Designed by Enthan Thamizh

அழகணின் அழகாண செயல்

இப்படியும் ஒரு நட்பு....!

அது ஒரு மனநல மருத்துவமனை.... அங்கே அழகன் என்ற பெயருடைய ஒருவர் சிகிட்சைப் பெற்று வந்தார்.

   ஒருநாள் புத்திரன் என்ற சக மனநோயாளி கிணற்றில் குதித்து விட்டதால், தன் உயிரைத் துச்சமென நினைத்துக் கிணற்றில் குதித்து அந்த நோயாளியைக் காப்பாற்றி விட்டார் அழகன்.

   அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவி விட்டது. அதைக் கேள்விப்பட்ட மருத்துவர் அழகனை அழைத்து, "உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்" என்றார்.

   உடனே அழகன், "சொல்லுங்க டாக்டர்" என்றான்.

   "நீ உனது நண்பனைக் காப்பாற்றியதால் நீ சுகமடைந்து விட்டாய் என்று நினைக்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம். இது நல்ல செய்தி" என்றார்.

  பிறகு, "துக்கமான செய்தி நீ கிணற்றில் குதித்துக் காப்பாற்றிய உன் நண்பன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டான்" என்று டாக்டர் சொல்லி முடித்ததும் அழகன் ஆர்வமுடன் சொன்னான்,

  "டாக்டர்.... அவன் சாகவில்லை. கிணற்றில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றைக்கட்டி மரத்தில் தொங்கவிட்டு இருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகி விடுவான்" என்றான்.

  டாக்டர் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.😃😃😃

0 கருத்துகள்:

கருத்துரையிடுக