால் இன்னும் நல்லதாம்.  ஏன்னா வெள்ளி ஆண்டி பேக்டீரியல் கொண்ட உலோகமாம்.  தண்ணீரில் இருக்கும் நோய் எற்படுத்தும் பாக்டீரியாக்களை எல்லாம் வெள்ளம் அழிச்சிடும்னு சொன்னார்.  நம்ம வீடுகளில் இருக்கும் காஸ்ட்லியான வாட்டர் ப்யூரிஃபையர்களிலும் பெரிய பெரிய வாட்டர் டாங்குகளிலும் குறிப்பா மருத்துவமனைகளிலும், ஏன் பெரிய நீச்சல் குளங்களிலும் கூட தண்ணீரை சுத்தப்படுத்த வெள்ளி தான் உபயோகப்படுத்தறாங்களாமே.  நம்ம ஊர்ல மட்டுமில்லை.  உலகம் முழுக்க அமெரிக்காவில் கூட குடிதண்ணீரைச் சுத்தப்படுத்த வெள்ளி உபயோகிக்கறாங்களாம்" என்று ஒரு பெரிய லெக்சரோ கொடுத்தார்.

அவர் பேசியதைக் கேட்க சந்தோஷமாக இருந்த்து.  அவ்ர் இன்டர்நெட் உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர்.  டாக்டர் சொன்னவுடன் அவர் அது பற்றி இன்டர்நெட்டிலும் தகவல் சேகரித்திருப்பார்.  வெள்ளி போலவே தாமிரப் பாத்திரத்தில் வைத்து தண்ணீர் குடிக்கும்போதும் அதுவும் தண்ணீரில் இருக்கும் கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை கொல்கிறது.  இன்னும் முக்கியமாக ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் இவற்றையும் கன்ட்ரோலில் வைக்கிறது.  அதிலும் காலையில் வெறும் வயிற்றில் தாமிரப் பாத்திரத்தில் வைத்த தண்ணீரைக் குடித்தால், அது நம் குடலை சுத்தம் செய்து நம் உடலில் நச்சுத் தன்மைகளையும் நீக்கும்.  எனவே தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதிகாலையில் எதையும் சாப்பிடும் முன்பு வெறும் வயிற்றில் குடியுங்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.  தாமிரப் பாத்திரத்திலேயோ வெள்ளிப் பாத்திரத்திலேயோ கிருமிகள் நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான தண்ணீரில், துளசியை ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றுல் சாப்பிடும்போது இந்த மழை மற்றும் குளிர் சீசனில் ஏற்படும் இளைப்பு, சைனஸ், சளி, காய்ச்சல் என்று அத்தனை பிரச்னைகளுமே நம்மை வந்து அண்டாமல் தூரப் போகிறது.  ஒருவேளை ஏற்கனவே பாத்திருந்தாலும் கூட அதை விலகிப் போக செய்கிறது.  அதைத்தான் அந்த மருத்துவர் நண்பருக்கு சொல்லியிருக்கிறார்.

சரி.  நண்பர் வீட்டில் வெள்ளி டம்ளர் இருக்கிறது.  அல்லது தாமாரப் பாத்திரம் இருக்கிறது.  அவை வாங்கும் வசதி இல்லாதவர் வீட்டில் அவர்களுக்கு யார் தருவது.  அதே போல் நண்பரி, அவற்றின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொண்டதால் அதன் வேல்யூவைப் புரிந்து கொண்டு தினமும் தொடர்ச்சியாக அதே போல் செய்து குடிக்கிறார்.  தன் குடும்பத்தினரையும் குடிக்கச் செய்தார்.  அந்த வேல்யூ புரியாத, அல்லது கல்வியறிவு இல்லாத சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்.  அவர்களுக்கும் இந்த சீசனில் உடம்புக்கு பாதிப்பு வரும் இல்லையா.  பேசாமல் ஒரு ஏரியாவுக்கோ அல்லது ஒரு ஊருக்கோ  கொடுக்கும்படி ஒரு பெரிய வெள்ளி அல்லது தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் துளசி இலைகளை ஊற வைத்து அதை அந்த ஊரில் எல்லோரையுமே அழைத்துக் கொடுத்தால்......அப்போது எல்லோருக்குமே இந்த சீசனின் பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்ள ஒரு நல்ல பாதுகாப்பான வழி கிடைக்குமே. 

கரெக்ட்.  அதைத்தான் கோவில்களில் செய்தார்கள்.  கோவில்களில் துளசி தீர்த்தம், வெள்ளி அல்லது தாமிரப் பாத்திரத்தில் தான் வைத்து வழங்கப்படும்.  கை நிறைய மூன்று முறை பிடித்துக் குடிக்கும் அளவு என்பது ஒருவருக்கு போதுமானதாக இருக்கும்.  அதிகாலையில் வேறு எதுவும் சாப்பிடாமலேயே மார்கழி மாத சீசனில் துளசித் தண்ணீர் கோவில்களில் வாங்கி அருந்துகிறோம் அதனஅ அர்த்தம் புரியாமலேயே.  நம்மை ஆரோக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழ வைக்கும் பல நல்ல விஷயங்கள் ஆன்மீகத்துடன் தம்பந்தப்படுத்தி சொல்லப்பட்டதற்குக் காரணமே, அனைவரும் அதை ஸ்ட்ரிக்டாக கடைபிடிப்பார்கள் என்பதால்தான்.  அது எந்த மதமும் நம்மோடு கலக்கும் முன்பே தொன்றுதொட்டு இருந்த நம் வாழ்வியல்முறை!

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்... பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்...இது ஒரு பழமொழி... ஆனால்... இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது...
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்... தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆயுளும் வளரும்

சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்
When BHAKTI enters FOOD,
FOOD becomes PRASAD,

பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்
When BHAKTI enters HUNGER,
HUNGER becomes a FAST,

தண்ணீருடன் பக்தி சேரும்போது அது புனித நீராகிவிடும்
When BHAKTI enters WATER,
WATER becomes CHARANAMRIT,

பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.
When BHAKTI enters TRAVEL,
TRAVEL becomes a PILGRIMAGE,

இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.
When BHAKTI enters MUSIC,
MUSIC becomes KIRTAN,

பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்
When BHAKTI enters a HOUSE,
HOUSE becomes a TEMPLE,

செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்
When BHAKTI enters ACTIONS,
ACTIONS become SERVICES,

வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்
When BHAKTI enters in WORK,
WORK becomes KARMA,

AND

ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்
When BHAKTI enters a MAN,
MAN becomes HUMAN.


நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில் b, நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்.
யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை...!

1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

அமருங்கள் சம்மணமிட்டு...
சாப்பிடுங்கள் முறையாக...
வாழுங்கள் ஆரோக்கியமாக!...
: 🔴நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு
சுழன்று கொண்டிருக்கிறது.

🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

🔴விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

🔴விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

🔴காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

🔴காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

🔴முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

🔴பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

🔴பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

🔴மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

🔴இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

🔴இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

🔴இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

🔴இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

🔴மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர். I


இன்மைக்கொள்கை தமிழருடையது. அணுக்கொள்கையில் ஏரணப் பிரிவுகளில் இதுவும் ஒன்று. இதனை
அண்மையின் இன்மையின் எண்மையின்
வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும்….. தொல். செய்யுள்214. எனத்தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். வித்திலிருந்து மரம் உண்டாகிறது. வித்தினைப் பார்க்கும்பொது மரம் தெரியவில்லை. வித்து முளைத்துச் செடியாகும்போது மரம் தெரியவில்லை. வித்து முளைத்துச் செடியான பிறகு வித்தினைப் பார்க்க முடிவதில்லை.

வித்தில் மரம் தெரியாதது இன்னை. அதனால் மரம் இல்லை என்று பொரு கொள்ள முடியாது. இன்மையாகிய பொருள் உள்ள பொருளே. ஆதலால் சுழியத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படாத உண்மையாயிற்று. இதனைப் பக்குடுக்கை நன்கணியர், கணியாதன் ஆகிய கணியவியல் அறிவர்கள் உலகிற்கு உணர்த்தினர். நாளடைவில் ஆசிவகம் எனப்பட்ட இக்கோட்பாடு சாங்கியம், வைசேடிகம், உலகாயதம் எனும் பெயர்களில் நாலாத் திசையும் பரவிற்று.

பக்குடுக்கை நன்கணியார், கணியாதன் ஆகியோர்க்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கணியர் மரபில் தோன்றிய தொல்கணியாதன் என்பவரே முதன்முதல் இன்மைக் கோட்பாட்டினையும் சுழியத்தையும் வண்டிச்சக்கரத்தின் சுற்றளவு வாய்பாட்டையும் கண்டறிந்தவர் என்னும் செய்தியும் வள்ளுவக் கணியரின் செவிவழிச் செய்தியாக நிலவுகிறது.

சுழியம் எவ்வாறு பரவியது?

சாலைகளின் நீளம் காண 11 அடி கோலின் வழி வந்த காதத் தொலைவைக்குறிக்க, காதவழிக் கற்கள் தரைவழி வணிகர்களின் நலன் கருதி நடப்பட்டன. கடல்வழிப்பலணம் சொல்வோர்க்கு விண்மீன்களின் சுற்றுச்செலவுகளே எல்லை காட்டும் குறியீடுகளாயின.

புயல் வீசாத கடல் பாதையாகிய நில கடுக்கோட்டு இருமருங்கு 5 பாகை வழியாக ஈசுடர் தீவில் சிந்துவெளி முந்து எழுத்துக்களைப் பயன்படுத்தியோரும் அமெரிக்காவில் குடியேறிய இன்கா மாயர் பழங்குடிகளும் உயர்ந்த வானநூல் கணிதநூல் வல்லுநராகக் குடியோறியுள்ளனர்.

அணுக்கொள்கையின் உட்பிரிவாகிய இன்மைக்கொள்கை சுழியமாகக் கருதப்பட்டது. இது மெய்யியல் ஓகம், ஊழிகம் (தியானம்) மந்திரம் ஆகிய பழந்தமிழர் நான்மறைக்கொள்கைக்கு வித்தாயிற்று. அறம், பொருள், இன்பம், எனும் முப்பால் பகுப்பு இல்லற வாழ்க்கைக்கும் மெய்யியல் முதலாகிய நான்கும் துறஹக் கோட்பாட்டுக்கும் நிலைக்களங்களாயின.

பக்குடக்கை நன்கணியாரும் கணியாதனாரும் கண்டறிந்த சிறப்பியம் எனும் ஆசீவக அணுக்கொள்கையை வடநாட்டிலும் பரப்பியதால் மற்கலிகோசர் இதனை மேலும் விரித்துரைத்தார். வடபுலத்தார் சாங்கியம், யோகம், உலகாயதம் எனும் கோட்பாடுகளை வளர்த்துக்கொள்ளவும் புத்த, சமண சமயத்தார் அணுக்கொள்கையையும் இன்மைக் கோட்பாட்டினையும் அடிப்படையாகக் கொள்ளவும் இது வழி வகுத்தது.

எண்கணிதம் இடையறவின்றிப் பல அடுக்கு எண்களாக வளர இன்மைக்கொள்கையின் புற வடிவமாகிய சுழியம் உதவியது. இதனால் தமிழில் பத்து இலட்சத்தைக் குறித்த நெய்தல், கோடியைக் குறித்த குவளை அதன் பன்னூறு மடங்கு அடுக்குகளைக் குறித்த ஆம்பல், தாமரை, வெள்ளம், ஊழி போன்ற பேரெண்கள் மிக எளிதாக உருவாயின.

சுழியத்தின் பயன்பாட்டால் வணிகம், வானநூல் கணிப்பு, கணிதக் கலையின் வளர்ச்சி கட்டடக் கலை, பொறியியல் ஆகிய பல்வகை அறிவியல் வளர்ச்சி விரைவுபட்டது.

உலக மக்கள் தமிழரின் சுழியம் கண்டுபிடிப்புக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளிலுள்ள கணித வல்லுநர் அனைவரும் "பூச்சியம் என்னும் சுழியத்தைக் கொடையளித்த நாடு இந்தியா" எனப்பாராட்டி மகிழ்கின்றனர். அது முற்றிலும் குமரி நாட்டுத் தமிழரின் கொடை என்பதை உலகம் அறியவில்லை. பழந்தமிழர் ஞாலமுதல் சுற்றுக்கடலோடிகள்

அந்நாள் முதல் வானநூலும் உயர்நிலை கணிதமும் ஒன்றுசேர வளர்ந்தன. "நிலக் கோட்டின் இருபாலும் 5 பாகை அளவுக்குள் புயல் உண்டாவதில்லை" உன்பதைப் பட்டறிவால் உணர்ந்தனர்.

ஆபிரிக்கக் கிழக்குக் கடற்கரை கெனியாவுக்கும் கீழ்க்கடலில் இந்தோனேசியா, சாலமன் தீவு, தென்னமெரிக்க பெரு நாட்டின் வடகோடிப் பகுதிகளுக்கும் விண்மீன் துணைக்கொண்டு கி.மு 4000 – 3000 காலத்திலேயே நெடும்பயணம் செய்தோராவர்.

வான நூலும் கணிதமும் வளர்ந்ததன் விளைவாக மேல் இலக்கத்தின் மேல் வரம்பையும் கீழ் இலக்கத்தின் (பின்னத்தின்) கீழ் வரம்பையும் கணிக்க முடியாதஎல்லையினைச் சுழியம் '0' எனக்குறித்தனர்.

கழியத்தின் நுட்பம்

ஒருநாளில் 60 நாழிகை முடிந்ததும் அடுத்த நாள் தொடங்குகிறது. அந்த நேரத்தைச் சுழிய நேரம் ( Zero Hour ) என்கிறார்கள். 9 ஆனதும் 10 ஐக் குறிக்க ஒன்றையடுத்துச் சுழியம் '0' இடுகிறோம். இதன் பொருள் என்ன? பத்தாம் இடத்தில் ஒரு பத்து முடிந்து விட்டது. பதினோராம் எண் ஒன்றாம் இட மதிப்பை நிரப்பும் வரையுள்ள இடைவெளி நேரத்தில் ஒன்றுமில்லாத தன்மையினைச் சுழியம் என்னும் வட்டம் உணர்த்திநிற்கிறது.

ஒன்று என்னும் எண்ணை அதிகப்படியாக எத்தனைப் பகுதிகளாகப் பகுக்க முடியும் என்னும் வினாவுக்கு விடை சொல்ல முடியுமானால் எண்ணிக்கைகளில் மிகப்பெரியபேரெண் எது என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.

இருக்கும் பொருளைத்தான் பகுக்க முடியும். பொருளை பகுத்துக்கொண்டே போனால் ஒன்றுமில்லாத நிலை உருவாக்க முடியுமா? என்பது அடுத்த வினா. ஒன்றுமில்லாத நிலை உருவாக்க முடியாது என்பதே விடை.

ஏதோ ஒரு கடைசி எல்லையில் மிகச் சிறிதாகிய நுண்ணணு மேலும் பகுக்க முடியாத நிலையில் இருந்தே ஆகவேண்டும் என்பதை " Atom can neither be created nor destroyed " என அறிஞர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஒன்றுமில்லாத நிலை உருவாகாது. அப்படியானால் ஒன்றுமில்லாதது என நாம் கருதும் சுழியம் எதைத்தான் குறிக்கிறது? இதற்குத் தொல்காப்பியர் இன்மை எனப்பெயரிட்டார்.

தொல்காப்பியரும் ஐன்சுடீனும்

பொருளின் பகுப்புகளில் ஒன்றுமற்ற நிலை உருவாக்கமுடியாது. ஒரு பொருள் மற்றொரு பொருளாகும் வளர்ச்சிநிலை அல்லது அழிவு நிலைகளின் நுடண்ணிய இடைவெளி நேரத்தைத்தான் ஒன்றுமில்லாத இடைக்கால நிலை என்று சொல்ல முடியும்.

பொருளைப்போலவே காலத்தை எத்தனைக் கூறுகளாகப் பகுத்தாலும் ஒன்றுமற்ற இடைவெளியைக்காண முடியுமா? என்பது அடுத்த வினா.

காலம் ஐம்புலனுக்குப் புலனாகாது. அறிவால் மட்டும் உய்த்துணரமுடியும். பொருளைத் தனியாகப் பிரித்தால் காலம் என்பது ஒன்றுமில்லாததாகிவிடும். அதாவது, பொருளற்ற நிலையைக் காட்டும் இல்லாத நிலையை உணர்த்தாது. ஆதலால் காலமும் உள்ளதாகிய கருத்துப் பொருளே.

தொல்காப்பியர் கருத்துப் பொருளாகிய காலத்தையும் இடப்பரப்பாகிய பருப்பொருளையும் ஒன்று சேர்த்து, "காலமும் இடனும் முதற் பொருளென்ப" என்கிறார்.

பொருளிலிருந்து காலத்தைப் பிரிக்க முடியாது. காலத்திலிருந்தும் இடத்தைப் பிரிக்க முடியாது. இதனை ஐன்சுடீன் பெருமகனார் "பொருளின் நீள, அகல, உயரம் எனும் கன அளவோடு காலத்தையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும்" என்றார். இதுவே தொல்காப்பியர் கருத்துமாகும்.

பொருள் உடம்பு என்றால் காலம் உயிர். பொருளின் இடைவிடாத இடமாற்றங்களின் ஊடே நிலவும் மிகச்சிறிய இடைவெளி நேரம் ஒன்றுமில்லாதது போல் தோன்றுகிறது. அதுவே சுழியமாகக் கொள்ளப்படுகிறது.
காலத்தின் இடைவெளியும் கருந்துளைக் கோட்பாடும்

ஒன்றைப் பகுத்துக்கொண்டே போனால் மேலும் பகுக்க மடியாத ஒரு கட்டத்தில் அந்தப் பகுப்புக்கள் குறிப்பிட்ட சேர்மானங்களில் (விகிதங்களில்) ஒன்றுகூடி மீண்டும் பொருள்களாவதற்குரிய இடைவெளி நேரம் சுழியமாகக்கருதப்படும். மேல்வாய் பேரெண்ணும் கீழ்வாய் இலக்கக் கடைக்கோடி எண்ணும் சமமாகக் கூடும். பேரண்டச்சுழற்சியும் வட்டமாகவே அமையும்.

பேரண்ட அழிவுக் காலத்தில் எல்லா உலகங்களும் கருந்துளைக்குள் ( Black Hole ) சென்று மீண்டும் வெடித்துப்பழையபடி உலகங்களாகின்றன என்பதால் இவ்வட்டச் சுழற்சியை உணர முடிகிறது. இச்சுழற்சியில் பொருள் திரிவு இடைவெளிகளும், காலக்கழிவு இடைவெளிகளும் சுழியத்தின் பொருளைப் புலப்படுத்துகின்றன. இந்தக்கால இடைவெளியைப் பாழ் எனப்பழந்தமிழர் குறிப்பிட்டனர். இச்செயல் பூஐயம் என வடநாட்டு மொழிகளில் திரிந்தது. சுழியம் என்னும் சொல் வடமொழியில் சூன்யம் எனத்திரிந்தது.

பரிபாடலில் "பாழ்" எனும் சொல்

தமிழறிஞர்களுள் மெய்யுணர்வாளர்களாகிய அறிவர் என்போர் வாநூல், கணிதம் ஆகியவற்றில் வல்லுநராகி உலகப் படைப்பின் நுணுக்கங்களையும் ஆராய்ந்தனர். ஐம்பூதங்களில் நிலம் நீரில் கரைகிறது. நீர் நெருப்பில் ஒடுங்குகிறது. நெருப்பு காற்றில் ஒடுங்குகிறது. காற்று வானத்தில் ஒடுங்கும். வானமும் ஒன்றுமில்லாமல் பாழ்நிலை எய்திக் கருந்துளைக்குள் போய்விடும். இதனை "விசும்புஇல் ஊழி" (பரிபா.2) என்று பரிபாடல் குறிப்பிடுகிறது.

ஓன்றென பாழென

ஒன்றுமற்ற இடைக்காலச் சுழிய நேரத்தைப் பாழ் என்னும் சொல்லால் குறித்திருப்பது இதன் கண்டு பிடிப்பாளர்கள் தமிழர்களே என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆரியர்களின் வேதத்தில் சுழியத்தைப்பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. தமிழர்களின் கணித நூல்களிலிருந்தே வடமொழியாளர் கணக்கறிவு பெற்றுள்ளனர். வடமொழியில் கணிதம், வானநூல், மருத்துவம், மெய்யியல், ஓகம், ஊழ்கம்(தியானம்) ஆகியவற்றை முதலில் மொழிபெயர்த்தோர் அனைவரும் பிற மொழியாளராகவே இருத்தல் அறிதற்பாலது.

தமிழர்களிடமிருந்தே 1,2,3,4,5,6,7,8,9,10 எனும் எண் வடிவங்களே அரேபியர் மற்றும் பொனீசிய வணிகர்களின் வாயிலாக உலக முழுவதும் பரவியுள்ளன என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

ஆகிங்கின் காலக்கோட்பாடும் காலச்சுழிக்கணக்கும்.

காலத்தின் வரலாறு Brief History of Time என்னும் தலைப்பில் விற்பனையில் முதலிடம் பெற்ற அரிய ஆய்வு நூல் எழுதிய அமெரிக்கப் பேரறிஞர் தீபன் ஆகிங் (Stephen Hawking) தன்னுடைய நூலில் " Time starts with a big bang and mightend with big crench" எனக்குறிப்பிட்டுள்ளார்.

காலத்தின் தோற்றமே அண்டத்தின் தோற்றம். காலத்தின் முடிவே அண்டங்களின் முடிவு எனும் ஆகிங் கருத்து "தோற்றமே துடியதனில்" எனும் சிவனியக் கொண்முடிபை நினைவுபடுத்தும் போதே காலச் சுழற்சியின் மிகப்பெரிய இடைவெளி சுழிய வட்டத்தையும் நினைவுப்படுத்துகிறது.

கால இடைவெளி எனும் சுழியம் இல்லாதிருந்தால் ஒன்று எங்கே முடிகிறது. இரண்டு எங்கே தொடங்குகிறது என்பது தெரியாததால் 1,2,3 என எண்களைப் பிரித்தறியும் வரம்பு கிட்டாமல் போயிருக்கும்.

உலகின் கணிதக் கலை வளர்வதற்கு ஊன்று கோலான பழந்தமிழரின் சுழியக் கண்டுபிடிப்புக்கு உலகமே நன்றி செலுத்தக்கடமைப்பட்டுள்ளது. இந்த மாபெரும் கண்டுபிடிப்புக்கு உரிமையாளரும் தமிழரே என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.

சுழியம் ஏன் தோன்றியது?

கடல்கொண்ட தென்னாட்டில் நடைபெற்ற தமிழ்க் கழகப்புலவர் பேரவை முத்தமிழ் இலக்கியப் பாங்குக்கு அடிப்படையான எண்ணும் எழுத்துமாகிய இலக்கணப் பாகுபாடு சிந்தனையைத் தூண்டி தருக்கம் எனும் ஏரண எதிராடல்கலையை வளர்த்தது. முதற்பொருள் கருப்பொருள் தொடபான உரையாடல்கள் ஐம்பூதங்கள் கலந்த மயக்கம் உலகம் என்றும் அதற்கு அடிப்படை அணுக்கொள்கை என்றும் முடிவு கண்டன: இதனைக்கண்ட அறிவர் இதற்குக் காட்சி அளவை (தர்சனம்) என்றனர்.

இந்த அளவையில் இன்மை என்பதும் ஒர் உள்பொருளாகக் கருதப்பட்டதால் இன்மையைக் குறிக்க சுழியம் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று.

சுழியம் எங்குத் தோன்றியது?

சுழியம் தொடர்பான கருத்துகள் கடல் வணிகர்வழி பல நாடுகளுக்குப் பரவின. சுமேரிய பாபிலோனியரிடையிலும் பெரிய வட்டம் பத்தைக் குறித்தது. கி.மு.4000 அளவிலேயே இது அங்குப் பரவியிருப்பதால் கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் வாழ்ந்த கணியரும் அறிவருமாகிய வானநூல், கணித நூல் வல்லுநரிடை இது தோன்றியதாகும். சிந்து வெளி மக்களிடையிலும் 10:100 எனப்பதின்(தசம) மடங்கு எண்கள் தென்னாட்டுத் தமிழரிடமிருந்தே சென்றுள்ளன என்பதும் கருதத்தக்கது.

சுழியம் எப்படித் தோன்றியது?

எண்களை ஏறு வரிசையிலும் பெருக்கல் வரிசையிலும் கனம் எனும் அடுக்கு வரிசையிலும் 1/320 முதல் 1/320X320 எனும் முந்திரி, கீழ் முந்திரி வரிசையிலும் கணக்கிட்ட பந்தமிழர் நீட்டல் அளவையைப் பத்தின் அடிப்படையான பதின் (தசம்) அளவாகக் கொள்ளவில்லை. நீட்டல் அளவுக்குரிய கோலின் நீளத்தை 11 அடியாகக் கொண்டனர். இது வட்டத்தின் சுற்றளவைக் கணக்கிடுவதற்காகவே கண்டு பிடிக்கப்பட்ட நீட்டல் அளவு. இதன் காற்பகுதியாகிய 2 ¾ அடி கோயில் கட்டும் கம்மியருக்கான தச்சு முழம் எனக்கூறப்படுகிறது.

வட்டத்தின் விட்டத்தை ஏழு சம கூறாக்கி அதனொடு 4 சமக்கூறுகளைச் சேர்த்து இரண்டால் பெருக்கினால் 7+4=11X2=22 சமக்கூறுகளாகிய வட்டத்தின் சுற்றளவு கிடைக்கும் என்பது இன்று படிப்பறிவில்லாத தச்சருக்கும் தெரிந்த தலைமுறைத் தொடர்பு அறாத கலையறிவு. 22/7 என்னும் கணக்கு நுட்பம் குமரிக்கண்டத்துத் தமிழரிடமிருந்தே உலக நாடுகளுக்கும் புரவியுள்ளது.

இரண்டாம் தமிழ்க் கழகம் தொடங்கிய பாண்டியன் வெண்தேர்ச்செழியன் தேருடையவன் என்பதால் சக்கரத்தின்சுற்றளவும் வட்டத்தின் பரப்பளவும் காணும் கணக்கு நுட்பம் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழருக்குத் தெரிந்திருந்தது என்பது புலனாகிறது.

எப்பொழுது தோன்றியது?

இடைக்காலச் சோழர் காலத்தில் 11 அடி அளவுகோலே வழக்கத்திலிருந்தது. சிந்து வெளியிலும் அரப்பா மொகஞ்சதாரோ நகரங்களில் உள்ள தெருக்களாக 22,33,44 அடி என்னும் அடி நீட்டல் அளவுடையனவாக இருந்தன. மதுரை போன்ற மூவேந்தர் தலைநகரத் தெருக்களின் அளவும் 11 அடியினஇ மடங்குகளாக 33,44 அடிகளாகவே உள்ளன. எனவே, சிந்துவெளி நாகரிகக் காலம் கி:மு. 3500 என்றதால் கி.மு. 4000 அளவிலேயே 11 அடி நீட்டல் அளவுகோல் தோன்றியிருக்க வேண்டும்.

எத்துணைப் பெரிய நேர்க்கோடாக இருந்தாலும் அது மிகப்பெரிய வட்டத்தின் பரிதியில் சிறு நேர்க்கோடாக இருக்கும் என்பது கணித நூல் கண்டறிந்த உண்மை,5 ½ அடி உயரமுள்ள வண்டிச் சக்கரத்தின் சுற்றளவு 16 ½ அடி. ஒரு வண்டிச் சக்கரம் 320 சுற்றுச் சுற்றினால் அது சென்ற தொலைவு ஒரு கல் (மைல்) ஆகும் என்பதும், இது உலகம் முழுவதும் பரவியுள்ளதால் இதன் தொன்மையையும் கணித்தறியலாம்.


செருப்புக் கடைக்கு ஒருவர் சென்றார். பணியாளர் அவரை வரவேற்று அழைத்து , செருப்பை எடுத்துக்காட்டினார்.. அவரை அமர வைத்து அவர் காலடியில் அமர்ந்து ஒவ்வொரு செருப்பாக அணிவித்து காட்டினார்.அவருக்கு சங்கடமாக இருந்தது. நானே போட்டு பார்க்கிறேன் என்றார்.. பணியாளர் விடவில்லை...
அவரே அவருக்கு உதவினார். அவர் பெருந்தன்மையாக சொன்னார் "அய்யா! நானும் மனிதன் நீங்களும் மனிதன். என் கால்களை நீங்கள் தொடுவது எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது"
பணியாளர் சிரித்தபடி சொன்னார்
"இந்த கடைக்கு வெளியே போய் விட்டால், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் உங்கள் கால்களைத் தொடமாட்டேன். அது என் சுய மரியாதை!
கடைக்குள் நீங்கள் ஒரு கோடி கொடுத்தாலும், உங்களுக்கு உதவுவதை நிறுத்த மாட்டேன். இது என் தொழில் மரியாதை.


மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.

நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.

பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும். பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.

இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர். எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை

1. அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி

எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும் பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு. கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள். இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.

அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள் பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.

ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன. தமிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.

என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது. மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும். தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ''கஜப்ருஷ்டம்'' வடிவில் இருக்கும்.

கஜம் என்றால் யானை, ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம். இத்தகைய அமைப்பை ''தூங்கானை மாடக்கோவில்'' என்பார்கள். அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும், பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.

இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை. கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம். மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.

இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள். கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.

சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை கர்ப்பக கிரக லட்சணம் என்றனர். கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும். உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.

இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர். கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமா நல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது.

பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன. அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது. வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும். இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.

அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது. கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும். இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.

கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள்.

ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் கருவறையின் ஆற்றலையும் அருமையையும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும். கோவில் பிரகாரத்தில் வழிபட்டால் 100 சதவீத ஆற்றல் பெறலாம். குளத்தில் வழிபட்டால் 1000 மடங்கு பலனும், ஆற்றில் வழிபட்டால் லட்சம் பங்கு பலனும், அருவிக்கரை பகுதிகளில் வழிபட்டால் 1 கோடி பங்கு பலனும், கடற்கரையில் வழிபட்டால் 2 கோடி பங்கு பலனும், ஜீவசமாதிகளில் வழிபட்டால் 10 கோடி பங்கு பலனும் கிடைக்குமாம்.

ஆனால் ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற முடியுமாம். இதில் இருந்தே நாம் கருவறை முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது. கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.

தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.

கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்திய மருந்தாக மாறுவதற்கு இறை ஆற்றல்களே காரணமாகும். கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள். தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள். இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.

கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும். இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.

இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது. கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.

கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர். ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.

பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம். இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் ''வயர்லஸ்'' தொடர்பு போல இணைக்கின்றன. எனவே ''பாசிட்டிவ் எனர்ஜி'' பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.

காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி.

அவர் தவத்தின் போது கண் திறக்காமல், தினமும் ஒரு முறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார்.

மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான்.

மகரிஷியும் அதை வாயில் போட்டு விழுங்கி விட்டார்.

மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், 'மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உனக்கு உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!' என்று கூறி விட்டு போய்விட்டார்.

இதைக் கேட்ட மன்னன் நடுநடுங்கி விட்டான்.

தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான். தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான்.

அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம் பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக் கூறி அனுப்பிவைத்தான்.

இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். 'மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்' என்று திரித்துக் கூறினர்.

இப்படியாக பல விமர்சனங்கள் வந்த வண்ணமிருந்தன. ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள்.

அந்த கணவன், 'நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?' எனக் கேட்டான்.

'அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு' என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.

அதற்கு அவளது கணவன், 'ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?' என்றான்.

அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத் தொடங்கினாள். 'சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான்.

அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரியவரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.

ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசிக் கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.

மேலும் அடுத்த பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்' என்று கூறினாள்.

அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன். தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது.

அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக் கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன (பகிர்வு...நன்றி...முகநூல்)

நீதிபதி.
உங்கள் கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளதா?

கடைக்காரர்.
நிறைய டம்ளர் இருக்குங்கய்யா.

நீதிபதி==அதில்லை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என தனியாகவும் ஆதிக்கசக்தி மக்களுக்கும் என தனி தனி டம்ளர்ல கொடுப்பீங்களா?

கடைகாரர்.
இரண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்தா தனித்தனி டம்ளர்லதான் கொடுப்பேங்க.

நீதிபதி.
அது தீண்டாமை சட்டப்படி குற்றம்னு தெரியாதா?

கடைக்காரர்.
அய்யா ஒரே டம்ளரில் ரண்டு பேருக்கும் கொடுத்தா எப்படிங்கையா குடிப்பாங்க?

நீதிபதி.
வேண்டுமென்றே குழப்புகிறீர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி டம்ளர் வச்சிருக்கீறீர்களா?

கடைக்காரர்.
அய்யா நான் சொந்தமா முதல் போட்டு கடை வச்சிருக்கேன். என் கடையில் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது என் விருப்பம். நான் வித்தியாசமா ரண்டு டம்ளர்ல கொடுக்கறது அவங்களுக்கு அவமானம்னா வேறகடைக்கு போலாமே, என்னை இப்படித்தான் கொடுக்கனும்னு சொல்ல இவங்க யாரு?

நீதிபதி.
குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தண்டனை
விதிக்கிறேன்.

கடைக்காரர்.
சரிங்கையா, எனக்கு அவசரமா பாத்ரூம் போகனும் உங்க பாத் ரூம்க்கு போகட்டுங்களா?

நீதிபதி.
அங்கெல்லாம் போகக்கூடாது.பப்ளிக்குன்னு தனியா இருக்கு அங்கதான் போகனும்.

கடைக்காரர்.
இங்க மட்டும் எதுக்கு ரண்டு பாத் ரூம்? அப்ப நாங்க தீண்டத் தகாதவங்களா?
போலீஸ்காரய்யா நீதிபதிமேல கேஸ் போடுங்க.

இன்று அமெரிக்கா தொலைக்காட்சியில் ஒரு அதிசய மற்றும் அதிர்ச்சியான செய்தியும் கூட..

NASA-விஞ்ஞானிகள் நிலவை ஆராய்ந்துகொண்டிருந்த போது அதில் ஒரு மனித உடல் இருப்பதற்கான அறிகுறியை கண்டார்கள்..

இன்னமும் சற்று விரிவாக ஆராய்ந்ததில் அது மனித உடல்தான் என உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்... அதன் வயது 2 நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும் தெரிகிறது

இந்த செய்தி அனவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது..

உடனே உலக விஞ்ஞானிகள் அனைவருக்கும் தகவல் பரிமாறப்பட்டிருக்கிறது..

நிலவில் தண்ணீர் இருந்ததை உலகிற்கு முதன்முதலில் கண்டுபிடித்து அதை உறுதி செய்த இந்திய விஞ்ஞானிகளின் பெருமுயற்சியால் இறந்த உடல் நிலவில் இருந்ததற்கான புதிர் விடுபட்டிருக்கிறது.

இறந்து கிடந்த உடல் ஒரு வயதான பெண்மணியின் உடல் என இந்திய விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

மனிதர்களே நிலவுக்கு போக பிரம்மபிரயத்தனம் பண்ண‌வேண்டியிருக்கும் இந்த காலத்தில் இந்த பாட்டி எப்படி நிலவுக்கு போனார்கள் என்று விஞ்ஞானிகள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கையில்.

அனைவரையும் உலுக்கிய அந்த உண்மை புலப்பட்டது..

அந்தப் பாட்டி வேறு யாருமல்ல...  நிலவில் வடை சுட்டுக்கொண்டிருந்த ஆயா பாட்டிதான் அது..

இதைக்கேட்டவுடன் காலையிலிருந்தே மனசு சரியில்லை...

....வடை போச்சே. :P :P

ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.

ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.

அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.

மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.

''இங்கே யாருமே இல்லையா?'' என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.

''நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!''

சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.

உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.

''இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!''

சித்ரகுப்தன் சிரித்தான்.

''இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்--& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!''

''அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?''

''சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?''

''அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.''

''அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!''

''வேறே எப்படி வாங்கறது?''

''அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.''

''என்ன சொல்றே நீ?''

''பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!''

''இப்ப நான் உள்ளே வர என்ன வழி?''

''பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?''

பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.

பிறகு சொன்னான்: ''ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.''

''கொஞ்சம் பொறு!'' என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.

கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.

''உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!''

''என்ன உத்தரவு?''

''அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!''

''அப்புறம்?''

''உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!'' பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.

ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்: காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஐம்புலன்களுக்கு உட்பட்டு ஆராய்வது
விஞ்ஞானம். புலனையும் கடந்து மெய்யை
உணர்வது மெய்ஞானம். புலன்களை அடக்கி
ஆள்கின்றபோது ஏராளமான வியத்தகும்
சக்திகளை சித்தர்களும் யோகிகளும்
அடைகின்றனர். அவர்கள் இதைப்
பொருட்படுத்துவதே இல்லை. ஆனால்
சாமானியர்அதிசயிக்கின்றனர். இதை நேருக்கு
நேர் பார்க்கும் போது விஞ்ஞானமும்
திகைக்கிறது.
வள்ளலாரின் மரணமிலாப் பெரு வாழ்வு
*********************************************
**********
* நமது காலத்திற்கு சற்று முன்னர் வாழ்ந்த
வள்ளலார் (வடலூர் ராமலிங்க சுவாமிகள்)
1874ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நள்ளிரவில்
தனது அறையில் உள்ளே சென்று தாளிட்டுக்
கொண்டவர் திரும்பி வரவில்லை. அறையின்
உள்ளே இருந்த விளக்கை வெளியே கொண்டு
வந்து வைத்த அவர், தனது சீடர்களிடம் யாரும்
அறையைத் திறக்க வேண்டாம் என்று அருளி
விட்டு உள்ளே சென்றார். அவர் ஜோதியாக
ஆனாரா, காற்றிலே கலந்தாரா என்பது
தெரியாவிட்டாலும், அவர் மரணத்தை வென்ற
மாபெரும் ஞானி என்பதை உலகம் உணர்ந்தது.
* வள்ளலார் பற்றி அறிய தென் ஆற்காடு
கலெக்டர் ஒரு டாக்டருடன் சித்திவளாகம்
விரைந்தார். உடல் சிதைந்து நாற்றம் எடுக்கும்
என்று நம்பிய டாக்டர் அறைக்குள்
நுழைந்தவுடன் திகைத்தார். பச்சைக் கற்பூர
மணம் கமழ்ந்தது! அங்கிருந்த சீடர்களிடம்
வள்ளலார் பற்றி நன்கு விசாரித்து அறிந்த
கலெக்டர், அவரது மாபெரும் ஆன்மீக
உயர்வைப் போற்றியதோடு தன் பங்கிற்கு
இருபது ரூபாயை அளித்தார்.
1878ல் சவுத் ஆர்காட் கெஜட்டில், அறைக்குள்
நுழைந்து தாளிட்டுக் கொண்டவர் திரும்பி
காணப்படவில்லை என்று குறிப்பிட்டு
அவரைப் பின்பற்றுவோர் அவர் கடவுளுடன்
ஒன்றாகி விட்டார் என்று நம்புவதையும்
குறிப்பிட்டார் ஜே.ஹெச் கார்ஸ்டின். 1906ல்
டபிள்யூ. பிரான்ஸிஸ் ஐ.சி.எஸ் சவுத்
ஆர்காட் கெஜட்டில் வள்ளலார் மறைந்ததை
விளக்கி அதிசயப்படுகிறார்!
பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்
*********************************************
******************
* ஆட்டோபயாகிராபி ஆஃப் எ யோகி' என்ற
உலகப் பிரசித்தி பெற்ற நூலை எழுதிய
பரமஹம்ஸ யோகானந்தர் (1893-1952) 1952ம்
ஆண்டு மார்ச் 7ம் தேதி மஹா சமாதி
அடைந்தார். அவரது உடல் இருபது நாட்கள்
கழித்து மார்ச் 27ம் தேதி வெங்கல மூடியிட்ட
பேழையில் வைக்கப்பட்டது. அதுவரை அந்த
உடலில் எந்த வித மாற்றமும் இல்லை. லாஸ்
ஏஞ்சலீஸைச் சேர்ந்த ஃபாரஸ்ட் லான்
மெமோரியல் பார்க்கின் மார்ச்சுவரி டைரக்டர்
ஹாரி டி ரோ, "பரமஹம்ஸ யோகானந்தரின்
இறந்த உடலில் சிதைவுக்கான எந்த வித
அறிகுறிகளும் தோன்றாதது எங்கள்
அனுபவத்திலேயே மிகவும் அசாதாரணமான
ஒன்றாக விளங்குகிறது. உடல் தோலிலோ
அல்லது திசுக்களிலோ எந்த வித மாற்றமும்
இல்லை! இது போன்று மாறாமல் இருக்கும்
ஒரு உடல் எங்கள் சவக் கண்காணிப்பு
வரலாறிலேயே இல்லாத இணையற்ற ஒரு
சம்பவம்! நாளுக்கு நாள் எங்கள் வியப்பு
கூடிக் கொண்டே போனது" என்று
குறிப்பிடுகிறார்!
சூரிய ஒளியை உட்கொண்டு உயிர் வாழும்
யோகி
*********************************************
***********************
* ஹீரா ரதன் மனேக் (1937 செப்டம்பர் 12ம்
தேதி பிறந்தவர்) என்ற யோகி சூரிய ஒளியை
மட்டும் உண்டு உயிர் வாழ்வதாகக் கூறியதும்
நாஸா விஞ்ஞானிகளே வியந்து அவரை தமது
ஆராய்ச்சிக்காக அழைத்தனர். சூரிய ஆற்றலை
பயன்படுத்துவது எப்படி என்று அறிவதே
நாஸா விஞ்ஞானிகளின் நோக்கம்!
* விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின்
கட்டுப்பாடான சோதனைக்கு உட்பட்ட இவர்
1995-96ல் 211 நாட்கள் கொல்கத்தாவில் எந்த
வித உணவையும் உட்கொள்ளாமல் இருந்தார்.
அடுத்து 2000-2001ல் அஹமதாபாத்தில் 411
நாட்கள் 21 மருத்துவர்கள் உள்ளிட்ட நிபுணர்
குழுவின் கண்காணிப்பிலும் ஆய்விலும்
எதையும் உட்கொள்ளாமல் இருந்தார்! அடுத்து
பென்ஸில்வேனியாவில் பிலடெல்பியாவில்
தாமஸ் ஜெபர்ஸன் பல்கலைக்கழகத்தில்
டாக்டர் ஆன்ட்ரூ நியூபெர்க் மூளையை
ஸ்கேன் செய்தவாறு இருக்க, 130 நாட்கள்
எதையும் உட்கொள்ளாமல் இருந்தார்.
65 ஆண்டுகள் எதுவும் உட்கொள்ளாத யோகி
*********************************************
**************
* பிரஹ்லாத்பாய் ஜானி என்ற 76 வயது ஆகும்
யோகி குஜராத்தில் அம்பாஜி ஆலயத்திற்கு
அருகே உள்ள குகை ஒன்றில் வசிக்கிறார்!
கடந்த 65 ஆண்டுகளில் திரவ
பதார்த்தத்தையோ எந்த வித உணவு
வகைகளையுமோ தான் தொட்டதே இல்லை;
உட்கொண்டதே இல்லை என்கிறார் அவர்!
ஆன்மீக தாகம் மீதூற ஏழு வயதில் வீட்டை
விட்டுப் புறப்பட்டவர்தான்! 11ம் வயதில் ஒரு
தேவதை அவருக்கு அருள் பாலித்தது. அவரது
வாயில் மேல் பகுதியிலிருந்து அமிர்தம்
சொட்ட ஆரம்பித்தது. அன்றிலிருந்து சிறுநீர்
மலம் எதையும் கழிக்கவில்லை! உயிர் காக்கும்
அமிர்தம் சொட்ட ஆரம்பித்ததிலிருந்து எனக்கு
உணவோ குடிநீரோ தேவை இல்லாமல் போய்
விட்டது என்றார் அவர்!
* இவரை விஞ்ஞான முறைப்படி ஆராய 2003ம்
ஆண்டு நவம்பரில் டாக்டர் சுதிர் வி.ஷா
தலைமையில் 21 ஸ்பெஷலிஸ்டுகள் ஒன்று
சேர்ந்தனர். பத்து நாட்கள் 24 மணி நேர முழு
சோதனை நடத்தப்பட்டது. கார்டியாலஜி,
நியூராலஜி, யூராலஜி, கேஸ்ட்ரோ
என்டிரோலொஜி, ஆப்தமாலஜி, ரீனல் பங்க்ஷன்,
பல்மனரி பங்க்ஷன், ஈ என் டி அனாலிஸிஸ்,
சைக்கியாட்ரி, பொது மருத்துவம் உள்ளிட்ட
ஏராளமான துறை நிபுணர்கள் குழுவில்
இருந்தனர். இந்த அனைத்துத் துறை
நிபுணர்களும் தத்தம் துறையில் உள்ள தீவிர
சோதனைகளை அவர் மேல் மேற்கொண்டனர்.
சோதனைகள் அனைத்தும் முடிந்த பின்னர்
பிரஹலாதின் சொல்லுக்கு மறுப்பு ஏதும்
அவர்களால் தெரிவிக்க இயலவில்லை.
அவர்கள் திகைத்துப் போனார்கள். விளக்க
முடியாத மர்மமாக அவர் விளங்கினார்.
* எப்படி ஒருவரால் தண்ணீர், உணவு இன்றி
வாழ முடியும்? சிறுநீர் மலம் கழிக்காமல்
இருக்க முடியும்? அவர்களின் ஆச்சரியத்திற்கு
எல்லையே இல்லை! சோதனையின் முதல்
கட்டமாக அவரை இன்டென்ஸிவ் கேர்
யூனிட்டில் 24 மணி நேரம் வைத்தனர்.
அடுத்து ஒன்பது நாட்கள் ஒரு கண்ணாடி
கதவு கொண்ட டாய்லட் வசதி பூட்டப்பட்ட
ஒரு விசேஷமான அறையில் அவர்
வைக்கப்பட்டார். அந்த அறையில் ஒரு வீடியோ
கேமராவும் பொருத்தப்பட்டது. அத்தோடு விசேஷ பணியாளர்கள் சிலர் 24 மணி நேர டியூட்டியில் தொடர்ந்து அவரைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டனர்! அவர் உணவு அருந்துகிறாரா, தண்ணீர் குடிக்கிறாரா, சிறுநீர், மலம் கழிக்கிறாரா என்று இவை அனைத்தும்
கண்காணிக்கப்பட்டன!
* ஒரு அல்ட்ரா சவுண்ட் கருவி அவரது சிறுநீரகத்தைப் பரிசோதித்தது. அந்தக்
கருவியின் கண்டுபிடிப்பின்படி அவரது
சிறுநீரகத்தில் சிறுநீர் சேர்ந்தது. ஆனால் அது
சிறுநீரக சுவரில் உறிஞ்சப்பட்டு விட்டது.
இது எப்படி நேரிடுகிறது என்பதை குழுவால்
விளக்க இயலவில்லை. பத்து நாட்கள் சோதனைக்குப் பின்னர் ஆய்வுக் குழு அவர்
திரவ பதார்த்தத்தையோ திட உணவையோ
உட்கொள்ளவில்லை என அறிவித்தது. சாதாரணமாக, குடி நீர் இன்றி நான்கு நாட்களுக்கு மேல் ஒருவரால் உயிர் வாழ
முடியாது. ஆய்வின் போது அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததையும் குழு
உறுதிப்படுத்தியது. மருத்துவமனையின்
டெபுடி சூபரின்டெண்டெண்ட் டாக்டர் தினேஷ்
தேசாய் தனது அறிக்கையில் தொடர் சோதனைகள் அவர் மீது நிகழ்த்தப்பட்ட
போதிலும் அவரது உடல் இயங்கிய விதம் ஒரு
சகஜமாகவே இருந்தது என்று உறுதிப்படுத்திக்
கூறினார்!
.........
கண்களைக் கட்டிப் படிப்பவர்
******************************
* காஷ்மீரில் பிறந்த குடா பக்ஸ் தன் கண்களை
இறுகக் கட்டிய பின்னர் ஊசியில் நூல் கோர்ப்பார். பார்வையாளரில் ஒருவரை வரவழைத்து அவர் கையில் ஒரு புத்தகத்தைக்
கொடுத்து ஏதேனுமொரு பக்கத்தை எடுக்கச்
சொல்லுவார். அதை அப்படியே வரிக்கு வரி
படிப்பார். அயல் நாட்டு மொழிகளில் வார்த்தைகளை எழுதச் சொல்லி அதை அப்படியே திருப்பி எழுதுவார். லண்டன் பல்கலைக்கழக அதீத உளவியல் விஞ்ஞானிகள்
1935ல் ஒரு சோதனைக்கு இவரை அழைத்தனர். அதை ஏற்ற இவர் சோதனைக்
கட்டுப்பாடுகளுக்கு இணங்க தீ மீது நடந்தார். தீயின் மேற்பரப்பு உஷ்ணம் 806 டிகிரி பாரன்ஹீட் என அளக்கப்பட்டது. தீயின்
உக்கிரமான உஷ்ணமோ 2552 டிகிரி பாரன்ஹீட்.
இரும்பையும் உருக்கும் உஷ்ண நிலை!
புகைப்படக்காரர் இதனைப் படம் பிடிக்கத்
தவறி விட்டதால் மீண்டும் ஒரு முறை குடா பக்ஸை நடக்கச் சொல்லி வேண்டினார். குடா
பக்ஸும் நடந்தார். உலகமே வியந்தது!
* கண்களை மூடிய பின்னர் பார்வை எப்படிக்
கிடைக்கிறது என்ற ரகசியத்தை ஒரு கேள்விக்கு விடை அளிக்கும் போது அவர்
வெளிப்படுத்தினார். இரு புருவ மத்தியில் கண்களை வைத்து இருபத்தி நான்கு வருடங்கள் தியானம் செய்தால் அகக் காட்சி
வந்து விடுமாம்! புறக் கண்களின் உதவி பிறகு
தேவை இல்லையாம்!! 1906ல் பிறந்த இவர் 1981 பிப்ரவரி 5ம் தேதி மறைந்தார்.

* மெய்யுணர்வுத் தேட்டப் பாதையில் புலன்களைக் கடந்த பெரும் ஆற்றல்
நிச்சயமாக வரும்; அது ஒரு சாதாரண விஷயம்
என்று கூறிச் சிரிக்கிறது மெய்ஞானம்!
பிரமிக்கிறது விஞ்ஞானம்!