சங்க காலம் பரந்துபட்ட காலம். அக்காலத்தில் ஒரு சமயத்தில் மூவேந்தருள் சேரன் சிறப்புற்றிருந்தான், மற்றொரு சமயத்தில் சோழன் மேம்பட்டு விளங்கினான், வேறொரு சமயத்தில் பாண்டியன் பெருமை பெற்று விளங்கினான். ஒவ்வொருவனும் மற்ற இருவரையும் அடக்கி ஆள நினைத்த காலங்களும் உண்டு. இந்த முதன்மை வெறி இம் மரபுகள் அழியும் வரையில், பின் நூற்றாண்டுகளிலும் நிலைத்திருந்தது.
கடை சங்க காலம்:
கடை சங்க காலம் என்பது ஏறத்தாழக் கி.மு. 300 முதல் கி.பி 300 வரை என்று கொல்லலாம். கி.பி 300 -க்குப் பிறகு தமிழகத்தின் பெரும்பகுதி பல்லவர் என்ற புதிய மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. ஏறத்தாழக் கி.பி. 9- ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் தம் பேரரசைத் தோற்றுவித்தனர். கி.பி. 11, 12- ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசர் தென்னிந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்டனர்.
கி.பி. 13- ஆம் நூற்றாண்டில் பாண்டியர் செல்வாக்கு ஒழிந்தது. கி.பி. 14- ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் தென்னாட்டு அரசுகளை அழித்தார். பின்பு தமிழகம் விஜயநகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது. பின்பு விசயநகர வேந்தரின் பிரதிநிதிகளாக இருந்து மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்னும் இடங்களை நாயக்க மன்னர் ஆண்டு வந்தனர். பின்னர் இந்நிலப் பகுதிகள் கருநாடக நவாபுகளின் ஆட்சிக்கு உட்பட்டது. தஞ்சையில் மகாராட்டியர் சிறிது காலம் ஆண்டனர். பின்பு தமிழகம் வெள்ளையர் ஆட்சிக்கு உட்பட்டது.
தொகுப்பு : தமிழ் பண்பாட்டு வரலாறு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக