Designed by Enthan Thamizh

மதுரைக்காரய்ங்கனா இப்படித்தான் இருக்கணும

மதுரைக்காரய்ங்கனா இப்படித்தான் இருக்கணும்னு சில வரைமுறைகளை நாமளே வகுத்து வெச்சிருக்கோம். என்னதுனா...

மதுரையில் லோ-ஹிப், வீ-நெக் போடுற ஆம்பளைப் பயலுக ரொம்ப கம்மி. காட்டன் பேன்டுக்கு முக்கால்வாசி மடிச்சுவிட்ட முழுக்கைச் சட்டை. இல்லைனா, கட்டம் போட்ட லுங்கிக்கு கோடு போட்ட சட்டை. கேட்டால், 'எங்க ஏரியா நாயி வெறியாகிடும் பாஸ்'னு பொதுநலத்தோடு பேசுவாய்ங்க.

கெத்து காட்டுறதுக்கு டிஜிட்டல் வாட்ச், லெதர் பொருட்கள்லாம் போட மாட்டாய்ங்க. கழுத்தை ஒட்டினாப்ல இனிஷியல் போட்ட தங்க செயின். இடது கையில தங்க வாட்ச், வலது கையில தங்க பிரேஸ்லெட்னு 'நாங்க தங்கமானவய்ங்க'ங்கிறதை நிரூபிப்பாய்ங்க.

டூவீலர்னா ஒன்னு ஸ்ப்லெண்டர், இல்லைனா புல்லட். 'அப்பத்தாவால அப்பாச்சியில் ஏற முடியாது ஜி'னு தன்னோட பைக் ஆசையைக்கூட பாசத்துக்குக்காக பாய்ஸன் கொடுத்துக் கொன்ருவாய்ங்க.

ஸ்பைக், க்ரஞ்ச் ஹேர் ஸ்டைல் வெச்சிருக்கிற ஒருத்தனை மதுரையில பார்த்தீங்கனா, அவன் டவுன்ஹால் ரோட்டுல செருப்புக்கடை வெச்சிருக்கிற சேட்டுப் பையன்னு புரிஞ்சிக்கணும். ஏன்னா, மதுரைக்காரய்ங்க பெரும்பாலும் அட்டாக்தான் வெட்டிருப்பாய்ங்க. ஹேர்ஸ்டைலில்கூட அட்டாக், அதிரடி, அடிதடினு இருந்தாதான் அவிங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

போர் அடிச்சா அழகர் கோயில். பெரிய பட்ஜெட்னா குற்றாலம், கொடைக்கானல். கோவாவுக்குப் போக பல வருஷமா திட்டம் மட்டுமே போட்டுக்கிட்டு இருப்பாய்ங்களே தவிர, கடைசி வரைக்கும் போகவே மாட்டாய்ங்க. ட்ரீட்னா 'பீட்சா,பர்கர்,டக்கிலோ' பக்கமெல்லாம் போகவே மாட்டாய்ங்க. மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி கிரேவி, மிலிட்டரி சரக்குனு முடிஞ்சுடும். அதுலேயும் வெட்ட வெளியில் அடுப்பை மூட்டி இவிய்ங்களே சமைச்சு சாப்பிடுவாய்ங்க. ஏன்னா ஹோட்டல் சாப்பாடு ஒடம்பைக் கெடுத்துடும்பே.

ஊர்த் திருவிழா, ஏரியா திருவிழானு எது வந்தாலும் 'கபகபகுபுகுபு பாய்ஸ்', 'அடங்கா சிங்கங்கள்', 'பாண்டி, அழகர் நினைவு குழு'னு ஒரே மாதிரி ஃப்ளெக்ஸ் அடிச்சுட்டுதான் அடுத்த வேலையைப் பார்ப்பாய்ங்க. வேட்டியை மடிச்சுக் கட்டின மாதிரி, வாயில அரிவாளை வெச்ச மாதிரி போஸ் கொடுத்து பேனர் வைப்பாய்ங்க. அதை அடுத்த வருஷம் வரைக்கும் எடுக்கவே மாட்டாய்ங்க. நல்ல விஷயம் நாலு பேருக்குத் தெரியணும்னு ஆசைப்படுறவய்ங்க மதுரைக்காரய்ங்க.

அறிமுக ஹீரோவுக்குக்கூட அலப்பறையா பேனர் வைக்கிறவய்ங்க மதுரைக்காரய்ங்கதான். படம் நல்லாயிருந்தா 'தரமா இருக்கு' நல்லா இல்லைனா, 'வெளங்கலை'னு சொல்லிட்டு அடுத்தப் படத்துக்கு ரெடி ஆகிடுவாய்ங்க.

காதல் தோல்விப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்களைத்தான் பெரும்பாலும் ரிங்டோனா வைப்பாய்ங்க. பஸ்ஸுக்குள்ள பாட்டைப் போட்டு அலற விடுவாய்ங்கள்ல.

'மதுரைக்காரன் என்னைக்குடா கட்டிங்கோட நிப்பாட்டிருக்கான்?', 'ஆஃப் பாயிலை ஒரே வாயில விழுங்குறவன்தான்டா மதுரைக்காரன்', 'புல்லட்டுக்கு சென்டர் ஸ்டாண்டு போடுறவன்தான்டா மதுரைக்காரன்', 'தோசைக்கே இட்லிப் பொடி வெச்சு சாப்பிடுறவன்தான்டா மதுரைக்காரன்'னு எதுக்கெடுத்தாலும் பெருமைப்படுவாய்ங்க. ஏன்னா, 'என் ஊர் என் பெருமை'னு பெருமிதத்தோடு வாழ்றவங்க மதுரைக்காரய்ங்க.

சொல்றதுக்கு இன்னும் நிறைய இருக்கு. இருந்தாலும், மதுரைக்காரய்ங்க விளம்பரம் பிடிக்காதவய்ங்க. அதான் பார்க்கிறேன். ஹிஹிஹி!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக