Designed by Enthan Thamizh

ஙப் போல் வளை என்றால் என்ன

"ஙப் போல் வளை" என்றால் ஙே என்று முழிப்பது ஏன்? தொப்புல் கொடியில் இருந்து விடுபட்ட குழந்தை, இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலி தொடர்பு "ங்கா..". தமிழின் சிறப்பெழுத்து "ழ" வைப்போல இன்னொரு எழுத்து "ங" இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல இருப்பதை காணலாம். சிறுவர்கள் இளம் பருவத்தில் எளிமையாக தமிழை பாடம் செய்ய ஒளவையால் எழுதப்பட்டது ஆத்திசூடி. இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டு. "ங போல் வளை " 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் இதை விளக்க தமிழறிஞர்கள் பல கோணங்களில் அணுகுகிறார்கள். ங இந்த எழுத்து பல கோணங்களை கொண்டது. அதன் கோணத்தின் ஒவ்வொன்றுக்கும் நிமிர், எதிர்ப்பு வந்தால் சாய்ந்துவிடு. மேலும் எதிர்ப்பா கீழ் நோக்கி வா, மறுபடியும் தலை எடுத்து வளைந்து பார், பின் கிட. நிமிர்ந்து நில் என்பதை தான் ங போல் வளைந்து கொடுக்க வேண்டும் என அவ்வை சுட்டி காட்டுகிறார். "திரு. நாஞ்சில் நாடன் இது பற்றி இப்படி குறிப்பிடுகிறார். ஆத்திச்சூடி எழுதும்போது ஒளவையாருக்கு ஒரு சிக்கல் வந்திருக்க வேண்டும். 'ங' எனும் உயிர்மெய் எழுத்தைக் கொண்டு எங்ஙனம் வாக்கியம் அமைப்பது என. மொழி இலக்கணப்படி ஙகரம் மொழி முதலில் வாராது. அதன் சொந்த மெய்யான 'ங்' எனும் எழுத்தைத் தொடர்ந்தே வரும். ஙகர மேயோவேனில் உயிரெழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களையும் தொடர்ந்துதான் வரும். எடுத்துக்காட்டு – அங்கு, இங்கு, எங்கு, ஈங்கு, ஏங்கு, கங்கு, சங்கு, பங்கு, தங்கு, நுங்கு, வாங்கு, மங்கு, முங்கு, தங்கம், சுங்கம், கலிங்கம், பாங்கு, தூங்கு, நீங்கு, வாங்கு, வீங்கு, மூங்கில். " உயிர்மெய் எழுத்தில் க வை அடுத்து ங, ஙா வைத் தவிர உள்ள அந்த வரிசையில் வரும் மற்ற எழுத்துக்கள் வழக்கத்தில் இல்லை. காலப்போக்கில் கரைந்து போய் விட்டது என்று சொல்லலாம். ஆனால் அரிச்சுவடியில் 216 எழுத்துகளின் பட்டியலில் மட்டும் ஒன்றாய் கலந்து இருக்கிறது. "ஙே " என்று முழிப்பதற்கும் அடுத்தவனை திட்டும் முதல் எழுத்தாக இன்னும் அழியாமல் உள்ளது. ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார். ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில் மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன் புகர்இல் சேவடியே புகல் ஆகுமே. (சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்) இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் " ங " என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு. பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு "ஙகர வெல் கொடியானொடு" என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை) இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர். (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை. தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார். அவருக்கு ஒரு பொறி தட்டியது. இன்றைக்கு நாம் எழுதும் "ங" என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும். அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி "இடபக் கொடி" ஒரு இடபத்தின் உருவத்தை  பார்த்தால் "ங" என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக