மேகாலயாவில்
மேகமானாய்.
கடைசி மூச்சிலும்
கல்வி உரைத்தாய்;
நெஞ்சத்தில் நீயில்லை;
எங்கள் நெஞ்சமாக ஆனாய்.
தன்னலம் மறந்தாய்;
தாயகத்தின் தவப் புதல்வன் ஆனாய்.
அக்கினிச் சிறகு கொண்டாய்;
அணு ஆராய்ச்சி நாயகன் ஆனாய்.
தூக்கம் தொலைத்து உழைத்தாய்;
எங்களை துக்கத்தில் ஆழ்த்தினாய்.
கனவுகள் காணச் சொன்னாய்;
கண்ணீரில் ஆழ்த்தி விட்டாய்.
கண்ணீரில் தேசம் மூழ்கியது - அது
கலாமுக்காக இன்னும் அழுகிறது.
இருபத்தியொரு குண்டுகள் முழங்கட்டும்;
அதில் ஒன்றேனும்
அந்த எமனை துளைக்கட்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக