1)ஆதி நல்லவரா கெட்டவரா ???
2)சிவசேனாபதி காசு வாங்கிட்டாரா இல்லை மிரட்டப்பட்டாரா??
3)அந்த பொண்ணு Dmk va இல்லையா??!!
4)RJ Balaji பின்வாங்குராரா இல்லையா??!!
இப்படி நமக்குள்ள பட்டிமன்றம் நடத்திட்டு இருப்போம், அதற்குள் குள்ள நரி ஓநாய்கள் இந்த போராட்டத்தை நீர்த்து போக செய்துவிடும் !!!
யாரை நம்பி போராட வந்தோம் ?? யாருக்காக போராட வந்தோம்?? யார் உணவு அளித்தது ?? எதற்காக சாமானிய மக்கள் அனைத்தையும் குடுத்து உதவினார்கள் ??!! இதையெல்லாம் மறக்க வேண்டாம் என் இணைய நண்பர்களே !!!
நம்மை நம்பிய மக்களை நாம் ஏமாற்ற வேண்டாம் !!! வேற்றுமைகளை களைந்து நம் இலக்கை நோக்கி மீண்டும் வீரு கொண்டு நடப்போம் !!!
➡️ களத்தில் ஆபாச கோஷங்களை தவிருங்கள் , வேறு யாராவது கோஷம் போட்டால் குழுவாக சென்று தடுத்து நிறுத்துங்கள் !!!
➡️ ஆபாச வார்தைகள் தாங்கிய பதாகைகள் கையில் இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள் !!!
➡️ அரசியல் சாயம் உள்ள எந்த புகைப்படத்தையும் ஷேர் செய்யாதீர்கள் !!!
➡️ அவசர சட்டமே போதும்னு நினைக்கும் நபர்கள் யாரையும் குழப்பாம அமைதியா வீட்டுக்கு போகலாம் !!! இது போதாதுனு நினைக்குரவங்க போராட்டத்த அறவழியில் தொடருங்க !!!
➡️ இது எதுவுமே முடியலேனா, எந்த கோஷமும் போடாம அமைதியா உட்கார்ந்து இருங்க !!!
உலகையே திரும்பி பார்க்க வைத்து உள்ளோம் !!! மாற்றத்தை நம்மிடமிருந்தே தொடங்குவோம் !!!
தமிழன்னை வாழ்க 🙏
#AmendPCA
#JusticeForJallikattu
0 கருத்துகள்:
கருத்துரையிடுக