Designed by Enthan Thamizh

சுந்தர் பிச்சை இந்தியர்களுக்கு சொல்லும் பாடம்.

உலகின் மிக முக்கியமான பன்னாட்டு நிறுவனமான கூகுளின் தலைமை பதவிக்கு வந்திருக்கும் சுந்தர் பிச்சைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

ஆனால்

சுந்தர் பிச்சை போன்றவர்களை இந்திய கல்வித் தரத்தின் அடையாளமாக நினைத்து பெருமைப் படலாமே தவிர மற்றபடி சுந்தர் பிச்சை போன்றவர்களால் இந்தியாவிற்கு எந்த விதத்திலும் பெருமை இல்லை. தயவு செய்து இவர்களைப் போன்றவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள்

ஐஐடி போன்ற உயர் தரமான கல்வி நிறுவனத்தில் இந்தியர்களின் வரிப்பனத்தில் படித்துவிட்டு அமெரிக்க டாலரை பிரதான லட்சியமாக நினைத்து இந்தியாவை விட்டு ஓடிப்போன சுந்தர் பிச்சை போன்ற சில லட்சம் பேருக்கு கிடைத்ததைப் போல் உயர் தரமான கல்வி இந்தியாவில் இருக்கும் நூறு கோடிப்பேருக்கும் கிடைப்பதில்லை. இங்கே பல கோடிப்பேருக்கு கல்வியே கிடைப்பதில்லை.

கல்வியைக் கொண்டு எதையும் செய்யலாம், ஆனால் கல்வியைக் கொண்டு நாம் எதைச் செய்துகொண்டிருக்கோம்..? பணம் செய்துகொண்டிருக்கோம்.

உலகின் மிகச் சிறந்த பல்கலைகலகங்களில் படித்துவிட்டு தன் தாய் நாட்டை முன்னேற்றுவதற்காக அந்தக் கல்வியை பயன்படுத்த தாய் தேசம் திரும்பி வந்த நேரு, அம்பேத்கர் போன்றவர்கள் வாழ்ந்த மன்னில் பிறந்த நாம் கல்வியைக் கொண்டு பணம் செய்வதையே பிரதான லட்சியமாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதில் முன் வரிசையில் இருப்பவரே சுந்தர் பிச்சை.

இனி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு சுந்தர் பிச்சையை ஒரு முன் மாதிரியாக காட்டி விடுவார்கள். நல்லா படிச்சா சுந்தர் பிச்சை மாதிரி பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேரலாம் என்று...!!!!

இவர்களோடு ஒப்பிட்டால் அப்துல்கலாமை பிழைக்க தெறியாதவர் என்று தான் சொல்ல வேண்டும். உலகின் மிகச் சிறந்த பெரிய பணக்கார ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு பஞ்சப் பரதேசிகள் வாழும் இந்தியாவில் வேலை செய்வதை லட்சியமாக நினைத்திருக்கிறார்.

நாம் நம் அடுத்த தலைமுறைக்கு யாரை முன் மாதிரியாக காட்டப் போகிறோம்,
அப்துல் கலாமையா..? சுந்தர் பிச்சையையா..?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக