1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.
*
2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.
*
3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
*
4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
*
5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.
*
6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.
*
7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.
*
8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.
*
9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.
*
10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
*
11. ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு பெற்று விட்டான் என்பதே.
*
12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள்.
*
13. பிறரைப் பாராட்டுங்கள், பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள், மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள், அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.
*
14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல, அறத்தின் காவலன்.
*
15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.
*
16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
*
17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
*
18. எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.
*
19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.
*
20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.🔚
0 கருத்துகள்:
கருத்துரையிடுக