Designed by Enthan Thamizh

சல்லிக்கட்டு 23-01-2017

திசை மாற வேண்டாம்.

மாணவர்கள் போராட்டத்தில் சில அமைப்புகள் உள்ளே புகுந்துள்ளன.

தனி தமிழ் நாடு , இந்துதுவா, தேசிய கொடி, தேசிய கீதம் அவமதிப்பு, மற்றும் பல சமூக வீரோத கொள்கைகளை பரப்புகின்றன.

மாண்புமிகு பாரத பிரதமர், மற்றும் தமிழக முதல்வரின் உருவ படம் எரிப்பு , வசை பாடுதல் போன்ற செயல்கள் அறவே கண்டிக்க தக்கவை.

சல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு மற்றும் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை மட்டுமே இந்த போராட்டத்தின் நோக்கம். வேறு எதை நோக்கியும் இதை திசை திருப்ப வேண்டாம். திசை திருப்புவர்களை அனுமதிக்க வேண்டாம்.

முதல் நாளில் இருந்து காவல் துறை மற்றும் அரசாங்கம் நம்மை போராட அனுமதித்து அமைதி அற வழி போராட்டமாக இது நடைபெறுகிறது.

சில புல்லுருவிகள் தமிழ், தமிழன் என்ற போர்வையில் அரசியல் செய்கிறது. 

அவ்வாறு பேசுபவர்கள் மற்றும் நடந்து கொள்பவர்களை அனுமதிக்க வேண்டாம்.

நாம் மற்ற எந்த பிரச்சினை என்றாலும் ஒன்று கூடுவோம் என நம் ஒற்றுமையை நாம் காட்டி விட்டோம். அது போதும். இனி நம்மை இலகுவாக ஏமாற்ற முடியாது.

எனவே சல்லிக்கட்டு தவிர சில தேசிய விரோத கொள்கைகளை பேசுபவர்களை அனுமதிக்க வேண்டாம். நாம இந்தி்யாவில் தமிழர்கள்.. உலக நாடுகளுக்கு இந்தியர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

தயவு செய்து, சில கட்சி கொள்கைகளையோ மத பூச்சுகளையோ அனுமதிக்க வேண்டாம்.

இந்த அவசர சட்டம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றபட்டால் நிரந்தரமாக மாற வாய்ப்பு உள்ளது..

எனவே நமது இலக்கு சல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு .. அதை மட்டும் போராட்ட களத்தில் பேசவும்.

சிலர் தனிப்பட்ட முறையில் பிரதமர், முதல்வர், மற்றும் சிலரை திட்டுவதும், கெட்ட வார்த்தை பலகைகளை ஏந்தி சுற்றுவதையும், தயவு கூர்ந்து தவிர்க்கவும். நமது நோக்கம் அதுவல்ல.

போராட்டத்தில் உள்ள முகம் தெரியாத புல்லுருவிகளை வெளியேற்றாவிட்டால் நம் சனநாயகத்திற்கு கேடு விளைவிக்கும்.

இத்தனை நாள் நாம் போராடிய உண்மையான கொள்கை திசை திரும்பாமல் பார்த்துக்கொள்ளவும்

நன்றி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக