Designed by Enthan Thamizh

இன்று அமெரிக்கா தொலைக்காட்சியில் ஒரு அதிசய மற்றும் அதிர்ச்சியான செய்தியும் கூட..

NASA-விஞ்ஞானிகள் நிலவை ஆராய்ந்துகொண்டிருந்த போது அதில் ஒரு மனித உடல் இருப்பதற்கான அறிகுறியை கண்டார்கள்..

இன்னமும் சற்று விரிவாக ஆராய்ந்ததில் அது மனித உடல்தான் என உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்... அதன் வயது 2 நூற்றாண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும் தெரிகிறது

இந்த செய்தி அனவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது..

உடனே உலக விஞ்ஞானிகள் அனைவருக்கும் தகவல் பரிமாறப்பட்டிருக்கிறது..

நிலவில் தண்ணீர் இருந்ததை உலகிற்கு முதன்முதலில் கண்டுபிடித்து அதை உறுதி செய்த இந்திய விஞ்ஞானிகளின் பெருமுயற்சியால் இறந்த உடல் நிலவில் இருந்ததற்கான புதிர் விடுபட்டிருக்கிறது.

இறந்து கிடந்த உடல் ஒரு வயதான பெண்மணியின் உடல் என இந்திய விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

மனிதர்களே நிலவுக்கு போக பிரம்மபிரயத்தனம் பண்ண‌வேண்டியிருக்கும் இந்த காலத்தில் இந்த பாட்டி எப்படி நிலவுக்கு போனார்கள் என்று விஞ்ஞானிகள் மூளையை கசக்கிக் கொண்டிருக்கையில்.

அனைவரையும் உலுக்கிய அந்த உண்மை புலப்பட்டது..

அந்தப் பாட்டி வேறு யாருமல்ல...  நிலவில் வடை சுட்டுக்கொண்டிருந்த ஆயா பாட்டிதான் அது..

இதைக்கேட்டவுடன் காலையிலிருந்தே மனசு சரியில்லை...

....வடை போச்சே. :P :P

அகரத்தில் ஓர் இராமாயணம் இராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.

"இதுவே தமிழின் சிறப்பு."

அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான். அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம். அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன்? அவனே அறிவழகன், அன்பழகன், அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்! அயோத்தி அடலேறு, அம்மிதிலை அரசவையில் அரசனின் அரியவில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை அடைந்தான் . அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்தராமனுக்கே! அப்படியிருக்க அந்தோ ! அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள். அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன் , அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான் அங்கேயும் அபாயம்! அரக்கர்களின் அரசன், அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான் அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர. அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையை அடைந்தான். அசோகமரத்தின் அடியில் , அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடிபணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான் அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன. அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன். அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின் அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம், அசாத்தியமான அதிசாகசம். அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி , அதிசயமான அணையை அமைத்து, அக்கரையை அடைந்தான். அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான். அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள். அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான் அண்ணல் . அனந்தராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே. 👍🏼

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள் :

சென்னை: -
சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ் :-
முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் -
கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்:
மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது

மற்றொரு பெயர் காரணம்

மா அம்பலம் :-
ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம் :
சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:-
ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:-
ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு:
மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

எழுமூர்:
இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்:
பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை :
சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை :
பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம்: புரசைப் பாக்கம்:
புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை:
ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு :
செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.

பெருங்களத்தூர் :
பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்:
பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பரங்கிமலை:-
பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.

பூந்தமல்லி :
பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.

நந்தம்பாக்கம்:
நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்:
ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்:
முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.

குன்றத்தூர்:
குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).

ஸ்ரீ பெரும் பூதூர்:
அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.

சுங்குவார் சத்திரம்:
பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.

நந்தனம்:-
மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி :
திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.

மாதவரம்:
மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்:
முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல் :
ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......

முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.

முகலிவாக்கம் :
கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்

தமிழன் என்ன கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்................பகிருங்கள் நண்பர்களே
நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்................
பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு......!

கல்லணை :-
உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-
கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா?

அங்கோர்வாட் கோயில் :-
உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க  சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும், முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-
எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் :-
கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் :-
5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது. ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது. பன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.
2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர். இது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை
...அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-ஆசான் திருமூலர்.
சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.

சித்தர்கள் :-
சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள். நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள். அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம். தீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர். இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.

வானியல் அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.

பூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-
9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-
கடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும்
குடவோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே. வெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.
அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள். நாம் இவற்றை பாதுகாத்து அழியாமல் காப்பாற்றினாலே  போதும். இவையணைத்தும் நான் படித்து ரசித்ததையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன். நிறைய பகிருங்கள்.

நமது வரலாற்றை அறிய முயற்சிப்பதும், அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிப்பதும் முன்னோர்க்கு தமிழராகிய நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
வணக்கம்.

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.

ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.

அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.

பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.

ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

ஒருநாள்...

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.

எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.

அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.

அவளோ நீயோ சாகப்போகிறாய்.

நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.

அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ''

நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.

உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் '' என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.

நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.��

நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.

நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
����������
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.������

அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.

அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.��

நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

Father is flying a kite. His son is watching him carefully. After some time son says "Dad. Because of the string the kite is not able to go any further higher."Hearing this, the father smiles and breaks the string. The kite goes higher and then shortly after that, it comes and falls on the ground. The child is very dejected and sad.

The father sits next to him and calmly explains: "Son, in life we reach a certain level and then we feel that there are certain things that are not letting us grow any further like Home, Family, Culture etc. We feel we want to be free from those strings which we believe are stopping us from going higher. But, remember son."That our home , family and culture are the things that will help us stay stable at the high heights . If we try to break away from those strings our condition will be similar to the kite."we'll fall down soon..

Moral: "Never go away from home culture, family, and relationships as they help keep us stable while we are flying high."

Life is Beautiful

*நேர்மையாக இருப்பது. அதே நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது.

* பொது இடங்களில் தன்னால் யாருக்கும் இடையூறு வந்து விடக்கூடாது என்ற விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

* பொது இடங்களில், பயணங்களில் செல்போன் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

* தங்கள் தாய்மொழியை அதிகமாக நேசிக்கிறார்கள். தாய்மொழியில் மட்டுமே குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறார்கள்.

* ரயில், பேருந்துகளில் கூட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாருடைய கட்டளையின்றியும் தானாகவே வரிசையில் நின்று, பயணிகள் இறங்கியவுடன் ஒவ்வொருவராக ஏறுகிறார்கள்.

* வெளியூர் மக்கள் உதவி கேட்கும்போது மனமுவந்து செய்கிறார்கள். உதாரணமாக ஏ.டி.எம் செல்ல வழி கேட்டால் அந்த இடத்திற்கே அழைத்து செல்கிறார்கள்.

* பெரும்பாலும் உணவை வீட்டிலேயே தான் சமைத்து சாப்பிடுகிறார்கள். அளவாகவே உண்கிறார்கள். உலகிலேயே ஜப்பானியர்கள் தான் மிகவும் பிட்டாக, தொப்பையின்றி இருப்பவர்கள். மேலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் இவர்களே.

* எஸ்கலேட்டர், லிஃப்டு, படிக்கட்டுகளில் போகும் போது ஓரமாக நின்று, அவசரமாக செல்வோருக்கு எப்போதும் வழிவிட்டு செல்கிறார்கள்.

* அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வார்கள். பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள். எப்போதுமே சுறுசுறுப்புடன் செயல்படுவாகிறார்கள்.

* அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் இருகிறார்கள். 12 மணி நேரம் வேலை செய்தாலும் சளைக்காமல் வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பணியை நேசித்து செய்கிறார்கள்.

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

" உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ".

நலம் உடன் வாழ்வோம்.

வேறு ஏதேனும் இருந்தால் கீழுள்ள பகுதியில் பதிவேற்றம் செய்யுங்கள்

Two well dressed lawyers went to an expensive restaurant...

Ordered 2 drinks
and then got sandwiches from their briefcases and began to eat them...
Waitress: Sorry Sir !!! But you can't eat your OWN food here... Its against the rules ...

The lawyers quietly looked at each other and
EXCHANGED their sandwiches & continued their meals !!!

( You can trust lawyers to find loopholes in any rules)...👏👏👏👏🎓
😜😝👆👆
----

MARWADI opened Sweets shop & gave an advertisement...!
   
Helper required................

Qualification:-  Must have diabetes!
😎😁😂
-----
JUDGE: What is the proof that you were not over speeding?

MAN: My lord, I was going to
my father in-law's house to bring back my wife.

JUDGE: Case dismissed😝😝

இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!

1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள்.

2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.

3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.

4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.

5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.

6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.

7. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி..

8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி.

9. ஹாட் மெய்ல்"ஐ (HOT MAIL) உருவாக்கியவரும் ஸ்தாபித்தவருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர்.

10. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.

11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.

12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.

13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.

14. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987"ல் அறிவித்தது.

15. நுண் கணிதம் (CALCULUS) உருவாக்கியது இந்தியா.

16. திரிகோணமிதி (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா.

17. கூகுள்"ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.

18. ஹெச்.பி"யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாலர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்.

19. இன்று உலகில் உள்ள கணிணியில் பயன்படுத்தக்கூடிய பென்டியம் சிப் (PENTIUM CHIP) உருவாக்கிய வினோத் தாம் ஒரு இந்தியர்.

20. பை (PI) 3.14 "க்கான கணக்கீட்டை உருவாக்கிய புத்யானா (BHUTHYANA) ஒரு இந்தியர். ஐரோப்பிய கணக்கியல் உருபவாக்கத்திற்கு முன்பு 6"ஆம் நூற்றாண்டுகளிலேயே இதற்கான விளக்கத்தை உருவாக்கியவர்.

21. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 5600 செய்தித்தாள்களும் 3500 வார மற்றும் மாத இதழ்களும் 1 கொடியே 20 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.

22. 2600 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உடலுருப்பு, எலும்பு முறிவு, சிறிநீரக கற்கள் மற்றும் தலையின் மண்டை ஒட்டை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதா (SUSRUDHA) ஒரு இந்தியர்.

23. உலகிலேயே விலை உயர்ந்த 700 கோடி (70 MILLION POUNDS) ரூபாய் மதிப்புள்ள வீட்டை இங்கிலாந்தில் வைத்திருக்கும் இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ஒரு இந்தியர்.

24. உலகின் 4 ஆவது பலமான ராணுவத்தை கொண்டது இந்தியா.

25. மிக அதிகமான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தின் வரிசையில் 2 ஆம் இடம் இந்தியாவுக்கு.

26. இன்று உலகமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் அஞ்சலை (E Mail) உருவாக்கியபவர் சிவா ஐயாத்துரை என்ற இந்தியர

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன.

இதைக் கண்ட கண்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்து  விடு , என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன்.

இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான்.

இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா?

சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால்தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன்.

மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்...

* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.

* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது.

* வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது.

* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது.

* நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

* மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

* கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு tubஇல் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை ஃப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும்.

* தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும்.

* சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

விளக்கம் 
குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும் பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர். அந்தக் குளத்திலேயே அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து கொள்பவர்களே நம் உறவு.


அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

விளக்கம் 
நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும். அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது


வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்க ஆகாரம் ஆனாற்போல பாங்கு அறியா
புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்

விளக்கம் 
புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும் வைத்யன் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப் போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும் உதவியும். கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த உதவியும் நம்மையே உடன் அழித்து விடும்

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தாலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு...

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.

தமிழர் பெருமையை பரப்ப இதை பகிர்ந்திடுங்கள்

ஆசாரம், கோவை என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்து ஆசாரக்
கோவை என்று ஆயிற்று. ஆசாரம் வடமொழி; கோவை தமிழ்ச் சொல்.
ஆசாரம் என்றால் பின்பற்றக் கூடியவை; கோவை என்றால் தொகுப்பு.
பின்பற்றக் கூடிய ஒழுக்கங்களைத் தொகுத்துக் கூறுவது என்பதே ஆசாரக்
கோவை என்பதன் பொருள்.

இன்ன காரியங்களைச் செய்; இன்ன காரியங்களைச் செய்யாதே; என்று
கட்டளையிடும் நூல்களுக்கு வடமொழியிலே ஸ்மிருதிகள் என்று பெயர்.
இந்த ஆசாரக் கோவையும் ஒரு ஸ்மிருதி போலவே காணப்படுகின்றது.
இன்னின்ன செயல்கள் செய்யத்தக்கவை; இன்னின்ன செயல்கள்
செய்யத்தகாதவை; என்று கண்டிப்பாக உத்தரவு போடுவதுபோலவே பல
பாடல்கள் காணப்படுகின்றன.

வடமொழி ஸ்மிருதியில் உள்ள பல கருத்துக்களை இந்நூலிலே
காணலாம். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நூல்
ஆதலால் இதில் கூறப்படும் ஒழுக்கங்களிலே சிலவற்றை இக்காலத்தார்
பின்பற்ற முடியாமலிருக்கலாம்.

வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளிலே இன்னின்ன வருணத்தார்,
இன்னின்ன ஆசாரங்களைப் பின்பற்றவேண்டும் என்று சொல்லப்
பட்டிருக்கின்றன. இந்த ஆசாரக் கோவையிலே சாதிக்கொரு நீதியென்று
பிரித்துக் கூறப்படவில்லை. மக்கள் அனைவரும் ஆசாரத்தைப் பின்பற்றவேண்டும் என்றே பொதுவாகக் கூறப்படுகின்றது. இந்த முறையே தமிழுக்குள்ள ஒரு தனிச்சிறப்பு.

சாதிக்கொரு நீதி கூறும் முறையைத் தமிழ் நூலார் பின்பற்றவில்லை.
பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த எல்லா நீதி நூல்களும் பெரும்பாலும்
எல்லோர்க்கும் பொதுவான நீதிகளையே கூறுகின்றன; அறங்களையே
அறிவிக்கின்றன. ஒரு சில பாடல்களில் மட்டும், அந்தணர், அரசர், வணிகர்,
வேளாளர் கடமைகளைத் தனித்தனியே வலியுறுத்துக்கின்றன.

ஆசாரக்கோவையை ஒரு பொதுச் சுகாதார நூல் என்றே
சொல்லிவிடலாம். எல்லா மக்களும் நோயற்ற வாழ்வு வாழ்வது எப்படி?
ஊரும், நாடும், பொது இடங்களும் சுகாதாரக் கேடின்றி இருப்பது எப்படி?
என்பவைகளை இந்நூலிலே காணலாம். புறத்திலே தூய்மையுடன் வாழ்வதற்கு வழி கூறுவதோடு மட்டும் நின்று விடவில்லை. அகத்திலே அழுக்கின்றி வாழ்வதற்கும் வழி காட்டுகின்றது இந்நூல். இது இந்நூலுக்குள்ள பெருமை.

இந்நூலாசிரியர் பெயர் பெருவாயின் முள்ளியார் என்பது. இவர்
வடமொழியிலும் புலமையுள்ளவர். ஆயினும் இவர் பாடல்களிலே வடமொழிச் சொற்கள் அதிகமாகக் கலக்கவில்லை; வெண்பாக்கள் நீரோட்டம் போலவே சரளமாக அமைந்திருக்கின்றன. இரண்டடி முதல் ஐந்தடி வரையில் உள்ள வெண்பாக்கள் இதில் காணப்படுகின்றன. ஆசாரக் கோவையில் உள்ள
வெண்பாக்களின் எண்ணிக்கை நூறு.

ஆசாரத்திற்கு விதை

மக்களுடைய நல்லொழுக்கங்களுக்கு அடிப்படையான குணங்கள்
இவைகள்தாம் என்று முதற் பாட்டிலே கூறப்படுகின்றது. ''ஆசாரத்திற்கு
விதை எட்டுக் குணங்கள்; அவைகளைப் பின்பற்றுவோரே ஒழுக்கந் தவறாமல் வாழ முடியும்; அவைகள் தாம் நல்லொழுக்கத்தை வளர்க்கும்'' என்று விளம்புகிறது அச்செய்யுள்.

''நன்றி அறிதல்; பொறை உடைமை; இன்சொல்லோடு;
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை; கல்வியோடு;
ஒப்புரவு ஆற்ற அறிதல்; அறிவுடைமை
நல்இனத்தாரோடு நட்டல்; இவை எட்டும்

சொல்லிய ஆசார வித்து.

பிறர் தனக்குச் செய்த நன்மையை மறவாமல் இருத்தல்; அறியாமை
காரணமாகப் பிறர் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது; யாரிடமும்
கடுஞ்சொற் கூறாமல் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுதல்; எந்த
உயிர்களுக்கும் அவை வருந்தும்படி தீமை செய்யாதிருத்தல்; சிறந்த
கல்வியை மறக்காமல் கற்றல்; உலக நடையை அறிந்து அதைத் தவறாமல்
பின்பற்றுவது; எதைப்பற்றியும் தானே சிந்தித்து உண்மை காணும்
அறிவுடைமை; கல்வி, அறிவு, நல்லொழுக்கமுள்ள கூட்டத்தாரோடு சேர்ந்து
வாழ்தல்; ஆகிய இந்த எட்டுக் குணங்களும் நல்லொழுக்கத்தை வளரச்
செய்யும் விதைகளாகும்.'' (பா.1)

இந்த எட்டுப் பண்புகளையும் பெற்றவர்கள் எந்நாளும் சிறந்து
வாழ்வார்கள். இது எக்காலத்திற்கும் ஏற்ற உண்மையாகும்.


கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாக பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும்
கல்லாதான் கற்ற கவி

விளக்கம் 
காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி உடனே தன்னையும் அதைப் போலவே நினைத்து தன்னுடைய அழகில்லாத சிறகை விரித்து ஆடுவதை போன்றதே, கல்வி கற்காதவன் சொல்லும் கவிதையும், அதனால் ஒரு பயனும் இல்லை. விஷயமும் இல்லை.

# நியூயார்க்கில் மாநகரில்,
ஒரு தமிழரும், அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்..

அனைவரும் பிஸியாக இருந்த நேரம்
அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது
பாக்கெட்டுக்குள் போட்டுக்
கொண்டார்..

சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு
வெளியே வந்தனர்..

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட்
பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து
வெளியே எடுத்து தமிழனிடம் காட்டி
"நாங்கெல்லாம் யாரு! அப்பவே
நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?" என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல்,
"உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?" என்று சவால் விட்டார் தமிழனிடம்.

விடுவாரா நம்ம தமிழன் "உள்ள வா… உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னனு
காட்டுறேன்னு", சொல்லி
அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்..

விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற
தமிழன் கேட்டார், ஒரு மேஜிக் காட்டுறேன்
பார்க்கிறியா?..
கடைக்காரரும் சரியென்று தலையாட்ட,
கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார்..

அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார்..

பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில்
இருந்த கடைக்காரரை ஏறிட்டுப் பார்த்தார்..

கவுன்டரில் இருந்தவர்,
"எல்லாம் சரி.. இதில்
மேஜிக் எங்கே இருக்கிறது?."

தமிழன் அமைதியாக பதில் அளித்தார்,
"என்.ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு…
நான் சாப்பிட்ட
3 சாக்லெட் பாரும் இருக்கும்…"

# சம்பார் சாப்பிட்டாலும் நம்ம ஆளு மூளைக்காரந்தாண்டா!!


பல ஆதரங்களுடன் விளக்கும் ஆய்வாளர்கள்!!!

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். "Comparison of Badalian and primitive Indian Races" என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார். நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்துவிட்டது. தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத்தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்றுஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.

இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.

எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.

அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = "பெருமிடு" என்று அழைக்கப்பட்டது. அதுவே 'பிரமிடு' என்று ஆனது.

ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும் அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார். சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

"Heinrich Kari Brugsh" - "History of Egypt" என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey  என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

"எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l"Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் "எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்" என்கிறார்.

🐄 இலவசம்🐄
==============

1978ம் ஆண்டு ஒரிசா மாநிலம் காலாஹந்தி மாவட்டத்தில் மஃபட்லால் நிறுவனத்தின் NGO சத்குரு சேவாசங்கம், SBI மற்றும்  ஒரிசா மாநில கால்நடை & வருவாய்த் துறை ஆகியவை இணைந்து ஏழை விவசாயிகளுக்கு கரவைமாடும் அதற்குத் தேவையான தீவனம் வளர்க்க நிலமும் இலவசமாக வழங்கின. இந்த இலவச நிலத்தில் மாட்டுத்தீவனம் வளர்ப்பதற்கு ஊதியமும் தரப்பட்டது....

எவ்வளவு நல்ல திட்டம்... அனைவராலும் பாராட்டப்பட்டு...உள்ளூர் மக்களிடம் சிறந்த வரவேற்பையும் பெற்றது....

இந்தத் திட்த்தின் மேல் ஒரு சிறிய * பொறிக்கப்பபட்டிருந்தது...
சாத் சாத் terms &  conditionஏ தான்....

கொடுக்கப்பட்ட மாடுகள்  அனைத்தும் புனேயிலிருந்து கொண்டுவரப்படும் ஜெர்சி மாடுகளின் உயிரணு மூலம் ஊசிமூலமாக மட்டுமே சினை ஊட்டப்பட வேண்டும்..என்பதே அந்தக் கண்டிசன்.

மாடு, நிலம் இலவசம்....அந்த நிலத்தில் வேலைபார்க்க ஊதியம்...யாருக்கு கசக்கும்... இரத்தினக்கம்பளம் விரித்து திட்டம் வரவேற்கப்பட்டது....

திட்டம் ஆரம்பிக்கப்பட்டபின் இந்த மாடுகள் இயற்கையாக உள்ளூர் காளைகளுடன் இணைசேராமலிருக்க உள்ளூரிலிருந்த காரியார் இனக்காளைகள் அனைத்தும் மலடாக்கப்பட்டன...
அதுதான் உண்மையில் திட்டம் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை... இலவச மோகம்...

ஆண்டுகள் உருண்டன... செயற்கை முறையில் சினையூட்டப்பட்டுப் பிறந்த கன்றுகளெல்லாம் எல்லாம் நோஞ்சானகப் பிறந்தன....
பத்தாண்டுகளுக்குள் பலம்வாய்ந்த, அதிகப் பால் கொடுக்கக் கூடிய நாட்டு காரியார் இனத்தின் ஒரு காளையைக் கூட ஒரிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பார்க்க முடியவில்லை...ஒட்டுமொத்த இன அழிப்பு...

பாலுற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்த அந்த மாவட்டத்தில் இப்போது ஒவ்வொரு விவசாயியும் பாக்கெட்பால் வாங்குகிறான்!!

1977-78ல் ஒரு லிட்டர் நெய் 7ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டால்டா 9ரூபாய்க்கும் விற்கப்பட்ட இடத்தில், தற்போது டால்டா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது!!

திட்டக் காலம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டவுடன், மாட்டுத்தீவனம் வளர்க்க இலவசமாக வழங்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன.....

கைகொடுத்த பால் தொழில் தொலைந்ததால் காரியார் காளைவளர்த்த இளங்காளைகளெல்லாம் பிழைப்பிற்காக நகரத்து டின் செட்டிற்குள் அவிந்து கொண்டிருக்கிறார்கள் கட்டிடத் தொழிலாளர்களாக...

இது இலவசங்களுக்குப்பின் ஒழிந்திருக்கும் வணிக நோக்கங்களைத் தோலுரிக்கும் ஒரு சிறு சாம்பிள் மட்டுமே.....

"There is no free lunch in the world" என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு.... "இவ்வுலகில் எதுவும் இலவசமல்ல" என்பது அதன் பொருள்....

ஜல்லிக் கட்டைத் தடை செய்வதற்கும் நாட்டுக் காளைகளை அழிப்பதற்கும் தொடர்புண்டோ இல்லையோ....

இலவச மோகம் இன அழிப்புச் செய்யும் என்பது மட்டும் ஆழமான உண்மை...

எப்போது மாறுமோ நம் இலவச மோகம்?

இந்திய மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு,
அமெரிக்கா போக ஆசை வந்தது.
ஒரு அமெரிக்க அதிகாரியை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், அமெரிக்காவுக்கு போய் சேர்ந்தது.
அமெரிக்காவில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது.
ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம்
மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம், "ஏய்... நான் இந்தியாவில்
காட்டு ராஜா... அங்கு எனக்கு ஆடு, மாடு எல்லாம் கொடுத்தாங்க... ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும் தர்றீங்களே...' என, மிரட்டலோடு கேட்டது.
அந்த ஊழியர், "உண்மை தான்... நீ இந்தியாவில் காட்டு ராஜா தான்... ஆனால், அமெரிக்காவுக்கு குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார்.
இந்திய இளைஞர்கள் சொந்த நாட்டில் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
"நீங்கள் அமெரிக்கா போய் குரங்காக இருப்பதை விட, இந்தியாவில் ராஜாவாக இருங்க...


..
கடவுளின் விலை எவ்வளவு .. ?
காரியத்துக்கு தக்கபடி கடவுளுக்கும் விலை ...!
..
ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு ஏதாவது வேலையா போனால், ஊழியர்கள் அவரவர் தகுதிக்கேற்ப லஞ்சம் கேட்கிறார்கள் இல்லையா !

அதே, மனநிலையில் தான், அறியாமையால் கடவுளையும் விலைக்கு வாங்க மனிதன் முயற்சிக்கிறான்.

ஒருவன் ஒரு வைரக்கல்லுடன் காய்கறி கடைக்கு வந்தான்.
ஐயா! இந்தக் கல்லுக்கு எவ்வளவு காய்கறி தருவீர்கள்? என்றான். வியாபாரி, பதினைந்து கிலோ தருகிறேன் என்றார்.

அவன் ஜவுளிக்கடைக்கு போனான். வேண்டுமானால் ஐநூறு ரூபாய்க்கு துணி எடுத்துக் கொள், என்றார்கள்.

அடுத்து, நகைக்கடை ஒன்றில் நுழைந்து விலை கேட்டான். ஆகா! இப்படி ஒரு வைரக்கல்லை பார்த்ததே இல்லையே! ஐந்து லட்சம் தருகிறோம், என்றனர்.

அவரவர் பார்வையில், வைரக்கல்லின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது.

இப்படித்தான் சில மனிதர்களும் , இறைவனைப் பார்கிறார்கள்.
ஒருவன், கடவுளிடம் எனக்கு, கார் வாங்கி கொடு, அப்படி செஞ்சா...அடுத்த வாரம் 1001 உண்டியலில் போடுகிறேன் என்று அவரை 1001 ரூபாய்க்கு விலை பேசுகிறான்.

இன்னொருவன்,ஏதோ பரவாயில்லை ! பத்து கோரிக் கையை இந்த மாசம் வச்சிட்டு வந்தா, ஒன்றையாவது நிறைவேற்றி வைக்கிறார். இந்தக் கடவுள் தேவலே! சரி...சரி... கும்பாபிஷேகத்
துக்கு 101 நன்கொடை தர்றேன் என்கிறான்.

எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல், அப்பனே! பிறவிக் கணக்கை சீக்கிரம் தீர்த்து வை. நான் என்னையே தருகிறேன்,என்று ஒருவன் உயர்தர பக்தி செலுத்துகிறான் .

எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டு, அவன் ஏதுமறியாதவன் போல், உலகப் பந்தை சுழற்றிக்கொண் டிருக்கிறான்.

நமக்கு என்ன வேணும் என்பது இறைவனுக்கு தெரியாதா?

நமக்கானதை நிச்சயம் அவன் நமக்கு தருவான் ..!! 
நாம் உயர்தர பக்தி செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
..
நன்றி தினமலர்

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து

"சீ மிருகமே!"
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்

அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்

இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால் -
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி

யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …

சிலரை
நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
"சீ மிருகமே !"
என்று
மனிதனைத் திட்டாதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …

ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
" சீ மனிதனே !"
**

-கவிஞர் வைரமுத்து

ஒரு இங்க்லீஷ்காரர் : What is this ?
படிக்காத கடைக்காரர் : This is தயிர் .
இங்க்லீஷ்காரர் : What is தயிர்
கடைக்காரர் : Milk sleep at night and morning become tight.
யார்கிட்ட ....😆😆😄😃😀

உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.

ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர்,
அவரது மனைவி வாசுகி தான். 
அந்த அம்மையார் தனது கணவரின்
செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்
முழுவதும் விமர்சித்ததே இல்லை.

அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது,
ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,
ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.

அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.

ஆனாலும் கணவரிடம்
காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே 
அவை இரண்டும் என்றாராம்.

நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.

அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி
யாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.

அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது. விசிறு என்றார். பழைய சோறு எப்படி சுடும்? 
அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.

விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி,
கணவருடன் வாதம் செய்யாமல்
விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்
கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.

வள்ளுவர் அவரை அழைக்கவே,
கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக்
கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!

அந்த அன்பு மனைவி ஒருநாள்
இறந்து போனார்.

"நெருநல் உளனொருவன்
இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு"
என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே மனைவியின் பிரிவைத்
தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்
குறளின் பொருள்.

ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக
பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர் 
மனைவியின் பிரிவைத் தாளாமல் 
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு" என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.

அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்
பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்
தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் 
இந்தசம்பவத்தை மனதிற்குள்
அசைபோடுவார்களா..!!
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.  அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.

அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இருவரும்  அறிவாளியாக  இருந்தால் 👍🙏😊 அதுவே கோவில்.

"உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

" உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ".

ஒருமுறை காட்டுக்குள் போகும் போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம்.
அழைத்துச் சென்ற வனத்துறை அதிகாரி, "குரங்களுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது"- என்றார்...

ஆச்சர்யமாய் இருந்தது.. விலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்...

"சுற்றிப்பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள்.
ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன...

இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்குரங்குகள் மாறி விடுகின்றன...

வரிசையில் உட்காந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சைஎடுக்கும் ஜீவன்களாக மாறிவிடுகின்றன...

எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே ஆரோக்கியமானது"- என்று பதில் சொன்னார்...

நிறைய யோசிக்க வைத்தது...!

- இலவச அரிசி வாங்கி,இலவச டிவி பார்க்கும்,  நம்ம ஊர் மக்களுக்கும்,இது தான், நடக்கிறது! உழைக்கவே மனம் வருவதில்லை!

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.

உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.

நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை மரத்தை நடு.

நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை மரத்தை நடு.

நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.

நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.

வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை நடு.

கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை நடு.

நேத்தாஜிகாக செம்பருத்தியினை நடு.

அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.

எம்.ஜி.ஆர் காக எழும்பிச்சை மரத்தை நடு.

அப்துல் கலாமிரற்காக மா மரத்தை நடு.

உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.

உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்... நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்கொண்டு....

மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!
🌴
🌲
🌳
🌱
🌾
🌿
🌷

⚓படித்ததில் பிடித்தது:🎈

🍬கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !

💥அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!

🍭எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

🏮தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!

🍡'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!

⛵வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !

🐾அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

📍இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்

🚩இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!😐

🔰இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

🌀250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

🎪மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

🎯தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.

🎐கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!🚏

மதுரைக்காரய்ங்கனா இப்படித்தான் இருக்கணும்னு சில வரைமுறைகளை நாமளே வகுத்து வெச்சிருக்கோம். என்னதுனா...

மதுரையில் லோ-ஹிப், வீ-நெக் போடுற ஆம்பளைப் பயலுக ரொம்ப கம்மி. காட்டன் பேன்டுக்கு முக்கால்வாசி மடிச்சுவிட்ட முழுக்கைச் சட்டை. இல்லைனா, கட்டம் போட்ட லுங்கிக்கு கோடு போட்ட சட்டை. கேட்டால், 'எங்க ஏரியா நாயி வெறியாகிடும் பாஸ்'னு பொதுநலத்தோடு பேசுவாய்ங்க.

கெத்து காட்டுறதுக்கு டிஜிட்டல் வாட்ச், லெதர் பொருட்கள்லாம் போட மாட்டாய்ங்க. கழுத்தை ஒட்டினாப்ல இனிஷியல் போட்ட தங்க செயின். இடது கையில தங்க வாட்ச், வலது கையில தங்க பிரேஸ்லெட்னு 'நாங்க தங்கமானவய்ங்க'ங்கிறதை நிரூபிப்பாய்ங்க.

டூவீலர்னா ஒன்னு ஸ்ப்லெண்டர், இல்லைனா புல்லட். 'அப்பத்தாவால அப்பாச்சியில் ஏற முடியாது ஜி'னு தன்னோட பைக் ஆசையைக்கூட பாசத்துக்குக்காக பாய்ஸன் கொடுத்துக் கொன்ருவாய்ங்க.

ஸ்பைக், க்ரஞ்ச் ஹேர் ஸ்டைல் வெச்சிருக்கிற ஒருத்தனை மதுரையில பார்த்தீங்கனா, அவன் டவுன்ஹால் ரோட்டுல செருப்புக்கடை வெச்சிருக்கிற சேட்டுப் பையன்னு புரிஞ்சிக்கணும். ஏன்னா, மதுரைக்காரய்ங்க பெரும்பாலும் அட்டாக்தான் வெட்டிருப்பாய்ங்க. ஹேர்ஸ்டைலில்கூட அட்டாக், அதிரடி, அடிதடினு இருந்தாதான் அவிங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

போர் அடிச்சா அழகர் கோயில். பெரிய பட்ஜெட்னா குற்றாலம், கொடைக்கானல். கோவாவுக்குப் போக பல வருஷமா திட்டம் மட்டுமே போட்டுக்கிட்டு இருப்பாய்ங்களே தவிர, கடைசி வரைக்கும் போகவே மாட்டாய்ங்க. ட்ரீட்னா 'பீட்சா,பர்கர்,டக்கிலோ' பக்கமெல்லாம் போகவே மாட்டாய்ங்க. மட்டன் சுக்கா, நாட்டுக்கோழி கிரேவி, மிலிட்டரி சரக்குனு முடிஞ்சுடும். அதுலேயும் வெட்ட வெளியில் அடுப்பை மூட்டி இவிய்ங்களே சமைச்சு சாப்பிடுவாய்ங்க. ஏன்னா ஹோட்டல் சாப்பாடு ஒடம்பைக் கெடுத்துடும்பே.

ஊர்த் திருவிழா, ஏரியா திருவிழானு எது வந்தாலும் 'கபகபகுபுகுபு பாய்ஸ்', 'அடங்கா சிங்கங்கள்', 'பாண்டி, அழகர் நினைவு குழு'னு ஒரே மாதிரி ஃப்ளெக்ஸ் அடிச்சுட்டுதான் அடுத்த வேலையைப் பார்ப்பாய்ங்க. வேட்டியை மடிச்சுக் கட்டின மாதிரி, வாயில அரிவாளை வெச்ச மாதிரி போஸ் கொடுத்து பேனர் வைப்பாய்ங்க. அதை அடுத்த வருஷம் வரைக்கும் எடுக்கவே மாட்டாய்ங்க. நல்ல விஷயம் நாலு பேருக்குத் தெரியணும்னு ஆசைப்படுறவய்ங்க மதுரைக்காரய்ங்க.

அறிமுக ஹீரோவுக்குக்கூட அலப்பறையா பேனர் வைக்கிறவய்ங்க மதுரைக்காரய்ங்கதான். படம் நல்லாயிருந்தா 'தரமா இருக்கு' நல்லா இல்லைனா, 'வெளங்கலை'னு சொல்லிட்டு அடுத்தப் படத்துக்கு ரெடி ஆகிடுவாய்ங்க.

காதல் தோல்விப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்களைத்தான் பெரும்பாலும் ரிங்டோனா வைப்பாய்ங்க. பஸ்ஸுக்குள்ள பாட்டைப் போட்டு அலற விடுவாய்ங்கள்ல.

'மதுரைக்காரன் என்னைக்குடா கட்டிங்கோட நிப்பாட்டிருக்கான்?', 'ஆஃப் பாயிலை ஒரே வாயில விழுங்குறவன்தான்டா மதுரைக்காரன்', 'புல்லட்டுக்கு சென்டர் ஸ்டாண்டு போடுறவன்தான்டா மதுரைக்காரன்', 'தோசைக்கே இட்லிப் பொடி வெச்சு சாப்பிடுறவன்தான்டா மதுரைக்காரன்'னு எதுக்கெடுத்தாலும் பெருமைப்படுவாய்ங்க. ஏன்னா, 'என் ஊர் என் பெருமை'னு பெருமிதத்தோடு வாழ்றவங்க மதுரைக்காரய்ங்க.

சொல்றதுக்கு இன்னும் நிறைய இருக்கு. இருந்தாலும், மதுரைக்காரய்ங்க விளம்பரம் பிடிக்காதவய்ங்க. அதான் பார்க்கிறேன். ஹிஹிஹி!

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியின் ஆசை:

நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசைகள் ;

நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

மூன்றாவது கைதி :

தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.

செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். ''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ''என்ன சொல்கிறாய்,நீ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!

''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.'

# புத்திசாலி எந்த தருணத்திலும் தன்னை காத்துக் கொள்கிறான்... புத்தியைத் தீட்டு..

ப்ரூனோ என்று ஒரு துறவி இருந்தார். 

ஓர் இரவு மழை பெய்து ஓய்ந்திருந்தது.  அப்போது ப்ரூனோ ப்ரார்த்தனை செய்யும்போது தவளைகளின் சப்தம் காதை பிளந்தது. அவரால் ப்ரார்த்தனையில் கவனம் செலுத்த முடியவில்லை.

ஜன்னல் அருகில் போனார். "எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்க! நான் கடவுள்கிட்டே ப்ரார்த்தனை செய்துகிட்டு இருக்கேன்" என்று கத்தினார்.

பெரிய துறவி ஆச்சா?

எல்லா தவளைகளும், ஏன், எல்லா உயிரினங்களும் உடனே சப்தமிடுவதை நிறுத்திவிட்டன.

எங்கும் ஒரே நிசப்தம்! துறவி மீண்டும் ப்ரார்த்தனையை ஆரம்பித்தார்.  ஆனால் உள்ளிருந்து ஒரு குரல் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை. "உன் ப்ரார்த்தனையை விட தவளைகளின் சப்தம் இழிந்தது என்று நினைக்கிறாயா என்ன? ஏன் அப்படி? கடவுளுக்கு அதுதான் பிடித்து இருக்கிறதோ என்னமோ!"

"என் ப்ரார்த்தனையைவிட தவளை சப்தத்தில் மகிழ்ச்சி தரக்கூடியது என்ன இருக்கிறது?"

"கடவுள் அந்த சப்தத்தை ஏன் படைத்தார் என்று நினைக்கிறாய்?"

ஏன் என்று கண்டு பிடிக்க முடிவு செய்தார் ப்ரூனோ.

ஜன்னலைத் திறந்து "பாடுங்கள்" என்று கட்டளை இட்டார். தவளைகள் தம் கானத்தை ஆரம்பித்தன.

கேட்க கேட்க அவை ஒன்றும் மோசமாகப் படவில்லை. உண்மையில் அவற்றை வெறுக்காமல் இருக்கும்போது அவை மோனத்துக்கு தடையாகவில்லை.

அத்துடன் ப்ரூனோவின் மனம் ப்ரபஞ்சத்துடன் ஒருங்கிசைந்தது. வாழ்க்கையில் முதன்முதலாக ப்ரார்த்தனையை சரியாக இனம் கண்டு கொண்டார்.

SUPER MANAGER...                          ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒருவருக்கு ஒன்று மட்டும்தான்" என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக் கொண்டு, "நான் அமெரிக்காவுக்கு போக வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு ஜாலியாக குளிக்க வேண்டும்" என்கிறார்.

பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…

"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப் பெண்கள் வேண்டும்" என்றார்.

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜரப் பார்த்து, "நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம்.

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், "ஆபீசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்க வேண்டும்!"

(ஒர்த்தனும் நிம்மதியா இருக்க கூடாது)

ஒரு சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்ல முடியாத இயலாமை. ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். சிறுவனிடம், "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக்கொண்டே. சிறுவனுக்கு ஒரே உற்சாகம்.  சுற்றியுள்ளோருக்குக் குழப்பம். மகர்ஷியின் 'ம்' க்காகத்  தோசையில் ஒருகையை வைத்தபடி தவிப்புடன்  அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர். அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது. புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல். எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான். "இரண்டு 'ம்' களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ?" என்றார் மகரிஷி புன்னகைத்தபடி. கதை முடிந்தது. ரமணர் சொன்ன இரண்டு 'ம்' கள் வாழ்வும், சாவும் எனவும், இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே ஒருவன் தியானத்தில் அமிழவாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள முதிரும் காலமே வேறுபடுகிறது .