3.இயல்வது கரவேல்! Aid to your capacity! விளக்கம் : செய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது!! Give what you Don't need!!
Operation theatre- பண்டுவ அறை.
நூறுமுறை பிரிந்தாலும் ஒருமுறை இறந்தாலும்
மறுமுறை பிறக்கும்பொழுது
உன் நட்பு வேண்டுமென்று கேட்பேன் இறைவனிடம்.!
Thesil -தாலுகா
தாசில் எண்பது தமிழல்லவே
தாசில்தார் என்றால் வட்டாட்சியர்.
"குப்பாயம்' கொண்டு வா!
தமிழறிஞர் தேவநேயப் பாவாணரை, ஒருமுறை மதுரை தியாகராசர் கல்லூரி விடுதி நாள் விழாவுக்கு அழைத்திருந்தனர்.
தமிழறிஞர் தேவநேயப் பாவாணரை, ஒருமுறை மதுரை தியாகராசர் கல்லூரி விடுதி நாள் விழாவுக்கு அழைத்திருந்தனர். மாணவர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினர். அவரும் ஒப்புக்கொண்டு மாணவர்களுடன் புறப்பட்டார்.
விடுதியின் வாசலுக்கு வந்த பின்னர், ""ஓ! மறந்து விட்டேனே. அறையில் என் "குப்பாயம்' இருக்கிறது. எடுத்து வாருங்கள்'' என்றார்.
"குப்பாயம்' என்றால் என்ன என்று மாணவர்களில் யாருக்கும் விளங்கவில்லை.
""அதுதானய்யா, மேலே போட்டுக்கொள்ளும் கோட்டு'' - என்று அவர் சொன்ன பிறகே விளங்கியதாம்.
மேலுடுப்பு என்றும் கூறலாம்.
ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இருந்த நமது தமிழறிஞர்கள் கோட்டிற்கு குப்பாயம் என்று பெயர் சூட்டிருக்கலாம்.
1.அறஞ்செய விரும்பு! Intend to do right deeds! விளக்கம் : தருமம் செய்ய நீ விரும்புவாயாக!! Have desire to do good!
இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்கிறது.
அதன் போக்கில் குறுக்கிடாமல் இருந்தால், இப்படி கடுமையான சேதம் இருக்காது.
ஏரிகளையும், குளங்களையும் ப்ளாட் போட்டு விற்று விடுவோம். வாய்க்கால் களையும் வடிகால்களையும் விற்று ஏப்பம் விடுவோம். ஆற்றின் குறுக்கே வீடுகட்டுவோம். ஆற்றங் கரைகளையும் ஏரிகளையும் ஆக்கிரமிப்போம். சுறுங்காத ஆறுகளும் ஏரிகளும் தமிழ்நாட்டில் உண்டா?
முன்பு ஊருக்கு பத்து குட்டைகளாவது இருந்திருக்கும்; அவைகள் எங்கே? ஒன்று விடாமல் எல்லாவற்றையும் தூர்த்து விட்டோம்.
பின் மழைநீர் எங்குதான் செல்லும்?
மனிதனின் பேராசைக்கு அளவே இல்லாமற் போய்விட்டது. அக்காலத்தில் ஊர் மராமத்து என்று நடக்கும். இப்போது? 100 நாள் வேலைத்திட்டத்தின் நிலைமை பற்றி யாவர்க்கும் தெரியும்தானே!!
ஒவ்வொரு மழை சீசனிலும் நடக்கும் அரசியல் டிராமாக்கள் சகிக்க வில்லை.
ஆஹா.. நன்றாக பொழிகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. விவசாயம் பெருகட்டும். குடிநீரப் பஞ்சம் போகட்டும் என்று வாழ்த்த ஒரு ஆள் இல்லை.
சகல டி.வி ஷோவிலும் "ஐயோ.. பெய்யுதே ... ஐயய்யோ.. பெய்யுதே என்று புலம்பல்.." இது என்ன பார்வை? நமக்கு என்ன நேர்ந்து விட்டது? விடாது கொட்டித்தீர்க்கும் (கேரளம் போன்று) எந்த மாநிலத்திலும் இந்த புலம்பல் இல்லை.. இது எங்கே போய் நிற்கப் போகிறதோ?
பெஞ்சாலும் சுருட்டலாம்... காஞ்சாலும் சுருட்டலாம்.
அட..தமிழ் நாடே!!!
தீபாவளி வந்தாச்சு..... ...இந்த
வருஷம் என்னன்ன
புது வெடி வந்துருக்குனு பார்ப்போம்.
1. மோடி வெடி -
இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெடி.
இதை நீங்க
பத்தவைச்சா சீனா, ஜப்பான், சிங்கப்பூர்
அமெரிக்கானு எல்லா நாட்டுக்கும்
போகும். குழந்தைகள் கிட்ட
கொடுத்து பத்த வைக்கச் சொல்லலாம்.
செல்பியும் எடுக்கலாம் .இதோட
ஸ்பெஷாலிட்டியே கடைசி வரைக்கும்
இந்தியாவில் வெடிக்காது.
2. ஸ்டாலின் வெடி - இது கொஞ்சம்
ஈசியான வெடி. நமக்கு நாமே
வெடிக்கலாம். இதை நீங்க பத்த
வச்சீங்கனா ஏதாவது ஸ்டுடியோகிட்ட
போய்த்தான் வெடிக்கும்.
3. அம்மா வெடி - இதுல மெயின்
வெடி கூட ஒரு கட்டு வெடி இருக்கும்.
நீங்க மெயின் வெடியை பத்த
வச்சீங்கனாதான் அந்த கட்டுல
மிச்ச வெடியெல்லாம் வெடிக்கும்.
4. கேப்டன் வெடி - இந்த வெடியோட
சிறப்பம்சமே இதை தண்ணியில
நனைச்சு வச்சீங்கனாத்தான்
வெடிக்கும். கவனமா இருக்கனும் சில
நேரம் " தூக்கி அடிச்சிரும்"
5. கலைஞர் வெடி - இந்த
வெடி முதல்ல வெடிக்கிற
மாதிரி இருக்கும். அப்புறம்
புஸ்னு போக்கும். திரும்பவும்
வெடிக்கிற மாதிரி போகும்.
இப்படி போக்கு காமிச்சுகிட்டே இருக்கும்.
ஆனா கடைசி வரைக்கும் வெடிக்காது.
6. சுப்பிரமணியசாமி வெடி - இதைப்
பத்தி அனேகமா உங்க எல்லாருக்கும்
தெரிஞ்சுருக்கும். இதை நீங்க பத்த
வச்சீங்கனா ரொம்ப நாள் கழிச்சு கோர்ட்டில
போய்
வெடிக்கும்.
7. வைகோ வெடி - இது நீங்க பத்த
வச்சீங்கன்னா கொஞ்ச தூரம்
நடந்து போகும். ஆனா வெடிக்க
எல்லாம் செய்யாது.
8. நயன்தாரா வெடி - இதுல
மூணு பட்டாசு இருக்கும்.
ஒண்ணு டூப்ளிகேட்.
இன்னொன்னும் டூப்ளிகேட். மூணாவதா
உள்ளது டூப்ளிக்கேட்டுதானான்னு கண்டுபிடிக்கனும். இதுல என்ன
விசேஷம்னா ஒரிஜினல் பத்த
வச்சா இந்தப் பட்டாசு வெடிக்காது.
டூப்ளிகேட்டைப் பத்த வச்சாத்தான்
வெடிக்கும்.
9. விஷால் வெடி- இந்த வெடியோட
ஸ்பெஷலே உங்ககிட்ட இருக்க வெடி
திருட்டு வெடியானு கண்டுபிடிக்கும்.
அப்புறம் சிவகாசிக்கே போய் வெடிக்கும்.
10.டி.ஆர் வெடி- இது அற்புத வேடி அசால்ட்
வெடினு.. சவுண்ட் வரும் ஆனா
வெடிக்காது. அப்றம் பக்கத்துல வைக்கிற
வேறவெடியும் புஸ்சுனு போயிரும்.
தேடல் ::
திரைகடலோடினோம் திரவியம் தேட ...
இன்று கணிணித்திரையே போதும்
கடல் தாண்டி திரவியம் தேட !!!
கடிதம் / தொலைபேசி அழைப்புக்காக காத்துக்கிடந்தோம் அன்று ...
நினைப்பதை நொடிப்பொழுதில் பரிமாற வாட்ஸ்அப் / மின்மடல் / ஃபேஸ்புக் என எத்தனையோ செயலிகள் !!!
மண்ணிலே வீடுகட்ட ஆசை அன்று ...
இன்றோ விண்ணிலே வீடு கட்ட துடிக்கிறது விஞ்ஞான உலகம் !!!
நிஐங்களை நிஜங்களாகப் பார்ப்போம் !!!
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அன்று பலகடைகள் ஏறியிறங்கி எடுப்போம் புதுத்துணி !
இன்றோ- flipkart.comமில் பத்தேநிமிடம், முடிந்தது பணி...!
அதிரசம், லட்டு, முறுக்கு, எத்தனை பலகாரம் அப்பப்பா.. !
இன்றோ- கிருஷ்ணா சுவீட்ஸில் வாங்கு ஒரு டப்பா...!
பட்டாசுகள் பலர் சேர்ந்து வெடித்து குஷிதான் என்னே..!
இன்றோ- 'பட்டாசே வேண்டாம்' பிள்ளைகள் TVக்கு முன்னே...!
எல்லாம் மாறிப் போச்சு, எதிலும் இல்லை சுவராசியம்..
ஆனாலும் தீபாவளி என்றால் மனதில் இருக்கு வசியம்...!
இடர்பல இருந்தாலும் இருளே நிரந்தரமல்ல தோழா,தோழி,
நமக்கும் உண்டு ஒளியென்று சொல்லும் தீபாவளி வாழி..!
---------------------
நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!!
இந்திய சுதந்திரப் போராட்டம் கனல்பறக்கும் தீவிரத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து தேசத்தை மீட்பதற்கான போராட்டத்தில் மிக உத்வேகத்துடன் பங்கேற்பதற்காக மிர்தாஜ் முகமத்கான் என்ற16 வயதுக்காரர் பெஷாவரிலிருந்து காஷ்மீருக்கு வந்தார். தேச விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயாரான அந்த இளம் வாலிபனிடம் அப்போது இருந்தது மனத்துணிவு மட்டுமே.மக்களிடையே அந்த மிர்தாஜ் முகமத்கானின் சுதந்திர உரை கனல்பறக்கும். அதனால், அவர் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கண்காணிப்புக்குள்ளானார். நாடு விடுதலை பெற்ற பிறகுஅவர் தில்லியிலேயே நிரந்தரவாசியாகிவிட்டார். சகோதரர்கள் இறந்துவிட்ட செய்தியறிந்ததும் பாகிஸ்தானுக்குப் புறப்படுவதற்கான அனுமதிக்கு இரண்டுமுறை விண்ணப்பித்திருந்தார். கருப்புப் பட்டியலில் உள்ள சுதந்திரப் போராளிக்கு பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.அந்த மிர்ஜாத் முகமத்கானின் மகன்தான் பாலிவுட் திரையுலக மன்னர் (கிங் கான்)எனப் புகழப்படுகிற ஷாருக்கான். நேதாஜி சுபாஷ்சந்திரபோஸின் ஐஎன்ஏ என்றழைக்கப்படும் இந்திய தேசிய இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்த ஷா நவாஸ்கானின் வளர்ப்பு மகள்தான் ஷாருக்கானின் தாயார் லத்தீஃப் பாத்திமா.அடிமை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டஓர் இளம் வீரன் தன் தந்தை என்பதில் ஷாருக்கான் சுயகர்வப்படுவது உண்டு. பாகிஸ்தானுக்குப் போய்விடும்படி ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஷாருக்கானை மிரட்டியபோது, இந்த நாட்டில் வாழ்வதற்கான அதிக உரிமை எனக்குத்தான் உள்ளது என்று அவர் மனஉறுதியுடன் சொன்னது,
தான் இந்தப் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு என்பதால்தான். பாகிஸ்தான் செல்ல அனுமதி கிடைத்த போது, அங்கே பார்க்க வேண்டியவர்கள் யாரும் இல்லையெனத் தந்தை தன்னிடம் சொன்னதை மறக்கவில்லையென்று, இனி வெளியிடவுள்ள "20 இயர்ஸ் இன் ஏ டெக்கேட்" என்ற தனது சுயசரிதையில் ஷாருக்கான் நினைவுப்படுத்துகிறார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் வறண்ட தரிசு பூமியில் மகனையும் உடன் அழைத்துக் கொண்டு நடந்து செல்லும்போது, தந்தை மிர்தாஜ் முகமத்கான் தங்கள் குடும்பக் கதையைச் சொல்லக் கேட்டிருக்கிறார் ஷாருக்கான். அப்போது ஷாருக்கானுக்கு வயது 14.1980-இல் தங்கள் வீட்டைப் பார்ப்பதற்குச் சென்ற அந்தப் பயணத்தின் நினைவுகள் இன்று50 வயதுக்காரராகிய ஷாருக்கானின் மனதைவிட்டு நீங்கவில்லை. இவரின் தந்தைக்கு சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆறுமொழிகள் தெரியும். எம்.ஏ., எல்.எல்.பி. பட்டங்கள் பெற்றவர். நேருஜியின் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பு உண்டு. ஆனால் அரசியலில் ஈடுபட அவருக்கு விருப்பமில்லை. அதேசமயம், அவருடன் நெருக்கமாக இருந்த பழைய நண்பர்கள் பலரும் அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் ஆனார்கள்.வியாபாரத்தில் கூட்டாளிகள் ஏமாற்றியதால் வியாபாரம் நஷ்டமாகிப்போனது. முடிவில் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்காக ஒரு சிறிய டீக் கடை ஆரம்பித்தார் மிர்தாஜ் முகமத்கான். வாடகை கொடுக்கமுடியாததால் பலமுறை இடத்தை மாற்றினார். ஷாருக்கானின் 15-வது வயதில் தந்தை புற்றுநோயினால் இறந்துவிட்டார்.ஷாருக்கானின் தந்தைக்கும் தாயாருக்கும் மத விஷயத்தில் பிடிவாத குணமில்லை. "குர்ஆன் வாசிக்க வேண்டுமென்று தோன்றினால் குர்ஆன் வாசிப்போம்; பைபிள் வாசிக்க வேண்டுமென்று தோன்றினால் பைபிள் வாசிப்போம்; மகாபாரதம் வாசிக்க வேண்டுமென்று தோன்றினால் மகாபாரதம் வாசிப்போம்."பெற்றோர்களின் இந்தச்சொல்தான் தனது மதநல்லிணக்க நிலைக்கு அடிப்படை என்கிறார் ஷாருக்கான். எங்கள் குழந்தைகளாகிய ஆர்யனையும், சுகானாவையும், அப்ராமினையும் இது போலவே வளர்க்கவேண்டுமென்பதே என் விருப்பமும் என் மனைவி கௌரியின் விருப்பமுமாகும் என்கிறார்.
6.11.2015 தேசாபிமானியிலிருந்துதமிழில்: தி.வ
God has taken a avathar and used his all power to demolish a human kamsa.
Vv...puriyala...
தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது.அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு.
இன்றைய கவிதை.
நிழல் தரும் மலர்ச்செடி..
இடையில் சிறுத்த
கரிய
அழகிய
அதன் நிழலுக்காகத்தான்
அந்தச் செடியை
நான் வாங்கினேன்
நிழலில் கூட அது
கறுப்பு மலர்களை
பிறப்பித்திருந்தது
நிழலுக்காகத்தான்
அந்த மலர்ச்செடியை
நான் வாங்குவதாக
உன்னிடம் சொன்னபோதே
மர்மப் புன்னகை
பூத்தாய்
செடியை நான்
மடியில் வைத்து
பேருந்தில் அமர்ந்தபோதுதான்
பார்த்தேன்
நிழலின்றிச் செடி
அம்மணமாய் இருந்ததை.
உடனே நான்
உன்னிடம் ஓடி வந்தேன்
செடியை நீ
நிழலின்றி
கொடுத்ததைச் சொன்னேன்
வெட்கமின்றி நீ
வாய்விட்டுச் சிரித்தாய் –
இங்கேயும் இல்லை பார்
அச்செடி நிழலென்று.
பெண் வியாபாரத்தில்
ஆண் சொல்
அம்பலம் ஏறுமா?
சோர்வுடன் நான்
வீடு திரும்பி
வாசலில் செடியை வைத்தேன்
என் சோகம்
பொறுக்காமல்
மறைத்து வைத்திருந்த
நிழலை
விரித்துச் சிரித்தது
சிறு குழந்தையைப்போல்
செடி.
1.அறஞ்செய விரும்பு! Intend to do right deeds! விளக்கம் : தருமம் செய்ய நீ விரும்புவாயாக!! Have desire to do good!
ஐம்பூதங்களில் நிலம் குறித்துப் பார்த்துக் கொண்டிருக் கிறோம். ஒருங்கிணைந்த தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்த பேராசிரியர் தங்க. ஜெயராமன் அந்தப் பண்பாட்டின் சாரமாகத் திகழ்பவர்.
நிலம் குறித்து அவர் எழுதி அனுப்பியதைப் பார்த்தபோது, மண்ணில்தான் எத்தனை வகைகள், மண்ணுக்குத்தான் எத்தனை பெயர்கள் என்று தோன்றுகிறது. "தஞ்சைப் பகுதியில் மண்ணை வண்டல், களி, மணற்சாரி, இருமண்வாகு, களர், ஈளை என்றெல்லாம் சொல்வார்கள்" என்று பட்டியலிடும் ஜெயராமன், இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றுக்குமான விளக்கங்களையும் தருகிறார்.
"இருமண்வாகு என்றால் களியும் வண்டலும் (இரண்டறக் கலக்காமல்) ஒன்றோடு ஒன்று விரவிக் கிடப்பதாக இருக்கும் நிலம். உயர்வானது. ஆற்றுப் படுகை வண்டலாகவே இருக்கும். கடற்கரையை ஒட்டிய பகுதி மணற்சாரியாக இருக்கும். திருத்துறைப்பூண்டிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் ஒரு பெரும் பரப்பு இப்படி உள்ளது. களர் என்பது சற்று உப்பாக இருக்கும். பயிர் தழைக்காது. மண் உப்புப் பூத்ததுபோல் இருக்கும். இதற்குத் தழை உரமான கொழிஞ்சி, பில்பசலி, டேஞ்சா, சஸ்பேனியா முதலியவற்றைத் தெளித்து வளர்த்து அதை மடக்கி உழுது மண்ணை மாற்ற முயற்சிப்பார்கள். கீழத் தஞ்சையில் பல இடங்களில் இது தீவிரமாக நடந்தது. இப்போது காண முடிவதில்லை. அதாவது ரசாயன உரத்தையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம். பனை மட்டையைக்கூட மண்ணில் புதைத்துக் களர் நிலத்தை மாற்ற முயல்வார்கள். ஈளை என்பது எதற்கும் உதவாதது. பல இடங்களில் வயலிலும் இருக்கும். இதை உழுது சேறாக்க முடியாது. பயிர் இதில் தழைக்காது. ரப்பர் போல இழு, இழு என்று இருக்கும். தண்ணீர் குறைவாக இருந்து, மண் மலர்வதற்குள் (பூங்கார்ப்பு ஆவதற்குள்) மீண்டும் காய்ந்து, பிறகு நனைந்து, இப்படியே பூங்கார்ப்பு கொடுக்காமல் இருந்தால் மண் கலுங்குப்பட்டுவிடும். கலுங்குப்பட்டால் உழும்போது ரப்பர் பந்துகளாகத்தான் வரும். சேறே ஆகாது. இது கீழத்தஞ்சை மண்ணின் தனித்தன்மை. பூங்கார்ப்பு கொடுத்துவிட்டால் மண் ஒரு சால் ஓட்டினாலே நடுவதற்குத் தோதாகிவிடும். நீர்ச்சிக்கனம், முறைப் பாசனம் என்பவர்கள் இதை கவனிக்க வேண்டும். நிலம் எளிதாகச் சேறாவது நெல் சாகுபடியில் முக்கியமான கட்டம்.
நல்ல மண் என்றால் 'சர்க்கரை'யாக (நாட்டுச் சர்க்கரை) இருக்கிறது என்பார்கள். சாகக் கிடக்கும் முதியவர்கள் உயிர் போகாமல் இழுத்துக்கொண்டு கிடந்தால் கொஞ்சம் வயல் பொறுக்கைக் கரைத்து வாயில் விடுவார்கள். மண்ணாசை தீர்ந்தால் உயிர் விடுபடும் என்று" எனச் சொல்கிறார் தங்க.ஜெயராமன்.
ஆஹா, ஆஹா.. என்ன மண் வளம், என்ன சொல் வளம்!
இப்படி ஒவ்வொரு பகுதியிலும் நிலத்தைக் குறிப்பிட மட்டும் எத்தனை எத்தனை சொற்கள் வழக்குகள் புழங்குகின்றன என்று வாசகர்கள் அனுப்புங்களேன். பகிர்ந்துகொள்வோம்!
இன்றைய கவிதை!.
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்.
விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்
சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்
உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை
திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!
உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு
பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு
மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை
விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்!
அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு
உறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு
உடமையெல்லாம் இழந்தாலும் –
எதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்
மார்தட்டி ஊரொழிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி
காதலிச்சும் ஊர் பிடிச்ச கதையுண்டு – பார்த்தாச்சி
யாரடிச்சு யார் மாண்டுபோயினும் – எவனடிச்சும் சாகா தமிழனுக்கு
எழுச்சிக் கவிதைகள் கொடுத்தது; சுதந்திரம்!
பெண்ணென்றால் போகமென்றே வாழ்ந்தவனும்
அடுப்பூதி சமைப்பவளுக்கு படிப்பேனெனக் கேட்டவனும்
வைப்பாட்டி வைத்திருந்தாலும் வாரிசை மட்டும் வளர்த்தவனும்
திடுக்கிட நிமிர்ந்திட்ட பெண்ணின் பலத்திற்குமாய்
சேர்த்துக் கிடைத்தது; சுதந்திரம்!
உயிருக்கெல்லாம் மண்ணென்ற விலைவைத்து
மண்ணிற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர்வைத்து
ஆடைமுதல் சோறுவரை மாற்றிவிட்ட வெள்ளையனால்
மாறாத பழைய தமிழனின் மானம் தந்தது; சுதந்திரம்!
காக்கை குருவி போல் சுட்டு சுட்டு எறிந்த
வெள்ளையனுக்கு, இறக்கப் போகிறோமெனத் தெரிந்தும்
மார்பை திருப்பிக் காட்டிய தமிழனின்
தியாகத்திற்குக் கிடைத்தது; சுதந்திரம்!
ரத்தநெடி மூக்கு சுரண்டி; செத்தபிணம் செவிட்டில் அறைந்து
முடங்கிக் கிடந்த சோம்பேறி இளைஞனை
அடிமை அடிமை என்ற ஓர்சொல்
அடங்கமறுத்து அடங்கமறுத்து பெற்றது; சுதந்திரம்!
வீட்டில் உறங்ககூட ஊரான் தடுத்ததை எதிர்த்து
வீட்டில் விளைந்ததைகூட ஊரான் பறித்ததை எதிர்த்து
வீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து
என் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை
எதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!
CCTV (closed circuit television 📺)- சுற்று மூட்டத் தொலைக்காட்சி.
தமிழ்
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன.
அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
அவற்றைத் தெரிந்து கொள்வோம்.
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்...
மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை..
"தவிப்பு.."
வருடத்திற்கு ஒரு முறை
இரண்டு வாரம்
தாய் வீடு போகிறாய்...
பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு...
காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..
வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது...
செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..
இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை.. பழங்களை
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்...
முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி...
தண்ணீர்.. மோட்டார்.. டி வி
போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்...
கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே
வெளியில் கிளம்பி விடுகிறேன்..
தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை..
இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...
"இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்..."
என்று.....
ஒரு வார இதழில் பரிசு பெற்ற கவிதை.
நாலடியார்
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
பொருள்:-
தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவரிடம் இல்லை.
காதில் கம்மல், கழுத்தில் 'ஓம்' டாலர் சகிதம் சுடிதார் காஸ்ட்யூமில், ''ஐ லவ் டேமில்நாடு'' என்றபடியே வரவேற்கிறார் ஆஸ்ட்ரா! லாட்வியா நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும் தமிழ்நாட்டு மருமகள். தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் கொண்ட காதலால், இப்போது திருக்குறளை லாட்விய மொழியில் மொழிபெயர்த்து வருகிறார் இவர். உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள், லாட்விய மொழிக்குப் போவது இதுதான் முதல்முறை!
''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே லாட்வியாவுல! ரஷ்யாவுக்குப் பக்கத்துல இருக்கிற குட்டி நாடு எங்களோடது. மொத்தமே 20 லட்சம் மக்கள்தான். இதுல, தலைநகர் ரீகாவுல மட்டும் பத்து லட்சம் பேர் இருப்பாங்க. அங்க, பொலிடிக்கல் சயின்ஸ் படிச்சிட்டு, வெளியுறவுத் துறையில வேலை பார்த்திட்டு இருந்தேன். அப்போதான் இவரைச் சந்திச்சேன். காதலிச்சு கைப்பிடிச்சேன்!'' என தனது காதல் கணவர் கரிகாலனை கைகாட்டித் தொடர்கிறார் ஆஸ்ட்ரா.
''எங்க வீட்டுக்குப் பக்கத்துல இவரோட வீடு இருந்துச்சு. எனக்கு இந்தியர்கள் மீது ரொம்ப மரியாதை. ஏன்னா, இந்தியாவைப் பத்தி நிறைய நல்ல விஷயங்களைப் படிச்சிருக்கேன். இங்க மக்கள் பேசற வெவ்வேறு மொழிகள், யோகா, கோயில்கள்னு எல்லாம் பற்றியும் நெட்ல படிச்சிருக்கேன். குறிப்பா, தமிழ்நாடு... இங்க தனித் தமிழ் இயக்கம், மொழிப் போராட்டம் இதெல்லாம் எனக்குப் பரிச்சயமாச்சு.
பழமையான மொழியைப் பேசற ஒவ்வொரு இனமும் தங்கள் மொழியைக் காப்பாத்த இப்படி போராட்டங்கள் நடத்திய வரலாறு இருக்கு. இது மாதிரியே லாட்வியாவிலும் 'தூய்மை லாட்வியம்'னு ஓர் இயக்கம் 1900களில் நடந்திருக்கு. இப்பவும் நாங்க எங்க மொழியில் மற்ற மொழி வார்த்தைகளைக் கலக்கறதில்லை. எங்க நாட்டுக்கும் பொதுவான கரன்சி யூரோ. அதைக் கூட எங்க மொழியில எப்படி சொல்லலாம்னு இப்போ விவாதம் நடத்திட்டு இருக்காங்க. எங்களைப் போலவே மொழியை நேசிக்கிற தமிழர்களோட நான் என்னை ரொம்ப நெருக்கமா உணர்றேன்.
நான் ரோமன் கத்தோலிக்கா இருந்தாலும், தமிழ்ப் பண்பாட்டு ஈர்ப்பால எல்லாக் கோயில்களுக்கும் போவேன். காஞ்சிபுரம் கோயில்களைப் பார்க்கும்போது பிரமிப்புல கண் கலங்கிடுச்சு. அவ்வளவு அழகு! அப்புறம், இவரோட லண்டன்ல அஞ்சு வருஷம், கொழும்புல மூணு வருஷம்னு வாழ்க்கை போச்சு. அப்போ, ஒருநாள் இவர்தான், 'வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் போதிக்கிற ஒரே நூல் திருக்குறள்'னு சொன்னார்.
உடனே, ஜி.யு.போப் ஆங்கில உரையை எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். திருவள்ளுவர் ரெண்டே வரிகள்ல எல்லாத்தையும் கச்சிதமாக பேசிட்டுப் போறது ஆச்சரியமா இருந்துச்சு. படிக்கப் படிக்க எனக்குள்ள பிரமிப்பு எழுந்தது! எனக்கு லாட்விய மொழி தவிர சுவீடிஷ், ஜெர்மன், ரஷ்யன், ஆங்கிலம்னு நான்கு மொழிகள் தெரியும். இதில் லாட்விய மொழியிலதான் திருக்குறள் இன்னும் வரல.
அதனால, கண்டிப்பா எங்க மொழிக்கு திருக்குறளை கொண்டு சேர்க்கணும்னு நினைச்சேன். இப்போ, அறத்துப்பால் முடிச்சிட்டேன். இன்னும், நாலு மாசத்துல லாட்விய மொழியில திருக்குறள் இருக்கும்!'' என நம்பிக்கை கொடுக்கும் ஆஸ்ட்ராவுக்கும் கரிகாலனுக்கும் இரண்டு பெண் குழந்தைகள்... நர்மதா டயானா, கீர்த்தி. இருவரும் சென்னை பள்ளி ஒன்றில் படிக்கிறார்கள்.
மனைவியின் இந்த முயற்சி பற்றி சிலாகித்துத் தொடர்கிறார் கரிகாலன். இவர் இலங்கைத் தமிழர். ''நான் ஸ்கூல் படிச்சதெல்லாம் சென்னையிலதான். பி.இ படிக்க லாட்வியா போனேன். அங்கதான் ஆஸ்ட்ரா பழக்கமானாங்க. எங்க கல்யாணம் எந்த எதிர்ப்பும் இல்லாம முடிய காரணமே, அவங்களுக்கு தமிழ்நாடு மேல இருந்த மரியாதைதான்!'' என்கிறார் அவர்.
ஆஸ்ட்ரா சென்னையில் Spears School of Strategy and Managementஇல் பணிபுரிகிறார். இதன் நிறுவனரான பிரபாகரன், ஆஸ்ட்ராவின் திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு உதவி செய்கிறார். ''தமிழுக்கும் லாட்விய மொழிக்கும் உள்ள தொடர்பைப் பத்தி நிறைய விஷயங்கள் ஆஸ்ட்ரா பேசினப்போ, எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. திருக்குறள்ல அவங்களுக்கு 'ஒழுக்கம்', 'ஊழ்', 'அடக்கம்' ஆகிய அதிகாரங்கள் மேல ஒருவித ஈர்ப்பு!
இப்போ, என்னாலான உதவிகளைச் செய்திட்டு இருக்கேன். சீக்கிரமே வௌியீட்டு விழா இருக்கும்!'' என்கிறார் பிரபாகரன் சிரித்தபடி! கண்டிப்பா எங்க மொழிக்கு திருக்குறளை கொண்டு சேர்க்கணும்னு நினைச்சேன். இப்போ அறத்துப்பால் முடிச்சிட்டேன்...
நன்றி: குங்குமம்
கண்ணதாசனும் அண்ணாவும் ஒரு மகிழுந்துவில் போய்க்கொண்டிருந்த நேரம் தொடர்வண்டிக்காக சாலை மூடப்பட்டிருந்தது. அருகில் இருந்த தேநீர் கடையில் சிறு நொறுக்கும் தேநீரும் அருந்திய பின் கண்ணதாசன் தன் வழக்கப்படியே நொறுக்கு இருந்த தாளில் எழுதியிருந்ததை வாசிக்கிறார். அதில் "கல்லைத்தான்
மண்ணைத்தான்
காய்ச்சித்தான்
குடிக்கத்தான்
கற்பித்தானா" என்ற வறுமையைச் சொல்லும் பாடல் இருந்துள்ளது.
அதன் பிரதிபலிப்பாகவே பின்னாளில்
"பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத்தேன் என நான் நினைத்தேன்..அந்த
மலைத்தேன் இதுவென மவலத்தேன்"என்ற பாடலை எழுதியாதாய் செய்தி.
மனைவி: காரணம் இல்லாம குடிக்க
மாட்டேனு சொன்னீங்களே இப்ப ஏன் குடிச்சீங்க?
கணவன்: இல்லடி பையன் ராக்கெட் விட பாட்டில் இல்லனு சொன்னான் அதான்.😂😂
Ambulance 🚑 திரிவூர்தி..