Designed by Enthan Thamizh

எப்படி ஹிந்து மதத்தையும், பண்டிகைகளையும், மக்கள் கூடும் இடங்களையும், குருமார்களையும் திட்டமிட்டு தாழ்த்துகிறார்கள் என்று பாருங்கள். - Anand Venkat



போகி: பழையன எரித்து, புதியன புகுத்தினோம். சிலர் வண்டி டயர்களை எரித்தார்கள். டயர் இருக்காதே என்று கூறியிருந்தால் புரிகிறது. எதையுமே எரிக்காதே என்றார்கள். சரி, இதை எரிக்கவில்லை. உலகம் குளிர்ந்துவிட்டதா? வாகன புகையையும், தொழிற்சாலை புகையையும் என்ன செய்வதாக உத்தேசம்?

பொங்கல்: இதில் இருந்த ஜல்லிக்கட்டை தடை செய்தார்கள். மிகுந்த போராட்டத்துக்கு பிறகு இது தற்காலிகமாக தீர்ந்துள்ளது. இன்னமும் முடியவில்லை.

புத்தாண்டு: விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து இதுதான் சரி என்று சித்திரை மாதத்தை வைத்தால், ஏதோ அறிவுகெட்ட காரணங்களை முன்னிறுத்தி தமிழர் புத்தாண்டு என்று தை முதல் தேதியை நுழைத்தார்கள். உபயம்: கருணாநிதி.

விநாயக சதுர்த்தி: வண்ணங்கள் பூசிய விநாயகரை நீர்நிலைகளில் கரைக்காதே என்று வழக்கு போட்டார்கள். நூறு கண்டிஷன்களோடு இப்போது களிமண்ணில் செய்த மூலிகை வண்ணங்களால் ஆன விநாயகரை வைத்துள்ளோம். என்ன செய்வதென்று சிந்திக்கிறார்கள்.

தீபாவளி: புகைக்கு பட்டாசுதான் காரணம் என்று முடிவே செய்துவிட்டது நீதிமன்றம். வைக்கோல் எரிக்கிறார்கள் என்று தலைப்பாடாக அடித்துக்கொண்டாலும் தீபாவளியை நிறுத்தி வைத்தது. பத்மாவதி என்ற ஒரு படம் பற்றிய உண்மை தெரிய வரலாற்று ஆய்வாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த நீதிமன்றம், புகைக்கு காரணத்தை தானே கண்டுபிடித்து பட்டாசுதான் என்று கூறி தடை செய்து பார்த்துள்ளது. இதை விஞ்ஞானிகளிடம் ஒப்படைக்கவேண்டியதுதானே?

சபரிமலை: பெண்கள் வரலாம், வரக்கூடாது. அதெல்லாம் ஹிந்துக்கள் பிரச்சனை. முஸ்லீம் அமைப்பு யார் இதற்கு வழக்கு தொடுக்க? தொடுக்கிறான். நீதிமன்றமும் அனுமதிக்கிறது. ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையின்றி பெண் போகக்கூடாதாம். அதற்கு வழக்கு தொடுக்க துப்பில்லை. இதற்கு வந்துவிட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக இஸ்லாமுக்கு விரோதமான முறையில் தலாக்கும், ஹஜ் யாத்திரைக்கு சலுகையும் பெற்று செல்கிறார்கள். அது தவறில்லையாம். ஹிந்து மத விவகாரத்தில் தலையிடுகிறார்கள் முஸ்லிம்கள். அடுத்து அந்த நடிகை ஜெயமாலா. இந்த ஜென்மத்தில் எவனும் தடுக்கி விழுந்து சாமி சிலையை தொட முடியாது. அத்தனை தூரத்தில் இருக்கிறது. இந்த உலகிலேயே தடுக்கி கீழே விழாமல், மூன்று படிக்கட்டுகள் மேலே விழுந்து, அதன் பின் பனிரெண்டு அடி தாண்டி விழுந்த ஒரே பெண்மணி ஜெயமாலாதான். அதெப்படி, சபரிமலை சீசன் துவங்கும்போது பெரியாறு அணை பிரச்சனை துவங்குகிறது? கிருஸ்தவர்கள் வேலை?

திருவண்ணாமலை: மலையை சுற்றி உள்ள மரங்களை வெட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி செய்ய துவங்கி பின், தனிப்பட்ட முறையில் சில வழக்கு தொடுத்து நிறுத்தினர். அதென்ன வெறும் மொட்டை மலையா? இந்த நாட்டில் கோவிலை சுற்றியும், நதிகளை சுற்றியும்தான் ஊர்கள் பிறந்தன, வளர்ந்தன. அப்படி இருக்கும் கோவிலை சுற்றியுள்ள பல விஷயங்கள் கோவில் சம்பந்தப்பட்டவையே. என்ன இதே என்று தெரியாமல், பொசுக்கென்று சாலை அகலப்படுத்துகிறேன் என்று கோடாலியை கையில் எடுத்துவிட்டார்கள்.

ஈஷா யோகா: நிலத்தை அபகரித்தார், ஒப்புதல் பெறவில்லை, காட்டை அழித்தார் என்று ஆயிரம் நொட்டைகள். சரி, நடவடிக்கை எடுங்கள் என்றால் எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களுக்கு செய்தி மட்டும் போய் தள்ளுகிறது. அவர்கள்தான் நீதிமன்றம்போல எல்லோரும் அங்கு சென்று முறையிடுகிறார்கள்.

திருப்பதி: இரட்டை மலை ஏழுமலையானுக்கே என்று சொன்ன ராஜசேகர ரெட்டியை இறைவனே சம்ஹாரம் செய்துவிட்டான்.

அமர்நாத்: முஸ்லிம்கள் குறுக்கல்களாக இருக்கும் அமர்நாத் பனிலிங்கத்தை டில்லிக்காரன் செயற்கையாக உருவாக்குகிறான் என்று கதை விட்டு கொஞ்ச நாளைக்கு அழகு பார்த்தார்கள்.

காஞ்சி: ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் விடுதலையானார், சரி., சங்கரராமன் எப்படித்தான் இறந்தார்? நீதிபதி என்னவோ, அபத்தமான வழக்கு. எதை வைத்துக்கொண்டு இவர்தான் கொன்றார் என்று சொல்கிறீர்கள்? இந்த 39 மொட்டை கடுதாசியை வைத்தா என்று கேட்டுவிட்டார்.

கன்னியாகுமரி: அங்கு மாபெரும் இயேசு சிலை வைப்பதாக இருந்தார்கள். என்னவோ கருணாநிதி கட்டிக்கொண்ட புண்ணியம், திருவள்ளுவர் வந்தார்.

இன்னும் என்னென்ன திட்டங்கள் வகுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதை சொன்னாலும், வெளியே வராமல், சங்கத்தில் சேராமல், அப்படியே வீட்டில் தூங்குகிறான் பாருங்கள்.......

பாரதி சொல்வது போல, என்ன கூறி இவர்கெங்குணர்த்துவேன் என்னுள்ளம் எரிவதை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக