திருமந்திரம்
திருநீறு நமக்கு கவசம்
கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. – (திருமந்திரம் – 1666)
விளக்கம்:
எலும்புகளினால் ஆன மாலை அணிந்திருக்கும் சிவபெருமான் தன் மேனியில் பூசிக்கொள்ளும் திருநீற்றை, எப்போதும் நம் நெற்றியில் இருக்குமாறு பூசி மகிழ்வோம். அது நமக்கு கவசமாகும். தீய வினைகள் நம்மிடம் தங்காது. சிவகதியை சார்ந்திருக்கச் செய்யும். திருநீறு பூசி இன்பமயமான சிவனின் திருவடியை சேர்ந்திருப்போம்.
(கங்காளன் – எலும்பு மாலை அணிந்திருக்கும் சிவபெருமான்)
திருச்சிற்றம்பலம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக