இந்திய சுதந்திரப் போராட்டம் கனல்பறக்கும் தீவிரத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து தேசத்தை மீட்பதற்கான போராட்டத்தில் மிக உத்வேகத்துடன் பங்கேற்பதற்காக மிர்தாஜ் முகமத்கான் என்ற16 வயதுக்காரர் பெஷாவரிலிருந்து காஷ்மீருக்கு வந்தார். தேச விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயாரான அந்த இளம் வாலிபனிடம் அப்போது இருந்தது மனத்துணிவு மட்டுமே.மக்களிடையே அந்த மிர்தாஜ் முகமத்கானின் சுதந்திர உரை கனல்பறக்கும். அதனால், அவர் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கண்காணிப்புக்குள்ளானார். நாடு விடுதலை பெற்ற பிறகுஅவர் தில்லியிலேயே நிரந்தரவாசியாகிவிட்டார். சகோதரர்கள் இறந்துவிட்ட செய்தியறிந்ததும் பாகிஸ்தானுக்குப் புறப்படுவதற்கான அனுமதிக்கு இரண்டுமுறை விண்ணப்பித்திருந்தார். கருப்புப் பட்டியலில் உள்ள சுதந்திரப் போராளிக்கு பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.அந்த மிர்ஜாத் முகமத்கானின் மகன்தான் பாலிவுட் திரையுலக மன்னர் (கிங் கான்)எனப் புகழப்படுகிற ஷாருக்கான். நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் ஐஎன்ஏ என்றழைக்கப்படும் இந்திய தேசிய இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்த ஷா நவாஸ்கானின் வளர்ப்பு மகள்தான் ஷாருக்கானின் தாயார் லத்தீஃப் பாத்திமா.அடிமை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டஓர் இளம் வீரன் தன் தந்தை என்பதில் ஷாருக்கான் சுயகர்வப்படுவது உண்டு. பாகிஸ்தானுக்குப் போய்விடும்படி ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஷாருக்கானை மிரட்டியபோது, இந்த நாட்டில் வாழ்வதற்கான அதிக உரிமை எனக்குத்தான் உள்ளது என்று அவர் மனஉறுதியுடன் சொன்னது,
தான் இந்தப் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு என்பதால்தான். பாகிஸ்தான் செல்ல அனுமதி கிடைத்த போது, அங்கே பார்க்க வேண்டியவர்கள் யாரும் இல்லையெனத் தந்தை தன்னிடம் சொன்னதை மறக்கவில்லையென்று, இனி வெளியிடவுள்ள "20 இயர்ஸ் இன் ஏ டெக்கேட்" என்ற தனது சுயசரிதையில் ஷாருக்கான் நினைவுப்படுத்துகிறார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் வறண்ட தரிசு பூமியில் மகனையும் உடன் அழைத்துக் கொண்டு நடந்து செல்லும்போது, தந்தை மிர்தாஜ் முகமத்கான் தங்கள் குடும்பக் கதையைச் சொல்லக் கேட்டிருக்கிறார் ஷாருக்கான். அப்போது ஷாருக்கானுக்கு வயது 14.1980-இல் தங்கள் வீட்டைப் பார்ப்பதற்குச் சென்ற அந்தப் பயணத்தின் நினைவுகள் இன்று50 வயதுக்காரராகிய ஷாருக்கானின் மனதைவிட்டு நீங்கவில்லை. இவரின் தந்தைக்கு சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆறுமொழிகள் தெரியும். எம்.ஏ., எல்.எல்.பி. பட்டங்கள் பெற்றவர். நேருஜியின் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பு உண்டு. ஆனால் அரசியலில் ஈடுபட அவருக்கு விருப்பமில்லை. அதேசமயம், அவருடன் நெருக்கமாக இருந்த பழைய நண்பர்கள் பலரும் அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் ஆனார்கள்.வியாபாரத்தில் கூட்டாளிகள் ஏமாற்றியதால் வியாபாரம் நஷ்டமாகிப்போனது. முடிவில் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்காக ஒரு சிறிய டீக் கடை ஆரம்பித்தார் மிர்தாஜ் முகமத்கான். வாடகை கொடுக்கமுடியாததால் பலமுறை இடத்தை மாற்றினார். ஷாருக்கானின் 15-வது வயதில் தந்தை புற்றுநோயினால் இறந்துவிட்டார்.ஷாருக்கானின் தந்தைக்கும் தாயாருக்கும் மத விஷயத்தில் பிடிவாத குணமில்லை. "குர்ஆன் வாசிக்க வேண்டுமென்று தோன்றினால் குர்ஆன் வாசிப்போம்; பைபிள் வாசிக்க வேண்டுமென்று தோன்றினால் பைபிள் வாசிப்போம்; மகாபாரதம் வாசிக்க வேண்டுமென்று தோன்றினால் மகாபாரதம் வாசிப்போம்."பெற்றோர்களின் இந்தச்சொல்தான் தனது மதநல்லிணக்க நிலைக்கு அடிப்படை என்கிறார் ஷாருக்கான். எங்கள் குழந்தைகளாகிய ஆர்யனையும், சுகானாவையும், அப்ராமினையும் இது போலவே வளர்க்கவேண்டுமென்பதே என் விருப்பமும் என் மனைவி கௌரியின் விருப்பமுமாகும் என்கிறார்.
6.11.2015 தேசாபிமானியிலிருந்துதமிழில்: தி.வ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக