Designed by Enthan Thamizh

அதிசய நெல்லிக்கனி

தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் இந்த உலகில் அருகி வருகின்றனர். இப்படி இருக்கும் ஒரு சிலருக்காகத் தான் மழை பெய்கிறது. முன்பு நீண்ட நாள் தன் அரண்மனையில் தங்கச் செய்து ஔவைக்கு பரிசு ஒன்றும் கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். எங்கே பரிசு கிடைத்தால் உடனே தன் அரண்மனையை விட்டு சென்று விடுவாள் என்று நினைத்து, பரிசு தராமல் காலம் தாழ்த்தி அவளுடைய தமிழின் சுவையை ரசித்திருந்தான். அப்படி அரண்மனையில் தங்கும் போது அதியமான் வேட்டையாடச் சென்ற மலையில் ஒரு அபூர்வ நெல்லிக்கனி அவனுக்கு கிடைத்தது. அதை தான் உண்டால் இந்த நாடு மட்டும் தான் பலன் பெரும், ஆனால் தமிழுக்கு தொன்று ஆற்றும் ஔவை உண்டால் நன்றாக இருக்கும், அவளால் தமிழும், தமிழால் உலகமும் உய்வு பெரும் என்று எண்ணி இளமையும், நீண்ட ஆயுளையும் தரும் அதிசய நெல்லிக்கனியின் அருமையை கூறி கொடுத்தால் ஔவை உண்ணமாட்டாள் என்று அறிந்து இது ஒரு சாதாரண கனி என்று கூறி அதை தின்னக் கொடுக்கிறான் அதியமான்.

பாடல் 12 : எமக்கு ஈந்தனையோ! (புறம் : 91)
பாடியவர்: ஔவையார் அதியமான்
பாடப்பட்டோர் : அதியமான்
திணை : தும்பை துறை: வாழ்த்தியல்

வலம்படு வாய் வாள் ஏந்தி, ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடித் தடக்கை,
ஆர் கலி நறவின், அதியர் கோமான்
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி !
பால் புரை பிறை நூதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மண்ணுக - பெரும நீயே ! தொல் நிலைப்
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே !

பொருள் விளக்கம்

பகைவரின் பல களங்களை தைரியமாக எதிர்த்து வெற்றி பெற்ற அதியர் கூட்டத் தலைவன் அதியமானே, பால் போல் வெள்ளை நிற பிறையை அணிந்துள்ளவன், விஷம் உண்டு தேவர்களைக் காத்த நீல நிறக் கழுத்தை உடைய சிவபெருமான் போல் நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாய். உயரமான மலையின் பிளவுக்கு இடையில் வளர்ந்த சிறிய இலைகளை உடைய அறிய நெல்லிக்கனியை, எனக்கு அதன் பெருமையை சொல்லாமல் தந்தாயே, உன்னை நான் எப்படி புகழ்வேன், இது மதிக்கத்த செயல் ஆகும்.

இப்படி கூறிய பிறகு, அதியமான் ஔவையே, இது உன் தமிழுக்கு செய்யும் மரியாதை என்று கூறினார், ஔவையோ கர்வம் கொள்ளாமல் ஒரு பாடல் பாடினார் ......அந்த பாடலை அடுத்து பார்ப்போம் .........

புறம் வளரும் .........

0 கருத்துகள்:

கருத்துரையிடுக