Designed by Enthan Thamizh

மஹா_சிவராத்திரி அறிவியல் விளக்கம்:

சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை, 
மதம் என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து வெளிப்படுத்திய ஆய்வு செய்யப்படவேண்டிய கருத்துக்களைத் திரித்து ஒரு சமய சட்டத்திற்கு மட்டுமே உரியதாக மாற்றிவிட்டனர்.

அணுத் துகள்கள் மற்றும் பிரஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் அவர்கள் தத் தம் நூல்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ள்ளனர். இவற்றை நாம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் சமயம் சார்ந்த கோட்பாடுகளில் இவர்களைக் கட்டிப் போடுவது அழகல்ல.

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர் வீச்சுக்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

இத்தகைய கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்த சித்தர்கள் தம் யோக வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து வெளிப்படுத்தினார்கள்.

அவர்களின் அன்றைய வானவியல் கோட்பாடுகளை ஆய்வு செய்தால் அது இன்றைய விஞ்ஞானத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது.

இன்றைய விஞ்ஞானம் பெரிதும் நம்பியிருக்கும் அனைத்து சாதனங்களும் இந்த பிரஞ்சத்திலிருந்து எடுக்கப்பட்டவையே தவிர அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல.
அவர்கள் சிந்தனை உட்பட அனத்தும் அவர்களால் இயக்கப்பட்டதல்ல.

மஹா சிவராத்திரி:
சிவன்–இதில் மறைந்துள்ள ஒவ்வொரு எழுத்தின் ஒலி ஓசைக்கான உண்மை விளக்கம் வேறு ஆனால் இவற்றை ஒரு சமயம் சார்ந்த விளக்கமாக மாற்றி மதங்களுக்கிடையே விவாதம் செய்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் வல்ல இறைசக்தி ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் போது பிற மதங்களின் கோட்பாடுகளில் மட்டும் ஏன் இருக்க முடியாது?
இது நம் சிற்றறிவைதான் குறிக்கிறது. இவையனைத்தையும் கடந்தவர்கள் தான் சித்தர்கள்.

மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.

அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.

மனிதன் சமநிலை தவறாத வண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமியை கவனியுங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும் சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு...

பெளர்ணமி நல்ல நாள் என திருமணம், தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது.

அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன் சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி, திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.

ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும்.

சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.

உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சிவகங்கையின் சிறப்பு:
தமிழில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தத்தை தெரிந்து உருவாக்கியவர்கள்தான் சித்தர்கள். தமிழிலுள்ள உயிரெழுத்துக்கள் 12ம் மெய் எழுத்துக்கள் 18 உயிரும் மெய்யும் மற்றும் இவை இரண்டும் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஆகியவற்றின் பிறப்பிடங்கள் நம் உடலில் எங்கிருந்தெல்லாம் பிறக்கின்றன என்பதை ஆய்வு செய்து அதனை மொழிவடிவமாக்கி உருவாக்கியவர்கள் நம் சித்தர்கள்.

மஹா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட கிரகங்களின் மற்றும் பேரண்டங்களின் கதிர்வீச்சுக்கள் இந்த பூமி முழுவதும் வியாபித்துக் காணப்படும், அதே சமயம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியில் இருந்து நீரூற்று பிறப்பெடுத்து ஓடும். இந்த நீரூற்றுதான் சித்தர்கள் கூறும் முப்பு, அண்டக்கல் என்றழைக்கப்படும் அனைத்தையும் மாற்றியமைக்கப் பயன்படும் திரவியம். இதைப் பயன்டுத்தி் ஒருவரால் அனைத்தையும் மாற்றியமைக்க முடியும்.

இரும்பையும் தங்கமாக மாற்ற முடியும் என்பதால் இதை கண்டறிய ஒரு கூட்டமே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் இது அசாத்திய யோக சாதனை பெற்றவரால்தான் அதன் இருப்பிடம் அறிய முடியும்.

இத்தகைய சிறப்புபெற்ற ஊற்று பிறப்பெடுப்பதாலே அவ்விடத்திற்கு சிவகங்கை எனப் பெயர் சூட்டினர்.
இதுமட்டுமல்லாது அன்றைய தினம் இப்பூமி முழுவதும் பரவி இருக்கும் அற்புத சக்தியை சித்தர்கள் தியானத்தின் மூலம் தங்களின் ஆத்ம வளர்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.

அதாவது அன்றைய நாளில் அவர்கள் செய்யும் தியானமானது, மூன்று மாதங்கள் ஒருவர் இடைவிடாது தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுக்கும். இது சித்தர்களின் சாதனை முறை. இதையே நம் முன்னோர்கள் அன்றைய தினம் கண் விழித்து இறைவனை துதி பாட வேண்டும் என்றுக் கூறினார்கள்.ஆனால் அவர்கள் இங்கு குறிப்பிட்டது புறக்கண் விழிப்பையல்ல, அகக்கண் விழிப்பு நிலையுடன் கூடிய தியான நிலையைதான்.

இனவே நாமும் இப்புனித தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலைக் கிரகித்து மகிழ்வுடன் வாழ்வோமாக..

"அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின் 
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே. "
-திருமூலர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக