Designed by Enthan Thamizh

மழைநீர் எங்குதான் செல்லும்?

இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்கிறது.

அதன் போக்கில் குறுக்கிடாமல் இருந்தால், இப்படி கடுமையான சேதம் இருக்காது.

ஏரிகளையும், குளங்களையும் ப்ளாட் போட்டு விற்று விடுவோம். வாய்க்கால் களையும் வடிகால்களையும் விற்று ஏப்பம் விடுவோம். ஆற்றின் குறுக்கே வீடுகட்டுவோம். ஆற்றங் கரைகளையும் ஏரிகளையும் ஆக்கிரமிப்போம். சுறுங்காத ஆறுகளும் ஏரிகளும் தமிழ்நாட்டில் உண்டா?

முன்பு ஊருக்கு பத்து குட்டைகளாவது இருந்திருக்கும்; அவைகள் எங்கே? ஒன்று விடாமல் எல்லாவற்றையும் தூர்த்து விட்டோம்.

பின் மழைநீர் எங்குதான் செல்லும்?

மனிதனின் பேராசைக்கு அளவே இல்லாமற் போய்விட்டது. அக்காலத்தில் ஊர் மராமத்து என்று நடக்கும். இப்போது? 100 நாள் வேலைத்திட்டத்தின் நிலைமை பற்றி யாவர்க்கும் தெரியும்தானே!!

ஒவ்வொரு மழை சீசனிலும் நடக்கும் அரசியல் டிராமாக்கள் சகிக்க வில்லை.

ஆஹா.. நன்றாக பொழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. விவசாயம் பெருகட்டும். குடிநீரப் பஞ்சம் போகட்டும் என்று வாழ்த்த ஒரு ஆள் இல்லை.

சகல டி.வி ஷோவிலும் "ஐயோ.. பெய்யுதே ... ஐயய்யோ.. பெய்யுதே என்று புலம்பல்.." இது என்ன பார்வை? நமக்கு என்ன நேர்ந்து விட்டது? விடாது கொட்டித்தீர்க்கும் (கேரளம் போன்று) எந்த மாநிலத்திலும் இந்த புலம்பல் இல்லை.. இது எங்கே போய் நிற்கப் போகிறதோ?

பெஞ்சாலும் சுருட்டலாம்... காஞ்சாலும் சுருட்டலாம்.

அட..தமிழ் நாடே!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக