Designed by Enthan Thamizh

சிரிப்புத் துளிகள்

#இந்த_கதையை_10_தடவை_படிச்சாலும்_திரும்ப_திரும்பவும்_சிரிப்பேன்!!

அவ்ளோ காமெடி!!

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது...

சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி யானையிடம் கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது....

அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை  இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்...?"

அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் ... "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."

0 கருத்துகள்:

கருத்துரையிடுக