Designed by Enthan Thamizh

1."நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"

"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"                                                                                                                                                                                                                                    
---------

2.என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார்  டாக்டர்...!""
"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு  போவட்டும்!"
---------------

3."இதென்ன... டாக்டரை வரச்சொல்லி போன் செய்தீங்க... ஒரு குடும்பமே  வந்து நிக்குதே?"
"அதான் சொன்னேனே.. இவர் குடும்ப டாக்டர்ன்னு...!
----------------

4.டாக்டர் : "ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே…. மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?"

சம்போ : "இல்ல டாக்டர்…. நர்ஸை நினைச்சுகிட்டேன்….!"
-------------

5."பர்ஸ் தொலஞ்சு போச்சு. டிபன் சாப்பிட முடியல."

"உனக்கேது பர்ஸ்?"

"எனக்கு டிபன் வாங்கித் தரேன்னு சொன்னவர் பர்சு தொலஞ்சு போச்சுன்னு சொல்றேன்..."
--------------

6.அவர் : இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது 
என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
அவர் : இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும்   செலவழிச்சுடுவான்.
---------------

7.திருடன் : (சிறுவனிடம்) தம்பி! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை  எங்கே வைப்பாங்க சொல்லு..

சிறுவன் : அடகுக் கடையிலே!
---------------

8.வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு  கஷ்டம் வந்திருச்சி!.
-----------------

9.உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்

பாமா : எதை வைத்து?

உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
-----------------

10.ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
-------------

#இந்த_கதையை_10_தடவை_படிச்சாலும்_திரும்ப_திரும்பவும்_சிரிப்பேன்!!

அவ்ளோ காமெடி!!

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது...

சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி யானையிடம் கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது....

அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை  இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்...?"

அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் ... "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."

1.ஆந்திர பிரதேசம் - தெற்கு பிராந்தியம்.
    சமஸ்கிருதத்தில் "ஆந்த்ரா" என்றால் தெற்கு என்று பொருள்.

2. அருணாச்சல பிரதேசம் - முதல்ஒளி மலைகள் பிராந்தியம்.
      சமஸ்கிருதத்தில் "அருணா" என்றால் "முதல்ஒளி" அல்லது "மூலஒளி" என்று பொருள். இந்தியாவல் முதல் சூர்ய உதயம் இங்கு நடைபெருவதால் இப்பெயர் ஏற்பட்டது.

3. அஸ்ஸாம் - நிலையற்ற
      சமஸ்கிருதத்தில் "அஸமா" என்றால் "நிலையற்ற" என்று பொருள்.

4. பிகார் - புத்தமடலாயம்
      சமஸ்கிருதத்தில் "விகார்" என்றால் " புத்தர் கோவில்" என்று பொருள். பிராகிருதத்தில் பிகார்.

5. சத்திஸ்கர் - 36 கோட்டைகள்.
     ஹிந்தியில் சத்திஸ் என்றால் 36.

6. கோவா - பசு மந்தை
      சமஸ்கிருதத்தில் "கோ" என்றால் "பசு".

7. குஜராத் - குஜ்ஜார் இன மக்களின் நிலம்.
      7ம் நூற்றாண்டில் குஜ்ஜார் மக்கள் இப்பகுதியை ஆண்டதால் இப்பெயர் ஏற்பட்டது. குஜ்ஜார் அல்லது கூர்ஜர என்றும் அழைக்கப்பட்டது.

8. ஹரியானா - விஷ்ணுபகவான் வந்த இடம்.
      மகாபாரத போர் நடந்த குருேக்ஷத்திரம் உள்ள பகுதி. அங்கு கிருஷ்ணர் வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.

9. ஹிமாச்சல் பிரதேசம் - பனிமலை பிராந்தியம்.

10. ஜம்மு & காஸ்மீர் -
      ராஜா ஜம்பு லோசன் ஆண்ட பகுதி ஜம்மு
      காஸ்யப ரிஷி வாழ்ந்த பகுதி என்பதால் காஸ்யப என்று அழைத்தனர். உருதுவில் காஸ்மிர் என்றனர்.

11. ஜார்கண்ட் - வனம் நிறைந்த மலைகள்.
     ஜார் - வனம்
     கண்ட் - மலைகள்

12. கருநாடகா - உயர்நில நாடு

13. கேரளா - சேர்க்கப்பட்ட நாடு.
      பரசுராமர் அம்பு எய்து கடலை வற்றச்செய்து உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது.

14. மத்ய பிரதேசம் - மத்திய அல்லது நடுவண் பிராந்தியம்.

15. மகாராஷ்ட்ரா - சிறந்த(அ)பெரிய நாடு.

16. மணிப்பூர் - நகை(அ)ஆபரணங்களின் நிலம்.

17. மேகலாயா - மேகங்களின் நிலம்.

18. மிஸோரம் - உயர்நிலத்தில் வாழும் மக்களின் பகுதி.

19. நாகலாந்து - நாகர் இன மக்களின் நிலம்.

20. ஒடிசா(அ)ஒரிசா - ஓட்ர இன மக்களின் நாடு.

21. பஞ்சாப் - ஐந்து நதிகள்

22. ராஜஸ்தான் - ராஜபுத்திர இன மக்களின் இடம்.

23. சிக்கிம் - புதிய அரண்மனை.
      திபெத்திய மொழியில் "சு" என்றால் "புதிய" என்றும் "க்யிம்" என்றால் அரண்மனை.

24. தமிழ்நாடு - தமிழர்களின் நாடு.

25. தெலுங்கானா - தெலுங்கர்களின் இடம்.

26. திரிபுரா - திரிபுர சுந்தரி என்னும் கடவுளின் பெயரால் ஏற்பட்டது.

27. உத்தர பிரதேசம் - வடக்கு பிராந்தியம்.

28. உத்திரகண்ட் - வடக்கு மலைகள்.

29. மேற்கு வங்கம் - வங்க இன மக்களின் இடம்.

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்; இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;

அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர், தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப் படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.

ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை 1 முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் "பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை"க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம்உதிக்கும் "அ" சுவாசிப்பு அமைப்பில் அடி 6வயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் "உ" மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் "ம" தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.

ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது. அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:

தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு "ஓ" என்று ஆரம்பித்து "ம்" என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர்  25 முதல்  40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார். அமைதியான ஒரு அறையில் 44.1ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,

1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.

2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.

3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256  ஹெர்ட்ஸீம், ஸ்வாதிஷ்டானத்தில்288  ஹெர்ட்ஸீம், மணிபூரத்தில் 320 
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம், சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது..

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்

ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை, சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.

இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம். அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டு பிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.

அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே. இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

ஓம் நமச்சிவாய.

மஹாசிவராத்திரி என்பது வரம் கிடைக்கும் இரவு. ஆம், இது நிஜம்தான்! வாழ்வை இன்னும் ஆழமாக, ஆனந்தமாக நீங்கள் வாழ்வதற்கு இயற்கையே வழங்கும் வரம் இது!

நம் வாழ்வை நாம் வாழும்விதம், உணரும்விதம், நம் செயல்திறன் என அனைத்தும் நம் சக்தியளவைப் பொறுத்துதான் அமைகிறது. மஹாசிவராத்திரி அன்று கண்விழித்து, முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால், நம் சக்திநிலை உயர்கிறது. இதனால் ஆனந்தமான வாழ்க்கை மட்டுமல்ல, வேண்டி விரும்புவோருக்கு "முக்தி"யும் கூட சாத்தியமே!

மஹாசிவராத்திரி அன்று நிலவும் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி இழுக்கிறது. அன்றைய இரவு முழுவதும், முதுகுத்தண்டை நேராக வைத்திருப்பது உயிர்சக்தி மேலெழும்ப உதவியாக இருக்கும். இல்லறம், துறவறம் என்ற வித்தியாசமின்றி, எல்லோருக்குமே இந்த இரவு நன்மை தரும். அவ்வளவு ஏன், நம் கலாச்சாரத்தில் பல யோகிகளும், முனிவர்களும் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். அத்தனை சக்திவாய்ந்த இரவு மஹாசிவராத்திரி!

சிவன் சக்திநிலையின் உச்சம். அந்த உச்சபட்ச சக்திநிலையை அடைய இந்த இரவு நமக்கு உதவுவதால், இது சிவராத்திரி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசைக்கு முந்தைய நாள், சிவராத்திரி. அந்த மாதத்திலேயே அதுதான் மிக இருளான இரவாக இருக்கும். ஒரு வருடத்தில் ஏற்படும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, பிற சிவராத்திரிகளை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கிறது. அதைத்தான் மஹாசிவராத்திரி என்கிறோம்.

இருள்
மஹாசிவராத்திரி என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. சிவராத்திரி, மஹாசிவராத்திரி... இவையெல்லாம் இருளைக் கொண்டாடுவதாகத்தான் இருக்கின்றன. இருள் என்ற வார்த்தையின் ஆழமான பொருள் "எது இல்லையோ அது." எது "இருக்கிறதோ" அது பிரபஞ்சம், அதுதான் படைத்தல். எது "இல்லையோ" அது சிவன்.

கண்திறந்து சுற்றிலும் பார்க்கும்போது, படைப்பின் பல அம்சங்கள் உங்களுக்குத் தென்பட்டால் உங்கள் கண்ணோட்டம் மிகக் குறுகியதாக் இருக்கிறதென அர்த்தம். உங்கள் நோக்கு உண்மையிலேயே விரிந்திருந்தால், இந்த பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் பரந்து விரிந்த வெறுமையை அல்லவா பார்ப்பீர்கள்! வானில், மிகச்சிறிய புள்ளிகளாகத் தெரியும் ஆகாயவெளி மண்டலங்கள்தான் அதிகமான கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அவற்றைத் தாங்கி இருக்கும் பரந்த வெறுமை பலரின் கவனத்திற்கு வருவதில்லை.

இந்தப் பரந்துவிரிந்த எல்லையற்ற வெறுமையைத்தான் சிவன் என்று சொல்கிறோம். இன்றைய நவீன விஞ்ஞானமும் அனைத்துமே ஒன்றுமில்லாததிலிருந்து பிறந்து, மீண்டும் அதற்குள்ளேயே செல்கிறது என்று நிரூபித்துள்ளது. இதே அடிப்படையில்தான் இந்தப் பரந்த வெறுமையை, ஒன்றுமற்ற தன்மையை, "மஹாதேவன்" என்று குறிப்பிடுகிறோம்.

எங்கும் பரவியிருக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் இருள் அல்லது ஒன்றுமற்ற வெறுமை மட்டும்தான். பொதுவாக நல்வாழ்வை வேண்டும் மக்கள், தெய்வீகத்தை ஒளியாகப் பார்கிறார்கள். ஆனால், நல்வாழ்வையும் தாண்டி கரைந்து போக விரும்பும் மக்களுக்கு, அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளும் இருளே தெய்வீகம்.

உலகின் முதிர்ச்சியற்ற மனங்கள் தான் இருளை தீயசக்தியாக சித்தரிக்கின்றன. உண்மையிலேயே "தெய்வீகம்" என்பது எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றென்றால், இயல்பாகவே நீங்கள் தெய்வீகத்தை இருளின் வடிவமாகத்தான் காணமுடியும். ஏனெனில், இருள்தான் எங்கும் பரவியிருக்கிறது. அது நிலைத்திருக்க யாரின் உதவியும் அதற்குத் தேவையில்லை.

"ஒளி" என்பது தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் ஒரு எரிபொருளில் இருந்து வருகிறது. அதற்கென்று ஒரு தொடக்கமும், முடிவும் இருக்கும். எரிபொருள் தீரும்போது ஒளியும் இல்லாமல் போகும். ஆனால், இருளுக்கு எந்த மூலமும் கிடையாது; அதற்கு அதுதான் மூலம். அது எங்கும் நிறைந்திருக்கும் தன்மை கொண்டது.

சிவன் எனும் இந்தப் பிரபஞ்சத்தின் பரந்துவிரிந்த வெறுமையின் மடியில்தான் இம்முழு படைப்பும் நிகழ்ந்திருக்கிறது. இந்த அருள் மடியை, சிவனை நாடித்தான் நம் கலாச்சாரத்தின் பிரார்த்தனைகள் அமைந்தன. நம் பழங்காலப் பிரார்த்தனைகள் பாதுகாப்பு கருதியோ, வளமான வாழ்க்கை நாடியோ செய்வதாக இருக்காது. "அனைத்திலும் உயர்ந்தவனே! என்னை அழித்து விடு! அப்போதுதான் நான் உன்னைப் போலாக முடியும்" என்பதுதான் நம் பிரார்த்தனையாய் இருந்தது.

எனவே, மாதத்தின் இருளான நாளாகிய இந்த சிவராத்திரி, ஒருவர் தன்னுடைய கட்டுப்பாடுகளை எல்லாம் கரைத்துவிட்டு, தன்னுடைய உருவாக்கத்துக்கு விதையான, படைப்பின் மூலமான, எல்லையற்ற தன்மையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பு!

விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி ஒரு மனிதரின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு காரணமாக, அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்தால், அவருக்குள் இயற்கையாகவே ஆன்மீகம் வளரும்

சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை, 
மதம் என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து வெளிப்படுத்திய ஆய்வு செய்யப்படவேண்டிய கருத்துக்களைத் திரித்து ஒரு சமய சட்டத்திற்கு மட்டுமே உரியதாக மாற்றிவிட்டனர்.

அணுத் துகள்கள் மற்றும் பிரஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் அவர்கள் தத் தம் நூல்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ள்ளனர். இவற்றை நாம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் சமயம் சார்ந்த கோட்பாடுகளில் இவர்களைக் கட்டிப் போடுவது அழகல்ல.

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர் வீச்சுக்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

இத்தகைய கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்த சித்தர்கள் தம் யோக வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து வெளிப்படுத்தினார்கள்.

அவர்களின் அன்றைய வானவியல் கோட்பாடுகளை ஆய்வு செய்தால் அது இன்றைய விஞ்ஞானத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது.

இன்றைய விஞ்ஞானம் பெரிதும் நம்பியிருக்கும் அனைத்து சாதனங்களும் இந்த பிரஞ்சத்திலிருந்து எடுக்கப்பட்டவையே தவிர அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல.
அவர்கள் சிந்தனை உட்பட அனத்தும் அவர்களால் இயக்கப்பட்டதல்ல.

மஹா சிவராத்திரி:
சிவன்–இதில் மறைந்துள்ள ஒவ்வொரு எழுத்தின் ஒலி ஓசைக்கான உண்மை விளக்கம் வேறு ஆனால் இவற்றை ஒரு சமயம் சார்ந்த விளக்கமாக மாற்றி மதங்களுக்கிடையே விவாதம் செய்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் வல்ல இறைசக்தி ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் போது பிற மதங்களின் கோட்பாடுகளில் மட்டும் ஏன் இருக்க முடியாது?
இது நம் சிற்றறிவைதான் குறிக்கிறது. இவையனைத்தையும் கடந்தவர்கள் தான் சித்தர்கள்.

மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.

அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.

மனிதன் சமநிலை தவறாத வண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமியை கவனியுங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும் சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு...

பெளர்ணமி நல்ல நாள் என திருமணம், தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது.

அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன் சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி, திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.

ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும்.

சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.

உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சிவகங்கையின் சிறப்பு:
தமிழில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தத்தை தெரிந்து உருவாக்கியவர்கள்தான் சித்தர்கள். தமிழிலுள்ள உயிரெழுத்துக்கள் 12ம் மெய் எழுத்துக்கள் 18 உயிரும் மெய்யும் மற்றும் இவை இரண்டும் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஆகியவற்றின் பிறப்பிடங்கள் நம் உடலில் எங்கிருந்தெல்லாம் பிறக்கின்றன என்பதை ஆய்வு செய்து அதனை மொழிவடிவமாக்கி உருவாக்கியவர்கள் நம் சித்தர்கள்.

மஹா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட கிரகங்களின் மற்றும் பேரண்டங்களின் கதிர்வீச்சுக்கள் இந்த பூமி முழுவதும் வியாபித்துக் காணப்படும், அதே சமயம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியில் இருந்து நீரூற்று பிறப்பெடுத்து ஓடும். இந்த நீரூற்றுதான் சித்தர்கள் கூறும் முப்பு, அண்டக்கல் என்றழைக்கப்படும் அனைத்தையும் மாற்றியமைக்கப் பயன்படும் திரவியம். இதைப் பயன்டுத்தி் ஒருவரால் அனைத்தையும் மாற்றியமைக்க முடியும்.

இரும்பையும் தங்கமாக மாற்ற முடியும் என்பதால் இதை கண்டறிய ஒரு கூட்டமே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் இது அசாத்திய யோக சாதனை பெற்றவரால்தான் அதன் இருப்பிடம் அறிய முடியும்.

இத்தகைய சிறப்புபெற்ற ஊற்று பிறப்பெடுப்பதாலே அவ்விடத்திற்கு சிவகங்கை எனப் பெயர் சூட்டினர்.
இதுமட்டுமல்லாது அன்றைய தினம் இப்பூமி முழுவதும் பரவி இருக்கும் அற்புத சக்தியை சித்தர்கள் தியானத்தின் மூலம் தங்களின் ஆத்ம வளர்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.

அதாவது அன்றைய நாளில் அவர்கள் செய்யும் தியானமானது, மூன்று மாதங்கள் ஒருவர் இடைவிடாது தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுக்கும். இது சித்தர்களின் சாதனை முறை. இதையே நம் முன்னோர்கள் அன்றைய தினம் கண் விழித்து இறைவனை துதி பாட வேண்டும் என்றுக் கூறினார்கள்.ஆனால் அவர்கள் இங்கு குறிப்பிட்டது புறக்கண் விழிப்பையல்ல, அகக்கண் விழிப்பு நிலையுடன் கூடிய தியான நிலையைதான்.

இனவே நாமும் இப்புனித தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலைக் கிரகித்து மகிழ்வுடன் வாழ்வோமாக..

"அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின் 
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே. "
-திருமூலர்

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அந்த கீதையை உபதேசித்தது பற்றியே ஒரு சந்தேகத்தை எழுப்பினான், அர்ஜுனன்.

அர்ஜுனனின் சந்தேகம் என்ன தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ணர், மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை அருளியிருக்கிறார். நுட்பமான அரிய பல உண்மைகளை எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்?

பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். ஒரு வேளை, அவர் எதிர்முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்தது நியாயமாக இருக்கலாம்.

ஆனால் அண்ணன் தருமன் இருக்கிறாரே அவரைவிட கீதையைக் கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? மூத்தவர், தரும நீதிகளை உணர்ந்தவர். அவரை ஏன் கிருஷ்ணர் புறக்கணித்தார்?

அண்ணன் பீமன் வெறும் பலசாலி மட்டுமல்ல; மிகச் சிறந்த பக்திமானும் கூட பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர்.

இப்படி நல்லவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் அதிக நாட்டமுள்ளவனும், உணர்ச்சிவசப்பட்டு பல தவறுகளை அடிக்கடி செய்துவிடுபவனும், ஆத்திரக்காரனுமான என்னைப் போய் கீதை போன்ற புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியிருக்கிறாரே, இது எவ்வகையில் நியாயம்? அர்ஜுனனின் இந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் கண்ணபிரான் கூறினார்.

அர்ஜுனா ! நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை.

நீ நினைப்பது போல் பிதாமகர் பீஷ்மரை அறங்கள் அனைத்துமுணர்ந்த ஒரு மகாத்மாவாக என்னால் கருதமுடியவில்லை. சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது; கடைப்பிடித்தால்தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்பதறிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும்போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்வது சாத்தியமற்றது. எண்ணம், சொல், செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை.

தர்மர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர்தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. தர்மர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை.

பீமனைப் பற்றிச் சொன்னால் பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும்கூட. ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை; அறிவு பலமும் இல்லை. வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அநேகம்.

அர்ஜுனா! நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு.

இதோ பார், உன்னைவிட வயதான, அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து நீ இத்தனை வாதிக்கிறாய் என்னிடம். களத்திலே நின்றபோதும் உற்றார், உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களை எல்லாம் எப்படிக் கொல்வது – தேவை தானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய் அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய்.

நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்த போதும், களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய்.

இதெல்லாம் தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்யும் மனவலிமையும் தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத் தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இப்போது புரிகிறதா அர்ஜுனா, நான் உனக்கு கீதை சொல்லக் காரணம் தனிச் சலுகை எதுவுமல்ல; தகுதிச் சிறப்புதான் காரணம். அர்ஜுனன் அப்போதும் கூட அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

முகநூலில் இருந்து...

அடிக்குற வெயிலுக்கு எல்லாரும்
விம் பார் கரைச்சி குடிங்க மக்களே..😳

ஏன்னா....,

அதுலதான்
ஒன்னு இல்ல,
ரெண்டு இல்ல,
நூறு
எலுமிச்சையோட சக்தி இருக்கு...😄😂👍🏻🌹

ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார்.

மாணவர்கள் எழுந்து நிற்கிறார் கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.

3 & 6 & 12

இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார்.

''மாணவர்களே... இதன் தீர்வு...''

அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான்.

''ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!''

''இல்லை!'' என்கிறார் ஆசிரியர்.

அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள்.

''ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!''

''இல்லை... இல்லை!''
மாணவர்கள் விழிக்கிறார்கள்.

இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.

''மாணவர்களே... நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.''

தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.

''இப்போது மறுபடியும் முயல்வோம்...'' என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்:

22 58 33 55.

உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.

''சார், இதன் தீர்வு என்ன?''

ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

''இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!''

மாணவர்கள் அமைதியானார்கள்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.
''மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை:

கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

இரண்டாவது அறிவுரை:

ரிலாக்ஸாக இருங்கள்.

நண்பர்களே!

இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும்தான்.

இன்றைய மனிதன் கற்பனையான பிரச்னை களிலேயே அதிகம் கலங்கிப் போகிறான். அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.

விளைவு?

ஆலயங்களை நாடிச் சென்று ஆண்டவனிடம் முறையிடுகிறான்.

பக்தர்களே!

உங்களுக்கு பகவான் சொல்ல விரும்புகிற அறிவுரையும் இதுதான்:

1. கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

2. ரிலாக்ஸாக இருங்கள்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதை.

விடியற்காலை 3 மணி.
மழை வேறு பெய்து கொண்டிருந்தது.
ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக்
கொண்டிருந்தனர்.
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
கணவன் மட்டும் எழுந்து போனான்.
கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர்
நின்று கொண்டிருந்தார்.
"சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க
வந்து தள்ளி விட முடியுமா?"
என்று அந்த குடிகாரர் கேட்டார்.
கணவனோ "முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே"ன்னு சொல்லிட்டு கதவை
சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.
"யாரது?" என்று மனைவி கேட்டாள்.
"எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்"
"நீங்க உதவி செஞ்சீங்களா?"
"இல்லை, காலைல 3 மணி, மழை வேற
பெய்யுது எவன் போவான்?"
"3 மாசம் முன்னாடி நம்ம கார்
ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப
இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க
அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி?
கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்" என்றாள் மனைவி.
கணவன் எந்திரிச்சான், ட்ரஸ்
பண்ணிக்கிட்டு மழையில்
நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.
இருட்டுல, மழையில்
சரியா தெரியாதாதால
சத்தமா கேட்டான்.
"ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?"
"ஆமா சார்"
"ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே,
இப்ப செய்யலாமா?"
"ஆமா சார் வந்து கொஞ்சம்
தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்"
"எங்கே இருக்கீங்க?
"இங்கதான் ஊஞ்சல் மேல
உட்கார்ந்திருக்கேன் வாங்க
வந்து தள்ளிவிடுங்க...."
அட நன்னாரிப் பயலே....

Ha ha ha 😬😀

எப்ப பாரு கருத்த எதிர்பாக்காதீங்க
லைஃப எஞ்ஜாய் பன்னுங்க! :))))))
Be happy...☀🐎 😀😄😜😀😄

விழித்துக்கொள்ளுங்கள் தமிழா...

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👎

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்...

இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம்,
ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

''ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
வெள்ளையான்,
குருவிகார்,
கல்லுருண்டை,
சிவப்பு கவுணி,
கருடன் சம்பா,
வரப்புக் குடைஞ்சான்,
குழியடிச்சம்பா,
பனங்காட்டுக் குடவாழை,
நவரா,
காட்டுயானம்,
சிறுமணி,
கரிமுண்டு,
ஒட்டடையான்,
சூரக்குறுவை...

இதெல்லாம் நம்ம தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.

இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க.

இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருந்து.

மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!

கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும்.

கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும்.

பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும்.

தங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.
( தங்கமே தங்கம் பாடலில் வருவதுதான்)

புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு.

விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா போதும்.

கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
பனங்காட்டுக் குடவாழை.

மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும்.

காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம்.

வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம்,

தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை,
இலுப்பைப்பூ சம்பா...

இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும்.

வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும்.

இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.

விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க.

அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம்.

எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு.

அதை எல்லாரும் மறந்துட்டாங்க..

புது தொழில்நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க.

நம்ம இயற்கை தமிழ் விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க.

உலகத்துக்கே கத்துக்கொடுத்த தமிழர்கள் இன்று  தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.

திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது செயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் தமிழ் பாரம்பரிய ரகங்கள்.

இவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் தமிழர்  செயராமன்.

வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது.

தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.

படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார்.

தமிழ் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு தமிழ்  பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார்.

வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ' தமிழ் விதை வங்கி' ஒன்றையும் நடத்துகிறார்.

அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது.

ஆனால் தமிழர் செயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.

''ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும்.

நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம்.

தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம்  தமிழ் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம்.

ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும்.

இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்'' என வியக்க வைக்கிறார் தமிழர் செயராமன்.

இதைத்தான் பழங்கால தமிழர்கள் சோழர் காலத்திலயும் செஞ்சிருக்காங்க.

இவர்களை போன்றவர்களை அரசு உக்குவிக்காது, பாராட்டாது.

நீங்களாவது பகிருங்கள். அனைவரும் அறிய உதவுங்கள்.

குறிஞ்சிப் பாட்டு..

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங்குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங்கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு.