இரத்தம் பற்றிய சில தகவல்கள் இது, இதை நீங்கள் படித்து உங்களின் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,
❣இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
❣இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
❣ இரத்த வகைகள் - A, B, AB, O
❣இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்
❣ இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)
❣ இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)
❣சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
❣ இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
❣ இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
❣ இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
❣மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
❣இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
❣அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
❣அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
❣ 120 mmHg என்பது - Systolic Pressure
❣80 mmHg என்பது - Diastolic Pressure
❣இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
❣இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
❣ இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
❣ இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
❣ இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
❣ ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்
❣பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்
❣ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்
❣பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
❣ இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
❣ இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
❣இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
❣ இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
❣ இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
❣இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
❣இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
❣ இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
❣ உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்
❣ லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
❣துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் 3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
❣துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்.
❣ மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
❣இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:
❣ நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
❣ இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
பேசோஃபில்கள் - 0.1%
❣லிம்போசைட்டுகள் - (20 - 30%)
❣ மோனோசைட்டுகள் - (1 - 4%)
3. இரத்த தட்டுகள் :-
❣ இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
❣இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்.
❣இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
❣இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000
❣ இரத்த தட்டுங்கyள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் - டெங்கு ஜுரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக