அனைவருக்கும் காலை வணக்கங்கள் உரித்தாகுக. இன்று முதல் கதை ஆரம்பம். எந்த நற்செயல் செய்யும் முன்பு, இரு கைகலப்பு தொழல் வேண்டும் என்ற மரபிற்கேற்ப, கடவுள் வாழ்த்து பாடலையும் அதன் சிறப்பையும் அறியலாம்
பாடல் :
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண்நாங்களே.
பொருள் :
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்(எல்லா உலகங்களையும் தாமே படைத்தலும்)
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா(பாதுகாத்தலும், அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் நீங்காத)
அலகு இலா விளையாட்டு உடையார்அவர் (முடிவு இல்லாத விளையாட்டுகளாக உடையவராகிய அவரே)
தலைவர் அன்னவர்க்கே சரண்நாங்களே (இவ்வுலகங்களுக்கு எல்லாம் தலைவர், அத்தன்மை பெற்ற இறைவர்க்கே நாங்கள் அடைக்கலம்)
இந்த கடவுள் வாழ்த்தில்கம்பர் ஒரு தெய்வத்தின் பெயரையும்குறிப்பிடவில்லை. ஒருவேளை கம்பர்மறந்திருப்பாரோ? யார் 11,000 பாட்டுகள்படைத்த கம்பர் தனது கடவுள் வாழ்த்தில்தனி பெரும் பொருள்இராம்ப்பெருமானே என்று பாடமறந்திருப்பாரா, இல்லை! ஒரு வேளைகம்பர் தெய்வத்தின் பெயரை பாடலில்சொருக முடியாதபடி தினறியிருப்பாரோ?கம்பர் கவிச்சக்கரவர்த்தி! அவருக்குதமிழிலும், கவியிலும், பொருளிலும்தடங்கல் என்பதே இல்லை. அவர்சொல்லும் பொருளையும், கவியைடும்உணர்ந்துக் கொள்ள வேண்டுமென்றால்நமக்கு வேண்டுமானால் சிரமமாகஇருக்கலாம்! கம்பர் நினைத்திருந்தால்"இராமா, இராமா" என்றே பாடல்முழுவதும் புகுத்தி அதை சிலேடைவடிவமாக்கி ஒரே சொல் பல்வேறுபொருளை உணர்த்தும வகையில்பாடலை இயற்றியிருக்கலாம்! பின்பு ஏன்கம்பர் இப்படி பொத்தம் பொதுவாககடவுள் வாழ்த்து பாடினார்?
கம்பர் அவை நாகரீகம்அறிந்தவர். கம்பராமயண அரங்கில்சைவ சமய பெருமக்களும்குழுமியிருப்பர். மற்ற சமயங்களானசமணம், பௌத்தம் போன்றவைகளில்இருந்தும் மக்கள் குழுமி இருந்தனர்.அதனால் கடவுள் வாழ்த்து என்பது இந்தசமயங்கள் எல்லாவற்றையும் ஒத்துஒருங்கிணைத்து, உருவங்கள்பலவானாலும், மார்க்கங்கள்வேவேரானாலும் பரம் பொருள் ஒன்றேஎன்று உரைக்கும் விதமாக எங்கும்நிறைந்திருக்கும் அந்த பரம்பொருளைஎண்ணி அமைய பெறல் வேண்டும். சமயபொதுவுடைமை (secularism) என்பதற்குஉலகத்திற்கே முன்னோடியாக தமிழும்,தமிழ் அறிஞர் பெருமக்களும்திகழ்ந்தனர் என்பதற்கு இது ஒருஎடுத்துக்காட்டு!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக