Designed by Enthan Thamizh

MADRAS - The story of how MADRAS was formed ..........சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்றுஅழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles and Ammunition Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதிகுரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான்பல்லாவரம்.

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கபடுகிறது (தி.நகர்)

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி
புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி 'குணங்குடி மஸ்தான் சாகிப்'. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது.அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே (திரு மயிலை) மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே
பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்றுஅழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள்பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி,பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என
மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது.

- City Improvement Trust என்பதின் சுருக்கமே CIT நகர்

எப்படி இருக்கு நண்பர்களே............

உலகின் மிக முக்கியமான பன்னாட்டு நிறுவனமான கூகுளின் தலைமை பதவிக்கு வந்திருக்கும் சுந்தர் பிச்சைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

ஆனால்

சுந்தர் பிச்சை போன்றவர்களை இந்திய கல்வித் தரத்தின் அடையாளமாக நினைத்து பெருமைப் படலாமே தவிர மற்றபடி சுந்தர் பிச்சை போன்றவர்களால் இந்தியாவிற்கு எந்த விதத்திலும் பெருமை இல்லை. தயவு செய்து இவர்களைப் போன்றவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள்

ஐஐடி போன்ற உயர் தரமான கல்வி நிறுவனத்தில் இந்தியர்களின் வரிப்பனத்தில் படித்துவிட்டு அமெரிக்க டாலரை பிரதான லட்சியமாக நினைத்து இந்தியாவை விட்டு ஓடிப்போன சுந்தர் பிச்சை போன்ற சில லட்சம் பேருக்கு கிடைத்ததைப் போல் உயர் தரமான கல்வி இந்தியாவில் இருக்கும் நூறு கோடிப்பேருக்கும் கிடைப்பதில்லை. இங்கே பல கோடிப்பேருக்கு கல்வியே கிடைப்பதில்லை.

கல்வியைக் கொண்டு எதையும் செய்யலாம், ஆனால் கல்வியைக் கொண்டு நாம் எதைச் செய்துகொண்டிருக்கோம்..? பணம் செய்துகொண்டிருக்கோம்.

உலகின் மிகச் சிறந்த பல்கலைகலகங்களில் படித்துவிட்டு தன் தாய் நாட்டை முன்னேற்றுவதற்காக அந்தக் கல்வியை பயன்படுத்த தாய் தேசம் திரும்பி வந்த நேரு, அம்பேத்கர் போன்றவர்கள் வாழ்ந்த மன்னில் பிறந்த நாம் கல்வியைக் கொண்டு பணம் செய்வதையே பிரதான லட்சியமாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதில் முன் வரிசையில் இருப்பவரே சுந்தர் பிச்சை.

இனி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு சுந்தர் பிச்சையை ஒரு முன் மாதிரியாக காட்டி விடுவார்கள். நல்லா படிச்சா சுந்தர் பிச்சை மாதிரி பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேரலாம் என்று...!!!!

இவர்களோடு ஒப்பிட்டால் அப்துல்கலாமை பிழைக்க தெறியாதவர் என்று தான் சொல்ல வேண்டும். உலகின் மிகச் சிறந்த பெரிய பணக்கார ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு பஞ்சப் பரதேசிகள் வாழும் இந்தியாவில் வேலை செய்வதை லட்சியமாக நினைத்திருக்கிறார்.

நாம் நம் அடுத்த தலைமுறைக்கு யாரை முன் மாதிரியாக காட்டப் போகிறோம்,
அப்துல் கலாமையா..? சுந்தர் பிச்சையையா..?

கணவன் – "அரை மணி நேரமா நான் கரடியா கத்துறேன். நீ பதில் பேசலைன்னா என்ன அர்த்தம்?"
மனைவி – "என்ன அர்த்தம்? எனக்கு கரடி பாஷை புரியலேன்னு அர்த்தம்"

மனைவி – "ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா?"
கணவன் – "நம்ம பொண்ணுக்கு அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிறவரை நான் காத்திருக்கேண்டி."
மனைவி – "எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?"

கணவன் – "இந்தத் தீபாவளிக்கு உனக்குப் பட்டுப் புடவை நிச்சயமா உண்டு!"
மனைவி – "அப்படியா! எதை வச்சி சொல்லுறீங்க?"
கணவன் – "உன் வளையலை வைச்சுத்தான் சொல்லுறேன்."

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக 'ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008' விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், "கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

நன்றி !

ஒரு மாம்பழத்திற்காக ஆசைப்பட்டு தன் தம்பியை ஏமாற்றிய குற்றத்திற்காக பல காலமாக தேடப்படு வந்த பலே பிள்ளையார் தமிழக போலீஸ்சாரால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்படும் காட்சி

அவரை பெயிலில் எடுக்க சிவபெருமான் தீவிரம் 👇👇👇👇

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும் ஒன்றே!.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.

வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி

வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது

நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை....

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்...!!!
நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!

இன்றைய சிந்தனை...
......................................

பயம் அர்த்தம் அற்றது என்பதை...
........................................................

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தபோது அவனுக்குப் பசியெடுத்தது. 

ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் 
இருப்பதைக் கண்டான். 

மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். 

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின்
நுனியில் இருந்தன. 

அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து
சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை 
முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.

குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. 

ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு,

"யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். 

உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் 
நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். 

மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். 

அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். 

கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. 

"பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை
எடுத்து அவன் மேல் எறிந்தார். 

மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். 

இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி 
எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். 

விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். 

அவரை சரமாரியாகத் திட்டினான். 

"ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே,

"தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். 

இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார்,

"நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். 

உன் மூளை வேலை செய்யவில்லை.

நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து 
நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.

யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். 

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை.

உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.

அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்..,

ஆம்,நண்பர்களே.,

பயம் உங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு 

வருவதற்கு முன்பு பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் 

கொண்டு வாருங்கள்.

முடிவில் பயம் அர்த்தம் அற்றது என்பதை நீங்கள் 

தானகவே உணர்வீர்கள்.,

A man working in an IT company 🏢 became sick.. He consulted many multi facility hospitals 🏥.. Still couldn't get cured... He was sad... Then his wife 👩advised "why don't you consult a veterinary doctor?"   He was shocked 😨😳... He screamed at her.. Are you mad... 😡 She spoke softly nothing happened to me.... It is you having problem.. You wakeup early in the morning 🌞 like cock 🐔, take half bath like a crow 🐧 , eat something like a monkey 🐒,  then run to office like a race horse 🐴🐎, you work like a donkey 🐺,   there u scream to your juniors like a wild bear 🐻,   evening 🌝 you reach home and bark at us like a dog 🐕,   then you eat like a crocodile 🐊, 🌚 you go to bed and sleep like a buffalo 🐃 😴😴.......... That's the reason why I asked you to meet a veterinary doctor...... The man just sat 😳 

now wife asked why are looking at me like a owl.........
😂😂😀😃😭😰

One motorist met with an accident. He was unconscious. One cab driver stopped the cab and called ambulance and police. He took the mobile of that guy to call the family members of that guy. Luckily that guy hasnt locked his mobile. But what if the mobile was locked(which we usually are habituated to keep) how would have we reached the family members of that guy. There is a solution to that problem. Most of us use android phones,  📲we have something called owner's info which will scroll on the lock screen. You don't need to enter any password to view the owner info. This will be continuously scrolling on the screen. Go to settings -> security or lock screen -> owners info. Enter your details like your name and emergency contact number.    This will take just 2 mins to implement. It will be helpful if you loose your phone or god forbid if something bad happens. Please forward this to your groups. This will save someone life one day.

Very touching story ..

A man purchased an Enfield Bullet 350cc .. so that he could take his girlfriend for long drives. But unfortunately, he was not able to talk to his girlfriend while riding on it because of the loud Bullet sound. He got fed up and sold his Bullet and bought Honda Activa.

After sometime, he got married to his girlfriend and a year later ....

He sold his Honda Activa and bought Enfield Bullet 500 cc again 😉😄😂

BREAKING NEWS

Bill Gates has resigned as the 'Chairman of Microsoft' after receiving a letter from Vijayakanth. It reads:

Saar,

I have some questions for you.... Please yanswer them:

Namba wan) The keyboard alphabets are not in order, when will you launch the correct version?

Namba too) There is yeh 'Start' button... but no 'Stop' button... Rascalaa, where it is?

Namba tree) I have already learned Microsoft Word, when are you "laanching" Microsoft Sentence?

Namba for) There is yeh Recycle bin... but...there is nobody coming to collect that bin. Why???

Your name is Bill... But in India they orr selling computers without Bill... Why???

Yand finally yeh personal question:
Your surname is Gates... But you are selling Windows... Why??

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.
அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று " இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் " என்றான்.
உடனே பிச்சைக்காரன் " அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் " என்றான்.
அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் " ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் "பிச்சைக்காரன்".
அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்" என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.
அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் " அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் " என்றான்.
அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் " யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் " என்றவாறே நடக்கலானான்.
ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்.

ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள்.
மூவருக்கும்
திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை
பரிசோதிக்க மாமியார்
விரும்பினார்.
      அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி
         முதலாவது மகள் மற்றும் மருமகனுடன்
ஒரு ஏரியில் படகு சவாரி
செய்தார்.
    தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார்.
    இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார்.
    அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார்.
     அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது.
     இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார்.
   அவரும் முதல் மருமகனைப் போலவே
செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார்.
   முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை.
     திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை
     மாமியார் கெஞ்சினார்.
ம் ஹும்.
   பார்க்காதது போல் இருந்தார்.
     மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்.
     காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. புள்ள வளர்த்திருக்கிறா பார்...புள்ள...ன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.
   மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.
    அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்....
    ஒரு புத்தம் புதிய BMW  கார் வாசலில் நின்றது.
    அருகில் சென்று பார்த்தால்.. .............

     மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது.

சமையலில் செய்யக்கூடாத சில காரியங்கள்....!
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

(அருமையான தகவல்)
சிலருக்கு மார்க்கெட்டிங்கை பற்றி தெரிந்திருக்கும், ஆனால் அதன் வகைகளைப்பற்றி  தெரிந்திருக்க‍ வாய்ப்பில்லை. பலருக்கு மார்க்கெட்டிங் என்றால் என்ன‍வென்றே தெரியாமலும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு.

நீங்கள் ஒரு விருந்தில் அழகான, ஒரு பணக்கார பெண்ணை பார்க்கிறீர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்"என்று கூறினால் அது Direct Marketing.

உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து "அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறினால் அது Advertising.

நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறினால் அது Tele Marketing.

அந்த அழகான பெண்ணே உங்களிடத்தில் வந்து "நீங்களும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்றால் அது Brand Recognition.

அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் "நானும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறுகிறீர்கள். உடனே அதற்கு அந்த பெண் உங்களின் கன்னத்தில் சப்பென்று அறைந்தால்… அதுதான் Customer Feedback.

அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறியதற்கு, அந்த பெண், தனது கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.

நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் பேசுவதற்கு முன்னால் வேறொரு நபர் வந்து அந்த பெண்ணிடம் "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இது தான் Competition eating your market share.

நீங்கள் அந்த அழகான பணக்கார பெண்ணிடம் சென்று "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறுவதற்கு முன்பே உங்களின் மனைவி அருகில் வந்தால் Restriction for entering new markets.

இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று….!

--(நண்பரின் பகிர்வு-நன்றி)