இராமனது வரலாற்றைக் கூறும் நுால் இராமாயணம் எனப்பட்டது. அயனம் என்பது வடமொழி சொல்,பயணம் என்னும் பொருள் தரும். இராமனின் வாழ்க்கை பயணம் குறித்த கதையாதலால் அப்பெயர் பெற்றது. கம்பராமாயணம் எனும் நுால் கம்பா்எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும்.
இதுவொரு வழி நுாலாகவே இருந்தாலும் கம்பா் தனக்கே உாித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளாா். வடமொழி கலவாத துாய தமிழ்ச்சொற்களைத் தனது நுாலில் கையாண்டதால் கம்பா்,தொல்க்காப்பிய நெறி நின்றவா் என்று புகழப்படுகிறாா்.
கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுநந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும் நுாற்றுப்பத்தொன்பது (119) படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிாிவினையும் படலம் என்பது அதன் உட்பிாிவினையும் குறிக்கும்.
கம்பாின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞா் பெருமக்கள் அழைப்பதுண்டு.
வாழ்க்கையின் தத்துவங்களை, ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்களை, சகோதர ஒற்றுமையை, விதியின் வலிமையை, நட்பின் மேன்மையை இராமாயணம் எடுத்துக் காட்டுகிறது.
ஒவ்வொரு காண்டத்தையும், அதன் உட்பிரிவான ஒவ்வொரு படலத்தின் வருணனைகளையும், கம்பரின் கவிநடையில் பின்வரும் நாட்களில் காணலாம்.... 🙏🏻🙏🏻🙏🏻
0 கருத்துகள்:
கருத்துரையிடுக