Banner - பதாகை.
CCTV (closed circuit television 📺)- சுற்று மூட்டத் தொலைக்காட்சி.
தமிழ்
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன.
அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
அவற்றைத் தெரிந்து கொள்வோம்.
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்...
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவரிடம் இல்லை.
பட்டினத்தார் சுவாமிகள்
கோயில் திருவகலில் கூறும்
பழமொழியை பாருங்கள்.
பிறந்தன இறக்கும்
இறந்தன பிறக்கும்.
தோன்றின மறையும்
மறைந்தன தோன்றும்.
பெருத்தன சிறுக்கும்
சிறுத்தன பேருக்கும்.
உணர்ந்தன மறக்கும்
மறந்தன வுணரும்.
புணர்ந்தன பிரியும்
பிரிந்தன புணரும்.
உவப்பன வெறுப்பாம்
வெறுப்பன உவப்பாம். என்கிறார்.
*************************************************
பிறந்தன இறக்கும்
இறந்தன பிறக்கும்.
உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முற்றுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.
*************************************************
தோன்றின மறையும்
மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியா னால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். (இது சூரியனுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்)
*************************************************
பெருத்தன சிறுக்கும்
சிறுத்தன பேருக்கும்.
சந்திரன் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சி அளிக்கும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள். (இது சந்திரனுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்)
*************************************************
உணர்ந்தன மறக்கும்
மறந்தன உணரும்.
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.
*************************************************
புணர்ந்தன பிரியும்
பிரிந்தன புணரும்.
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.
*************************************************
உவப்பன வெறுப்பாம்
வெறுப்பன உவப்பபாம்.
விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார்.
*********-*******-****-****-*****-****************
இதை நம் மனம் உணருமா?
உணர வேண்டும்.
ஓம் நமசிவாய.
Packing - வரிந்து கட்டல்
அசத்தும் ஐரோப்பிய மருமகள்
காதில் கம்மல், கழுத்தில் 'ஓம்' டாலர் சகிதம் சுடிதார் காஸ்ட்யூமில், ''ஐ லவ் டேமில்நாடு'' என்றபடியே வரவேற்கிறார் ஆஸ்ட்ரா! லாட்வியா நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை லாட்விய மொழியில் மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், லாட்விய மொழிக்குப் போவது இதுதான் முதல்முறை!
''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே லாட்வியாவுல! ரஷ்யாவுக்குப் பக்கத்துல இருக்கிற குட்டி நாடு எங்களோடது. மொத்தமே 20 லட்சம் மக்கள்தான். இதுல, தலைநகர் ரீகாவுல மட்டும் பத்து லட்சம் பேர் இருப்பாங்க. அங்க, பொலிடிக்கல் சயின்ஸ் படிச்சிட்டு, வெளியுறவுத் துறையில வேலை பார்த்திட்டு இருந்தேன். அப்போதான் இவரைச் சந்திச்சேன். காதலிச்சு கைப்பிடிச்சேன்!'' என தனது காதல் கணவர் கரிகாலனை கைகாட்டித் தொடர்கிறார் ஆஸ்ட்ரா.
''எங்க வீட்டுக்குப் பக்கத்துல இவரோட வீடு இருந்துச்சு. எனக்கு இந்தியர்கள் மீது ரொம்ப மரியாதை. ஏன்னா, இந்தியாவைப் பத்தி நிறைய நல்ல விஷயங்களைப் படிச்சிருக்கேன். இங்க மக்கள் பேசற வெவ்வேறு மொழிகள், யோகா, கோயில்கள்னு எல்லாம் பற்றியும் நெட்ல படிச்சிருக்கேன். குறிப்பா, தமிழ்நாடு... இங்க தனித் தமிழ் இயக்கம், மொழிப் போராட்டம் இதெல்லாம் எனக்குப் பரிச்சயமாச்சு.
பழமையான மொழியைப் பேசற ஒவ்வொரு இனமும் தங்கள் மொழியைக் காப்பாத்த இப்படி போராட்டங்கள் நடத்திய வரலாறு இருக்கு. இது மாதிரியே லாட்வியாவிலும் 'தூய்மை லாட்வியம்'னு ஓர் இயக்கம் 1900களில் நடந்திருக்கு. இப்பவும் நாங்க எங்க மொழியில் மற்ற மொழி வார்த்தைகளைக் கலக்கறதில்லை. எங்க நாட்டுக்கும் பொதுவான கரன்சி யூரோ. அதைக் கூட எங்க மொழியில எப்படி சொல்லலாம்னு இப்போ விவாதம் நடத்திட்டு இருக்காங்க. எங்களைப் போலவே மொழியை நேசிக்கிற தமிழர்களோட நான் என்னை ரொம்ப நெருக்கமா உணர்றேன்.
நான் ரோமன் கத்தோலிக்கா இருந்தாலும், தமிழ்ப் பண்பாட்டு ஈர்ப்பால எல்லாக் கோயில்களுக்கும் போவேன். காஞ்சிபுரம் கோயில்களைப் பார்க்கும்போது பிரமிப்புல கண் கலங்கிடுச்சு. அவ்வளவு அழகு! அப்புறம், இவரோட லண்டன்ல அஞ்சு வருஷம், கொழும்புல மூணு வருஷம்னு வாழ்க்கை போச்சு. அப்போ, ஒருநாள் இவர்தான், 'வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் போதிக்கிற ஒரே நூல் திருக்குறள்'னு சொன்னார்.
உடனே, ஜி.யு.போப் ஆங்கில உரையை எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். திருவள்ளுவர் ரெண்டே வரிகள்ல எல்லாத்தையும் கச்சிதமாக பேசிட்டுப் போறது ஆச்சரியமா இருந்துச்சு. படிக்கப் படிக்க எனக்குள்ள பிரமிப்பு எழுந்தது! எனக்கு லாட்விய மொழி தவிர சுவீடிஷ், ஜெர்மன், ரஷ்யன், ஆங்கிலம்னு நான்கு மொழிகள் தெரியும். இதில் லாட்விய மொழியிலதான் திருக்குறள் இன்னும் வரல.
அதனால, கண்டிப்பா எங்க மொழிக்கு திருக்குறளை கொண்டு சேர்க்கணும்னு நினைச்சேன். இப்போ, அறத்துப்பால் முடிச்சிட்டேன். இன்னும், நாலு மாசத்துல லாட்விய மொழியில திருக்குறள் இருக்கும்!'' என நம்பிக்கை கொடுக்கும் ஆஸ்ட்ராவுக்கும் கரிகாலனுக்கும் இரண்டு பெண் குழந்தைகள்... நர்மதா டயானா, கீர்த்தி. இருவரும் சென்னை பள்ளி ஒன்றில் படிக்கிறார்கள்.
மனைவியின் இந்த முயற்சி பற்றி சிலாகித்துத் தொடர்கிறார் கரிகாலன். இவர் இலங்கைத் தமிழர். ''நான் ஸ்கூல் படிச்சதெல்லாம் சென்னையிலதான். பி.இ படிக்க லாட்வியா போனேன். அங்கதான் ஆஸ்ட்ரா பழக்கமானாங்க. எங்க கல்யாணம் எந்த எதிர்ப்பும் இல்லாம முடிய காரணமே, அவங்களுக்கு தமிழ்நாடு மேல இருந்த மரியாதைதான்!'' என்கிறார் அவர்.
ஆஸ்ட்ரா சென்னையில் Spears School of Strategy and Managementஇல் பணிபுரிகிறார். இதன் நிறுவனரான பிரபாகரன், ஆஸ்ட்ராவின் திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு உதவி செய்கிறார். ''தமிழுக்கும் லாட்விய மொழிக்கும் உள்ள தொடர்பைப் பத்தி நிறைய விஷயங்கள் ஆஸ்ட்ரா பேசினப்போ, எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. திருக்குறள்ல அவங்களுக்கு 'ஒழுக்கம்', 'ஊழ்', 'அடக்கம்' ஆகிய அதிகாரங்கள் மேல ஒருவித ஈர்ப்பு!
இப்போ, என்னாலான உதவிகளைச் செய்திட்டு இருக்கேன். சீக்கிரமே வௌியீட்டு விழா இருக்கும்!'' என்கிறார் பிரபாகரன் சிரித்தபடி! கண்டிப்பா எங்க மொழிக்கு திருக்குறளை கொண்டு சேர்க்கணும்னு நினைச்சேன். இப்போ அறத்துப்பால் முடிச்சிட்டேன்...
நன்றி: குங்குமம்
கண்ணதாசனும் அண்ணாவும் ஒரு மகிழுந்துவில் போய்க்கொண்டிருந்த நேரம் தொடர்வண்டிக்காக சாலை மூடப்பட்டிருந்தது. அருகில் இருந்த தேநீர் கடையில் சிறு நொறுக்கும் தேநீரும் அருந்திய பின் கண்ணதாசன் தன் வழக்கப்படியே நொறுக்கு இருந்த தாளில் எழுதியிருந்ததை வாசிக்கிறார். அதில் "கல்லைத்தான்
மண்ணைத்தான்
காய்ச்சித்தான்
குடிக்கத்தான்
கற்பித்தானா" என்ற வறுமையைச் சொல்லும் பாடல் இருந்துள்ளது.
அதன் பிரதிபலிப்பாகவே பின்னாளில்
"பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத்தேன் என நான் நினைத்தேன்..அந்த
மலைத்தேன் இதுவென மவலத்தேன்"என்ற பாடலை எழுதியாதாய் செய்தி.
செம்மொழியின் சிறப்பு
தமிழுடன் போட்டியிட வேறு மொழிகள் ஏதேனும் உண்டா?
1 ஒன்று One
10 பத்து Ten
100 நூறு Hundred
1000 ஆயிரம் Thousand
10000 பத்தாயிரம் Ten Thousand
100000 நூறாயிரம் Hundred Thousand
1000000 பத்து நூறாயிரம் One Million
10000000 கோடி Ten Million
100000000 அற்புதம் Hundred Million
1000000000 நிகற்புதம் One Billion
10000000000 கும்பம் Ten Billion
100000000000 கணம் Hundred Billion
1000000000000 கற்பம் One Trillion
10000000000000 நிகற்பம் Ten Trillion
100000000000000 பதுமம் Hundred Trillion
1000000000000000 சங்கம் One Zillion
10000000000000000 வெல்லம் Ten Zillion
100000000000000000 அந்நியம் Hundred Zillion
1000000000000000000 அர்த்தம் ????
10000000000000000000 பரார்த்தம் Anybody Know
100000000000000000000 போரியம் <>?#%^&
1000000000000000000000 முக்கோடி &^*^%^#@#$%
10000000000000000000000 மகாயுகம் ??????????????????????
இதுதான் நம் செம்மொழியின் சிறப்பு
None of the languages can
name these numerals.... but Tamil did......
பள்ளியில் ஒரு மாணவன் என்ன கேள்வி கேட்டாலும் "தெரியாது"என்றே பதில் சொல்பவன்.
தமிழய்யா வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது திடீரென, ஆய்வாளர் வந்ததுமில்லாமல் அந்த குறிப்பிட்ட மாணவனிடம் ஏதேனும் பொது அறிவுக் கேள்வி கேட்கப் பணித்தார். ஆசிரியருக்கு சங்கடமாய் போயிற்று. பெயரைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம்.......
.
..
....
கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
ஆ: பகலில் நட்சத்திரம் தெரியுமா?
மா: தெரியாது
...
ஆ: ஆந்தைக்கு பகலில் கண் தெரியுமா?
மா:தெரியாது
.
ஆய்வாளர்: தமிழ் இலக்கணக் கேள்வி கேளுங்ஙள்!
ஆ:
ம்....தெரியும் என்பதன் எதிர்ப்பதம் என்ன?
மா: தெரியாது.
..
ஆய்வாளருக்கு மிகுந்த திருப்தி. ஆசிரியருக்கு தலைதப்பிய நிம்மதி.'
எளிமைச் சிறப்பு!
தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண
இயலாது.
தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல, படிக்கவும் எளிது. தமிழ் ஓர் எழுத்துக்கும் ஒரே ஒலியானதால் எவரும் எதையும் படிக்க முடியும். உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தம் 247 எழுத்துக்களே. இவைகளை அறியப் பெரியவர்களுக்குச் சில வாரங்களும், சிறியவர்களுக்குச் சில மாதங்களும் போதுமானது. பின் எடுத்த நூல்களையெல்லாம் படிக்கலாம். ஆகவே, தமிழ் படிக்கவும் எளிதானது.
தமிழ்மொழி பேசவும் எளிது. தமிழ்ச் சொற்களில் 100 சொற்கள் எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு, அண்ணாக்கு, உண்ணாக்குக் கொண்டே ஒலிப்பதாக இருக்கும். தொண்டைக்குக் கீழே வேலையேயிராது. வடமொழிச் சொற்களில் பெரும்பான்மையானவை அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை. இவ்வாறு வலிந்து ஒலிப்பதால் நாவும் உலர்ந்து, தொண்டையும் வறண்டு குடலும் காய்ந்துவிடுகிறது. ஆகவே, இதுகாறும் கூறியவற்றால், தமிழ் மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் கூட மிகவும் எளிமையானது என நன்கறியலாம்.
இனிமைச் சிறப்பு
"தமிழ்' என்பதற்கு "இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை ""இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.
""பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:
""போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?'' என்னே தமிழின் சுவை!
""அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?
""தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே. என்னே தமிழின் இனிமை!
தன்னைப் "பித்தன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் வைதபொழுது, இறைவன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாராம். காரணம், ""தமிழால் வைதான்'' என்பதே. இதனாலேயே இறைவனுக்குத் ""தமிழால் வைதாரையும் வாழவைப்போன்'' என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக இல்லறத்தில் வலக்காலை எடுத்து வைக்கும் மணமக்களை நோக்கி, ""தமிழும் அதன் இனிமையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள்'' என்று நல்லறிஞர்கள் வாழ்த்துக் கூறி வருவது தமிழகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது.
நன்றி என்பதைக் குறிக்கும் "தாங்க்ஸ்' என்ற ஆங்கிலச் சொல்லும், நல்லது என்பதைக் குறிக்கும் "அச்சா' என்ற இந்திச் சொல்லும், அதன் வலிய ஒலியால் அச்சுறுத்துவது போலத் தோன்றும். தமிழில் நன்றி, வணக்கம் என்பது மட்டுமல்ல, ""இது மக்கள் தன்மைக்கு ஒவ்வாது'' என்று வைவதுகூட அதன் மெல்லோசையால் வாழ்த்துவது போலத் தோன்றும். இது நமது மொழியில் இயல்பாகவே அமைந்துள்ள ஒன்று. என்னே தமிழின் இனிமை!
கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான்.
""நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; சட்டியில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்'' என்று.
நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்' எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்' என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை!
நமது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு. இவ்வுண்மையைத் ""தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு.
தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்' வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்.
தமிழுக்கு "முத்தமிழ்' எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும். நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.
சைவ சமய ஆச்சாரியராகிய ஞானசம்பந்தரை, நாம் "திரு' என்ற அடைமொழி சேர்த்து, திருஞானசம்பந்தர் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால் அவரோ, தம் பெயருக்கு முன் "தமிழ்' என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் "தமிழ் ஞானசம்பந்தன்' எனக் குறிப்பிட்டுக் கொண்டார். இது நமக்குத் தமிழையும் சம்பந்தரையும் ஒன்றாகக் காட்டுகிறது.
வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பன ஆகும்.
நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.
""தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.
சங்க காலத்தில் தமிழக நிலப்பகுதிகள் ஐய்வகைபட்டன. அவை குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகும்.
குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்பட்டது
முல்லை - காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை என அழைக்கப்பட்டது
பாலை - குறிஞ்சி, முல்லை ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதி பாலை என அழைக்கப்பட்டது
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்பட்டது.
நாலடியார்
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.
பொருள்:-
ஒருவன் நா காவாமல் வாய் திறந்து சொல்லும் சினச்சொல், இடைவிடாது தன்னையே வருத்தும் ஆதலால், ஓயாது ஆராய்ந்தறிந்த அறிவையும், கேள்வி ஞானத்தையும் உடைய சான்றோர், எப்போதும் சினம் கொண்டு கடுமையான சொற்களைச் சொல்லமாட்டார்கள். (பிறர் மீது சினம் கொண்டு தாக்கும் கடுஞ்சொற்கள் திருப்பித் தம்மையே தாக்கும். ஆதலால் ஞானிகள் கடுமையான சொற்களைச் சொல்ல மாட்டார்கள்
Letter pad - தன் முகவரியுடை கடிதத்தாள் கற்றை.
Air cooler -காற்றுக் குளிர்விப்பி.
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
பொருள்.:-
குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறிவரும்.
வணக்கம் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொள்ளும் போது, காலை,மதிய,மாலை மற்றும் இரவு வணக்கம் என்ற கால நேரம் பார்த்து அந்தந்த வேளைகளை அடைமொழி போல் சேர்த்துக் கொள்வது தமிழர் மரபல்ல. வணக்கம் மட்டுமே வாழ்த்தவும் வணங்கவும். வேளையைக் குறிப்பிடுவது ஆங்கில முறையைத் தமிழாக்கம் செய்வதுவே!
நற்காலை வணக்கம் என குறிப்பிடலாம்
இனிய வணக்கம் எனலாம்... மேலும் ஏதேனும் இருந்தாலும் கீழே பதிவு செய்யுங்கள்
Fax- தொலை நகல்..
.
Service Road.....அணுகு சாலை
திசைகளும் காற்றும்:
கிழக்கு- கொண்டல் காற்று
மேற்கு: மாருதம்*
தெற்கு :தென்றல்
வடக்கு: வாடைக்காற்று.
*மாருதம் , இதில் இருந்து மாருதி வருகிறது அப்படியானால் வட மொழி என தோன்றலாம், ஆனால் தமிழிலிருந்தும் பல சொற்கள் வடமொழிக்கு சென்றுள்ளது, உதாரணமாக கூலி என்ற சொல், திருக்குறளிலும் உண்டு.
காளிதாசர் மேகதூத் என்ற காவியம் எழுதியுள்ளார், இதனை தமிழில் மேகதூது எனலாம், மேகம் வட மொழி என்றாலும், தூது வட மொழி என சொல்ல முடியாது ,தூது என்றே திருக்குறளில் ஒரு அதிகாரம் உள்ளது, மேலும் சங்க இலக்கியங்களில் தலைவி தலைவனுக்கு தூது விடுவதாக நிறையப்பாடல்கள் இருக்கிறது. எனவே தூது தமிழில் இருந்து வடமொழிக்கு சென்று இருக்கலாம்.
மேகம்;
தமிழ் சொற்கள்: கொண்டல் ,முகில்,மாரி, மஞ்சு ஆகியவை.
காக்கா:
இதுவும் வடமொழியே, கா என்றால் சமஸ்கிருதத்தில் யார், காக்கா கரையும் போது கா ..க்கா என ஒலிப்பது யார்..யார் என சமஸ்கிருதத்தில் கேட்பது போல இருப்பதால் காக்கா என பெயர் வைத்துவிட்டார்கள்.
தமிழ் இணைச்சொல்: முட்டம்
நாகர்கோவிலில் முட்டம் என்ற ஊர் உள்ளது.
ஶ்ரீமுஷ்ணம் என்ற ஊரினை தமிழில் திருமுட்டம் என்பார்கள், அவ்வூரில் ஒரு காக்கா மோட்சம் அடைந்தது என்பது தலபுராணம்.
மேலும் வேலூர் அருகே குரங்கணிமுட்டம் என ஊர் உள்ளது , குரங்கு ,அணில்,முட்டம்(காக்கா) ஆகியவை மோட்சம் அடைந்ததாக தலபுராணம், எனவே மூன்றின் பெயரை சேர்த்து ஊருக்கு குரங்கணிமுட்டம் என பெயர் வந்துள்ளது.
நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பயன் படுத்தி வந்தாலும் ,பலரும் அதனை கருத்தில் கொள்ளாமல் மேலோட்டமாக படித்து செல்கிறார்கள் ,அப்படி சென்றாலும் பரவாயில்லை ஒரே மட்டையடியாக பொதுவாக தமிழில் அறிவியல் சொற்கள் இல்லை, மேலும் பல வடமொழிச்சொற்கள் தான் இருக்கு ,எனவே தமிழின் மொழி வளம் குறைவு என மட்டையடிக்கிறார்கள் , தமிழில் சுமார் ஏழு லட்சத்திற்கும் மேல் தனித்தமிழ் சொற்கள் உண்டு(வைரமுத்தே சொல்லிக்கீறார்), மேலும் இன்றைய உலகவழக்கிற்கு தேவையான அறிவியல் சொற்களையும் உருவாக்கிக்கொள்ளலாம், அதற்குத்தமிழில் இடம் உண்டு, தமிழ் ஒரு நெகிழ்வான மொழியாகும்.எனவே அவ்வப்போது தனித்தமிழ் சொற்களை பட்டியலிட்டு வரலாம் என நினைக்கிறேன்.
அல்லக்கை:
இது ஒரு தெள்ளுத்தமிழ் சொல்லாகும்.
அல்ல= இல்லை ,+கை ,அதாவது இல்லாத கை, ஒரு பெரும்புள்ளிக்கு அவரது வழக்கமான கரம் போக இல்லாத மூன்றாவது கரமாக செயல்ப்படும் ஒருவரை குறிப்பது.
வழக்கமாக ஒரு முக்கியமானவரின் நெருங்கியவரை இவரு அவரோட ரைட் ஹேண்ட் (right hand)என ஆங்கிலத்தில் சொல்வதுண்டல்லவா.
மேலும் அல்ல என்பதற்கு தீயவை என்றும் பொருள் உண்டு.
"அல்லவை நீக்கி நல்லவை நாட வேண்டும்"
பெரும்பாலும் அல்லக்கையாக இருக்கும் மனிதர் ,தலைவரு சொன்னாருன்னு ஏகப்பட்ட ஆட்டம் ஆடுவார்,பலருக்கும் கெடுதல் செய்வது வழக்கம்.
அல்லக்கை என்றால் தீயவர், இன்னொருக்கு அடிப்பொடி எனலாம்.
அதிகாரி:
இது வடமொழியாகும்,
அதி= கூடுதலாக , உயர்வாக,
காரி = செய்பவர் , காரியம் செயல்.
அதிகாரி என்றால் ஒரு செயலை செய்பவர், வேலை செய்பவர்.
இணையான தமிழ்ச்சொல் அலுவலர்.
ஆணி:
இதுவும் வடமொழியே, இரும்பு முளை என்று பொருள்.
ஆட்டோ ரிக்ஷா (auto riksha):
ஆங்கில,ஜப்பானிய கலவை சொல்.
ஆட்டோ= தானியங்கி
ரிக்ஷா =கையால் இழுப்பது.
எனவே தமிழில் அப்படியே மொழிப்பெயர்க்காமல்,
ஆட்டோ ரிக்ஷா =தானியங்கி மூவுருளி.
மூன்று சக்கரங்களை கொண்ட மோட்டார் வாகனம் எனப்பொருள்.
Bicycle:
இதற்கு தமிழில் மிதிவண்டி என்பார்கள், இன்னொருப்பெயரும் இருக்கிறது "ஈர் உருளி" இரண்டு சக்கரங்களை கொண்ட வண்டி.
கிரேன்(crane):
ஓந்தி= உயரத்தூக்குதல், உந்துதல் என்றால் முன்னால் தள்ளுதல் ,ஓந்துதல் என்றால் உயரத்தில் தள்ளுவது,தூக்குவது.
ஆகாயவிமானம்(aeroplane):
வடமொழி, இதற்கு தமிழில் வானூர்தி ,இல்லை எனில் பறக்கும் எந்திரம் என சொல்லலாம். ஏன் எனில் ரைட் சகோதரர்கள் முதலில் கண்டுப்பிடித்த போது "ஃப்ளையிங் மெஷின்" (Flying machine)என்று தான் பெயர் வைத்தார்கள்.
அத்தகைய வானுர்தியில் இரண்டு அடுக்கில் சமதளமான இறக்கைகள் இருக்கும் இதனால் அதனை "பை பிளேன்" (bi-plane)என்று அழைத்தார்கள், ஏர்-ஏரோ என்றால் காற்று எனவே ஏரோ பிளேன் ஆயிற்று.
ஹெலிகாப்டர்(helicopter);
இணையான தமிழ் சொல்:
உலங்கு வானூர்தி:
உலங்கு = சுழலுதல் , ஹெலிஹாப்டரில் மேல் உள்ள விசிறிகள் சுழன்று அதன் மூலம் பறப்பதால் உலங்கூர்தி.
முதலில் ஹெலிஹாப்டருக்கு "ஏர்ஸ்க்ரு" (airscrew)என்று பெயர் வைத்தார்கள், திருகாணிப்போல விசிறிகள் சுழல்வதால் ,பின்னர் ஹெலிகாப்டர் ஆயிற்று. ஹெலி (heli)என்றாலும் சுழலுவது தான்.
திருமந்திரம்
திருநீறு நமக்கு கவசம்
கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. – (திருமந்திரம் – 1666)
விளக்கம்:
எலும்புகளினால் ஆன மாலை அணிந்திருக்கும் சிவபெருமான் தன் மேனியில் பூசிக்கொள்ளும் திருநீற்றை, எப்போதும் நம் நெற்றியில் இருக்குமாறு பூசி மகிழ்வோம். அது நமக்கு கவசமாகும். தீய வினைகள் நம்மிடம் தங்காது. சிவகதியை சார்ந்திருக்கச் செய்யும். திருநீறு பூசி இன்பமயமான சிவனின் திருவடியை சேர்ந்திருப்போம்.
(கங்காளன் – எலும்பு மாலை அணிந்திருக்கும் சிவபெருமான்)
திருச்சிற்றம்பலம்
ஔவையாரின் ஆத்திசூடியில் "அரவம் ஆட்டேல்" என்று இருக்கிறது. இதற்கு பொருள் என்ன? சிலர் அரவம் என்பதை பாம்பாக அர்த்தப்படுத்திக் கொண்டு பாம்புடன் விளையாடாதே என்று பயப்படுத்தும்படியாக பொருள் சொல்கிறார்கள். ஆனால் அரவம் என்பதற்கு வேறு பல அர்த்தங்களும் உள்ளன.
1. ஒலி
2. குழப்பமான சத்தம்
3. மணிகளுள்ள கொலுசு
4. நகரும் படையின் ஆர்ப்பரிப்பு
5. ஆசை
6. வில்லின் நாண்
7. இராகு-கேது
ஆக, இப்படியும் நாம் பொருள் கொள்ளலாமா?
சத்தம் செய்யாதே, ஆசைப்படாதே, நாணேற்றும் போது அசையாதே, படையினர் மாதிரி ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் செய்யாதே, கொலுசை ஆட்டி கேட்பவர் நெஞ்சத்தில் ஆசையையோ அல்லது பயத்தையோ உருவாக்காதே, அதிர்ந்து பேசாதே, இராகு-கேதுவை கோபப்படுத்தாதே - அதாவது ஜோசியம் கேள்.
ஆர்.வி.பதி எழுதிய, 'உலகம் போற்றும் தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: தமிழறிஞர் ஒருவர், தெருவில் சென்று கொண்டிருந்தார். சைக்கிளில் வந்த ஒருவன், கவனிக்காமல் அவர் மீது மோதி விட்டான். அதனால், 'ஐயா.. மன்னித்துக் கொள்ளுங்கள்; தெரியாமல் மோதி விட்டேன்...' என்றான்.
இதைக் கேட்ட தமிழறிஞர், கோபமாக, 'மன்னிப்பு என்பது உருது சொல்; பொறுத்துக் கொள்ளுங்கள் என்பதே சரி...' என்றார்.
மோதியவனும் அவ்வாறே கூறி, போய் விட்டான். அந்த தமிழறிஞர், தேவநேய பாவாணர்!
"ஙப் போல் வளை" என்றால் ஙே என்று முழிப்பது ஏன்? தொப்புல் கொடியில் இருந்து விடுபட்ட குழந்தை, இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலி தொடர்பு "ங்கா..". தமிழின் சிறப்பெழுத்து "ழ" வைப்போல இன்னொரு எழுத்து "ங" இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல இருப்பதை காணலாம். சிறுவர்கள் இளம் பருவத்தில் எளிமையாக தமிழை பாடம் செய்ய ஒளவையால் எழுதப்பட்டது ஆத்திசூடி. இவர் வாழ்ந்த காலம் 12ஆம் நூற்றாண்டு. "ங போல் வளை " 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் இதை விளக்க தமிழறிஞர்கள் பல கோணங்களில் அணுகுகிறார்கள். ங இந்த எழுத்து பல கோணங்களை கொண்டது. அதன் கோணத்தின் ஒவ்வொன்றுக்கும் நிமிர், எதிர்ப்பு வந்தால் சாய்ந்துவிடு. மேலும் எதிர்ப்பா கீழ் நோக்கி வா, மறுபடியும் தலை எடுத்து வளைந்து பார், பின் கிட. நிமிர்ந்து நில் என்பதை தான் ங போல் வளைந்து கொடுக்க வேண்டும் என அவ்வை சுட்டி காட்டுகிறார். "திரு. நாஞ்சில் நாடன் இது பற்றி இப்படி குறிப்பிடுகிறார். ஆத்திச்சூடி எழுதும்போது ஒளவையாருக்கு ஒரு சிக்கல் வந்திருக்க வேண்டும். 'ங' எனும் உயிர்மெய் எழுத்தைக் கொண்டு எங்ஙனம் வாக்கியம் அமைப்பது என. மொழி இலக்கணப்படி ஙகரம் மொழி முதலில் வாராது. அதன் சொந்த மெய்யான 'ங்' எனும் எழுத்தைத் தொடர்ந்தே வரும். ஙகர மேயோவேனில் உயிரெழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களையும் தொடர்ந்துதான் வரும். எடுத்துக்காட்டு – அங்கு, இங்கு, எங்கு, ஈங்கு, ஏங்கு, கங்கு, சங்கு, பங்கு, தங்கு, நுங்கு, வாங்கு, மங்கு, முங்கு, தங்கம், சுங்கம், கலிங்கம், பாங்கு, தூங்கு, நீங்கு, வாங்கு, வீங்கு, மூங்கில். " உயிர்மெய் எழுத்தில் க வை அடுத்து ங, ஙா வைத் தவிர உள்ள அந்த வரிசையில் வரும் மற்ற எழுத்துக்கள் வழக்கத்தில் இல்லை. காலப்போக்கில் கரைந்து போய் விட்டது என்று சொல்லலாம். ஆனால் அரிச்சுவடியில் 216 எழுத்துகளின் பட்டியலில் மட்டும் ஒன்றாய் கலந்து இருக்கிறது. "ஙே " என்று முழிப்பதற்கும் அடுத்தவனை திட்டும் முதல் எழுத்தாக இன்னும் அழியாமல் உள்ளது. ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார். ஙகர வெல் கொடியானொடு நல் நெஞ்சே நுகர நீ உனைக்கொண்டு உயப்போக்கு உறில் மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன் புகர்இல் சேவடியே புகல் ஆகுமே. (சித்தத் தொகை திருக்குறுந்தொகை திருநாவுக்கரசர்) இந்த பாட்டை ரொம்பப் பேர் ஆராய்ச்சி செய்தாங்க. தமிழில் " ங " என்ற எழுத்தை பாட்டின் முதல் எழுத்தாக பயன்படுத்தப் பட்டிருக்கு. இந்த எழுத்தை வழுவில் வார்த்தையின் முதல் எழுத்தாக பயன் படுத்தப் பட்டு இருக்கலாம் என்பது முதல் முடிவு. பொருள் இல்லாமல் இந்த வார்த்தையை எழுதி இருக்க முடியாது. இங்கு "ஙகர வெல் கொடியானொடு" என்பது சிவபெருமானுடைய இடபக் கொடியை குறிக்கிறது. (இடபம் = காளை) இதை எப்படி விளக்க முடியும் என்பது தமிழ் ஆராய்சியாளர்களுக்கு பிடிபட வில்லை. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் லிங்குஷ்டிக் டிபார்மெண்டில் பேராசிரியர் நெகமத்தை சேர்ந்தவர். (பெயர் தெரியவில்லை) ஏறத்தால 20 ஆண்டு காலம் முயற்சித்தும் விடை காண முடியவில்லை. தஞ்சையில் ஒரு பெரிய புராண வகுப்பில் ஒரு நாள் டி.என்.ராமசந்திரன் சேக்கிழார் என்ற பெரியவர் இப்பாடலில் சிவபெருமானின் இடபக் கொடியை யே குறிப்பிடப் பட்டிருக்கிறது ஆனால் எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். கல்வெட்டு துறை பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் இது பற்றிய சிந்தனையில் ஈடு பட்டார். அவருக்கு ஒரு பொறி தட்டியது. இன்றைக்கு நாம் எழுதும் "ங" என்ற எழுத்தை வைத்து விடை தேட முற்பட்டால் இதற்கு விடை கிடைக்காது அந்தக் காலத்தில் இந்த எழுத்தை எப்படி பயன் படுத்தி இருப்பார்களோ அந்த கோணத்தில் ஆராய வேண்டும். அதுமட்டுமல்ல தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொரு நூற்றாண்டும் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ரொம்ப பேர் கல்வெட்டுக்காக ஒரு எழுத்து ஒலைக்காக ஒரு எழுத்து என்று தவறாக நினைத்து கொள்கிறார்கள், அப்படி அல்ல. காலந்தோரும் தமிழ் எழுத்துக்கள் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. மகேந்திர பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் அதனால் அந்த காலத்தை சேர்ந்த கல்வெட்டை வைத்து இந்த எழுத்துக்கான ஆய்வில் ஈடுபட்டார் (குடவாயில்). பல்லவர்களின் கொடி "இடபக் கொடி" ஒரு இடபத்தின் உருவத்தை பார்த்தால் "ங" என்ற எழுத்தின் வடிவம் தோற்றம் தருகிறது.
* வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு வீடுகட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண் மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு.
* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில்இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு.
. அதனால், இயற்கையில் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சும சக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.
* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டுவர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக் கூடாது. மனிதனைத் தாண்டி சிட்டுக்குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற்கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்கவிடுவார். அதைச் சாப்பிட குருவி இரண்டு வரும், கத்தும், கொறித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணிலுக்கும் கூடு கட்டிக் கொடுப்பார். தூக்கனாங் குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக்கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்
.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு.
வீட்டில் சிட்டுக்குருவி, அனில் போன்றவை கூடு கட்டி குஞ்சு பொரி க்கின்றன, குட்டி போடுகின்றன. இதை சிலர் கலைத்துவிடுகிறார்கள்.
ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரிப்பது நல்லது
கழுதை படத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்று சிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதை விட இதுபோன்று செய்தால் நல்ல பலன் இருக்கும்.
புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதமான சக்திகளை கொண்டுவருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இதுபோன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக் கூடாது. இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.
http://selfmotivationcoach.blogspot.in/
படைப்பதினால் என் பேர் இறைவன்...
நான் நிரந்தரமானவன்..
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!
♦கவிஞனின் வாக்கு கடவுளின் வாக்கு!!
"கடவுள் என்றதும் ஒரு பொறித்தட்டியது. ஏன் கடவுள் தொடர்பான மென்பொருள்கள், எழுதக்கூடாது. கூகுள் பிளேயில் தேடிப்பார்த்தால், ஏகப்பட்ட மதம் சார்ந்தவைகள்தாம் இருந்தன. தினம் ஒரு பைபிள் வாசகம் சொல்லுவதற்கு, மெக்கா திசை கண்டுபிடிப்பதற்கு, ராகுகாலம் எமகண்டம் சொல்லுவது !!! ஜோசியம் சொல்லுவது, அவை எல்லாவற்றையும் விட, பேய், பிசாசு இருந்தால் கண்டுபிடிக்க உதவுபவை என சொல்லிக்கொண்டவைகள் கூட இருந்தன.
"God Detector, God Finder, God Locator" என்று தேடிப்பார்த்தேன். ஒன்றும் கிடைக்கவில்லை. நானே கடவுளைத் தேட முடிவு செய்தேன். மேம்பட்ட ஆண்ட்ராய்ட்"
"கைபேசிகளில், மின்காந்தப் புலங்களை கண்டறியவும், வேறுசில புலனறிவுக் கருவிகளும் உள்ளடக்கமாகவே வருகின்றன. இணையத்தில் ஏற்கனவே பேய் பிசாசு கண்டுபிடிக்க எழுதியிருந்த எடுத்துக்காட்டு நிரலியை அடிப்படையாக வைத்து மென்பொருளை எழுத ஆரம்பித்தேன்.
வாடிகன், உள்ளிட்ட ரோமின் பிரபல தேவாலயங்களிலும் , மசூதிகளிலும் கிடைக்கும் அதிர்வெண், அலைவரிசைகள், தமிழ்நாட்டில் பிரபலமான கோவில்களிலும், பிரபல சாமியார்கள் கூடும் இடங்களிலும் அதே விபரங்களை என் நண்பர்களை வைத்தும் எடுத்துக்கொண்டேன். எலக்ட்ரானிக் குரல் நிகழ்வுகள், மின்காந்த சூழல், ஆற்றல் ஆகியனவற்றை, அடிப்படையாக"
"வைத்தும், வெவ்வேறு மதங்களின் நல்ல நேரம், கெட்ட நேரம், இருப்பிடம் ஆகியன வைத்து , ஓர் ஒழுங்கற்ற வகையில், கடவுள் இருக்கிறது எனக் காட்டக்கூடிய வகையில் ஓர் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை தயார் செய்தேன். கிட்டத்தட்ட, வாயில் இருந்து லிங்கம் எடுக்கக்கூடிய வகையில் உட்டாலக்கடியான வேலையாக இருந்தாலும், மக்களின் ஆர்வக்கோளாறினால் இது நன்றாக வியாபாரம் ஆகும் என நம்பினேன்.
இப்பொழுது ஆய்வு செய்துப் பார்த்துவிட வேண்டியதுதான் அம்மு, தனக்காக வைத்திருக்கும் தியான அறையில் , அவள் தியானிக்கும்பொழுது, மெல்ல எனது கைபேசியில் தரவிறக்கி வைத்திருந்த "கடவுளைத் தேடி " மென்பொருளுடன் உள் நுழைந்தேன். கரு நீல நிறத்துடன்"
"கணினித் திரை சினுங்கியது, கடவுள் இருக்கின்றாராம். கடவுளுக்கு நீல நீறம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பதால், நான் வடிவமைத்த கடவுளின் அலைவரிசை கிடைக்கும் பொழுது எல்லாம் நீலம் நீறம் திரை முழுவதும் விரவும்.
அம்முவுடன் மறுநாள் நானும், அந்த மலைக்குன்றிற்கு சென்றேன், கணினித் திரை நீல நீறத்திலேயே இருந்தது. அந்த மலை முழுவதும் கடவுளின் ஆதிக்கம் தான் போலும்.
மனம் மகிழ்ச்சியில் குதுகலித்தது. கடவுள் இருக்கின்றாரா இல்லையோ !!! கடவுள் சார்ந்த விசயங்களில் என் அப்ளிகேஷன் ஒளிர்கிறது. ஏதாவது சாமியாரிடம் பேரம் பேசி, அவரை வைத்து மார்க்கெட்டிங் செய்து, டாலர்களில் சம்பாதித்து விட வேண்டும். நெருங்கிய நண்பர்களிடம்"
"தரவிறக்கி சோதனை செய்துப் பார்க்க மென்பொருளை அனுப்பி வைத்தேன்.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை வாடிகனில் சோதித்துப் பார்க்கக் கிளம்பினேன். கோடையாதலால் காலையிலேயே சுள்ளெனெ வெயில் அடித்தது. அரைக் கிலோமீட்டர்களுக்கு நீண்ட வரிசை, தண்ணீர் தாகம் அடித்தது. "கடவுளைத் தேடி" மென்பொருள் இன்னும் ஒளிரக் காணோம். எனக்கு முன்னே ஒரு வயதான அம்மணி, மிக பக்தியுடன் புனித பீட்டர் தேவாலயத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து சிரிக்கவும், வாடிகன் எல்லையை மிதிக்கவும் எனது கைபேசி நீலநிறத்தில் ஒளிரவும் சரியாக இருந்தது. அந்த அம்மணியிடம் கூச்சப்படாமல் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்துக் கொண்டேன்"
"அனைவரின் பார்வையும் தேவாலயத்தின் மாடத்தின் மேலேயேத் தான் இருந்தது. போப்பாண்டவர் வந்து காட்சித் தருவார் என, மாடத்தையும் கைபேசியையும் மாறி மாறிப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவரும் வந்தார், கைபேசியைப் பார்த்தேன், நீலநிறம் சுத்தமாக காணாமல் போய் இருந்தது.
நிரலியில் ஏதாவது பிழை இருக்கலாம், வெப்பநிலையைக் கணக்கில் எடுத்துக் கொண்டேனா என ஐயம் வந்தது.
அருகே அருகே இருந்த வெவ்வேறு சர்ச்சுகளிலும் நீல நிறம் கிடைக்கவில்லை. ரோமில் இருந்த மிகப்பெரும் மசூதியிலும் கிடைக்கவில்லை. ஹரே கிருஷ்ணா கோவிலிலும் சீக்கிய குருத்வாராவிலும் சோறு போடும் இடத்தில் மட்டும் நீல நிறம் கிடைத்தது.
மாலையில் சில நண்பர்களிடம்"
"இருந்து மின்னஞ்சல்கள் வந்திருந்தன. எந்தக் கோவிலிலும் , சர்ச்சிலும், மசூதியிலும் நீல நிறம் கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு நண்பன், கோவிலுக்குப் போய்விட்டு , அப்ளிகேஷனை ஓடிக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு, மருத்துவரைப் சந்திக்கையில் ஒளிர்ந்ததாக சொன்னான். அந்த மருத்துவர், அவனின் குழந்தையை ஒரு நோயில் இருந்து மீட்டவர். எனது மூளையில் நீலநிறம் படர்ந்தது.
அம்மு மளிகைக் கடைக்குப் போய் இருந்தாள், எனது கைபேசி எடுத்துக் கொண்டு அவளின் தியான அறைக்கு சென்றேன், ஒளிரவில்லை. அவள் வழக்கமாகப் போகும் குன்றிற்கு போனேன், நீலநிறத்திற்கான சுவடே இல்லை. திரும்பும் வழியில், ரொசாரியோ வைச் சந்தித்தேன். அவர்,"
"அகதிகளுக்காகப் போராடும் வாதாடும் ஒரு வழக்கறிஞர். புரிந்திருப்பீர்கள்., நீல நிறம் ஒளிர்ந்தது. பக்கத்து வீட்டு குழந்தை, என்னைப் பார்த்தால் வாலை குழைக்கும் நாய், எதிர்த்த வீட்டுப் பாட்டி என இவர்களைக் கடக்கும்பொழுதெல்லாம் நீலநிறம் கிடைத்தது. வீட்டிற்கு வந்ததும் அம்மு கட்டி அணைத்துக் கொண்டாள். நீலநீறம் ஒளிர்ந்தது.
ஒருப்பக்கம் என்னை நினைத்து பெருமையாக இருந்தது. ஏதோ ஒரு வகையில் கடவுளைக் கண்டுபிடித்துவிட்டேன் அல்லவா !! "கடவுளைத் தேடி" மென்பொருள் திட்டம் மிகப்பெரும் தோல்வி. மென்பொருளை அவரவர் கைபேசிகளில் இருந்து நீக்கிவிடுமாறு நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். இதை நான்"
"விற்கப்போவதில்லை. மடிக்கணினியில் இருந்த அத்தனை நிரலியையும் அழித்துவிட்டு , கைபேசியில் இருந்த கடைசி பிரதியையும் அழிக்க எத்தனிக்க முனைகையில் என்னிடத்திலும் நீலநிறம் ஒளிர்ந்தது"
விண்ணில் மிதக்கும்
எந்திர ஆச்சரியம்
விமானம்.
எனினும் கடலும்
கால்நனைக்கும் அலையுமே எனக்கு பெரிது.
விட்டு நீங்கா ஈரமணல்
உலரும் போது என்
வீட்டினுள்,
அவள் நினைவு போலவே!
--கருணாநிதி
ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார்.
"நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்" இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்" என்று அவர்கள் கூறினராம். இதைக்கேட்ட ஔவையார், "இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்" என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்.
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்"
"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்"
"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்"
"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்"
மனிதன்!
---------------
எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கிறது.
எனக்கு மனிதனைவிட சிறந்த கருத்துக்கள் இல்லை,
மனிதன் மட்டும்தான் எல்லாப் பொருள்களுக்கும்
எல்லா கருத்துக்களுக்கும் படைப்பாளி,
அற்புதம் செய்வோன் அவனே,
இயற்கை சக்திகளின் எதிர்காலத் தலைவன் அவனே,
இவ் உலகின் அதியற்புத அழகுப் பொருட்கள் எல்லாம்
அவனது உழைப்பால் ஆனவை.
நான் மனிதனுக்கு தலை வணங்குகின்றேன்,
ஏனெனில் மனித அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பால்
நான் இவ்வுலகில் வேறொன்றையும் காண முடியவில்லை.
- தோழர்
சங்க காலம் பரந்துபட்ட காலம். அக்காலத்தில் ஒரு சமயத்தில் மூவேந்தருள் சேரன் சிறப்புற்றிருந்தான், மற்றொரு சமயத்தில் சோழன் மேம்பட்டு விளங்கினான், வேறொரு சமயத்தில் பாண்டியன் பெருமை பெற்று விளங்கினான். ஒவ்வொருவனும் மற்ற இருவரையும் அடக்கி ஆள நினைத்த காலங்களும் உண்டு. இந்த முதன்மை வெறி இம் மரபுகள் அழியும் வரையில், பின் நூற்றாண்டுகளிலும் நிலைத்திருந்தது.
கடை சங்க காலம்:
கடை சங்க காலம் என்பது ஏறத்தாழக் கி.மு. 300 முதல் கி.பி 300 வரை என்று கொல்லலாம். கி.பி 300 -க்குப் பிறகு தமிழகத்தின் பெரும்பகுதி பல்லவர் என்ற புதிய மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. ஏறத்தாழக் கி.பி. 9- ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் தம் பேரரசைத் தோற்றுவித்தனர். கி.பி. 11, 12- ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசர் தென்னிந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் வைத்து ஆண்டனர்.
கி.பி. 13- ஆம் நூற்றாண்டில் பாண்டியர் செல்வாக்கு ஒழிந்தது. கி.பி. 14- ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் தென்னாட்டு அரசுகளை அழித்தார். பின்பு தமிழகம் விஜயநகர வேந்தர் ஆட்சிக்கு உட்பட்டது. பின்பு விசயநகர வேந்தரின் பிரதிநிதிகளாக இருந்து மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்னும் இடங்களை நாயக்க மன்னர் ஆண்டு வந்தனர். பின்னர் இந்நிலப் பகுதிகள் கருநாடக நவாபுகளின் ஆட்சிக்கு உட்பட்டது. தஞ்சையில் மகாராட்டியர் சிறிது காலம் ஆண்டனர். பின்பு தமிழகம் வெள்ளையர் ஆட்சிக்கு உட்பட்டது.
தொகுப்பு : தமிழ் பண்பாட்டு வரலாறு
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம்
சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து
முன்னி யவைமுடிக என்று.
வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும் அரிதாம். இ·து உண்மையாதலால், பாதம் பூமியில் படியாத (பூ மேல் நடந்த) அருகக் கடவுளை, 'எமது மனத்திலே நினைத்தவை நிறைவேற வேண்டும்' என்று பக்தியுடன் தரையில் தலை பொருந்துமாறு தாழ்ந்து பணிந்து தொழுவோமாக!
பொருள் :-
வானவில் இன்னவாறு தோன்றும் என்பதனை யாரும் அறியார். அதுபோலவே வாழ்க்கையில் துன்பங்கள் இன்னவாறு தோன்றும் என்பதனையும் யாராலும் அறிய இயலாது. இந்த உடம்பு எப்போது அழியும் என்பதும் அறிதற்கு அரிது. யின் அழிவு உறுதி. அப்படி அது அழிவதற்குள் நல்ல செயல்கள் கைகூடும்படி கடவுளைத் தொழுவோம் என்பது கருத்து