Designed by Enthan Thamizh



சித்திரை1
ஆடி1
ஐப்பசி1
தை1 
--------------------------------------------
எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!

Ok. Lets look at the science behind it...

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்....

என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா?
கண்டிப்பாக இல்ல... 
--------------------------------------------
நம்ம education system அ design பன்னின வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல் அ அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....
--------------------------------------------
ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exact ah கிழக்கே உதிக்கும்.... 

அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme point la, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... 

அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி correct ஆ கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correct ஆ கிழக்குக்கு வர ஆகிற time., Correct ah "1 year"...!!!!
--------------------------------------------
சரி... இதுக்கும் தமிழ் மாததுக்கும் என்ன சம்பந்தம் னு தானே யோசிக்குறீங்க.... 
--------------------------------------------
சூரியன் correct ah கிழக்கு ல start ஆகுற நாள் தான் #சித்திரை1.., புத்தாண்டு...!!! (In science it is called Equinox)

அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி1 .... (solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரது #ஐப்பசி1 (equinox) 

Going to extreme தென்கிழக்கு is #தை1 (solistice)
--------------------------------------------
இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனணவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
--------------------------------------------
சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்
--------------------------------------------
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
--------------------------------------------
நமது முன்னோர்கள்.....
"தன்னிகரற்ற"
மாபெரும் அறிவாளிகள்
மிகவும் மகத்தானவர்கள்
--------------------------------------------
குழந்தைகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டது. பலரும் வெளியூருக்கு செல்ல திட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2 நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால், கண்டிப்பாக நம் வீட்டு ஃப்ரிட்ஜில் ஒருசில சமைத்த உணவுகளை வைத்துவிட்டு செல்வோம்.

ஆனால் இனிமேல் தான் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுமே. நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

எனவே ஓர் அற்புதமான வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்தல்
சமைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கத் தான் நாம் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். ஆனால் மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், உறைந்து பாழாகும். பின் மீண்டும் மின்சாரம் வந்ததும், உணவு உறைய ஆரம்பிக்கும். எனவே வெளியூர் அல்லது வேறு எங்கேனும் செல்வதாக இருந்தால், உணவை ஃப்ரிட்ஜில் வைத்து செல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், அது உணவில் சால்மோனெல்லா மற்றும் இதர மோசமான பாக்டீரியாக்களைப் பரவச் செய்யும். இதனால் தீவிர ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

மின்சாரம் நீண்ட நேரம் இல்லை என்பதை எப்படி அறிவது?

நாம் வெளியூர் சென்ற நேரத்தில் நம் வீட்டில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை ஓர் எளிய வழியின் மூலம் அறியலாம். அதுவும் ஒரு நாணயத்தைக் கொண்டு அறிய முடியும்.

மின்சாரம் இல்லாத நேரத்தில், ஃப்ரிட்ஜ் திறக்காமலேயே இருந்தால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவு குறைந்தது 4 மணிநேரம் வரை பாழாகாமல் இருக்கும். இதற்கு ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலை தான் காரணம்.

ஃப்ரீசரில் வைத்த உணவு
ஃப்ரீசரில் உணவை வைத்து, ஃப்ரீசர் முழுமையான குளிர்ச்சியில் இருந்தால், 48 மணிநேரம் வரை உணவு பாழாகாமல் இருக்கும். அதுவே ஃப்ரீசர் பாதி குளிர்ச்சியில் இருந்தால், 24 மணிநேரம் வரை ஃப்ரீசரில் வைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.

சோதிக்கும் முறை:
ஒரு கண்ணாடி கப்பில் நீரை நிரப்பி, அதை ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும். பின் வெளியூர் செல்லும் போது, அந்த கப்பின் மேல் ஒரு நாணயத்தை வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வையுங்கள். வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாணயம் எங்குள்ளது என்று பாருங்கள்.

முடிவு

நாணயம் அந்த கப்பின் மேற்பகுதியில் அல்லது நடுவில் இருந்தால், சிறிது நேரம் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

ஒருவேளை அந்த நாணயம் கப்பின் அடிப்பகுதியில் இருந்தால், நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் ஃப்ரிட்ஜில் உள்ள உணவை சாப்பிடவே கூடாது.


போகி: பழையன எரித்து, புதியன புகுத்தினோம். சிலர் வண்டி டயர்களை எரித்தார்கள். டயர் இருக்காதே என்று கூறியிருந்தால் புரிகிறது. எதையுமே எரிக்காதே என்றார்கள். சரி, இதை எரிக்கவில்லை. உலகம் குளிர்ந்துவிட்டதா? வாகன புகையையும், தொழிற்சாலை புகையையும் என்ன செய்வதாக உத்தேசம்?

பொங்கல்: இதில் இருந்த ஜல்லிக்கட்டை தடை செய்தார்கள். மிகுந்த போராட்டத்துக்கு பிறகு இது தற்காலிகமாக தீர்ந்துள்ளது. இன்னமும் முடியவில்லை.

புத்தாண்டு: விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து இதுதான் சரி என்று சித்திரை மாதத்தை வைத்தால், ஏதோ அறிவுகெட்ட காரணங்களை முன்னிறுத்தி தமிழர் புத்தாண்டு என்று தை முதல் தேதியை நுழைத்தார்கள். உபயம்: கருணாநிதி.

விநாயக சதுர்த்தி: வண்ணங்கள் பூசிய விநாயகரை நீர்நிலைகளில் கரைக்காதே என்று வழக்கு போட்டார்கள். நூறு கண்டிஷன்களோடு இப்போது களிமண்ணில் செய்த மூலிகை வண்ணங்களால் ஆன விநாயகரை வைத்துள்ளோம். என்ன செய்வதென்று சிந்திக்கிறார்கள்.

தீபாவளி: புகைக்கு பட்டாசுதான் காரணம் என்று முடிவே செய்துவிட்டது நீதிமன்றம். வைக்கோல் எரிக்கிறார்கள் என்று தலைப்பாடாக அடித்துக்கொண்டாலும் தீபாவளியை நிறுத்தி வைத்தது. பத்மாவதி என்ற ஒரு படம் பற்றிய உண்மை தெரிய வரலாற்று ஆய்வாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த நீதிமன்றம், புகைக்கு காரணத்தை தானே கண்டுபிடித்து பட்டாசுதான் என்று கூறி தடை செய்து பார்த்துள்ளது. இதை விஞ்ஞானிகளிடம் ஒப்படைக்கவேண்டியதுதானே?

சபரிமலை: பெண்கள் வரலாம், வரக்கூடாது. அதெல்லாம் ஹிந்துக்கள் பிரச்சனை. முஸ்லீம் அமைப்பு யார் இதற்கு வழக்கு தொடுக்க? தொடுக்கிறான். நீதிமன்றமும் அனுமதிக்கிறது. ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையின்றி பெண் போகக்கூடாதாம். அதற்கு வழக்கு தொடுக்க துப்பில்லை. இதற்கு வந்துவிட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக இஸ்லாமுக்கு விரோதமான முறையில் தலாக்கும், ஹஜ் யாத்திரைக்கு சலுகையும் பெற்று செல்கிறார்கள். அது தவறில்லையாம். ஹிந்து மத விவகாரத்தில் தலையிடுகிறார்கள் முஸ்லிம்கள். அடுத்து அந்த நடிகை ஜெயமாலா. இந்த ஜென்மத்தில் எவனும் தடுக்கி விழுந்து சாமி சிலையை தொட முடியாது. அத்தனை தூரத்தில் இருக்கிறது. இந்த உலகிலேயே தடுக்கி கீழே விழாமல், மூன்று படிக்கட்டுகள் மேலே விழுந்து, அதன் பின் பனிரெண்டு அடி தாண்டி விழுந்த ஒரே பெண்மணி ஜெயமாலாதான். அதெப்படி, சபரிமலை சீசன் துவங்கும்போது பெரியாறு அணை பிரச்சனை துவங்குகிறது? கிருஸ்தவர்கள் வேலை?

திருவண்ணாமலை: மலையை சுற்றி உள்ள மரங்களை வெட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி செய்ய துவங்கி பின், தனிப்பட்ட முறையில் சில வழக்கு தொடுத்து நிறுத்தினர். அதென்ன வெறும் மொட்டை மலையா? இந்த நாட்டில் கோவிலை சுற்றியும், நதிகளை சுற்றியும்தான் ஊர்கள் பிறந்தன, வளர்ந்தன. அப்படி இருக்கும் கோவிலை சுற்றியுள்ள பல விஷயங்கள் கோவில் சம்பந்தப்பட்டவையே. என்ன இதே என்று தெரியாமல், பொசுக்கென்று சாலை அகலப்படுத்துகிறேன் என்று கோடாலியை கையில் எடுத்துவிட்டார்கள்.

ஈஷா யோகா: நிலத்தை அபகரித்தார், ஒப்புதல் பெறவில்லை, காட்டை அழித்தார் என்று ஆயிரம் நொட்டைகள். சரி, நடவடிக்கை எடுங்கள் என்றால் எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களுக்கு செய்தி மட்டும் போய் தள்ளுகிறது. அவர்கள்தான் நீதிமன்றம்போல எல்லோரும் அங்கு சென்று முறையிடுகிறார்கள்.

திருப்பதி: இரட்டை மலை ஏழுமலையானுக்கே என்று சொன்ன ராஜசேகர ரெட்டியை இறைவனே சம்ஹாரம் செய்துவிட்டான்.

அமர்நாத்: முஸ்லிம்கள் குறுக்கல்களாக இருக்கும் அமர்நாத் பனிலிங்கத்தை டில்லிக்காரன் செயற்கையாக உருவாக்குகிறான் என்று கதை விட்டு கொஞ்ச நாளைக்கு அழகு பார்த்தார்கள்.

காஞ்சி: ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் விடுதலையானார், சரி., சங்கரராமன் எப்படித்தான் இறந்தார்? நீதிபதி என்னவோ, அபத்தமான வழக்கு. எதை வைத்துக்கொண்டு இவர்தான் கொன்றார் என்று சொல்கிறீர்கள்? இந்த 39 மொட்டை கடுதாசியை வைத்தா என்று கேட்டுவிட்டார்.

கன்னியாகுமரி: அங்கு மாபெரும் இயேசு சிலை வைப்பதாக இருந்தார்கள். என்னவோ கருணாநிதி கட்டிக்கொண்ட புண்ணியம், திருவள்ளுவர் வந்தார்.

இன்னும் என்னென்ன திட்டங்கள் வகுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதை சொன்னாலும், வெளியே வராமல், சங்கத்தில் சேராமல், அப்படியே வீட்டில் தூங்குகிறான் பாருங்கள்.......

பாரதி சொல்வது போல, என்ன கூறி இவர்கெங்குணர்த்துவேன் என்னுள்ளம் எரிவதை.



ஜென் குரு ஒருவர் தியானத்ததில் இருந்தார். தூரத்தில் இருந்து ஒருவன்  ஓடிவந்து, குருவை பின்னால் தட்டிவிட்டுச் சென்றான். குருவோ சலனமில்லாமல் இருந்தார். அவன் மீண்டும் மீண்டும் அதையே செய்தான்.

பின்னர் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான். குருவோ புன்னகை மாறாமல் தியானத்தில் இருந்தார்.

அருகில் இருந்த சீடனுக்கு ஆச்சரியம். குரு கண் விழித்ததும் கேட்டான். சிரித்தபடி சொன்னார் குரு. "அவனுக்கு ஏதோ பிரச்சனை. அதை என்னிடம் மாற்றிவிடப் பார்க்கிறான். அவன் அடித்ததற்கு நான் கோபப்பட்டு எதிர்வினையாற்றினால்  அவன் பிரச்சனை எனதாகிப் போய்விடும்.அதனால் என் மன நிலை மாறிவிடும். அதை எனக்கு மாற்றிவிட்ட மகிழ்ச்சி அவனுக்குக் கிடைக்கும். அதற்கு நான் ஏன் இடம் தர வேண்டும்? இப்போது பார் அவனே அசந்து போய் உட்கார்ந்து விட்டான்" என்றார் அமைதியாக.

நிர்வாக நீதி

தாக்கும் பிரச்சனைகளை ஏற்றுக் கொள். தடுக்காதே. உந்தும் உணர்ச்சி வேகத்தில் உன்னை இழக்காமல் செயல்பட்டால் பிரச்சனைகள் வலுவிழந்துவிடும். நிரந்தர வெற்றி என்பது நிதானமாக அதை உணரும் பக்குவத்தின் தீர்வில்தான் இருக்கிறது.



கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது என்று முன்னோர்கள் மிக அழகாக, திருஷ்டியைப் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளனர். வீட்டில் குப்பை சேர, சேர, துர்நாற்றம் வீசும் அது போலத்தான் கண் திருஷ்டியும், கூட கூட, பல்வேறு பிரச்சனைகள் குடும்பத்தில் உள்ளவர்களை ஆட்டிப்படைக்கும்.
இதுபோன் திருஷ்டிகளை போக்குவதற்கு பல்வேறு வழிமுறைகளை நம் முன்னோர்கள் கூறினாலும், வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள், இவ்வகை கண் திருஷ்டிகளை ஏற்றுக் கொண்டு, வளர்ப்பவர்களுக்கு பாதுகாப்பளிப்பதாக உள்ளது. இதனால்தான் அந்தக் காலத்தில் வீட்டில் அதிகமாக வளர்ப்பு பிராணிகளை வளர்க்க ஆரம்பித்தனர்.

பூனை முதற் கொண்டு யானை வரை வளர்ப்பு பிராணிகளாக முன்னோர்கள் வளர்த்ததன் காரணமும் இதுதான். கண் திருஷ்டி மட்டுமின்றி, செய்வினை, சூன்யம், துர் ஆவிகள், பேய், பிசாசு போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் வளர்ப்பு பிராணிகளுக்கு உண்டு. மேலும் மேற்கண்ட துர் சக்திகளால் விளையும் தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தியும் வளர்ப்பு பிராணிகளிடம் உண்டு.

ஒரு சில வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் திடீரென இறந்து விடும், இதற்கு காரணம், மிகவும் கொடுரமான வலிமைவாய்ந்த கெடுதலை, வளர்ப்பவருக்கு ஏற்படாமல் இருக்க, வளர்ப்பு பிராணிகள் ஏற்றுக் கொண்டு, அவை மரணத்தை தழுவும். அதாவது தன் உயிரை கொடுத்து வளர்ப்பவரை காப்பாற்றும்.

இவ்வளவு சக்தி வாய்ந்தது நாம் வளர்க்கும் பிராணிகள், இந்த வகையில் இதை பயன்படுத்தி காசு சம்பாதிக்க, தற்போது பல்வேறு பிராணிகளை வாஸ்த்து என்று பெயரிட்டு மக்களை ஏமாற்றும் வேலைகளும் நடைபெறுகிறது. அதில் குறிப்பாக வாஸ்த்து மீன் வளர்ப்பு, வாஸ்த்து என்று கூறி ஆயிரக் கணக்கில் ஒரு மீனை விற்கின்றனர். இது முற்றிலும் தவறு.

தனிப்பட்ட ஒரு விலங்கை, மீனை எந்த சாஸ்த்திரமும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஓர் அறிவு, இரண்டறிவு முதற்கொண்டு ஐந்தறிவு உள்ள மிருகங்கள் வரை அனைத்தையும் மனிதன் வளர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

வளர்ப்பு விலங்குகளால் மனிதனுக்கு ஏற்படும் நல்ல மற்றும் தீய பலன்களை என்னவென்று நாம் அறிந்து கொள்ள நமது முன்னோர்கள் அஷ்வ லட்சணம், கஜ லட்சணம் போன்ற தனி சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். அவற்றில் மிக முக்கியமான பகுதி மனிதன் ஏன் வீட்டு விலங்குகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு தரும் விளக்கங்கள் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது.

அந்த சாஸ்திரங்களில் நமது முன்னோர்கள் மிக முக்கியமான கருத்தொன்றை சொல்கிறார்கள், அதாவது ஒரு வீட்டுக்கு வரும் எதிர்பாராத துயரத்தை தடுப்பதற்காக அந்த தீய சக்தியை தனக்குள் வாங்கி கொண்டு வளர்ப்பு விலங்குகள் மறித்து விடும் என்று சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. மேலும் மனிதனுக்கு ஏற்படும் கண்திருஷ்டி போன்ற தோஷங்களை விலங்குகள் தனக்குள் ஈர்த்துக்கொண்டு வளர்ப்பவனுக்கு தான் துன்பபட்டாலும், அரணாக நிற்குமென்றும் சொல்லபடுகிறது.

அந்த வகையில் பார்த்தால் நமது வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்துமே நமக்கு வருகின்ற துயரத்தை தான் வாங்கி கொண்டு வாழ்கின்றன அல்லது மறித்து போகின்றன. இந்த நியதிக்கு ஆனை முதல் பூனை வரை பொருந்தி வரும். அத்தோடு நாம் வீட்டில் வளர்க்கும் மீன்களும் கூட நமது கஷ்ட நஷ்டங்களை தனக்குள் ஈர்த்துகொள்ளும் என்று சொல்லபடுகிறது. அதனடிப்படையில் எந்த வகை மீனை வளர்த்தாலும் அதன் பயன் ஒன்று தான் என்பது தெளிவாக தெரிகிறது.

தற்போதைய கால கட்டத்தில் நகரமயமாகிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கிராமங்களைத் தவிர்த்து நகரத்தில் ஆடு, மாடு, குதிரை, யானை போன்றவற்றை வளர்ப்பது சாத்தியமில்லை. ஆனால் மீன் வளர்ப்பது என்பது அனைவராலும் முடியும். வாஸ்து மீன்தான் வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, எந்த வகை மீனையும் வளர்க்கலாம், குறிப்பாக வண்ண மீன்கள் பல வண்ணங்களில் வளர்க்கலாம், வளர்க்க இட வசதி இருந்தால், கூடுதலாக பூனை, நாய் போன்றவற்றையும் வளர்க்கலாம்.

இதுபோன்றவற்றை வளர்க்கும் போது மனிதர்களுக்கு கெட்ட சக்தியிலிருந்து விடுதலை கிடைப்பதுடன், வளர்ப்பு பிராணிகள் காட்டும் அன்பால் மனிதர்களுக்கு மனச் சோர்வும் நீங்கும், குழப்பமான மனநிலையில் இருக்கும் போது, குழந்தைகளுடனும், வளர்ப்பு பிராணிகளுடனும் சிறிது நேரம் விளையாடினால் மனம் தெளிவு படும் என்று பல்வேறு ஆராய்ச்சிகளும் நிருபித்துள்ளது.

குடும்பத்தில் தொடர், பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஏதாவது ஒரு வளர்ப்பு பிராணிகளை வளர்த்துப் பாருங்கள் மிக விரைவில் தீர்வு கிடைக்கும்.

ஒருவருக்கு திடீர் சந்தேகம் வந்ததது மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?
ஆனால் இதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் . தயக்கம் என்ன , பயம்தான் .

இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்க்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .

இருபதடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப்பாருங்கள் , மனைவியின் காதில் விழவில்லையெனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்து பேசுங்கள் ,
பின் பத்து , ஐந்து இப்படி குறைத்துக்கொண்ட
ே நெருங்கிச்சென்ற
ு பேசுங்கள்.

எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காதுகேட்கவில்லை என தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம் என டாக்டர் சொன்னார். கணவனுக்கு ஒரே குஷி.

உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்த படியே உள்ளிருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல்? எனக்கேட்டார்.
பதிலில்லை , பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியை கேட்டார். அதற்க்கும் பதிலில்லை , ஹாலில் இருந்து கேட்டார் , சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் கேட்டார். மனைவியிடமிருந்த
ு பதிலே இல்லை.
போச்சு ரெண்டு ஸ்பீக்கரும் அவுட்தானென மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.
கடைசி வாய்ப்பாக மனைவியின் காதருகே சென்று சத்தமாக " .... இன்றைக்கு என்ன சமையல் ?" ............என கேட்டார்.

காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவர் மனைவி அவரை கோபமாக திரும்பிப்பார்த்து " ஏன் இப்படி கத்துறீங்க , நீங்களும் வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து , ஹாலில் இருந்து , சமைலறை வாசலில் இருந்து கேட்க , கேட்க நானும் முருங்கைக்காய் சாம்பார் , உருளைக்கிழங்கு பொரியல் ன்னு சொல்லிக்கிடேயிருந்தேனே , காதில் விழவில்லையா ?
காதுல என்ன பஞ்சு மூட்டையா வெச்சுருக்கீங்க என பொரிந்து தள்ளிவிட்டாள்
இப்போது தெரிகிறதா !

 பிரச்சினை யார் காதில் என்பது ?

இப்படித்தான் *பிரச்சினை நம்மிடம் வைத்துக்கொண்டு அது பிறரிடம் இருப்பதாக நாம் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்*

#புதிய_தேடல்

First you have to find the problem then only its easy to solve.

நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும், நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை? அதற்க்கு என்ன காரணம்?

அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும். தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுத்முடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.

அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.