Designed by Enthan Thamizh

கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !

அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!

'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !

அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் உண்மை.
இதுல எது உண்மை?எது பொய்?...அதுதான் கடவுள்.

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்

இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!😐

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்ப செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

ஆணவமும் அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும். அவ்வளவு தான்.

நிலத்தில் வளரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை. அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.

தற்புகழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை. விற்பனையாகாத சரக்கிற்குச் செய்யப்படும் விளம்பரமே!

அதிகமான ஆரவாரம் செய்யும் அரசியல்வாதியே ஜனங்களின் முட்டாள்தனத்தைச் சரியாக எடை போட்டவன்.

சாப்பிடும் போது உங்கள் இஷ்டத்துக்குச் சாப்பிடுகிறீர்கள். ஆனால் வாந்தியோ அதனிஷ்டத்திற்கு வருகிறது. காரியத்தை உங்கள் விருப்பப்படி செய்கிறீர்கள், எதிரொலி இறைவன் விருப்பப்படி வருகிறது.

வீட்டுக்கொரு நாயை வளர்த்தும் மனிதன் விசுவாசத்தைக் கற்றுக் கொள்ளவில்லையே! இனி நாய்கள் மனிதனை வளர்த்து, அதைக் கற்றுக் கொடுக்குமா?

மலரைப் பார்; கொடியைப் பார்; வேர் எப்படி இருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே. அதைப் பார்க்க முயன்றால், நீ மலரையும் கொடியையும் பார்க்க முடியாது.

ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முட்டாள்கள் கையிலே விட்டு விட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவனைக் குறை சொல்வது தான் ஜனநாயகம்.

கடவுள் மனிதனை பூமிக்கனுப்பும் போது ஒன்றே ஒன்று தான் சொல்லி அனுப்பினார். "நீ திரும்பவும் மனிதனாக வராதே, தெய்வமாக வா" என்பதே அது.

வாலிப வயதில் முட்டாளாக இருந்ததாக நான் இப்போது நினைக்கிறேன். ஆனால் நடுத்தர வயதில் முட்டாளாக ஆவோம் என்று நான் அப்போது நினைத்ததில்லை.

அறுந்து போன பட்டம் எங்கே போய் விழும் என்பதும், ஆத்திரக்காரன் கதை எதிலே முடியுமென்பதும் ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

நாலு நாள் வளர்த்த கோழிக்குக் கூடத் தான் வாழும் வீடு எது என்பது தெரிகிறது. நாட்டுச் சொத்தை நாற்பது வருஷம் சாப்பிட்ட மனிதனுக்குத் தேச பக்தி இல்லையே!

ஒவ்வொரு மரணமும் அழுகையோடு முடிந்து விடுகிறது. ஒவ்வொரு அழுகையும் மரணத்தோடு முடிந்து விடுகிறது.

'இன்ன விஷயத்தைத் தான் ரசிப்பேன்' என்று பிடிவாதம் செய்யும் ரசிகனுக்காக நான் எதையும் எழுத முடியாது. அப்படி எழுதினால் இன்னும் நாலு பக்கங்களுக்கு மேட்டர் வேண்டுமென்று கையைக் கட்டிக் கொண்டு நிற்கிற கம்பாஸிடருக்காக எழுதியது மாதிரி தான் இருக்கும்.

தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான்; ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.

ஒரு விஷயத்தில் பிறரது அங்கீகரத்தை நீ எதிர்பார்த்தால், அது நீ முழு அறிவோடு சிந்தித்த விஷயமல்ல என்று பொருள்.

'உங்களுக்குச் சோறு போடுவேன்' என்று சொல்வதன் மூலமே, உங்கள் பசியைத் தீர்க்கக்கூடிய சக்தி அரசியல்வாதி ஒருவனுக்குத் தான் உண்டு.

– கண்ணதாசன்

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் 'நற்றிணை'. 'நல்' என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் 'திணை' என்னும் பெயரும் சேர்ந்து 'நற்றிணை' என்னும் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது. 

இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175 புலவர்களால் பாடப்பெற்றது. தற்போது 192 புலவர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

இதைத் தொகுத்தவர் யார் என தெரியவில்லை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறுஎன்றும் கூறுவர். 

நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை இவை உணர்த்துகின்றன. பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கத்தையும், பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் கால்பந்து இடம்பெற்றிருந்தது போன்ற செய்திகளையும் நற்றிணையில் அறியலாம். 

இவர் யாரென்று எத்தனை பேருக்குத்தெரியும்

சரி,தெரிந்து கொள்வதற்கு முன்பு இவருக்கு உங்கள் நண்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்

ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்

DR. JONAS SALK, இவர்தான் போலியோவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்

சரி எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு

இவர் போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த பிறகு Patented Right வாங்க மறுத்துவிட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம் சினிமாப்படம் Copy rights வாங்குவது போல)

அவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலே மிகப்பெரிய பணக்காரர் ஆகியிருப்பார்

ஆனால் அப்படிச்செய்திருந்தால் பல கோடி ஏழைஎளிய மக்கள் அந்த மருந்தை வாங்கமுடியாமல் நோய்வாய்ப்பட்டு இறந்திருப்பார்கள்

பேட்டியொன்றில் "நீங்கள் ஏன் உரிமம் பெறவில்லை" எனக்கேட்டதற்கு "சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா" என்று கேட்டார் அந்த மாமனிதர்

பில்கேட்ஸ்,ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களைப்போற்றும் இந்த உலகம் இவரை யாரென்று கூடத்தெரிந்து கொள்ளாதது கசப்பான உண்மை

இவருக்கு நண்றி தெரிவிக்க நினைத்தால் இத்தகவலைப் பகிரவும்

உங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்ளட்டும்

நண்பர்களே நாம் வாகனம் ஓட்டும் போது முடிந்தவரை ஹெல்மெட் அணிந்து மிதமான வேகத்தில் சொல்லுவோம்.

நிதானமாக செல்வோம்,

வேலைக்கு முன்கூட்டியே செல்வோம்

நண்பர்களுடன் வாகனத்தில் போட்டி வேண்டாம்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்.

நண்பர்களே கடந்த 4-5 மாதங்களில் மட்டும் நாம் பலரை வாகன விபத்தால் இழந்திருக்கிறோம்.
மேலும் பலர் காயங்களுடன் நம்முடன் பணிக்கு வந்து செல்கின்றனர்.

நம்ம அடிபட்டா நம்மள மட்டும் பாதிக்காது.

1: தன் பலத்தை இழந்ததாக கருதும் தந்தை.

2: தன் நம்பிக்கையை இழந்ததாக கருதும் தாய்.

3: தன் வாழ்வையே இழந்து என்ன செய்ய யாரிடம் சொல்ல என படபடக்கும் மனைவி.

இனி இந்த மோசமான உலகில் எந்த ஆம்பளையை நம்ப என பரிதவிக்கும் மனைவி.

4:அப்பா வேலைக்கு போயிருக்காரு என நினைக்கும் நம் செல்வங்கள்

5: சகோதரனை இழந்து தவிக்கும் உடன்பிறப்பு.

6: மேலும் நம்மை அன்பாய் மாப்ள, மச்சி, டேய்,மாம்ஸ், மாப்பி, சகல, எரும, மாடு , வெட்டி என் அழைக்கும் நண்பர்கள்

நம் சொந்தங்கள், சமூக, மற்றும்  நட்புகள்.

நல்ல தொழிலாளியை இழந்து நிற்கும் நம் நிறுவனம்.

இதை அனைத்தையும் சற்று யோசியுங்கள்.

ஒவ்வொரு முறையும் விபத்து செய்தி கேட்டு நாங்கள் மருத்துவமனை செல்லும் போதும் விபத்துக்குள்ளானவர் உள்ளே நல்ல நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஆனால் அவருக்கு தெரியாது வெளியே அனைவரும் கதறி அழுகின்றனர் என்று.

இந்நிலை இனியாருக்கும் வேண்டாமே.

மரணம் அனைவருக்கும் வரும், ஆனால் மரணத்தை தேடி pls நாமே போக வேண்டாம்.

இதை படித்து ஒருவர் மாறினாலும் எங்களுக்கு சந்தோஷம்.

-- தமிழக அரசு காவல்துறை

Pls kindly read and forward to all groups and friends.🙏

எழுத்தாளர் சாவி பேட்டி (2.7.1961):

பெருந்தலைவர் முதல்வராக இருந்த சமயம்…. அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார்.

அந்தப் பேட்டியை இப்போது படிக்கும் போது, நெஞ்சம் விம்முகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைக்காமல் போனதுதான், 'அரசியல்வாதிகள் என்போர் சமூக விரோதிகள்' என்ற புதிய அர்த்தத்தை உருவாக்கியிருக்கிறது.

அந்தப் பேட்டி (2.7.1961):

விருது நகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது.

அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் சுலோசன நாடார் வீதி எனும் அந்த சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ்நாட்டின் தவப் புதல்வர் காமராஜர் அவர்களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.

மிகச் சாதாரணமான ஓர் எளிய இல்லம். நாங்கள் போன சமயம் வாயில் கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் படுத்திருந்தார். சின்ன இடம்தான். ஆனால் துப்புரவாக இருந்தது. நாலு பக்க சுவர்களிலும் தேச பக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே வேல்முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்யமூர்த்தியின் உருவம்.

கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். மூச்சுத் திணறியது.

"வாங்கய்யா…" என்று அன்புடன் இன்முகம் காட்டி அழைத்தபடியே எழுந்துபோய் மின்சார விளக்கின் சுவிட்சைப் போட்டார். விளக்கின் ஒளி அந்த எளிய வாழ்க்கையின் தூய்மையை இன்னும் பளிச்சென்று எடுத்துக் காட்டியது.

பண்புமிக்க அந்த மூதாட்டியார், 'நீங்கள் யார்?' என்று கூட கேட்கவில்லை. நாங்களாகவேதான் சொன்னோம் (இன்றைக்கு முதல்வரின் தாயார் அல்லது உறவினரை பேட்டியெடுக்க நேரம் கேட்டு மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டும்!).

# "ஓர் ஒப்பற்ற தேசத் தொண்டனை, தியாகியை, தலைவனை, தவப் புதல்வனைப் பெற்றெடுத்த, தங்கள் திருமுகத்தைக் கண்டுபோகவே வந்துள்ளோம். அந்த உத்தமனைப் பெற்றெடுத்த பாக்கியசாலி அல்லவா நீங்கள்?"

"ஆமாம் அய்யா… அது ஒரு சாதாரண பிள்ளை இல்லை. இணையற்ற ரத்னம்!" தொட்டிலில் இட்டு, தாலாட்டி வளர்த்த தாயின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட மணிவாக்கு இது.

# "தங்கள் திருமகனைப் பற்றி தாங்கள் ஏதாவது சொல்ல வேண்டும்…"

"நான் என்ன சொல்லப் போறேன் அய்யா. எனக்கு வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருஷம் உப்பைத் தள்ளி பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்த்துக் கொள்கிறேன்.."

# "சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா… என்று கேட்டபோது, அம்மூதாட்டியார் முறுவலித்தார்…"

"நல்லாச் சொன்னீங்கய்யா… அவன் மந்திரியாகி (முதல்வர்) ஏழெட்டு வருஷமாகுது. இதுவரைக்கும் நானங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன்…"

# "போனால் ஒரு மாதம் இரண்டு மாதம் தங்கிவிட்டு வருவீர்களா…?"

"நல்லாச் சொன்னீங்கய்யா… தங்கறதாவது. போன உடனே, என்னை ஊருக்கு திரும்ப பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாக இருப்பானே! பட்டணம் பார்க்கணும்னா சுத்திப் பாரு, திருப்பதிக்கு போகணும்னா போயிட்டு வா… எல்லாத்தையும் பாத்திட்டு உடனே விருதுநகருக்குப் போய்ச் சேரும்பானே…!"

# "இந்த வீட்டுக்கு வந்து உங்களைப் பார்ப்பாரா?"

"உம்.. ஆறுமாசத்துக்கு ஒருக்கா வருவான். இப்படி வாசப்படி ஏறி உள்ளே வருவான். சவுக்கியமாம்மா?, என்று கேட்பான். இப்படியே திரும்பி, அப்படியே போயிடுவான். அவனுக்கு ஏது நேரம்?"

# "மாசச் செலவுக்கு உங்களுக்கு பணம் அனுப்புகிறாரா?"

"அனுப்பறான். பொட்டிக் கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்…"

# "எவ்வளவு பணம் அனுப்பறாரு..?"

"120 ரூபாய்… பத்துமாய்யா? தண்ணி வரியே 13 ரூபா கட்டறேன். எனக்கு ஒரு மகள். அவள் புருஷன் இறந்து போயிட்டாரு. அவளுக்கு இரண்டு ஆம்பிளைப் பிள்ளைங்க. ஒருத்தன் வேலைவெட்டி இல்லாம இருக்கான். தங்கச்சி குடும்பம், குழந்தைங்கன்னு கவனிக்க மாட்டான். தங்கச்சி மகன்தானே.. ஒரு வேளை செஞ்சு வைப்பானா… செய்ய மாட்டான்யா.. மாசம் அந்த 120 ரூபாதான் கொடுப்பான். அதுக்குமேல செலவு செய்யக் கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான்… நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா…

ரேசன் வந்தது பாருங்க. அப்ப இங்க வந்திருந்தான். அவனக் கேட்டேன். 'என்னப்பா, இருந்த வீட்டிலும் கேப்பை சாப்பிட்டதில்ல, வந்த வீட்டிலயும் சாப்பிட்டதில்ல. இப்ப இப்படி கேப்பையும் கம்பும் போடறாங்களே… இதை எப்படி சாப்பிடறது.. நெல்லு வாங்கித் தரப்படாதா?'-ன்னு கேட்டேன்… 'நெல்லுப் பேச்சுப் பேசாதே… ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணா…"ன்னு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா…."

(அதாவது காமராஜர் முதல்வராகும் முன்பு கூட அவர்கள் நெல்லு சோறு சாப்பிட்டவர்கள்.. ஆனால் அவர் முதல்வரான பிறகு கேப்பையும் கம்பும்தான் உணவு. முதல்வர் வீடாக இருந்தாலும், மக்களுக்கு என்னவோ அதுதான் தன் தாய்க்கும் என்பது பெருந்தலைவரின் கண்டிப்பான நிலைப்பாடு!)

# "இந்த வீடு எப்போது கட்டினது?"

"அவன் பிறக்கிறதுக்கு முந்தியே கட்டினது. எனக்கு 17 வயசிலயே அவன் பிறந்தான். எனக்கு இருவத்தியஞ்சில அவன் தகப்பனார் இறந்து போனாரு. நிலம் நீச்செல்லாம் இருந்தது. இவன் செயில்ல இருக்கிறப்போ அதையெல்லாம் வித்து வித்து செலவழிச்சிட்டேன். இந்த வீடு ஒண்ணுதான் மிச்சம். சின்ன வயசுல, இவனைப் படிக்க வைக்கணும்னு நான் கொஞ்சமான பாடா பட்டேன். ஒரு வாத்தியார இட்டு வந்து படிக்கச் சொன்னேன்…"

# "ஏன் படிப்பை விட்டுட்டாரு…"

"எட்டு வரைக்கும் படிச்சான். அப்புறம் மூளைக்கு எட்டலேன்னு விட்டுட்டான். வீட்டுல தங்க மாட்டான். தலை முழுக வரமாட்டான். பாடா படுத்துவான். கொட்ற மழையில எங்க போவானோ… எங்க திரிவானோ… வலைப் போட்டு தேடுனாலும் அம்பட மாட்டான். சரி, வெயிலடிச்சா வருவானா… அப்பவும் வரமாட்டான்.
ஆனா ஒண்ணு.. அப்பவும் தலைவலின்னு படுத்ததில்ல.. இப்பவும் படுத்ததில்லை. சின்னப் பிள்ளையில ரொம்ப அடம்பிடிப்பான். இப்ப எங்க போச்சோ தெரியல அந்தக் கோவமெல்லாம். அப்படி இருந்தவனா இப்படி அறிவாளியாகிட்டான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கய்யா… அதோ இருக்காரே முருகன்… அவன்தான் இவனுக்கு இவ்வளவு அறிவைக் கொடுத்திருக்கணும்..!"

இதைக் கூறும்போது, அந்த அன்னையின் முகத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் தாண்டவமாடின. 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்', என்ற வள்ளுவரின் வாக்கு எவ்வளவு மெய்யான வாக்கு!

# "உங்கள் மகன் படிக்கவில்லைதான். ஆனாலும், அவர் அறிவாளுக்கிடையே ஒரு சிறந்த அறிவாளியாக விளங்குகிறார். இந்த நாட்டில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கிறார்…"

"ஆமாம் அய்யா… அவன் என் வயிற்றில் பிறந்த மாணிக்கம். இந்தக் கைகளால் அவனைத் தாலாட்டினேன், சீராட்டினேன்…", தன் மணிக் கரங்களை பெருமையுடன் பார்த்து மகிழ்ந்தவண்ணம் கூறினார் அந்த அன்னை.

# "நீங்கள் உங்கள் கைகளால் அவரைத் தாலாட்டினீர்கள். இன்று அவர் கைகள் இந்த நாட்டு மக்களையே தாலாட்டுகின்றன…"

"உண்மைதானய்யா…"

# "நேரு இங்கு வந்திருந்தபோது, தங்களைப் பார்த்துவிட்டுப் போனாராமே… அவர் என்ன சொன்னார்?"

"சிரித்தபடியே மகிழ்ச்சியோடு என் கையைப் பிடித்து குலுக்கிவிட்டு ஏதோ சொன்னார். என் மகனும் அப்போது பக்கத்திலே தான் இருந்தான்."

# "நேருஜி என்ன சொன்னார்?"

"அவங்க பாஷை எனக்குப் புரியுதாய்யா… என்னமோ சொன்னாரு… வேறென்ன சொல்லியிருப்பாரு… எல்லாரையும்போல் 'இந்த மகனைப் பெற்றெடுத்த நீங்கள் பாக்கியசாலின்னு' சொல்லியிருப்பாரு…!"

"இத்தகைய மகனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான். தமிழ்நாட்டுக்கு இப்படியொரு உத்தமனைப் பெற்றுக் கொடுத்த தங்களை வணங்குகிறோம் அம்மா… நாங்கள் விடை பெற்றுக் கொள்ளலாமா?"

"மகனைப் பெற்று வளர்த்து இந்த நாட்டுக்குக் கொடுத்துவிட்டேன். அவன் நீண்ட காலம் இருந்து இந்த நாட்டுக்கு மேலும் மேலும்
சேவை செய்துகிட்டிருக்கணும் என்பதுதான் என் ஆசை…"

அந்த அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன.

# "ஏன் கண்கலங்குகிறீர்கள்… இந்த மகனைப் பெற்றதற்கு மகிழ்ச்சியடையுங்கள்."

"துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை அவர் தாய் துறந்துவிட்டதைப் போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக துறந்துவிட்டு நிற்கிறேன்", என்று கூறினார்.

தம்முடைய ஒரே தவப்புதல்வனை நாட்டுக்காக தியாகம் செய்துவிட்டு தனிமையில் வாழ்வதைக் காட்டிலும் பெரிய சோகம் ஒரு தாய்க்கு வேறென்ன இருக்க முடியும்!

ஒரு அம்மாவுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு ஆண், ஒரு பெண்.

அந்த அம்மாவிடம் பக்கத்து வீட்டு அம்மா கேக்குறாங்க...

உங்க மாப்பிள்ளை எப்படிங்க?

அடட...மாப்பிள்ளை என் பொண்ணு பேச்சை அப்படி கேப்பாரு. என் பொண்ணு என்ன சொன்னாலும் செய்வாரு, தங்கமான மாப்பிளை.

ஓ...சரி, உங்க மகன் எப்படி???

அந்த லூசப்பத்தி ஏன் கேக்குறீங்க, அவன் அவ பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு அவ பின்னாடியே முந்தாணைய பிடிச்சிட்டு சுத்துறான், பொண்டாட்டி பைத்தியம் உருப்படுவானா, நாசமாப்போவான்???

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே.......

.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."

ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?

இவ்வளவு சீக்கிரமாகவா?

என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

"மன்னித்துவிடு மகனே........

உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."

"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

"உன்னுடைய உடைமைகள்........."

"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"

"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."

"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"

"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........

அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."

"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........

குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"

"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"

"என் உடல்?..........."

"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."

"என் ஆன்மா?"

"இல்லை........அது என்னுடையது.........."

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........

கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை.

நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.

வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.

எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......

.அது மட்டுமே நிரந்தரம்.......

-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"

தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"

மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?"

தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?"

மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுப்பா ."

தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா ..."

மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"

தந்தைக்கு கோபம் வந்தது ...
தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குறேன்..."

அந்த சின்னப்பையன் அமைதியா அவன் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டான் ..

அவன் தந்தை மகனின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் ..1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ..

தந்தை : "தூங்கிட்டியாடா ?"

மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..."

தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட 50 ரூபாய் .."

அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான்.
மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "

அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .. அந்த சிறுவன் மெதுவாக பணத்தை எண்ணி சரிப்பார்தான் ... பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...

தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் .... அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."

மகன் : "ஏன்னா தேவையான பணம் என் கிட்ட இல்ல ... இப்போ இருக்கு ....
கேளுங்கப்பா... இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு .... இதை நீங்களே வச்சிக்கோங்க ... இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க ... நா உங்ககூட இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ... "

அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் ... சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...
தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்

வாழ்வில் பணம் வந்து போகும். நேரமும் முடிந்து போகும். உழைப்பதற்காக வாழாதீர்கள். வாழ்வதற்காக உழையுங்கள். அனைவரிடமும் அன்பை காட்டுங்கள். முடியவில்லை எனின் உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் மீதாவது அன்பை அள்ளி வழங்குங்கள்.

முகநூல், வாட்ஸப் போன்றவற்றில் Facebook கொண்டு வரும் ஃப்ரீ பேசிக்ஸ் (Free Basics) க்கு ஆதரவளிக்கும்படி நண்பர்கள் வேண்டி வருகின்றனர். அதே சமயம் நெட் நியூட்ராலிட்டி (Net Neutrality) குறித்தும் சிலர் எழுதுகின்றனர். இரண்டையும் குழப்பிக் கொண்டு எதை ஆதரிப்பது? எதை எதிர்ப்பது என புரிந்துகொள்ளாமலே நண்பர்கள் பலர் பகிரக் காண்கிறோம்.

அடிப்படைகள் சிலவற்றை பார்த்துவிடலாம்.

ஃப்ரீ பேசிக்ஸ் (Free Basics) என்றால் என்ன?

ஃப்ரீ பேசிக்ஸ் என்பது ஒரு திறன் பேசி பயனாளர் டேட்டா பேக் போடாமல் இருந்தாலும் சில இணைய தளங்களை, சில சேவைகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பயனாளர் எந்த இணைய தளத்தை பயன்படுத்துகிறார்களோ அந்த இணைய தளமே தொலை தொடர்பு நிறுவனத்துக்கு கட்டணத்தை செலுத்திவிடும்.

நெட் நியூட்ராலிட்டி (Net Neutrality) என்றால் என்ன?

நெட் நியூட்ராலிட்டி என்பது ஒரு வகையில் மக்களாட்சி போன்றது. ஆடு மேய்க்கும் அங்குராசுவுக்கும் ஒரு ஓட்டு, ரிலையன்ஸ் அதிபர் அம்பானிக்கும் ஒரே ஓட்டுதான். அது போல முக நூல் வலைத் தளமானலும் சரி, அல்லது எங்கோ ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவின் வலைத் தளமாக இருந்தாலும் சரி இரண்டு தளங்களையும் உங்களால் பயன் படுத்த இயலும். பயன்பாட்டுக்கு கட்டணம் ஒன்றே.

இலவச ஃப்ரீ பேசிக்ஸ் (Free Basics) நல்லதுதானே, இதை ஏன் எதிர்க்க வேண்டும்?

ஆரம்பத்தில் இணைய சேவை இலவசமாக அனைவருக்கும் கிடைப்பது மகிழ்ச்சியே. இந்த இலவச சேவையானது Differential pricing எனப்படும் மாறுபட்ட விலை விதிப்பின் ஒரு வடிவமே.  இன்று முகநூல் பயன்பாடு இலவசம் என்பவர்கள் ஒரு நாள் அதற்கு பல மடங்கு கட்டணம் விதிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

தீபாவளி, பொங்கலுக்கு பல மடங்கு கட்டணம் விதிக்கும் ட்ராவல்ஸ் பேருந்து நிறுவனங்களை நாம் இன்றும் பார்க்கிறோம் அல்லவா? சென்னையில் வெள்ளம் வந்தபோது பால் ஒரு பாக்கெட் 150ரூபாய்க்கு விற்றவர்களையும் பார்த்தோமே!

தற்பொழுது கூகுள் போன்ற இணைய தேடுதலில் நீங்கள் தேடும் தகவல் இருக்கும் எல்லா வலைத்தளங்களும் பாரபட்சமின்றி காட்டப்படும். ஆனால் ஃப்ரீ பேசிக் சேவையில் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தும் வலைத்தளங்கள் மட்டுமே உங்களுக்கு காட்டப்படும். கட்டணம் செலுத்த இயலாத ஒரு தளம் உங்களுக்கு மிகவும் தேவையான தகவலை கொண்டிருந்தாலும் அதை உங்களால் தேடி அடைய முடியாது.

ஆக, நமக்கு தேவையானது ஃப்ரீ பேசிக்ஸ் (Free Basics) அல்ல நெட் நியூட்ராலிட்டி (Net Neutrality) மட்டுமே.

ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் தயாராகிவரும் காளைகள்

ஆண்கள் கவனத்திற்கு:
====================
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும் போது உஷார்.)

கணவனும் மனைவியும் லிப்ட்ல 10ம் மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருக்கிறார்கள்.

5ம் மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட்ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.

சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.

இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடி வாங்கிய அவமானம்.

லிப்ட்டில் இருந்து இறங்கி வெகுநேரமாகியும் அவன் மனைவியிடம் எதுவும் பேசவில்லை.

இருவரும் வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.

கணவன்:இல்லடி, நான் லிப்ட்ல ஒண்ணுமே செய்ல.

மனைவி : அட, அததான் விடுங்கன்னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பாக்கப் பொறுக்காம நான்தான் அவ இடுப்பை கிள்ளுனேன்.

கணவன்:😳😳😳😳😳

மார்க்கெட்டிங் வேலை செய்பவர் ஓருவர் ஆறேழு மாசமா டாக்டரிடம் வந்து
போயிட்டு  இருந்தாரு...

டாக்டர் பொண்ணு அவர் சின்சியாரிட்டிய
பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா.
இந்த விசயம் டாக்டருக்கு தெரிஞ்சு போச்சு.,

டாக்டர்  "எம்பொண்ண ஒரு பிச்சைகாரனுக்கு
கல்யாணம் பண்ணி தந்தாலும் தருவேன் ஆனால்
ஒரு மார்கெட்டிங் வேலை செய்பவனுக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேனு"
சொல்லிட்டாரு..

டாக்டர் பொண்ணுக்கு தோஷம் இருக்கு அவளை
யார் கல்யாணம் பண்ணாலும் ஒரே மாசத்துல
செத்துடுவாங்க..

டாக்டர் அவர் பொண்ணை ஒரு டாக்டருக்கு
கல்யாணம் பண்ணி வைக்கிறாரு..

அந்த டாக்டர் ஒரே மாசத்துல செத்துடுறான்..
அப்புறம் இன்ஜினியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்.
அந்த இன்ஜினியரும் செத்து போயிடுறான்.
ஆசிரியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார்,
அந்த ஆசிரியரும் செத்து போயிடுறான்...

என்னடா இது நம்ம பொண்ணு வாழ்க்கை இப்பிடி
ஆகிடுச்சே.. சரி அந்த மார்க்கெட்டிங் வேலை செய்பவனுக்கு மேரேஜ் பண்ணி
வச்சுடலாம்னு முடிவு பண்ணி..

அவர் கால்ல விழுந்து கெஞ்சி
மேரேஜ் பண்ணி வச்சுட்டாரு... எல்லோரும் அந்த
அவர் செத்துடுவான்னு எதிர்பார்த்துட்டு இருந்தாங்க... 

ஒரு மாதம் ஆச்சு, மூன்று மாதம் ஆச்சு,
ஒரு வருஷம் ஆச்சு ஆனால் அந்த சாகலை...
எல்லோருக்கும் ஆச்சரியம்...

செத்து போன அந்த டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர்
சேர்ந்து எமன்கிட்ட முறையிடுறாங்க...
அந்த பொண்ணு ஜாதகபடி அவள கட்டிகிட்டவன்
ஒரே மாசத்துல செத்துருவான்னு இருக்கு...
அதனாலதான் நாங்க இங்க இருக்கோம்..

ஆனால் அவருக்கு ஒன்னும் ஆகலையே எப்படி?..

அதற்கு எமன் சொல்றாரு, 
அந்த டாக்டர பிடிக்க அவரோட ஹாஸ்பிடல்ல
வெயிட் பண்ணிட்டு இருப்பேன்,
டாக்டர் வந்த உடனே பிடிச்சுட்டு வந்துடுவேன்.
இன்ஜினியரை பிடிக்க அவரோட ஆபிஸ்ல வெயிட்
பண்ணிட்டு இருப்பேன்..
இன்ஜினியர் வந்த உடனே அவரை பிடிச்சுட்டு
வந்துடுவேன்..
அதே மாதிரி ஸ்கூல்ல வெயிட் பண்ணி ஆசிரியரை
பிடிச்சிடுவேன்,

ஆனால் இந்த மார்க்கெட்டிங் வேலை செய்பவர் இருக்காரே ( எமனே அழறாரு)..
அவரோட டூர் ப்ரோக்ராம்ல நாமக்கல்னு போட்டிருந்தாரு
அதை நம்பி நான் நாமக்கல்ல வெயிட் பண்ணிட்டு
இருந்தேன். ஆனா அவரு மேட்டூர்ல வொர்க் பண்ணிட்டு
இருக்காரு... சரி அடுத்த நாள் ஆத்தூர்னு போட்டிருந்தாப்ல
நான் ஆத்தூர்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன்
ஆனா சேலத்துல வொர்க் பண்ணிட்டு இருக்காப்ல..

டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர் போல ஈசியா
பிடிச்சுடலாம்னு நினைச்சேன், ஆனால் இந்த
எமனுக்கே எட்டு போட்டு காட்றான்யா எமனே
தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டாரு..

எமனை மட்டுமில்லை.,
எவனையும் சமாளிப்பான் இந்த மார்கெட்டிங் வேலை செய்பவர்கள்

இறந்துவிட்டான் சேகர்.....

ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு
செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு
தான்.....

இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர்...
சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.

சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க
ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும்.

சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ?

சித்ரகுப்தன் : லவ்

சேகர் : L O V E

சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க.
சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது.....

சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?..

சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு
காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்....நான்
திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க
வேண்டும்.....

சேகர் : சரிங்க சாமி !!

சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது
வந்தால் ந இதே கேள்வி அவங்ககிட்ட கேளு. கரெக்டா
ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கனா அவங்கள நீ
சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு....
தவறாக கூறினால்
நீ அவங்களுக்கு அடுத்த கேட் போகச்சொல்லு.
அது
நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாத அங்க போனவங்க
மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க...
கேட்கிட்ட
போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க. ...

(இதைக்கேட்டதும் சேகர் நடுங்கிப் போயிட்டான்....)

சேகர் : சரிங்க சாமி !!

*சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு
வருவதை சேகர் பார்த்தான்!
*****சேகர் அதிர்ச்சி அடைந்தான்*****
காரணம் அது சேகரின் மனைவி.

சேகர்: நீ எப்படி இங்க வந்த ?
மனைவி : அதாங்க... உங்க பிணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு
வர்ற வழியில என்ன ஒரு பஸ் இடிச்சிட்டு.... பின்ன நான்
பார்க்கிறது இந்த இடந்தான்.

****சொர்க்கத்திற்குள்
ஓடிவந்து நுழையப்பார்த்த மனைவியை தடுத்து
நிறுத்தி சேகர் சொன்னான்..

நில் நில் இங்கவுள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு
போகணும்னா *ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும்

*கரெக்டா spelling சொன்னாமட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் .
இல்லைனா அடுத்த கேட் வழியா நீ
நரகத்துக்குத்தான் போகணும்.

மனைவி : என்ன வார்த்தை?

சேகர் : செக்கோஸ்லோவாகியா.😜😝😛

#படித்ததில்_பிடித்தது.....

சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக  வந்தது அந்த குழந்தை.

இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும்  கவனித்து  வருகிறார் அவரின் கணவர்.

இந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள்.

குழந்தைக்கு 2 வருடம் ஆகி இருக்கும்.  வீட்டுவேலை செய்யும் இந்த பெண்மணி  விடுமுறைக்கு ஊர் செல்ல பலமுறை அனுமதி கேட்டும், முடியாத  சூழ்நிலையில்  தள்ளிக்கொண்டே போனது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு 3 மாதம் விடுமுறையில் ஸ்ரீலங்கா சென்றார் அம்மணி.

தன்னை  பிரிந்த அடுத்த  நிமிடத்தில் அழ ஆரம்பித்து விட்டது   அந்த குழந்தை. சரி, சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று இருந்து விட்டார்கள்.

இரவு  உணவு  உண்ணவில்லை. ஒரே அழுகை. அழுது.. அழுது.. துவண்டு தூங்கி விட்டது. அப்படியே தூங்கட்டும். காலையில் விழித்ததும் பசிக்கும், சாப்பிடும். என்று விட்டு விட்டார்கள்.

காலையில் விழித்ததும் ஈனக்குரலில் அழ ஆரம்பித்து விட்டது. சாப்பாடு ஊஹூம். அருகில் இருக்கும் சாமான்களை பலம் இல்லாத கையால் தூக்கி எறிவதும், துவண்டு விழுவதுமாக இருந்தது. சில மணித்துளியில் மயங்கி விழுந்து விட்டது.

பயந்து போன பெற்றோர்கள் மருத்துவமனையில் அட்மிட் பண்ணி விட்டார்கள். அனைவர்களுக்கும் ஒரே கவலை. மூன்று நாட்களாக ட்ரிப் மூலம் தான் அனைத்தும் நடந்து வருகிறது.

டாக்டர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. எந்த மருத்துவமும் கைகொடுக்க வில்லை. மூன்று நாட்களாக கண் திறந்து பார்க்கவில்லை. மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.

ஒரே மருந்து..!!!! அந்த வேலைக்கார பெண் இங்கு வந்தே ஆகனும். இல்லை என்றால் இப்படியே கோமாவில் தான் குழந்தை இருக்கும். அதன் பின்பு ஒன்றும்  நல்லது  சொல்ல இயலாது என்று கூறி விட்டார்.

அந்த அரபி அந்த அம்மணியை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல் ஒட்டு  மொத்த  குடும்பமும்  உருக்குலைந்து  இருந்தது.

பல வருடங்களுக்கு முன்பு, இந்த ஸ்ரீலங்கா பெண்மணி, என் கம்பனிக்கு அடுத்து இருக்கும் ஒரு வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனம் மூலம் வந்தவர். முதல் நாள் அவளை அழைத்து செல்ல வந்த சௌதி, அவள் பேசும் தமிழ் புரியாமல், என்னிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதை நினைவில் வைத்துக்கொண்டு,  என் ஊராக இருக்கும் என்று என்னிடம் வந்தார்.  விபரங்கள் கூறினார். குழந்தை போல அழுதார். ஒரு மல்டி மில்லினர்,  பல  நிறுவனங்களுக்கு அதிபதி, குறைந்தது 15 ஆயிரம் நபர்களாவது  இவரிடம் பணி புரிகிறார்கள். கூடவே மன்னர் குடும்பத்தில் பெண் எடுத்தவர்..!! விபரம் சொன்னார்.

நான் அவரிடம், தமிழ் மொழி பல நாடுகளில் பேசுகிறார்கள். நான் இந்தியா, அவள்  ஸ்ரீலங்கா. என்று விவரித்துக்கொண்டு இருக்கும் போது, மூலையில் ஒரு மின்னல் வெட்டியது.

அந்த  அம்மணி  கூறிய  அவளுடைய  ஊரும்,  எனக்கு  பழக்கமான  ஒரு ஸ்ரீலங்கா  டிரைவரின்  ஊரும் ஒன்று. அடுத்தடுத்த தெரு. அவரை பிடித்தேன், அவரின் மனைவிக்கு போன் போட்டு, அடுத்த தெருவில் இருந்த வேலைக்கார அம்மணியை தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்து, சௌதியிடம் பேச வைத்து விட்டேன்.

ஒரு 40 நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால் அந்த வேலைக்கார அம்மணியோ, நான் வந்து 4 நாட்கள் தான் ஆகிறது, கணவனுக்கு இளைப்பு நோய்  வந்து மருத்துவமனையில் அட்மிட் பண்ணி இருக்கின்றோம். நான் எப்படி வர இயலும்  என்று தன்னுடைய இயலாமையை கூற,

சௌதி என்னிடம் பேச சொல்ல, நான் இந்த குழந்தையின் நிலைமையை சொல்ல, அவள் அழுக, அவளின் சூழ்நிலையை சொல்ல. அனைத்தையும் சௌதியிடம் கூறினேன்.

அவரோ  தேம்பி தேம்பி அழுது கொண்டு, என் சொத்து அனைத்தும் போனாலும்  பரவாயில்லை.  எனக்கு  என் குழந்தை வேண்டும் என்று கூறினார்.

சரி, அவளுடைய குடும்பத்திற்கு விசா ஏற்பாடு பண்ணுங்க என்று கூறி, அவளிடம் அனுமதியும் வாங்கி விட்டேன். அடுத்து கூடுதல் பிரச்சனை.அவளுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் இல்லை. சிறிலங்காவிற்குவிசா கிடைப்பது அரிது. அதுவும் பாமிலி விசா-குதிரைக்கொம்பு. அப்படி விசா கிடைத்தாலும், ஸ்டாம்பிங் அடித்து வர குறைந்தது 4 வாரங்கள் ஆகும்.

அதுவரை குழந்தை தாங்குமா என்ற பல சங்கடங்களை அவரிடம் விவரித்தேன்.

அவரோ, நோ ப்ராப்ளம். என் மனைவி ஒரு அமீரா(இளவரசி) என்று கூறி, அதிசயத்திலும் அதிசயமாக 2 நாட்களில் அனைத்தும் முடிந்து, அவர்கள் அனைவர்களும்  தம்மாம்  ஏர்போர்ட்  வந்து  இறங்கி விட்டார்கள்.

குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கசக்கி போட்ட சிறு துண்டு போல கிடந்தது. ஒரு சிறு அசைவு கூட இல்லை.

நேராக  அவர்களை  அழைத்துக் கொண்டு சாத் மருத்துவமனைக்கு சென்றோம்.
மருத்துவமனையே பரபரப்பாக ஆகிவிட்டது. குடும்பத்தார்கள் கூட்டம் ஒருபக்கம். நண்பர்கள், நிறுவனத்தில் முக்கிய ஆட்கள் என்று பெரும் கூட்டம்.

குழந்தை இருந்த அந்த சூட்-க்குள் சென்றோம். குழந்தை இருந்த நிலையை பார்த்ததும் அந்த வேலைக்கார அம்மணி கதறி விட்டார். அவளை தேற்றி ஆறுதல்  படுத்தி, குழந்தைக்கு அருகில் அழைத்துச் சென்றோம்.

மெதுவாக அம்மணி, ஆதில், ஆதில், ராஜா (தமிழில் தான்) என்று கூற கூற காலின் பெருவிரல் அசைய ஆரம்பித்தது. இங்கிலாந்து மருத்துவர் சைகை காட்ட காட்ட அந்த அம்மணி ஆதில் ஆதில்.. ராஜா.. ராஜா.. என் ராஜா.. என்று கூறக் கூற , ஒரே நிசப்தம்.

எனக்கோ எதோ ஒரு தியேட்டரில் படம்  பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு.

சிறிது சிறிதாக குழந்தையிடம் அசைவு தெரிய.. அனைவர்களின் முகத்திலும் பிரகாசம் தெரிய ஆரம்பித்தது.

ஒரு 20 நிமிடத்தில் கண்ணை திறந்தான், அருகில் இருக்கும் கத்தாமாவை பார்த்தான், எப்படிதான் அவன் உடலில் இவ்வளவு சக்தி இருந்ததோ தெரியவில்லை, சடார்….. என்று  எந்திரிக்க, உடலில் இணைக்கப்பட்ட வயர்கள்,  டியூப்கள் எல்லாம் தெறிக்க, அவளை கட்டிப்பிடித்து, முதுகில் குத்து குத்து என்று குத்தி, கறுத்த அவளுடை முகத்திலும், கழுத்திலும், முத்தங்கள் பொழிய அனைவர்களுடைய கண்களிலும் கண்ணீர் உருண்டு ஓடியது.

எத்தனை பாசமலர் படம் பார்த்தாலும் இந்த காட்சி கிடைக்காது.

அங்கு வந்து இருந்த அனைத்து பெண்மணிகளும் அந்த வேலைக்காரியை முத்தத்தால் நனைத்தார்கள். சிறிது நேரத்தில் அந்த வளாகம் குதூகலமாகவும், சந்தோசமாகவும், ஒரு பார்ட்டி ஹால் மாதிரி உருமாறி விட்டது.

அந்த வேலைக்கார பெண்மணி சாப்பிட்டுக்கொண்டு இருந்த எச்சில் பட்ட கேக்கை, அந்த குழந்தை பிடுங்கி தின்ன, கூடி இருந்த அனைவர்களும் ரசித்து பார்க்க.. ஒரே பரவசம் தான்.

அப்புறம், அவருடைய கணவருக்கு அதே மருத்துவமனையில், அதே சூட்டில் மருத்துவம், அவர்களின் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை, குழந்தைகளுக்கு  நம்ப முடியாத  பள்ளியில்  உயர்ந்த கல்வி.

கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்…..!!!! வாழ்க்கை வசந்தமே.


====================
(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும் போது உஷார்.)

கணவனும் மனைவியும் லிப்ட்ல 10ம் மாடியிலிருந்து கீழே வந்து கொண்டிருக்கிறார்கள்.

5ம் மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட்ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.

சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.

இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடி வாங்கிய அவமானம்.

லிப்ட்டில் இருந்து இறங்கி வெகுநேரமாகியும் அவன் மனைவியிடம் எதுவும் பேசவில்லை.

இருவரும் வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.

கணவன்:இல்லடி, நான் லிப்ட்ல ஒண்ணுமே செய்ல.

மனைவி : அட, அததான் விடுங்கன்னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பாக்கப் பொறுக்காம நான்தான் அவ இடுப்பை கிள்ளுனேன்.

கணவன்:😳😳😳😳😳

அரண்மனையையட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.
திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும்என்றாயாமே?'' என்றார் அரசர். ''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந் துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.
அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!
அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.
வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச்சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.
ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமேபறித்து விட்டது. அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.
அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயேகவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.
அரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும்இருக்கின்றனர்.
இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்;வெளிச்சத்தை வழங்காது.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை. மகிழ்ச்சியாக இருப்போம்;

🐝🐝🐝🐝🐝🐝🐝🐝 It is big message but very very important..kindly read this..don't think it is waste of time...

🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ' என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இனிக்கும் செய்தியல்ல....!

🐝தேனீ...
.............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?

முதலில்... ஆச்சரியம்.

🐝தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு
தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும்
தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும்
காரணம்.

🐝தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப்,
வாட்ஸ்அப் முறைகளை விடத்
துல்லியமானது.

🐝யானை, ஆமைகளுக்கு
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால்,
அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.

🐝இதுபோல இன்னும்
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு
உடம்பில் இருக்கின்றன.

ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...

🐝அந்தத் தேனீக்கள் இப்போது
'அழிந்துவரும் உயிரினங்கள்' பட்டியலில்
இடம்பிடித்திருக்கின்றன.

🐝ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி' என்றால்,
நிச்சயம் இதுதான்.

🐝ஒட்டுமொத்த மக்கள்
தொகையாலும் பூமிக்கு விளையாத
நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.

🐝அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு
சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப்
போர்வையைப் போத்துகிறது.

🐝தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்' பற்றி
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட
நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.

🐝தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப்
பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப்
பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்
சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்
தேனீ.

🐝இதில் இந்திய, இத்தாலிய மற்றும்
கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பாங்க.

🐝 மத்த தேனீக்கள்
தானாகவே காட்டில் வளரும்.

🐝ஒரு
குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில
நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்
தேனீக்கள் (பெண்கள்) இருக்கும்.

🐝இதில் ஆண்
தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித்
தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித்
தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள்.

🐝ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது
மட்டும்தான் வேலை.

🐝ஆண் தேனீக்கு,
ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப்
பாதுகாப்பதும் கடமை.

🐝மற்ற எல்லா
வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு.

🐝உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,
தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச்
சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா
வேலைகளையும் பணித் தேனீக்கள்தான்
கவனிக்கும்.

🐝தேனீக்களின் பொறியியல் அறிவு
அபாரமானது.

🐝தேன் கூட்டை அறுங்கோண
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு
சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.

🐝ஆண்
தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய
அறுங்கோண செல் வடிவத்தில் கூடு
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்
வடிவில் செல் கட்டும்.

🐝கூட்டின் கட்டுமானம்
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்
தேனீ அதில் முட்டையிடும்.

🐝பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான்
தேனீக்களின் உணவு.

🐝அப்போதைய பசிக்கு
அப்போதே சாப்பிட்டுவிடும்.

🐝அப்புறம் ஏன்
தேன் சேகரிக்கிறது?

🐝குளிர் காலங்கள், பூ
பூக்காத காலங்களில் உணவுத்
தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன்
சேகரிக்கிறது.

🐝தேனீக்கள் தேன் சேகரித்துப்
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த
உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.

🐝தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள்,
பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில்
இருக்கும் 'தேன் பை'யில்
சேகரித்துக்கொள்ளும்.

🐝அந்த மதுரம்
முழுவதும் செரிக்காமல், தேனீயின்
வயிற்றில் இருக்கும் நொதிகளுடன்
சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

🐝கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள்,
கூட்டின் வாசலில் காத்திருக்கும்
தேனீக்களிடம் அந்தத் திரவத்தை
ஒப்படைக்கும்.

🐝அதற்காக ஏப்பமிட்டு
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து
திரவத்தை வெளியில் கொண்டுவந்து
எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.

🐝ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும்.

🐝கூட்டைப் பராமரிக்கும்
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்
ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,
அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச்
சேர்க்கும்.

🐝பிறகு அந்தத் திரவத்தில்
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக
தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.

🐝பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை
மெழுகைப் பூசிவைக்கும்.

🐝இத்தனை
நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்
சுவைக்கும் தேன் உருவாகும்.

🐝தேன்
எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை
தேனிக்களுக்கு எனக் கூட்டில்
விட்டுத்தான் எடுப்பார்கள்.

🐝அதுதான் தேன்
சேகரிக்கும் தர்மம் !

🐝இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ
அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும்.

🐝இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான்
அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில்
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்
பறக்கும்.

அதை எந்த ஆண் தேனீ துரத்திப்
பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.

🐝புணர்ச்சி முடிந்தவுடன்
ஆண் இறந்துவிடும்.

🐝அதன் பிறகு ராணித்
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து
வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

🐝தேன் சேகரிப்பதற்கான தகவல்களை
தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை
அட்டகாசமானது.

🐝உணவுத் தேவை
ஏற்படும்போது 'ஸ்கவுட்' ஆக சில தேனீக்கள்
முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.

🐝கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள்,
தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது
சோலை எந்தத் திசையில் எவ்வளவு
தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.

🐝இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.

வட்ட
நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.

🐝வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை
ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே
பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது
என்றும் அர்த்தம்.

🐝வாலை வேகமாக
ஆட்டினால், சோலை அருகில் உள்ளது
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

🐝சூரியன், சோலையின் திசை, தங்கள்
கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும்
சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும்.

🐝இந்த நுட்பமான நடன ரகசியத்தைக்
கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு
கொடுத்தார்கள்.

🐝தேன் சேகரிக்கும் போது தேனீக்களின்
காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின்
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல்
உட்காரும்போது, விதவிதமான
கூட்டணியுடன் பரவும்.

🐝இதுதான்
காடுகளின், சோலைகளின் பரவலுக்குக்
காரணம்.

🐝தேனீக்களை அதிகம்
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.

🐝காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்
உருவாகிவிடும்!''

🐝''அழியும் உயிரினம் பட்டியலில் இடம்
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''

🐝''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்
உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு
தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42
சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

🐝இன்னும்
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.

🐝ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை
வரலாம்.

🐝தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம்,
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவு
சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்
கொத்துக் கொத்தாகக்
காணாமல் போய்விடும்.

🐝ராணி மட்டும்
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,
ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.

🐝இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

🐝பணித்
தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு.

🐝அதில்
முக்கியமானது... செயற்கை உரம்,
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட
பயிர்கள்.

🐝செயற்கை உரத்தில் உள்ள நியோ
நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள்,
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.

🐝இதனால்
கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய்
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.

🐝மரபணு மாற்றப்பட்ட உணவுப்
பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர்
சீட்ஸ்' என்பார்கள்.
🐝அதாவது, அந்தப் பயிர்கள்
'விதை தானியத்தை' உருவாக்காது.
மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.

🐝அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்
செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.

🐝இப்படி விவசாயத்தில் 'வணிக
லாபத்துக்காக' மனிதன் செய்த பல
மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

🐝ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து
வருடங்களாக விவசாய உற்பத்தி
பெருமளவு குறைந்து வருவதற்குக்
காரணம் தேனீக்களின் இறப்பு எனத்
தெரியவந்தது.

🐝அதனால், அங்கு செயற்கை
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்
போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

🐝வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து
தங்கள் வயல்களில் பறக்கவிட்டு
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.

🐝பல லட்சம் தேனீக்களை
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு
தேனீயைக்கூட உருவாக்க முடியாது.

🐝இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

🐝'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது!' என்று சொல்லியிருக்கறார்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

🌾ORGANIC
FARMING

இயற்கை மருத்துவம் :-
******************************

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்
""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த
""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும்
""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும்
""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும்
""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும்
""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும்
""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும்
"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க
"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""துளசி.""

16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு
""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும்
""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும்
"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""

25) முகம் அழகுபெற
""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும்
"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும்
"கீழாநெல்லி"

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
"வாழைத்தண்டு".

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.

ஜோசியர்.
(கஸ்டமரிடம்): உங்க பேர் ஆர்.ஜெயராமன்.
அப்பா பேரு, சுப்ரமணி.
அம்மா பேரு மதுரம்.
உங்க மனைவி,பத்மா.
இரண்டு, பசங்க,
.
.
எல்லாம் எப்படி சார் புட்டுபுட்டு, சரியா சொல்றீங்க.

ஜோசியர்:  கேளுங்க
நீங்க, இந்த  விலாசத்தில, இருக்கீங்க.

அதுவும் சரிங்க.

ஜோசியர்: இன்னொண்ணு கேளு. ஐந்து கிலோ சர்க்கரை வாங்கினீங்க, நேத்து. யோவ்! ஜாதகத்தை, கொண்டு வராம, ரேஷன் கார்ட கொண்டு வந்திருக்கியே வெண்ணெ.

போர்க்களங்களில் வில், அம்பு, கத்தி, கபடா எல்லாம் ஒழிந்து பலநூறாண்டுகள் ஆனது என நினைக்கிறோம். ஆனால் கடைசியாக ஒரு படைவீரன் வில், அம்பால் கொல்லப்பட்ட போர் எது? என்றால் இரண்டாம் உலகயுத்தம் தான்.

1944ல் ஐரோப்பாவில் நடந்த டன்க்ரிக் போரில் ப்ரிட்டிஷ் வீரர் ஜாக் சர்ச்சில் குண்டுகள் தீர்ந்த நிலையில் தான் கொண்டுவந்த வில் அம்புடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்து இயந்திர துப்பாக்கியுடன் இருந்த ஒரு ஜெர்மன் வீரனை அம்பு விட்டு கொன்று அவன் துப்பாக்கியை எடுத்து சுட்டபடி உயிர் தப்பினார்..

இந்த பதிவை யார் எழுதியதுன்னு தெரியல.  மிக அருமையான பதிவு! கண்டிப்பாக படிக்கவும்! 👇

பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு.

நிமிடம் தோறும் ஒரு இஞ்ச், அரையடி என உயர்ந்த தண்ணீர் சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத் துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே அது தளும்பத் துவங்கியது.

நதிகளிடம் அனுமதிவாங்காமல் மனிதர்கள் காங்கிரீட் மரங்களை நட்டிருந்தார்கள். தண்ணீர், மனிதர்களிடம் அனுமதி வாங்காமல் நதிகளின் பாதையை உருவாக்கிக் கொண்டன. எங்கும் தண்ணீர். எங்கும் பதட்டம். சென்னையில் மழை பெய்யவில்லை என்பதே நீண்டநாள் கவலையாய் இருந்தது. ஏன் கடவுள் மழையை சென்னைக்கு அனுப்பவில்லை என்பது இப்போது தான் புரிகிறது.

மழை பல பாடங்களையும் கற்றுத் தந்தது. மனிதாபிமானத்தின் கதவுகளை அறைந்து சாத்தியிருந்த வீடுகள் கூரைகளையும் சேர்த்தே திறந்தன. தங்கள் பெயருக்குப் பின்னாலும், முன்னாலும் பட்டங்களையும், பதக்கங்களையும் குத்தி வைத்திருந்த மக்கள் கழுத்துவரை தண்ணீரில், சாக்கடைகளை உதாசீனப்படுத்தி நடந்தனர்.

போர்ட்டிகோவில் முழங்காலளவு நீரில் தெரு நதியை வேடிக்கை பார்த்தபடி வாசலில் நின்றிருந்த என்னிடம் ஒருவர் வந்து இரண்டு பால் பாக்கெட்களை நீட்டினார். "உடனே காய்ச்சிடுங்க... இல்லேன்னா கெட்டுடும்" என்றார். யாரது.. நம்மைத் தேடி வந்து பால் பாக்கெட் தருவது ? பால் பாக்கெட் கிடைக்காமல் ஊரே நெட்டோட்டம் ஓடும் இந்த நேரத்தில் என மனதில் குழப்ப ரேகைகள்.

'... நீங்க ?...'  என இழுத்தேன்.

பக்கத்து வீடு தான். மாடில குடியிருக்கேன். என்றார். என் வீட்டை ஒட்டியபடி இருந்தது அந்த வீடு. நாலடி இடைவெளியில் இருந்தது வீட்டுச் சுவர். கூனிக் குறுகினேன்.

'நன்றி.. என்ன பண்றீங்க.. ' என முதன் முறையாக விசாரித்தேன். கால்களுக்குக் கீழே கிடந்த ஈரம் இதயங்களிடையே பரவியது.

மின்சாரம் செத்துப் போய் இரண்டு நாளாகியிருந்தது. நான்கு நாட்கள் அது உயிர்த்தெழவேயில்லை. வீட்டுக்குள் ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து குழந்தைகளுடனும், மனைவியுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் கதைபேசிய கணங்களில் உணர்ந்தேன் வெளிச்சம் எவ்வளவு தூரம் எங்கள் உறவுகளுக்குள் இருட்டை விரித்திருக்கிறது என்பதை. இருட்டு எங்களுக்கிடையே வெளிச்சத்தை அதிகரித்திருந்தது.

சுற்றியிருந்து கதைபேசி, விளையாடி, சாப்பிட்டு செலவிட்ட நான்கு நாட்கள் கால்நூற்றாண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் என்னை இட்டுச் சென்றது. அம்மாவும், அப்பாவும், சகோதர சகோதரிகளும், எங்கள் கிராமத்துத் திண்ணையும் மனதுக்குள் இதமாய் வந்திறங்கியது.

வெளிச்சம் வீட்டில் மூலைகளுக்குள் மனிதர்களைத் துரத்தும். இருட்டோ, ஒற்றைப் புள்ளியில் எல்லோரையும் இணைக்கும் எனும் உண்மையை நான் உணரும் வாய்ப்பாய் அது அமைந்தது.

தொலைக்காட்சி அமைதியாய் மூலையில் கிடந்தது. லேப்டாப்கள் மரத் துண்டுகளைப் போல வீட்டில் மூலைகளில் கிடந்தன. வரிக்குதிரை போல கம்பீரமாய் நிற்கும் செல்போன் சிக்னல், வட்டத்திற்குள் விட்டம் வரைந்து வெறுமனே கிடந்தது. கைப்பிடிக்குள் இருந்த உலகம் சட்டென கைவிட்டுப் பறந்த ஒரு பட்டாம் பூச்சியைப் போல பறந்து மறைந்தது.

மீண்டும் ஒரு முறை தகவல் தொடர்புகள் இன்லென்ட் லெட்டர்களின் முதுகில் பயணித்த காலத்தில் பயணித்த அனுபவம். செல்போன்களும், வாட்ஸப்களும், மின்னஞ்சல்களும் இல்லாத நான்கு நாட்கள் வாசிக்கவும், நேசிக்கவும், எழுதவும் கிடைத்தவை குடும்ப உறவுகள் மட்டுமே. பாசமிகு மனங்கள் மட்டுமே.

புள்ளி வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய வரப்பிரசாதமே பெருமழை.

அவசரமாய் ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன. நேரமில்லை என புலம்பிய மனது அடிக்கடி சொன்னது, "அட அஞ்சு மணி தான் ஆச்சா.. வாங்க கதை சொல்லி விளையாடலாம்...".

நேரம் எப்போதும் நம்மிடம் இருக்கிறது. அதை டிஜிடல் ஸ்ட்ராக்கள் உறுஞ்சிக் கொள்கின்றன என்பது புரிய வைத்த நிகழ்வாய் அது இருந்தது.

ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம் வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள் நுழைந்தது போல முதன் முறையாய் உணர்ந்தேன். மனைவி சொன்னார்,

"கரண்ட் இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு...".

பிள்ளைகள் சொன்னார்கள், "என்ன டாடி.. நெட்வர்க் வந்துச்சா... போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க..."

அது மழையல்ல,

பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை !

இந்த ஒரு பதிவை மட்டும் எழுதிவிட்டு லேப்டாப்பை ஒதுக்கி வைப்பதென முடிவு செய்து விட்டேன்.

வள்ளுவர் இன்று இருந்து  சென்னையை உலுக்கிய  மழைவெள்ளத்தை
அனுபவித்திருந்தால் எந்த மாதிரி  குறள் எழுதியிருப்பார்...ஒரு கற்பனை.

வெள்ளத்துப்பால்
--------------------------------------------------------------------------------------------------

மேட்டினில் வாழ்வாரே வாழ்வார்  மற்றெல்லாம்
'போட்'டினில் பின் செல்பவர்   
----------
வெள்ளப் பெருங்கடல்    நீந்துவர்;    நீந்தார்
வேளச்சேரியில் வீடு கட்டியோர்
---------------------
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்...இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்ப்வர்.
-------------------------
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
ஜலம் உள்ளே வருமாவென !
-----------------------------
சம்சாரம் தந்திடுமே  துன்பம் புயல்மழையால்
மின்சாரம் போயினும் அஃதே !
-------------------------
வெள்ளத்தால்  வந்திடும் துயரம் - நல்ல
உள்ளத்தோர் உதவா விடின்
----------------------------
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை  காண்.
---------------------------------
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறி.
----------------------------------------------
தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
தண்ணீரே  நுழைந்தது  பார்,
----------------------------------------------
ஆஸ்தியென  ஆசையாய்  கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே  சோகம்
------------------------------------------------------------ 
இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
பொருள்கள் பாழாகும்  நிலை

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று தவறுதலாக முன்னாள் டிஜிபி நடராஜின் புகைப்படத்தை வெளியிட்டதால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த வேறு நபருக்குப் பதிலாக தனது புகைப்படம் தவறுதலாக இடம் பெற்றதாகவும், தான் அதிமுகவுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை என்றும் முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

ஹலோ 12 வது வட்டச்செயலாளர் பால்பாண்டி அண்ணனா.?

ஆமா நீங்க யாரு.?

அண்ணே நான் 23 வது வட்டச்செயலாளர் பால்பாண்டி பேசறேன்..

அட நீயா.! நானே உன்கிட்ட பேசலாம்ன்னு இருந்தேன்..சொல்லு..

அண்ணே சுதானமா இருங்க ஏதும் வம்பு தும்பா நடக்காதிங்க முக்கியமா பேட்டி கீட்டி தந்துடாதிங்க.. அப்புறம் நீங்கன்னு நினைச்சு கட்சியில என்னை தூக்கிட போறாங்க..

யோவ் இதை சொல்லத்தான் நான் உன்னை கூப்பிட இருந்தேன்... சரி சரி சூதானமா இருப்போம்.

பாஸ்:நீ ப்ளைட்ல போய்கிட்டு இருக்க, அதுல 50 செங்கல் இருக்கு., அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்
Job
வேலையாள்: 49 இருக்கும்

ஒரு யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது

ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்

ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது

ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்

அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள், எல்லா விலங்கும் வந்துருச்சு, ஒன்னு மட்டும் வரல, அது என்ன?

மான், ஏன்னா அது ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு

முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும், என்ன பண்ணுவாங்க.

தாரளமா கடக்கலாம், எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு

ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க, எப்படி?

குளத்தில் மூழ்கிட்டாங்க

அதான் இல்ல, முதல்ல ஃபிளைட்ல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டேல, அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு. இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க, இதுல உனக்கு சம்பளம் வேற கூட கேக்குற

ஒழுங்கா கவனமா வேலைய பார், இல்லைனா சீட்டு கிழிச்சிரும்.

நீதி - மேனேஜ்மென்ட் கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது..

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன்
நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள்
நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய்
அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று
அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில்
அமர்ந்தார்.
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம்
உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து
அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை
கண்டு
" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று
கேட்டார்.
அதற்கு இவர் " எனது தொழில்
நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து
போய்விட்டேன் " என்றார்.
" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால்
அவர்.
" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.
" அப்படியா, நான் யார் தெரியுமா ?
" என்று கேட்டு அந்த ஊரின் பிரபல
செல்வேந்தரின் பெயரை
சொன்னார்.
அசந்து போனார் இவர்...
" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி
விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.
உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம்
எல்லாம் சரியாகி விடும் " என்றார்.
பின் அந்த செல்வேந்தர் ஒரு செக்
புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம்
நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ
கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக
கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும்
சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த
பணத்தை எனக்கு திருப்பிக்
கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம்
இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் "
என்று சொல்லி விட்டு செக்கை
இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார்
அவர்.
பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக
அலுவலகத்திற்கு சென்றார். தன்
அறைக்குள் சென்று அந்த செக்கை
தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார்.
பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து
ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர
ஏற்பாடு செய்ய சொன்னார்.
ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில்
அமர்ந்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் தலைவர் பேச
ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது
நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய்
உள்ளது ஆனால் அந்த பணத்தை
தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி
ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ?
என்று ஆராய்ந்து அதை களைந்து நமது
நிறுவனத்தை வெற்றிகரமாக
செயல்படுத்த நீங்கள் அனைவரும்
ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக்
கொண்டார்.
பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன.
தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன.
மிக சரியாக அனைத்து ஊழியர்களையும்
ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச
செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய
தொழிலை பற்றியே இருந்தது.
மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள்
அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வந்தர் கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார்.

சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார்.
காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம்
கழித்து தூரத்தில் அந்த செல்வந்தரும்
அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக்
கொண்டு ஒரு பெண்மணியும்
வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.

சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த
பெண்மணி மட்டும் வருகிறார் அந்த
செல்வந்தரை காணவில்லை.
இவர் சென்று அந்த
பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்.

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் "உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்..

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?"
என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா
அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி
இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று
சொல்லி இங்கு இருப்பவர்களிடம்
தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு
கொடுத்து விடுவார் " என்றார். ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு
பேசமுடியவில்லை.

அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

அன்பு நண்பர்களை ..
- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம்ப வேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு" என்ற கூற்று நிச்சயம் ஒரு நாள் உண்மையாகும்..

இப்படிக்கு உங்கள் நண்பன்
***✔

தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்பவர்கள் இந்த உலகில் அருகி வருகின்றனர். இப்படி இருக்கும் ஒரு சிலருக்காகத் தான் மழை பெய்கிறது. முன்பு நீண்ட நாள் தன் அரண்மனையில் தங்கச் செய்து ஔவைக்கு பரிசு ஒன்றும் கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். எங்கே பரிசு கிடைத்தால் உடனே தன் அரண்மனையை விட்டு சென்று விடுவாள் என்று நினைத்து, பரிசு தராமல் காலம் தாழ்த்தி அவளுடைய தமிழின் சுவையை ரசித்திருந்தான். அப்படி அரண்மனையில் தங்கும் போது அதியமான் வேட்டையாடச் சென்ற மலையில் ஒரு அபூர்வ நெல்லிக்கனி அவனுக்கு கிடைத்தது. அதை தான் உண்டால் இந்த நாடு மட்டும் தான் பலன் பெரும், ஆனால் தமிழுக்கு தொன்று ஆற்றும் ஔவை உண்டால் நன்றாக இருக்கும், அவளால் தமிழும், தமிழால் உலகமும் உய்வு பெரும் என்று எண்ணி இளமையும், நீண்ட ஆயுளையும் தரும் அதிசய நெல்லிக்கனியின் அருமையை கூறி கொடுத்தால் ஔவை உண்ணமாட்டாள் என்று அறிந்து இது ஒரு சாதாரண கனி என்று கூறி அதை தின்னக் கொடுக்கிறான் அதியமான்.

பாடல் 12 : எமக்கு ஈந்தனையோ! (புறம் : 91)
பாடியவர்: ஔவையார் அதியமான்
பாடப்பட்டோர் : அதியமான்
திணை : தும்பை துறை: வாழ்த்தியல்

வலம்படு வாய் வாள் ஏந்தி, ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடித் தடக்கை,
ஆர் கலி நறவின், அதியர் கோமான்
போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி !
பால் புரை பிறை நூதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மண்ணுக - பெரும நீயே ! தொல் நிலைப்
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது,
ஆதல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே !

பொருள் விளக்கம்

பகைவரின் பல களங்களை தைரியமாக எதிர்த்து வெற்றி பெற்ற அதியர் கூட்டத் தலைவன் அதியமானே, பால் போல் வெள்ளை நிற பிறையை அணிந்துள்ளவன், விஷம் உண்டு தேவர்களைக் காத்த நீல நிறக் கழுத்தை உடைய சிவபெருமான் போல் நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாய். உயரமான மலையின் பிளவுக்கு இடையில் வளர்ந்த சிறிய இலைகளை உடைய அறிய நெல்லிக்கனியை, எனக்கு அதன் பெருமையை சொல்லாமல் தந்தாயே, உன்னை நான் எப்படி புகழ்வேன், இது மதிக்கத்த செயல் ஆகும்.

இப்படி கூறிய பிறகு, அதியமான் ஔவையே, இது உன் தமிழுக்கு செய்யும் மரியாதை என்று கூறினார், ஔவையோ கர்வம் கொள்ளாமல் ஒரு பாடல் பாடினார் ......அந்த பாடலை அடுத்து பார்ப்போம் .........

புறம் வளரும் .........