Designed by Enthan Thamizh

ரிலையன்ஸில் பொருட்களை வாங்கி விட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன்.

இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர்,

" சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல கேஷ் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க "

" ரெண்டாயிரம் நோட்டா இருக்க அதையாவது வாங்கிக்குவீங்களா ? "

" சில்லற இருக்காது சார். 1500 ரூவாக்கு மேல பில் போடுற மாதிரி பர்ச்சேஸ் பண்ணா சேஞ்ச்க்கு ட்ரை பண்றேன். இல்லனா பொருட்கள அங்க வச்சிட்டு போங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க சர்வர் ப்ராபளம் சால்வ் ஆச்சுன்னா வாங்கிட்டு போங்க "

எனக்கு பின்னால் நின்ற பெரியவர்,
" சார் என்கிட்ட பழைய 500 ரூவா நோட்டு இருக்கு அதையாவது வாங்கிக்குவீங்களா "

" இல்ல சார் அதெல்லாம் வாங்கமாட்டோம்னு என்ட்ரன்ஸ்லேயே போர்டு வச்சிருக்கோமே பாக்கலியா "

மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது

இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ரிலையன்ஸ் திறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.

இதில் சர்வரும் சரியாகி இருக்க வேண்டும்.

நாளை காலைத் தேவைக்கான சில அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் வேறு.

வேறு ஏதேனும் கடையில் முயற்சிக்கலாம் என்றாலும், பத்து நாட்களாக கிடைக்காத சில்லறை இப்போது மட்டும் கிடைத்து விடவா போகிறது.

வீட்டுக்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு வழக்கமாக நான் அதிகம் செல்வதில்லை.

இருந்த போதிலும் ஒரு முறை அங்கும் முயற்சிக்கலாமே என்ற முடிவு செய்து அண்ணாச்சி கடைக்குச் சென்றேன்.

இரண்டாயிரம் விசயத்தை முதலில் சொன்னால் அண்ணாச்சி சில்லறை இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.

"ரெண்டாயிரத்துக்கெல்லாம் சில்றை இல்ல சார். வேண்ணா பழைய 500 ரூவா நோட்டுக்கூட குடுங்க வாங்கிக்கிறேன். "

" சரி பராவாயில்ல அண்ணாச்சி. எங்கிட்ட வேற பணம் இல்ல.இந்தாங்க இந்த பொருள எடுத்துக்கங்க "

" ஏன் சார் அப்டி சொல்லுதிய ?
நீங்க மொதத்தெருல நாலாவது ப்ளாட்லதான இருக்கிய.வெள்ளம் வந்தப்பெல்லாம் எல்லாருக்கும் அங்க இங்கன்னு ஓடி ஒடி வேல செய்தியளே. இந்தாங்க பிடிங்க எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போங்க.அப்புறமா பணத்த குடுங்க. நீங்க என்ன எம் பணத்த குடுக்காம ஊரவிட்டா ஓடிப்போகப்போறிய. அவசர செலவுக்கு எதும் ரூவா வச்சிருக்கியளா ? நூறு எரநூறு வேணும்னா நா தரவா ? வாங்கிக்கங்க அப்புறமா குடுங்க சார் "

தயக்கத்துடனும் புன்னகையுடனும் அண்ணாச்சியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தவுடன் மொபைலுக்கு மெஸ்ஸேஜ் ஒன்று வரவே எடுத்துப்பார்த்தேன்.

Thank you for using Debit Card ending xxxx for Rs.475.04 in CHENNAI at Reliance Fresh .......

வாங்காத பொருளுக்கு என் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த அம்பானி எங்கே!

வாங்கிய பொருளுக்கே பணம் வாங்காமல் கடன் கொடுத்த நம்மூர் அண்ணாச்சி எங்கே.!

அனைவரும் இனிமேல் பணமில்லாத பரிவர்த்தனைக்கு
(Cash less Transaction) மாறுங்கள் என்று அண்ணாச்சி கடைகளை ஒழித்து,

அம்பானி கடைகளை அதிகரிக்கத் துடிப்பவர்களுக்கு (இங்கு சில வார்த்தைகள் எடிட் செய்யப்பட்டுள்ளது) தெரியுமா.?

அம்பானி கடைகளிலும், ஆன்லைனிலும் வெறும் வணிகமும், இலாப நோக்கமும் மட்டும்தான் இருக்கும்.

ஆனால் அண்ணாச்சி கடைகளில் மட்டும்தான் வணிகம், இலாபம் தாண்டி, வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் இடையே ஒரு அன்பு கலந்த உயிரோட்டமான உணர்வுபூர்வமான உறவு இருக்கும் என்பது.
🙏🙏🙏🌺🌺🙏🙏🙏

*சொர்க்கத்தில் ஒருநாள்*

*MGR*
வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ?

*ஜெ*
*புதிய பூமி* யில் *ஆயிரத்தில் ஒருவனாக* இல்லாமல் நீங்கள்
*குடியிருந்த கோவிலான* "கழகத்தை" *அடிமைப் பெண்ணாக* இல்லாமல் *தனிப்பிறவி* யாக "கழகத்தை" பாதுகாத்தேன்

*MGR*
மகிழ்ச்சி!....... என்ன சொல்லிவந்தாய்?

*ஜெ*
உடல்நிலை சரியில்லைஎன்று!!!

*MGR*
அமெரிக்கா சென்றாயா?

*ஜெ*
அப்பல்லோவுக்கு சென்றேன்!

*MGR*
அதுபோதுமே" சொர்க்கத்துக்குவர

*ஜெ*(சோகமாக)
மக்களின் பாரமும்குறையவில்லை என் மனபாரமும் குறையவில்லை
புறப்பட்டு வந்து விட்டேன்

*MGR*
நம்கட்சி

*ஜெ*
கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா

*MGR*
நன்றி அம்மு நம்இரத்தத்தின்இரத்தங்கள்

*ஜெ*ஏதோ இருக்கிறார்கள் தலைவா....... *நீங்கள் இல்லாத வேதனையில். அன்று*  . ......
*நான் இல்லாத வேதனையில் இன்று*

*MGR*
நண்பர் கருணாநிதி

*ஜெ*
ஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்

*MGR*நல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை ?

*ஜெ*
முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார் நான்விடவே இல்லை

(அப்போது சோ. வருவதைப்பார்த்து)
*MGR*
அடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா? ஏற்கனவே இங்கே ஒருநாரதர் இருக்கிறாரே

*சோ*(சிரித்தபடி) நாரதர் கலகம் நனமையில் முடியும்
(ஜெ வை பார்த்ததபடி)யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு
அங்கென்ன வேலை?

*MGR*
அது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா!

*சோ*
நாடோடி மன்னா இங்கே நீங்க எந்த கட்சி.? நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா?

*MGR*
(சோ  முதுகில் தட்டிக்கொடுத்து)
இங்கே கட்சி யும்கிடையாது கொடியும் கிடையாது எதிரியும் கிடையாது .
அதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.

😉சித்ர_குப்தா: எப்படி பிரபு ஒரே நாள்ல அத்தன உயிர எடுப்பீங்க?
👍எமன்: ஹா ஹா ஹா! சித்ர குப்தா, நான் எமன் டா. புயலை விடுவேன், மழையை விடுவேன், புகம்பத்தை விடுவேன். அதிலும் சாகாவிட்டால் பூலோகம் முழுக்க 😭அப்போலோ கிளைகள் வைப்பேன்.


சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது. நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்வது, வெயில், மழை என்று பாராமல் உழைப்பது, தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இதையெல்லாம் சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!


.
காமராஜர்- கருணாநிதி
பெரியார்- கருணாநிதி
அண்ணாதுரை- கருணாநிதி
எம்ஜிஆர் - கருணாநிதி
ஜானகி- கருணாநிதி
ஜெயலலிதா-கருணாநிதி
.
இப்போ...
.
.

ஓபிஎஸ்- கருணாநிதி...
.
மிஸ்டர் ஓபிஎஸ்... மண்ட பத்ரம்..
என்ன நான் சொல்றது.. 😂😂

எமதர்மராஜா
ஏழைங்களோட உயிர எடுக்க Buffaloல வருவாரு,
பணக்காரங்களோட உயிர எடுக்க Appolloல வருவாரு.

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான்.

ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு.

ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது.

கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம்.

கையில்லாத பையன் என்ன செய்வான் ?

பல மாஸ்டர்களிடம் போனான்.

எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்.

"குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?" என்றான்.

"இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்" என்றார் குரு.

குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.

கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன்.

ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான்.

பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். "வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்" என்கிறார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.
பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.

பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்.

"குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே " என்றான்
புன்னகைத்தபடியே குரு சொன்னார் "உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள்.

* ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

* இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே !

* உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !" *

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

# நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. #

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது...

ஒரு அ.தி.மு.க வேட்பாளர் தேர்தல் வேலை செய்யும்   கட்சி ஆட்களுக்கு சரியாக உணவு கூட வாங்கி தருவதில்லை என்று அவரிடம் புகார் சொல்லப்படுகிறது , அந்த வேட்பாளர் போயஸ் கார்டன் அழைக்கப்படுகிறார்.

"என்னப்பா உன் மேல நிறையா புகார் வருதே, கட்சிக்காரர்களுக்கு சாப்பாடு கூட வாங்கி தர முடியாத உன்னால ??"

"அம்மா , நான் தாழ்த்தப்பட்ட ஜாதிய சேர்ந்தவன், என் வீட்ல சாப்பாடு செஞ்சு போட்டா யாரும் சாப்பிட மாட்டேங்கிறாங்க, செஞ்சதெல்லாம் வீணா கொட்ட வேண்டி இருக்கு, எல்லாருக்கும் வாங்கி கொடுக்க எனக்கு வசதியும் இல்ல, என்னை மன்னிச்சுருங்க என்று கதறுகிறார் அந்த வேட்பாளர்..

"அப்படியா விஷயம் , சரி நீ போய் கவலைப்படாம தேர்தல் வேலைகளை கவனி" 

அந்த வேட்பாளர் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆகிறார்.. யாரும் எதிர்பாராத விதமாக அவர் உணவுத்துறை மந்திரியாக அறிவிக்கப்படுகிறார்..

ஊடகங்களை பொறுத்தவரை அது எப்போதும் போல அவரின் விசுவாசிக்கு வழங்கப்பட்ட பதவி , மக்களை பொறுத்தவரை "அந்தாளுக்கு மச்சம்"

ஆனால் அந்த செயலின் உண்மையான அர்த்தம்

"நீ தாழ்ந்த ஜாதினு சொல்லி உன் வீட்டு சாப்பாடை வேணாம்னு சொன்னாங்களா !!! இனி நாட்டுக்கே நீ தான் சோறு போட போற"   என்பது தான்.

அவரின் ஒவ்வொரு அதிரடியான முடிவிற்கு பின்னால் இப்படி ஓரு தாயுள்ளம் கொண்ட சிந்தனை இருந்திருக்கக்கூடும்...!!

#இரும்புபெண்மணி_JJ

அந்த அமைச்சர் வேறு யாருமில்லை இப்போதைய சபா நாயகர் தனபால்தான்

குடியரசு தலைவர்  பிரணாப் முகர்ஜி  மறைந்த  முதல்வரின்  நலன் விரும்பி

அம்மா  அவர்களின்  admirer

மறைவு செய்தி கேட்டு  கலங்கிப் போனவர்  உடனடியாக  சென்னை  வர கிளம்பினார்

பறந்த விமானம் பழுதுபட  டெல்லி  திரும்பினார் 

உடனடியாக   வேறு விமானம்  இல்லை

ஆனாலும்  எப்படியாவது  முதல்வருக்கு    இறுதி   மரியாதை  நேரில் செலுத்தவேண்டும்  என்று
உறுதியாக  இருந்தார்

விமானப்படை சரக்கு  விமானம்  ஓன்று இருப்பதை  தெரிந்து அதில் ஏற விருப்பம் தெரிவிக்க
விமானப்படை  ஒப்புக்கொள்ளவில்லை  பாதுகாப்பு  கருதி

முகர்ஜி பிடிவாதமே  வென்றது

எந்தவித வசதியும்  இல்லாத ஒரு சாதாரண  சரக்கு  விமானத்தில்  எப்படி  பயணிக்கிறார் பாருங்கள்

எவ்வளவு எளிமையான மனிதர்

Tvல சோப் விளம்பரத்துல குழந்தை அழுக்கு சட்டையோட அம்மா சிரிச்சுகிட்டே துவைக்கிறாங்க ...

நான் குழந்தையா இருந்தப்பெல்லாம் அழுக்கா வந்தா,
முதல்ல என்ன துவைச்சிட்டு தான் எங்கம்மா சட்டையவே துவைப்பாங்க .....😜😜😜

😝😝😝😝😝😝 😝😝😝😝😝😝😝😝😝😝😝

News :   ATM ல் ஐந்து முறைக்கு மேல் பணம் எடுத்தால் Rs 20  கட்டணம்.

இப்ப தான் ATM க்கு ABBREVATION னே புரியுது. 
ATM - Anju Time Mattum
( அஞ்சு டைம் மட்டும் )

😜😜😜😜😜 😝😝😝😝😝😝😝😝😝😝😝

சின்ன வயசுல நம்மகிட்ட சில்லறை காசு இருந்தா சாக்லேட் வாங்கி தின்போம்.

இப்ப கடைக்காரன்கிட்ட சில்லரை காசு இல்லைனா நாம சாக்லேட் திங்க வேண்டியதாயிருக்கு ....😜😜😜

😝😝😝😝😝😝😝😝😝😝😝 😝😝😝😝

" டா "  போடும்  பெண்கள் அனைவரும் ஆண்களையே " டீ " போட கிச்சனுக்குள் அனுப்புகின்றனர்.

இன்றைய " டா "  நாளைய     "  டீ  " இதுவே காலப்போக்கில் டாடி என குழந்தைகளால் அன்போடு அழைக்கப்படுகிறது  .....😜😜😜

😝😝😝😝😝😝😝😝😝😝😝

#கல்யாணம்  ஆன புதுசுல பொண்ணு வாந்தியெடுத்தா 

முழுகாம இருக்குனு அர்த்தம் ......

பையன் வாந்தியெடுத்தா

பொண்ணு சமைக்க ஆரம்பிச்சிருச்சுனு அர்த்தம் .....😜😜😜😜

😥😥😥😥😥😥😥😥

மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!

1. நிறைய அதிகாரம் இருப்பதால்.

2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்.

3. இரண்டு அடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால்.

.....எப்புடி !!!
😥😥😥😥😥😥😥

உலகின் சிவன் கோயில்கள்:

மனித வரலாற்றை வகைபடுத்திய அறிஞர்கள் அதனை பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் ,வெண்கலக்காலம் எனப் பலவகையாகப் பிரித்திருக்கின்றனர்.இவற்றுள் மனிதன் மிருகம் போல உண்டு ,இனப்பெருக்கம் செய்த காலத்தில் இருந்து சற்றே மேம்பட்டு,சிந்திக்கத் தொடங்கிய காலத்தை பழைய கற்காலம் எனலாம்.இந்த பழைய கற்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான அடையாளக் கூறுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திக்கின்றன. இதில் இருந்தே சைவத்தின் தொன்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.

வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது சிவன் கோயிலும் அதில் ஒரு பெரிய சிவலிங்கமும் 1937ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக்கோயில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிஉற்ற நிலையில் காணப்படுகின்றன.டெல்கால் என்ற ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்புசிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கோயில்களில் இன்றும் கூட திருவாசகம் ஓதப்படுகிறது.இங்கே இருப்பவர்களுக்கு தமிழ்மொழி தெரியாததால் ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகிறார்கள்.மேலும் ஜாவாவில் உள்ள பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலில் தாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன ,.

சுமத்ராவில் அழிபாடுற்ற சிவன் கோயில் உள்ளது. இங்கே அர்த்தநாரி வடிவம் ,கணபதி சிலை,நந்தி சிலை,ஆகியவை இருக்கின்றன.போர்போநியாவில் உள்ள மலைகுகையில் சிவன் ,விநாயகர் சிலைகள் உள்ளன.

சியாம் நாட்டிலும் கம்போடியாவிலும் சிவலிங்கத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. சியாமில் பழைய சிவன்கோயில் இருக்கிறது.இந்த கோவிலில் இப்போதும் பொங்கல் விழ சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பாபிலோனியாவில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் 6000 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்ட சிவாலயங்களும், அவற்றின் இடிபாடுகளும் கிடைத்துள்ளன.இங்கு கிடைத்த களிமண் எட்டில் சிவா என்ற பெயர் காணப்படுகிறது.

பாபிலோனியர்கள் தங்கள் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயர்களில் எல்சடை என்ற பெயரும் உள்ளது. இச்சொல் சூரியனைப்போல சிவந்த சடையை உடையவன் என்று பொருள் தரும்.இரண்டு புறங்களிலும் முத்தலை சூலமும்,கையில் மழுவாயிதமும் கொண்ட சிவபெருமான் காளையின் மீது நிற்பதாக இருக்கின்ற சிலை ஒன்று கிடைத்திருக்கிறது.மேலும் பாபிலோனியர்களின் மாத பெயர்களில் ஒன்று சிவனின் பெயரைக் கொண்டதாக இருக்கிறது.

சிரியா நாட்டில் சிவன்சிலையும் ,சிவன் உருவம் பொறிக்கப்பட்ட வெண்கலத்தட்டும் கிடைத்திருக்கிறது. இந்தத் தட்டில் உள்ள உருவம் தந்தைக் கடவுளின் வடிவம் என்று கூறுகின்றனர்.இவ்வுருவம் வலக்கையில் மழுவும் ,இடக்கையில் ஆருமுனைகளைக் கொண்ட இடியேறுந்தாங்கியபடி இட பத்தின் மீது நிற்பதைப்போலப் பொறிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் உள்ள பாலைவனம் ஒன்றுக்கு சிவன் என்று பெயர் வழங்கி வருகிறது.இங்கு வாழும் மக்கள் அமன்யூ என்ற கடவுளை வணங்குகிறார்கள்.அந்தக் கடவுளுக்கு நந்தி வாகனம் இருக்கிறது.கிரேக்க நாட்டில் சிவலிங்கங்களைப் பொது இடங்களில் எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி வைத்திருக்கின்றனர். பௌத்த மதத்தில் ஒரு பிரிவான ஷிண்டோயிசம் என்பதில் சிவலிங்கத்திற்குப் பெருமதிப்பு தரப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக இமயமலைக்கு அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால் ஆன சிவலிங்கத் திருஉருவம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகிறது.

மேலே கூறப்பட்ட சான்றுகளின் மூலமாக உலகின் பல்வேறு இடங்களிலும் சிவன்கோயில்களும், சிவவழிபாடும்,சிவனின் பல்வேறு நிலையில் அமைந்த உருவங்களும் விழாக்களும் நடந்து வந்தன என்பதை அறிந்து கொள்கிறோம்.உலகமெங்கும் சிவ வழிபாடு பரவிக் கிடந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும் குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன.

மகாபாரதத்தில் வேதவியாசர் அர்ச்சுனனைப் பார்த்து எவன் ஒருவன் அனுதினமும் சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து மனத்தூய்மையோடு ருத்ர ஜெபம் செய்கிறானோ அவன் இந்த உலகில் எல்லாவகையான இன்பங்களையும் அடைவது நிச்சயம் என்கிறார்.

"ஓம் நமசிவாய " என்ற சிவா நாமத்தை அன்போடு உச்சரித்தாலே பல பிறவிகளில் செய்த பாவம் விலகும்.சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியைத் தூண்டிவிட்ட காரணத்தினால் அளவில்லாத புண்ணியம் பெற்ற சாதாரண எலி,மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்ததை புராணங்கள் தெரிவிக்கின்றன.இந்த உலகத்தில் பிறவி எடுத்தவர்கள் நல்ல வழியைப் பெறுவதற்கு துணையாக சிவமந்திரம் ,சிவதரிசனம் ,சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஆகும்.இவை மூன்றும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் மிகவும் இன்றியமையதாவை.

எல்லா உயிர்களுக்கும் முதன்மையானவன் சிவபெருமான் .எல்லாம் சிவமயம், எங்கும் சிவமயம்,எதிலும் சிவமயம் என்பதே ஆன்றோர் கொள்கை.

விருட்சங்கள்
==========
வரம் தருவதால் அது தாவரம் எனப்பட்டது.

விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் என்று பெயர்.

கோயில்களில் வளர்க்கப்படுகின்ற சில தெய்வீக விருட்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

*கொன்றை மரம்:*
சரக்கொன்றை என்ற பெயரில் அழைக்கப்படுகிற இந்த மரத்தை அமாவாசையன்று பூஜை செய்து வந்தால் துஷ்ட சக்திகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.

*மகிழ மரம்:*
திருவண்ணாமலை கோயில் மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெய்வ மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குழந்தைகள் அதன் காற்றைத் தொடர்ந்து சுவாசித்து வர அறிவு வளரும் என்று சொல்வர்.

*பன்னீர் மரம்:*
இந்தப் பன்னீர் மரம் திருச்செந்தூர் கோயில் மரம் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த மரத்தை வீட்டில் வளர்த்து அதன் அருகில் வாகனங்களை நிறுத்த, விபத்துகள் நடக்காமல் பாதுகாக்கப்படும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை மற்றும் திரயோதசி திதி நாளில் இந்த மரத்துக்குப் பூஜை செய்யலாம்.

*குருந்த மரம்:*
வாஸ்து குறைகளால் வீட்டில் அசம்பாவிதங்கள், தடைகள் ஏற்படுவதாக உணர்ந்தால் இந்த விருட்சத்தின் வேரை வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாளில் முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நடு அறையில் கட்டி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

*பும்ஸிக மரம்:*
சந்தான பாக்யத்தைத் தருகிற இந்த தெய்வ விருட்சத்தை வீட்டில் வளர்த்து வந்தால் பிள்ளைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. இதன் காற்று படும்படி மரத்தைச் சுற்றிவர வேண்டும்.

*அரிசந்தன மரம்:*
திருவோண நட்சத்திர நாளில் புதன், சனிக்கிழமைகளில் இந்த மரத்தை வழிபட்டுவர தீமைகள் விலகி, நன்மை சேரும் என்று சொல்வார்கள்.

*பரிசாதகம்:*
அனுமன் மரம், சிரஞ்சீவி மரம் என்ற பெயர்களுடைய இந்த மரத்தை வீட்டில் வளர்த்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது ஐதீகம். அமாவாசை மூல நட்சத்திர நாளில் இந்த மரத்தைக் குழந்தைகள் வழிபட்டு வர ஆயுள் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.

*மந்தார மரம்:*
வெள்ளை மந்தாரை என்ற மலரைத் தருகிற இந்த விருட்சத்தை செவ்வாய், சனி ஏகாதசி தினங்களில் வழிபட்டால் மனதில் எண்ணிய நல்ல செயல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கேட்டதைத் தரும் கல்பதரு என்றும் இந்த மரத்தைச் சொல்வார்கள்.

*புன்னை மரம்:*
திருமண விருட்சம் என்ற அபூர்வமான இந்த மரத்தைத் திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் வெள்ளி, பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றி வந்து வணங்கி, கையில் காப்புக் கட்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

*கருநெல்லி மரம்:*
திருமகள் வாசம் செய்வதாகக் கூறப்படும் இந்த மரத்துக்கு லட்சுமி மரம் என்ற பெயரும் உண்டு. வளர்பிறை அஷ்டமி, பூர நட்சத்திரம், பவுர்ணமி நாளில் வழிபட்டால் வறுமை நீங்கி, வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

*செண்பக மரம்:*
சௌபாக்ய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டிருக்கும் இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளங்கள் சேரும் என்பது ஐதீகம்.

*பராய் மரம்:*
மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு.

தொழிற் சாலை வைத்திருப்போர் முன் பகுதியில் இந்த மரத்தை வளர்த்தால் 5கிமீ சுற்றளவுக்கு இடி தாக்காது என்று சொல்வார்கள். திருச்சி திருப்பராய்த்துறை சிவாலயத்தில் தல விருட்சமாக இந்த ஒரு மரம் மட்டுமே உயிர்வாழ்கிறது. பராய் மரங்கள் நிறைந்திருந்ததால் திருப்பராய்த்துறை என்ற பெயர் நிலைத்தது.

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம்
வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு
செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாதகாலம்
கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.

வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.

திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும்
உறிஞ்சப்படுகிறது.

ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில்
நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை
உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும்
போது கருடன் தரிசனம் தருகிறது.

கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருடசேவையின்போது கல்
கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து
வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம்
இன்றும் நடைபெறுகிறது.

முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்
பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக
வருகின்றன.

திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு
தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம்
நடைபெற்றது.

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள
தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின்
நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில்
கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும்
அற்புதம் நடக்கிறது.

காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால்
நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார்
கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை
கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு
வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

திருப்பத்தூர் - தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த
நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7
புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்
விட்டு விட்டு சாலை அமைத்தனர்.

வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை
பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக
ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக்
கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை,
மகான்களின் ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம் செய்தவர்கள்
பெறுகிறார்கள்.....!!

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது 'ஓ' என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது 'ம்' என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.

வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.

ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,

"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)

"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941)

என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-

என்பவற்றாலும் அறியலாம்.

உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே 'ஓம்'. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.

இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:

அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.

இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

முதல் எழுத்து:

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "

என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "

என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,

அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,

அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "

என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.

ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"

- மச்சைமுனி தீட்சை ஞானம்

உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி

விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை

- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.

இதை விளக்கும்படி திருமூலர்,

ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.

ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.

அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.

குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.

ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.

போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.

அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.

வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.

"ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே."

ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.

விநாயகரின் தலை "ஓம்" உடன் பொருந்தியிருக்கிறது.. "ஓ"வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் "ஓம்" மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.

*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு போடுவது மட்டுமே! அதிர வைக்கும் உண்மைகள்!*

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம், பித்தம்,சிலேத்துமம்" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.
ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

*வாழ்க....நம் பண்பாட்டு பெருமை*



ஒரு பெரிய குழு, தாஜ் மஹாலை பார்க்க சென்று  இருந்தார்கள், பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள்.

தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா?

ஏன் இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள்.

சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.

ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது.

இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. உலகில் கிரேக்க, எகிப்து போன்ற பழம்கால நாகரீகங்களுக்கு முன்பே. ஸ்கேன் கருவி இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்ததில் இருந்து. தொலைநோக்கி இல்லாது உலகம் உருண்டை என்பது முதல் ஓசோன் படலம் வரை. முதன் முதலில் உலகிற்கு சொன்னது நமது பாரத தேச முன்னோர்கள். நமது முன்னோர்களின் அறிவு உலக அதிசயம் அல்லவா. இதை போல் இன்னொன்றை இனி உருவாக்க முடியாது என்று இருப்பவையே உலக அதிசயங்கள்.

ஆக தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் அதில் சந்தேகம் இல்லை. ஆனால்? அது ஒன்றும் அதிசயம் கிடையாது. ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதையமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரம்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும். அந்த நினைவு சின்னத்தின் பெயர் என்ன? தெரியுமா. ராணி கி வாவ். ஹிந்தியில் வாவ் என்றால் கிணறு என்று பொருள். கிணற்று வடிவத்தில் உள்ள கட்டிடங்கள் உலகில் மிக, மிக அபூர்வம். இந்தியாவில் கிணற்று வடிவில் உள்ள மிக பிரும்மாண்டமான அரண்மனை ராணி கி வாவ். இது எந்த அளவு பிரும்மாண்டமான கட்டிடம் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். இந்த கட்டிடத்தின் உள். 30 கிலோ மீட்டர் நீள சுரங்க பாதை. ஆங்கிலத்தில் Tunnel என்று சொல்வார்கள். இந்த ராணி கி வாவ் இன்றைய குஜராத் மாநிலத்தில் சித்பூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ள பதான் pathan என்கிற ஊரில் உள்ளது.

நம் நாட்டில் எத்தனையோ அதிசயங்கள் இன்னும் உண்டு...
🌹🌹்🌹🌹

"பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக
படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும்
என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்.

"மெல்லிசை மன்னர்கள்"
விஸ்வநாதன் - ராமமூர்த்தி, "கவியரசு" கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான
சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.

படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார்.

அதன்படி, அந்த
நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி
இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம்
தெரிவித்தார்.

வழக்கம்போல், "மெல்லிசை மன்னர்கள்" மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு
எழுதிக் கொடுத்தார்.

பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும்
விளங்கவில்லை. "இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது" என
குழம்பினார்கள்.

திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம்
தயங்கிக் கேட்டார்கள்.

கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே "பாடலைப் படித்துக் காட்டுங்கள்" என்றார்.

எம்.எஸ்.வி. உடனே," எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும்
கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும்
கொண்டாடுவோம்" என்று மெட்டில் பாடினார்.

கண்ணதாசன், "இன்னுமா புரியலை, பிறப்பால்
இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக
வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான "ஓம்" என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன்.

இப்பொழுது பாருங்கள்" என்று பாடிக் காட்டினார்.

எல்லோரும் கொண்டாடு " ஓம் "

எல்லோரும் கொண்டாடு  "ஓம் "

அல்லாவின் பெயரைச் சொல்லி

நல்லோர்கள் வாழ்வை எண்ணி

எல்லோரும் கொண்டாடு "ஓம் "

வருவதை வரவில் வைப்போ " ஓம் "

செய்வதை செலவில் வைப்போ "ஓம் "

முதலுக்கு அன்னை என்போ " ஓம் "

முடிவுக்கு தந்தை என்போ " ஓம் "

மண்ணிலே  விண்ணை கண்டு

இன்பம் காணு  "  ஓம்  "

எடுத்தவன்  கொடுக்க வைப் "ஓம் "

கொடுத்தவன்  எடுக்க. வைப்  "  ஓம்  "

இன்று  போல்  என்றும்  இங்கே

ஒன்றாய்  கூடு  "  ஓம்  "

என்று
முடித்ததுமே, "மெல்லிசை மன்னர்" அவரைக் கட்டிப்பிடித்து "கவிஞரே... இந்த உலகத்தில் உம்மை
ஜெயிக்க யாரய்யா இருக்கிறார்" என்று உச்சி முகர்ந்தார்..

கூடவே இயக்குனர்
ஏ.பீம்சிங்கும் தமக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று சந்தோஷக் கடலில்
ஆழ்ந்தார்.

அதே போல இந்தப் பாடல் முழுக்க
" ஓம்  " என வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து நம்மை திக்கு
முக்காட வைக்கும்.
அந்தப் பாடல்.

வரலாறு என்னவென்றே தெரியாமல் ஒரு 'ஸ் ' என்ற எழுதிற்க்காக போராடிய திராவிட அரசியல் நாடகம்....
தமிழ்நாட்டின் தலைநகர் "மெட்ராஸ்" என்று இருந்ததை சென்னை என்று தமிழில் மாற்றினார்களாம்.
இப்போது மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்கு "சென்னை" உயர்நீதி மன்றம் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்..
ஒரு தெலுங்கரின் பெயரை வைக்க..20 ஆண்டுகள் போராடி மாற்றியிருக்கிறார்கள். கேட்டால் தமிழ் பற்று என்கிறார்கள்....
""சென்னப்பா நாயக்கர்"" என்ற தெலுங்கு வியாபாரியிடம் நிலம் வாங்கி "சென்னைப் பட்டினம்" உருவாக்கப்பட்டது.
ஆனால் அதற்கு இந்தப் பகுதி •மதுர சேனர்• என்கிற குறுநில தமிழ் அரசரின் பெயரால் மதுரசேனர் பட்டினம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பட்டினம் என்றாலே கடல்புறம் என்று பெயர். இது மதுரராச பட்டினமாகி பின்பு மதராச பட்டினமாக மருவி, இறுதியில், வெள்ளையர்களின் உச்சரிப்பால் "மெட்ராஸ் பட்டினம்" என்று மருவியது.
வரலாறு தெரியாத தமது தமிழ் உணர்வாளர்களுக்கு வரலாற்றைவிட •ஸ்• மீதுதான் கோபம். அதனால் மதராஸ் என்கிற தமிழ் பெயரை எதிர்த்து சென்னப்பா (சென்னை) என்ற தெலுங்கரின் பெயரை தமிழ் என நினைத்துக் கொண்டு சென்னை என பெயர் மாற்றம் செய்ய போராடி வென்றிருக்கிறர்கள்..?
கடைசியாக மிஞ்சியிருந்த மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து
கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த
பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும்
செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக
ஒதுங்கி நின்றார்.அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து
விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு,
இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக்
கொண்டிருந்த அமைச்சர்
சங்கடப்பட்டார்."ஒரு மண்டலாதிபதி ஒரு
பரதேசியின் காலில் விழுவதா? அரச
பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?'
என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர்
சிரித்தார். அமைச்சரின் கேள்விக்குப்
பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.""ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு
உடனே வேண்டும். ஏற்பாடு
செய்யுங்கள் அமைச்சரே,''
என்றார்.
மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள்
நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது.
புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.
அன்றுதான் அவன் ஒரு புலியை
வேட்டையாடியிருந்தான்.
மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில்
விற்றுப்பொருள் கொண்டு
வாருங்கள்.'' என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச்
சென்றவன் திணறினான்.

ஆட்டுத்
தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை
வேடிக்கைத் தான் பார்த்தனர்.

கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.

மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்
வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை
வாங்க யாரும் முன்வரவில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச்
சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

""அப்படியானால் அதை யாருக்காவது
இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர்.
இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்...
""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்
போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு
கூடப் பெறாது.
இலவசமாகக் கூட
இதனை யாரும் தொடமாட்டார்கள்.
இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்.
ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.
அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன
தவறு? சொல்லப்போனால்
அதுதான் ஞான வாயிலின் முதல் படி!''
என்றார். தன் தவறை உணர்ந்தார்
அமைச்சர்..

நீதி: பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை.. ����

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.
இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.
அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.
தல வரலாறு :
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் "என்ன வேண்டும்?' என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. இவை "சப்தவிடங்கத்தலங்கள்' எனப்படுகின்றன. "சப்தம்' என்றால் ஏழு.
திருவாரூரில் "வீதி விடங்கர்', திருநள்ளாறில் "நகர விடங்கர்', நாகப்பட்டினத்தில் "சுந்தர விடங்கர்', திருக்குவளையில் "அவனி விடங்கர்', திருவாய்மூரில் "நீலவிடங்கர்', வேதாரண்யத்தில் "புவனி விடங்கர்', திருக்காரவாசலில் "ஆதி விடங்கர்' என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை "தியாகராஜர்' என்பர்.
வழிபாடு நேரம் :
காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்
காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
காலை 8 மணி - முதற் கால பூஜை
மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை
பகல் 12.30 மணி - அன்னதானம்
மாலை 4 மணி - நடை திறப்பு
மாலை 6 மணி - சாயரட்சை பூஜை
இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை
பிரதான மூர்த்திகள் :
திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர். அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள். இறைவன் சூரிய குலம்; அம்பிகை சந்திர குலம். வன்மீகரின் வலப்பக்கத்தில் - தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர்

குட்டிக் கதை:

காசி அரசனின் ரதம் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் மனநிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தான். எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில் பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினான்.

தனது மரணத்திற்கு முன்பு இந்த மனிதரிடம் ஆசுவாசமாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து ரதத்தை நிறுத்தி இறங்கினான். தனது மூடிய விழிகளைத் திறந்தார் அந்த மாமனிதர். தன் முன் நின்ற மன்னனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார்.

"நான் ஒரு அரசன். எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது. என் பிரச்னையை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்னை என்னவென்று அதற்கு முன்னர் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றான் மன்னன்.

மன்னன் சொல்வதையேல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த மனிதரின் பார்வை மன்னனின் கால்களையே உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த மனிதர் தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த மன்னன் சட்டென்று காலாட்டுவதை நிறுத்திவிட்டான்.

" மன்னனே உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?" என்று கேட்டார்.

தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான்.

"இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?" என்று கேட்டார்
அந்த மனிதர்.

" நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள்" என்று பதிலளித்தான் மன்னன்.

" நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது உனக்கே தெரியவரும்."

மன்னனின் இருண்ட மனதில் ஓர் ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியது.

மிகுந்த பணிவோடு, "நீங்கள் யார்?"
என்று கேட்டான் மன்னன்.

"புத்தர்" என்று பதில் வந்தது.

மன்னன் அவர் காலில் விழுந்து வணங்கினான். தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை என்பதை அறிந்த மன்னனின் தேர் இப்போது அரண்மனை நோக்கி ஓடத் தொடங்கியது.

KOHLI நம் நாட்டை
காப்பாற்றியதால்
இன்று முதல் 😄😄😄
அவர் நாட்டுகோலி
என்று அழைக்கபடுவார்
😂😂😂

1."நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"

"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"                                                                                                                                                                                                                                    
---------

2.என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார்  டாக்டர்...!""
"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு  போவட்டும்!"
---------------

3."இதென்ன... டாக்டரை வரச்சொல்லி போன் செய்தீங்க... ஒரு குடும்பமே  வந்து நிக்குதே?"
"அதான் சொன்னேனே.. இவர் குடும்ப டாக்டர்ன்னு...!
----------------

4.டாக்டர் : "ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே…. மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?"

சம்போ : "இல்ல டாக்டர்…. நர்ஸை நினைச்சுகிட்டேன்….!"
-------------

5."பர்ஸ் தொலஞ்சு போச்சு. டிபன் சாப்பிட முடியல."

"உனக்கேது பர்ஸ்?"

"எனக்கு டிபன் வாங்கித் தரேன்னு சொன்னவர் பர்சு தொலஞ்சு போச்சுன்னு சொல்றேன்..."
--------------

6.அவர் : இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது 
என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
அவர் : இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும்   செலவழிச்சுடுவான்.
---------------

7.திருடன் : (சிறுவனிடம்) தம்பி! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை  எங்கே வைப்பாங்க சொல்லு..

சிறுவன் : அடகுக் கடையிலே!
---------------

8.வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு  கஷ்டம் வந்திருச்சி!.
-----------------

9.உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்

பாமா : எதை வைத்து?

உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
-----------------

10.ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
-------------

#இந்த_கதையை_10_தடவை_படிச்சாலும்_திரும்ப_திரும்பவும்_சிரிப்பேன்!!

அவ்ளோ காமெடி!!

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது...

சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி யானையிடம் கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது....

அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை  இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்...?"

அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் ... "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."

1.ஆந்திர பிரதேசம் - தெற்கு பிராந்தியம்.
    சமஸ்கிருதத்தில் "ஆந்த்ரா" என்றால் தெற்கு என்று பொருள்.

2. அருணாச்சல பிரதேசம் - முதல்ஒளி மலைகள் பிராந்தியம்.
      சமஸ்கிருதத்தில் "அருணா" என்றால் "முதல்ஒளி" அல்லது "மூலஒளி" என்று பொருள். இந்தியாவல் முதல் சூர்ய உதயம் இங்கு நடைபெருவதால் இப்பெயர் ஏற்பட்டது.

3. அஸ்ஸாம் - நிலையற்ற
      சமஸ்கிருதத்தில் "அஸமா" என்றால் "நிலையற்ற" என்று பொருள்.

4. பிகார் - புத்தமடலாயம்
      சமஸ்கிருதத்தில் "விகார்" என்றால் " புத்தர் கோவில்" என்று பொருள். பிராகிருதத்தில் பிகார்.

5. சத்திஸ்கர் - 36 கோட்டைகள்.
     ஹிந்தியில் சத்திஸ் என்றால் 36.

6. கோவா - பசு மந்தை
      சமஸ்கிருதத்தில் "கோ" என்றால் "பசு".

7. குஜராத் - குஜ்ஜார் இன மக்களின் நிலம்.
      7ம் நூற்றாண்டில் குஜ்ஜார் மக்கள் இப்பகுதியை ஆண்டதால் இப்பெயர் ஏற்பட்டது. குஜ்ஜார் அல்லது கூர்ஜர என்றும் அழைக்கப்பட்டது.

8. ஹரியானா - விஷ்ணுபகவான் வந்த இடம்.
      மகாபாரத போர் நடந்த குருேக்ஷத்திரம் உள்ள பகுதி. அங்கு கிருஷ்ணர் வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.

9. ஹிமாச்சல் பிரதேசம் - பனிமலை பிராந்தியம்.

10. ஜம்மு & காஸ்மீர் -
      ராஜா ஜம்பு லோசன் ஆண்ட பகுதி ஜம்மு
      காஸ்யப ரிஷி வாழ்ந்த பகுதி என்பதால் காஸ்யப என்று அழைத்தனர். உருதுவில் காஸ்மிர் என்றனர்.

11. ஜார்கண்ட் - வனம் நிறைந்த மலைகள்.
     ஜார் - வனம்
     கண்ட் - மலைகள்

12. கருநாடகா - உயர்நில நாடு

13. கேரளா - சேர்க்கப்பட்ட நாடு.
      பரசுராமர் அம்பு எய்து கடலை வற்றச்செய்து உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது.

14. மத்ய பிரதேசம் - மத்திய அல்லது நடுவண் பிராந்தியம்.

15. மகாராஷ்ட்ரா - சிறந்த(அ)பெரிய நாடு.

16. மணிப்பூர் - நகை(அ)ஆபரணங்களின் நிலம்.

17. மேகலாயா - மேகங்களின் நிலம்.

18. மிஸோரம் - உயர்நிலத்தில் வாழும் மக்களின் பகுதி.

19. நாகலாந்து - நாகர் இன மக்களின் நிலம்.

20. ஒடிசா(அ)ஒரிசா - ஓட்ர இன மக்களின் நாடு.

21. பஞ்சாப் - ஐந்து நதிகள்

22. ராஜஸ்தான் - ராஜபுத்திர இன மக்களின் இடம்.

23. சிக்கிம் - புதிய அரண்மனை.
      திபெத்திய மொழியில் "சு" என்றால் "புதிய" என்றும் "க்யிம்" என்றால் அரண்மனை.

24. தமிழ்நாடு - தமிழர்களின் நாடு.

25. தெலுங்கானா - தெலுங்கர்களின் இடம்.

26. திரிபுரா - திரிபுர சுந்தரி என்னும் கடவுளின் பெயரால் ஏற்பட்டது.

27. உத்தர பிரதேசம் - வடக்கு பிராந்தியம்.

28. உத்திரகண்ட் - வடக்கு மலைகள்.

29. மேற்கு வங்கம் - வங்க இன மக்களின் இடம்.

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்; இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;

அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர், தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப் படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.

ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை 1 முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் "பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை"க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம்உதிக்கும் "அ" சுவாசிப்பு அமைப்பில் அடி 6வயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் "உ" மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் "ம" தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.

ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது. அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:

தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு "ஓ" என்று ஆரம்பித்து "ம்" என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர்  25 முதல்  40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார். அமைதியான ஒரு அறையில் 44.1ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,

1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.

2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.

3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256  ஹெர்ட்ஸீம், ஸ்வாதிஷ்டானத்தில்288  ஹெர்ட்ஸீம், மணிபூரத்தில் 320 
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம், சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது..

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்

ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை, சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.

இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம். அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டு பிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.

அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே. இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

ஓம் நமச்சிவாய.

மஹாசிவராத்திரி என்பது வரம் கிடைக்கும் இரவு. ஆம், இது நிஜம்தான்! வாழ்வை இன்னும் ஆழமாக, ஆனந்தமாக நீங்கள் வாழ்வதற்கு இயற்கையே வழங்கும் வரம் இது!

நம் வாழ்வை நாம் வாழும்விதம், உணரும்விதம், நம் செயல்திறன் என அனைத்தும் நம் சக்தியளவைப் பொறுத்துதான் அமைகிறது. மஹாசிவராத்திரி அன்று கண்விழித்து, முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால், நம் சக்திநிலை உயர்கிறது. இதனால் ஆனந்தமான வாழ்க்கை மட்டுமல்ல, வேண்டி விரும்புவோருக்கு "முக்தி"யும் கூட சாத்தியமே!

மஹாசிவராத்திரி அன்று நிலவும் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி இழுக்கிறது. அன்றைய இரவு முழுவதும், முதுகுத்தண்டை நேராக வைத்திருப்பது உயிர்சக்தி மேலெழும்ப உதவியாக இருக்கும். இல்லறம், துறவறம் என்ற வித்தியாசமின்றி, எல்லோருக்குமே இந்த இரவு நன்மை தரும். அவ்வளவு ஏன், நம் கலாச்சாரத்தில் பல யோகிகளும், முனிவர்களும் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். அத்தனை சக்திவாய்ந்த இரவு மஹாசிவராத்திரி!

சிவன் சக்திநிலையின் உச்சம். அந்த உச்சபட்ச சக்திநிலையை அடைய இந்த இரவு நமக்கு உதவுவதால், இது சிவராத்திரி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசைக்கு முந்தைய நாள், சிவராத்திரி. அந்த மாதத்திலேயே அதுதான் மிக இருளான இரவாக இருக்கும். ஒரு வருடத்தில் ஏற்படும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, பிற சிவராத்திரிகளை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கிறது. அதைத்தான் மஹாசிவராத்திரி என்கிறோம்.

இருள்
மஹாசிவராத்திரி என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. சிவராத்திரி, மஹாசிவராத்திரி... இவையெல்லாம் இருளைக் கொண்டாடுவதாகத்தான் இருக்கின்றன. இருள் என்ற வார்த்தையின் ஆழமான பொருள் "எது இல்லையோ அது." எது "இருக்கிறதோ" அது பிரபஞ்சம், அதுதான் படைத்தல். எது "இல்லையோ" அது சிவன்.

கண்திறந்து சுற்றிலும் பார்க்கும்போது, படைப்பின் பல அம்சங்கள் உங்களுக்குத் தென்பட்டால் உங்கள் கண்ணோட்டம் மிகக் குறுகியதாக் இருக்கிறதென அர்த்தம். உங்கள் நோக்கு உண்மையிலேயே விரிந்திருந்தால், இந்த பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் பரந்து விரிந்த வெறுமையை அல்லவா பார்ப்பீர்கள்! வானில், மிகச்சிறிய புள்ளிகளாகத் தெரியும் ஆகாயவெளி மண்டலங்கள்தான் அதிகமான கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அவற்றைத் தாங்கி இருக்கும் பரந்த வெறுமை பலரின் கவனத்திற்கு வருவதில்லை.

இந்தப் பரந்துவிரிந்த எல்லையற்ற வெறுமையைத்தான் சிவன் என்று சொல்கிறோம். இன்றைய நவீன விஞ்ஞானமும் அனைத்துமே ஒன்றுமில்லாததிலிருந்து பிறந்து, மீண்டும் அதற்குள்ளேயே செல்கிறது என்று நிரூபித்துள்ளது. இதே அடிப்படையில்தான் இந்தப் பரந்த வெறுமையை, ஒன்றுமற்ற தன்மையை, "மஹாதேவன்" என்று குறிப்பிடுகிறோம்.

எங்கும் பரவியிருக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் இருள் அல்லது ஒன்றுமற்ற வெறுமை மட்டும்தான். பொதுவாக நல்வாழ்வை வேண்டும் மக்கள், தெய்வீகத்தை ஒளியாகப் பார்கிறார்கள். ஆனால், நல்வாழ்வையும் தாண்டி கரைந்து போக விரும்பும் மக்களுக்கு, அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளும் இருளே தெய்வீகம்.

உலகின் முதிர்ச்சியற்ற மனங்கள் தான் இருளை தீயசக்தியாக சித்தரிக்கின்றன. உண்மையிலேயே "தெய்வீகம்" என்பது எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றென்றால், இயல்பாகவே நீங்கள் தெய்வீகத்தை இருளின் வடிவமாகத்தான் காணமுடியும். ஏனெனில், இருள்தான் எங்கும் பரவியிருக்கிறது. அது நிலைத்திருக்க யாரின் உதவியும் அதற்குத் தேவையில்லை.

"ஒளி" என்பது தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் ஒரு எரிபொருளில் இருந்து வருகிறது. அதற்கென்று ஒரு தொடக்கமும், முடிவும் இருக்கும். எரிபொருள் தீரும்போது ஒளியும் இல்லாமல் போகும். ஆனால், இருளுக்கு எந்த மூலமும் கிடையாது; அதற்கு அதுதான் மூலம். அது எங்கும் நிறைந்திருக்கும் தன்மை கொண்டது.

சிவன் எனும் இந்தப் பிரபஞ்சத்தின் பரந்துவிரிந்த வெறுமையின் மடியில்தான் இம்முழு படைப்பும் நிகழ்ந்திருக்கிறது. இந்த அருள் மடியை, சிவனை நாடித்தான் நம் கலாச்சாரத்தின் பிரார்த்தனைகள் அமைந்தன. நம் பழங்காலப் பிரார்த்தனைகள் பாதுகாப்பு கருதியோ, வளமான வாழ்க்கை நாடியோ செய்வதாக இருக்காது. "அனைத்திலும் உயர்ந்தவனே! என்னை அழித்து விடு! அப்போதுதான் நான் உன்னைப் போலாக முடியும்" என்பதுதான் நம் பிரார்த்தனையாய் இருந்தது.

எனவே, மாதத்தின் இருளான நாளாகிய இந்த சிவராத்திரி, ஒருவர் தன்னுடைய கட்டுப்பாடுகளை எல்லாம் கரைத்துவிட்டு, தன்னுடைய உருவாக்கத்துக்கு விதையான, படைப்பின் மூலமான, எல்லையற்ற தன்மையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பு!

விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி ஒரு மனிதரின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு காரணமாக, அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்தால், அவருக்குள் இயற்கையாகவே ஆன்மீகம் வளரும்

சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை, 
மதம் என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து வெளிப்படுத்திய ஆய்வு செய்யப்படவேண்டிய கருத்துக்களைத் திரித்து ஒரு சமய சட்டத்திற்கு மட்டுமே உரியதாக மாற்றிவிட்டனர்.

அணுத் துகள்கள் மற்றும் பிரஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் அவர்கள் தத் தம் நூல்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ள்ளனர். இவற்றை நாம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் சமயம் சார்ந்த கோட்பாடுகளில் இவர்களைக் கட்டிப் போடுவது அழகல்ல.

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர் வீச்சுக்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

இத்தகைய கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்த சித்தர்கள் தம் யோக வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து வெளிப்படுத்தினார்கள்.

அவர்களின் அன்றைய வானவியல் கோட்பாடுகளை ஆய்வு செய்தால் அது இன்றைய விஞ்ஞானத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது.

இன்றைய விஞ்ஞானம் பெரிதும் நம்பியிருக்கும் அனைத்து சாதனங்களும் இந்த பிரஞ்சத்திலிருந்து எடுக்கப்பட்டவையே தவிர அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல.
அவர்கள் சிந்தனை உட்பட அனத்தும் அவர்களால் இயக்கப்பட்டதல்ல.

மஹா சிவராத்திரி:
சிவன்–இதில் மறைந்துள்ள ஒவ்வொரு எழுத்தின் ஒலி ஓசைக்கான உண்மை விளக்கம் வேறு ஆனால் இவற்றை ஒரு சமயம் சார்ந்த விளக்கமாக மாற்றி மதங்களுக்கிடையே விவாதம் செய்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் வல்ல இறைசக்தி ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் போது பிற மதங்களின் கோட்பாடுகளில் மட்டும் ஏன் இருக்க முடியாது?
இது நம் சிற்றறிவைதான் குறிக்கிறது. இவையனைத்தையும் கடந்தவர்கள் தான் சித்தர்கள்.

மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.

அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.

மனிதன் சமநிலை தவறாத வண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமியை கவனியுங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும் சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு...

பெளர்ணமி நல்ல நாள் என திருமணம், தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது.

அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன் சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி, திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.

ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும்.

சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.

உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சிவகங்கையின் சிறப்பு:
தமிழில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தத்தை தெரிந்து உருவாக்கியவர்கள்தான் சித்தர்கள். தமிழிலுள்ள உயிரெழுத்துக்கள் 12ம் மெய் எழுத்துக்கள் 18 உயிரும் மெய்யும் மற்றும் இவை இரண்டும் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஆகியவற்றின் பிறப்பிடங்கள் நம் உடலில் எங்கிருந்தெல்லாம் பிறக்கின்றன என்பதை ஆய்வு செய்து அதனை மொழிவடிவமாக்கி உருவாக்கியவர்கள் நம் சித்தர்கள்.

மஹா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட கிரகங்களின் மற்றும் பேரண்டங்களின் கதிர்வீச்சுக்கள் இந்த பூமி முழுவதும் வியாபித்துக் காணப்படும், அதே சமயம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியில் இருந்து நீரூற்று பிறப்பெடுத்து ஓடும். இந்த நீரூற்றுதான் சித்தர்கள் கூறும் முப்பு, அண்டக்கல் என்றழைக்கப்படும் அனைத்தையும் மாற்றியமைக்கப் பயன்படும் திரவியம். இதைப் பயன்டுத்தி் ஒருவரால் அனைத்தையும் மாற்றியமைக்க முடியும்.

இரும்பையும் தங்கமாக மாற்ற முடியும் என்பதால் இதை கண்டறிய ஒரு கூட்டமே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் இது அசாத்திய யோக சாதனை பெற்றவரால்தான் அதன் இருப்பிடம் அறிய முடியும்.

இத்தகைய சிறப்புபெற்ற ஊற்று பிறப்பெடுப்பதாலே அவ்விடத்திற்கு சிவகங்கை எனப் பெயர் சூட்டினர்.
இதுமட்டுமல்லாது அன்றைய தினம் இப்பூமி முழுவதும் பரவி இருக்கும் அற்புத சக்தியை சித்தர்கள் தியானத்தின் மூலம் தங்களின் ஆத்ம வளர்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.

அதாவது அன்றைய நாளில் அவர்கள் செய்யும் தியானமானது, மூன்று மாதங்கள் ஒருவர் இடைவிடாது தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுக்கும். இது சித்தர்களின் சாதனை முறை. இதையே நம் முன்னோர்கள் அன்றைய தினம் கண் விழித்து இறைவனை துதி பாட வேண்டும் என்றுக் கூறினார்கள்.ஆனால் அவர்கள் இங்கு குறிப்பிட்டது புறக்கண் விழிப்பையல்ல, அகக்கண் விழிப்பு நிலையுடன் கூடிய தியான நிலையைதான்.

இனவே நாமும் இப்புனித தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலைக் கிரகித்து மகிழ்வுடன் வாழ்வோமாக..

"அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின் 
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே. "
-திருமூலர்