ஜென் குரு ஒருவர் தியானத்ததில் இருந்தார். தூரத்தில் இருந்து ஒருவன் ஓடிவந்து, குருவை பின்னால் தட்டிவிட்டுச் சென்றான். குருவோ சலனமில்லாமல் இருந்தார். அவன் மீண்டும் மீண்டும் அதையே செய்தான்.
பின்னர் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான். குருவோ புன்னகை மாறாமல் தியானத்தில் இருந்தார்.
அருகில் இருந்த சீடனுக்கு ஆச்சரியம். குரு கண் விழித்ததும் கேட்டான். சிரித்தபடி சொன்னார் குரு. "அவனுக்கு ஏதோ பிரச்சனை. அதை என்னிடம் மாற்றிவிடப் பார்க்கிறான். அவன் அடித்ததற்கு நான் கோபப்பட்டு எதிர்வினையாற்றினால் அவன் பிரச்சனை எனதாகிப் போய்விடும்.அதனால் என் மன நிலை மாறிவிடும். அதை எனக்கு மாற்றிவிட்ட மகிழ்ச்சி அவனுக்குக் கிடைக்கும். அதற்கு நான் ஏன் இடம் தர வேண்டும்? இப்போது பார் அவனே அசந்து போய் உட்கார்ந்து விட்டான்" என்றார் அமைதியாக.
நிர்வாக நீதி
தாக்கும் பிரச்சனைகளை ஏற்றுக் கொள். தடுக்காதே. உந்தும் உணர்ச்சி வேகத்தில் உன்னை இழக்காமல் செயல்பட்டால் பிரச்சனைகள் வலுவிழந்துவிடும். நிரந்தர வெற்றி என்பது நிதானமாக அதை உணரும் பக்குவத்தின் தீர்வில்தான் இருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக