Designed by Enthan Thamizh

Latest Posts

365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.
இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த, சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி, இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.
அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள் முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.
தல வரலாறு :
ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் "என்ன வேண்டும்?' என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்ற லிங்கங்கள் சுற்றியுள்ள கோயில்களில் உள்ளன. இவை "சப்தவிடங்கத்தலங்கள்' எனப்படுகின்றன. "சப்தம்' என்றால் ஏழு.
திருவாரூரில் "வீதி விடங்கர்', திருநள்ளாறில் "நகர விடங்கர்', நாகப்பட்டினத்தில் "சுந்தர விடங்கர்', திருக்குவளையில் "அவனி விடங்கர்', திருவாய்மூரில் "நீலவிடங்கர்', வேதாரண்யத்தில் "புவனி விடங்கர்', திருக்காரவாசலில் "ஆதி விடங்கர்' என்ற பெயர்களில் விடங்க லிங்கங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த லிங்கங்கள் கையடக்க அளவே இருக்கும். சப்தவிடங்கத்தலங்கள் உள்ள கோயில்களில் சுவாமியை "தியாகராஜர்' என்பர்.
வழிபாடு நேரம் :
காலை 6 மணி - திருப்பள்ளி எழுச்சி ,பால் நிவேதனம்
காலை 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
காலை 8 மணி - முதற் கால பூஜை
மதியம் 11.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
பகல் 12 மணி - உச்சிக்கால பூஜை
பகல் 12.30 மணி - அன்னதானம்
மாலை 4 மணி - நடை திறப்பு
மாலை 6 மணி - சாயரட்சை பூஜை
இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை
பிரதான மூர்த்திகள் :
திருவாரூர் ஆலயத்தின் மூலவர் வன்மீகர். அவர் அருகே அன்னை சோமகுலாம்பிகை இருக்கிறாள். இறைவன் சூரிய குலம்; அம்பிகை சந்திர குலம். வன்மீகரின் வலப்பக்கத்தில் - தனிச் சந்நிதியில் ஸ்ரீதியாகராஜர்

குட்டிக் கதை:

காசி அரசனின் ரதம் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் மனநிம்மதி இல்லை. குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்தான். எளிமையான உடைகளுடன் இருந்த அந்த மனிதரின் முகத்தில் பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினான்.

தனது மரணத்திற்கு முன்பு இந்த மனிதரிடம் ஆசுவாசமாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்து ரதத்தை நிறுத்தி இறங்கினான். தனது மூடிய விழிகளைத் திறந்தார் அந்த மாமனிதர். தன் முன் நின்ற மன்னனைப் பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டார்.

"நான் ஒரு அரசன். எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது. என் பிரச்னையை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்னை என்னவென்று அதற்கு முன்னர் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றான் மன்னன்.

மன்னன் சொல்வதையேல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த மனிதரின் பார்வை மன்னனின் கால்களையே உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த மனிதர் தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த மன்னன் சட்டென்று காலாட்டுவதை நிறுத்திவிட்டான்.

" மன்னனே உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?" என்று கேட்டார்.

தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான்.

"இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?" என்று கேட்டார்
அந்த மனிதர்.

" நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள்" என்று பதிலளித்தான் மன்னன்.

" நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது உனக்கே தெரியவரும்."

மன்னனின் இருண்ட மனதில் ஓர் ஒளிக்கீற்று தெரியத் தொடங்கியது.

மிகுந்த பணிவோடு, "நீங்கள் யார்?"
என்று கேட்டான் மன்னன்.

"புத்தர்" என்று பதில் வந்தது.

மன்னன் அவர் காலில் விழுந்து வணங்கினான். தன்னைத்தானே கவனித்தலே வாழும் கலை என்பதை அறிந்த மன்னனின் தேர் இப்போது அரண்மனை நோக்கி ஓடத் தொடங்கியது.

KOHLI நம் நாட்டை
காப்பாற்றியதால்
இன்று முதல் 😄😄😄
அவர் நாட்டுகோலி
என்று அழைக்கபடுவார்
😂😂😂

1."நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"

"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"                                                                                                                                                                                                                                    
---------

2.என் கணவர் யாருமே இல்லாதப்போ தானாவே சிரிச்சுக்கிட்டிருக்கிறார்  டாக்டர்...!""
"போகுது விடும்மா! நீ இல்லாத போதாவது தைரியமா சிரிச்சுட்டு  போவட்டும்!"
---------------

3."இதென்ன... டாக்டரை வரச்சொல்லி போன் செய்தீங்க... ஒரு குடும்பமே  வந்து நிக்குதே?"
"அதான் சொன்னேனே.. இவர் குடும்ப டாக்டர்ன்னு...!
----------------

4.டாக்டர் : "ஊசி போடும்போது கண்ணை மூடிட்டீங்களே…. மனசுல சாமியை நினைச்சுக்கிட்டீங்களா?"

சம்போ : "இல்ல டாக்டர்…. நர்ஸை நினைச்சுகிட்டேன்….!"
-------------

5."பர்ஸ் தொலஞ்சு போச்சு. டிபன் சாப்பிட முடியல."

"உனக்கேது பர்ஸ்?"

"எனக்கு டிபன் வாங்கித் தரேன்னு சொன்னவர் பர்சு தொலஞ்சு போச்சுன்னு சொல்றேன்..."
--------------

6.அவர் : இன்ஸ்பெக்டர் சார், இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள எப்படியாவது 
என் பையனைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
அவர் : இல்லேன்னா எடுத்துக்கிட்டுப் போன இரு நூறு ரூபாயையும்   செலவழிச்சுடுவான்.
---------------

7.திருடன் : (சிறுவனிடம்) தம்பி! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை  எங்கே வைப்பாங்க சொல்லு..

சிறுவன் : அடகுக் கடையிலே!
---------------

8.வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு  கஷ்டம் வந்திருச்சி!.
-----------------

9.உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்

பாமா : எதை வைத்து?

உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
-----------------

10.ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.

பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.

ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
-------------

#இந்த_கதையை_10_தடவை_படிச்சாலும்_திரும்ப_திரும்பவும்_சிரிப்பேன்!!

அவ்ளோ காமெடி!!

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது "சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்... என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்..." அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது...

சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. எலி யானையிடம் கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்..." இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து எறிந்து விட்டு எலியுடன் சென்றது....

அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது... இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது... "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள்... இந்த காட்டின் அழகினை  இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன்..." இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன... "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்...?"

அப்பொழுது சிங்கம் சொல்லிச்சாம் ... "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான்... டெய்லி இவனுக்கு இதான் வேலையே..."

1.ஆந்திர பிரதேசம் - தெற்கு பிராந்தியம்.
    சமஸ்கிருதத்தில் "ஆந்த்ரா" என்றால் தெற்கு என்று பொருள்.

2. அருணாச்சல பிரதேசம் - முதல்ஒளி மலைகள் பிராந்தியம்.
      சமஸ்கிருதத்தில் "அருணா" என்றால் "முதல்ஒளி" அல்லது "மூலஒளி" என்று பொருள். இந்தியாவல் முதல் சூர்ய உதயம் இங்கு நடைபெருவதால் இப்பெயர் ஏற்பட்டது.

3. அஸ்ஸாம் - நிலையற்ற
      சமஸ்கிருதத்தில் "அஸமா" என்றால் "நிலையற்ற" என்று பொருள்.

4. பிகார் - புத்தமடலாயம்
      சமஸ்கிருதத்தில் "விகார்" என்றால் " புத்தர் கோவில்" என்று பொருள். பிராகிருதத்தில் பிகார்.

5. சத்திஸ்கர் - 36 கோட்டைகள்.
     ஹிந்தியில் சத்திஸ் என்றால் 36.

6. கோவா - பசு மந்தை
      சமஸ்கிருதத்தில் "கோ" என்றால் "பசு".

7. குஜராத் - குஜ்ஜார் இன மக்களின் நிலம்.
      7ம் நூற்றாண்டில் குஜ்ஜார் மக்கள் இப்பகுதியை ஆண்டதால் இப்பெயர் ஏற்பட்டது. குஜ்ஜார் அல்லது கூர்ஜர என்றும் அழைக்கப்பட்டது.

8. ஹரியானா - விஷ்ணுபகவான் வந்த இடம்.
      மகாபாரத போர் நடந்த குருேக்ஷத்திரம் உள்ள பகுதி. அங்கு கிருஷ்ணர் வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.

9. ஹிமாச்சல் பிரதேசம் - பனிமலை பிராந்தியம்.

10. ஜம்மு & காஸ்மீர் -
      ராஜா ஜம்பு லோசன் ஆண்ட பகுதி ஜம்மு
      காஸ்யப ரிஷி வாழ்ந்த பகுதி என்பதால் காஸ்யப என்று அழைத்தனர். உருதுவில் காஸ்மிர் என்றனர்.

11. ஜார்கண்ட் - வனம் நிறைந்த மலைகள்.
     ஜார் - வனம்
     கண்ட் - மலைகள்

12. கருநாடகா - உயர்நில நாடு

13. கேரளா - சேர்க்கப்பட்ட நாடு.
      பரசுராமர் அம்பு எய்து கடலை வற்றச்செய்து உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது.

14. மத்ய பிரதேசம் - மத்திய அல்லது நடுவண் பிராந்தியம்.

15. மகாராஷ்ட்ரா - சிறந்த(அ)பெரிய நாடு.

16. மணிப்பூர் - நகை(அ)ஆபரணங்களின் நிலம்.

17. மேகலாயா - மேகங்களின் நிலம்.

18. மிஸோரம் - உயர்நிலத்தில் வாழும் மக்களின் பகுதி.

19. நாகலாந்து - நாகர் இன மக்களின் நிலம்.

20. ஒடிசா(அ)ஒரிசா - ஓட்ர இன மக்களின் நாடு.

21. பஞ்சாப் - ஐந்து நதிகள்

22. ராஜஸ்தான் - ராஜபுத்திர இன மக்களின் இடம்.

23. சிக்கிம் - புதிய அரண்மனை.
      திபெத்திய மொழியில் "சு" என்றால் "புதிய" என்றும் "க்யிம்" என்றால் அரண்மனை.

24. தமிழ்நாடு - தமிழர்களின் நாடு.

25. தெலுங்கானா - தெலுங்கர்களின் இடம்.

26. திரிபுரா - திரிபுர சுந்தரி என்னும் கடவுளின் பெயரால் ஏற்பட்டது.

27. உத்தர பிரதேசம் - வடக்கு பிராந்தியம்.

28. உத்திரகண்ட் - வடக்கு மலைகள்.

29. மேற்கு வங்கம் - வங்க இன மக்களின் இடம்.

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்; இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;

அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர், தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திர ஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப் படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.

ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை 1 முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் "பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை"க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம்உதிக்கும் "அ" சுவாசிப்பு அமைப்பில் அடி 6வயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் "உ" மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் "ம" தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.

ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார். அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது. அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:

தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு "ஓ" என்று ஆரம்பித்து "ம்" என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர்  25 முதல்  40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார். அமைதியான ஒரு அறையில் 44.1ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,

1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.

2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.

3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256  ஹெர்ட்ஸீம், ஸ்வாதிஷ்டானத்தில்288  ஹெர்ட்ஸீம், மணிபூரத்தில் 320 
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம், சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது..

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்

ஓம் மந்திரத்தை உச்சரிக்கும் போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது உடலின் தன்மை, சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.

இது வேகஸ் நரம்பு மூலமாக உள் காது, இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம். அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டு பிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.

அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே. இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

ஓம் நமச்சிவாய.

மஹாசிவராத்திரி என்பது வரம் கிடைக்கும் இரவு. ஆம், இது நிஜம்தான்! வாழ்வை இன்னும் ஆழமாக, ஆனந்தமாக நீங்கள் வாழ்வதற்கு இயற்கையே வழங்கும் வரம் இது!

நம் வாழ்வை நாம் வாழும்விதம், உணரும்விதம், நம் செயல்திறன் என அனைத்தும் நம் சக்தியளவைப் பொறுத்துதான் அமைகிறது. மஹாசிவராத்திரி அன்று கண்விழித்து, முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால், நம் சக்திநிலை உயர்கிறது. இதனால் ஆனந்தமான வாழ்க்கை மட்டுமல்ல, வேண்டி விரும்புவோருக்கு "முக்தி"யும் கூட சாத்தியமே!

மஹாசிவராத்திரி அன்று நிலவும் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி இழுக்கிறது. அன்றைய இரவு முழுவதும், முதுகுத்தண்டை நேராக வைத்திருப்பது உயிர்சக்தி மேலெழும்ப உதவியாக இருக்கும். இல்லறம், துறவறம் என்ற வித்தியாசமின்றி, எல்லோருக்குமே இந்த இரவு நன்மை தரும். அவ்வளவு ஏன், நம் கலாச்சாரத்தில் பல யோகிகளும், முனிவர்களும் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். அத்தனை சக்திவாய்ந்த இரவு மஹாசிவராத்திரி!

சிவன் சக்திநிலையின் உச்சம். அந்த உச்சபட்ச சக்திநிலையை அடைய இந்த இரவு நமக்கு உதவுவதால், இது சிவராத்திரி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசைக்கு முந்தைய நாள், சிவராத்திரி. அந்த மாதத்திலேயே அதுதான் மிக இருளான இரவாக இருக்கும். ஒரு வருடத்தில் ஏற்படும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, பிற சிவராத்திரிகளை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கிறது. அதைத்தான் மஹாசிவராத்திரி என்கிறோம்.

இருள்
மஹாசிவராத்திரி என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. சிவராத்திரி, மஹாசிவராத்திரி... இவையெல்லாம் இருளைக் கொண்டாடுவதாகத்தான் இருக்கின்றன. இருள் என்ற வார்த்தையின் ஆழமான பொருள் "எது இல்லையோ அது." எது "இருக்கிறதோ" அது பிரபஞ்சம், அதுதான் படைத்தல். எது "இல்லையோ" அது சிவன்.

கண்திறந்து சுற்றிலும் பார்க்கும்போது, படைப்பின் பல அம்சங்கள் உங்களுக்குத் தென்பட்டால் உங்கள் கண்ணோட்டம் மிகக் குறுகியதாக் இருக்கிறதென அர்த்தம். உங்கள் நோக்கு உண்மையிலேயே விரிந்திருந்தால், இந்த பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கும் பரந்து விரிந்த வெறுமையை அல்லவா பார்ப்பீர்கள்! வானில், மிகச்சிறிய புள்ளிகளாகத் தெரியும் ஆகாயவெளி மண்டலங்கள்தான் அதிகமான கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அவற்றைத் தாங்கி இருக்கும் பரந்த வெறுமை பலரின் கவனத்திற்கு வருவதில்லை.

இந்தப் பரந்துவிரிந்த எல்லையற்ற வெறுமையைத்தான் சிவன் என்று சொல்கிறோம். இன்றைய நவீன விஞ்ஞானமும் அனைத்துமே ஒன்றுமில்லாததிலிருந்து பிறந்து, மீண்டும் அதற்குள்ளேயே செல்கிறது என்று நிரூபித்துள்ளது. இதே அடிப்படையில்தான் இந்தப் பரந்த வெறுமையை, ஒன்றுமற்ற தன்மையை, "மஹாதேவன்" என்று குறிப்பிடுகிறோம்.

எங்கும் பரவியிருக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் இருள் அல்லது ஒன்றுமற்ற வெறுமை மட்டும்தான். பொதுவாக நல்வாழ்வை வேண்டும் மக்கள், தெய்வீகத்தை ஒளியாகப் பார்கிறார்கள். ஆனால், நல்வாழ்வையும் தாண்டி கரைந்து போக விரும்பும் மக்களுக்கு, அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளும் இருளே தெய்வீகம்.

உலகின் முதிர்ச்சியற்ற மனங்கள் தான் இருளை தீயசக்தியாக சித்தரிக்கின்றன. உண்மையிலேயே "தெய்வீகம்" என்பது எங்கும் நிறைந்திருக்கும் ஒன்றென்றால், இயல்பாகவே நீங்கள் தெய்வீகத்தை இருளின் வடிவமாகத்தான் காணமுடியும். ஏனெனில், இருள்தான் எங்கும் பரவியிருக்கிறது. அது நிலைத்திருக்க யாரின் உதவியும் அதற்குத் தேவையில்லை.

"ஒளி" என்பது தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் ஒரு எரிபொருளில் இருந்து வருகிறது. அதற்கென்று ஒரு தொடக்கமும், முடிவும் இருக்கும். எரிபொருள் தீரும்போது ஒளியும் இல்லாமல் போகும். ஆனால், இருளுக்கு எந்த மூலமும் கிடையாது; அதற்கு அதுதான் மூலம். அது எங்கும் நிறைந்திருக்கும் தன்மை கொண்டது.

சிவன் எனும் இந்தப் பிரபஞ்சத்தின் பரந்துவிரிந்த வெறுமையின் மடியில்தான் இம்முழு படைப்பும் நிகழ்ந்திருக்கிறது. இந்த அருள் மடியை, சிவனை நாடித்தான் நம் கலாச்சாரத்தின் பிரார்த்தனைகள் அமைந்தன. நம் பழங்காலப் பிரார்த்தனைகள் பாதுகாப்பு கருதியோ, வளமான வாழ்க்கை நாடியோ செய்வதாக இருக்காது. "அனைத்திலும் உயர்ந்தவனே! என்னை அழித்து விடு! அப்போதுதான் நான் உன்னைப் போலாக முடியும்" என்பதுதான் நம் பிரார்த்தனையாய் இருந்தது.

எனவே, மாதத்தின் இருளான நாளாகிய இந்த சிவராத்திரி, ஒருவர் தன்னுடைய கட்டுப்பாடுகளை எல்லாம் கரைத்துவிட்டு, தன்னுடைய உருவாக்கத்துக்கு விதையான, படைப்பின் மூலமான, எல்லையற்ற தன்மையை உணர்வதற்கான ஒரு வாய்ப்பு!

விஞ்ஞான ரீதியாகவே மஹாசிவராத்திரி ஒரு மனிதரின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு காரணமாக, அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்தால், அவருக்குள் இயற்கையாகவே ஆன்மீகம் வளரும்

சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை, 
மதம் என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து வெளிப்படுத்திய ஆய்வு செய்யப்படவேண்டிய கருத்துக்களைத் திரித்து ஒரு சமய சட்டத்திற்கு மட்டுமே உரியதாக மாற்றிவிட்டனர்.

அணுத் துகள்கள் மற்றும் பிரஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் அவர்கள் தத் தம் நூல்களில் ஆணித்தரமாக வெளிப்படுத்தியுள்ள்ளனர். இவற்றை நாம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் சமயம் சார்ந்த கோட்பாடுகளில் இவர்களைக் கட்டிப் போடுவது அழகல்ல.

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர் வீச்சுக்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

இத்தகைய கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்த சித்தர்கள் தம் யோக வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து வெளிப்படுத்தினார்கள்.

அவர்களின் அன்றைய வானவியல் கோட்பாடுகளை ஆய்வு செய்தால் அது இன்றைய விஞ்ஞானத்தின் ஆணிவேராகத் திகழ்கிறது.

இன்றைய விஞ்ஞானம் பெரிதும் நம்பியிருக்கும் அனைத்து சாதனங்களும் இந்த பிரஞ்சத்திலிருந்து எடுக்கப்பட்டவையே தவிர அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல.
அவர்கள் சிந்தனை உட்பட அனத்தும் அவர்களால் இயக்கப்பட்டதல்ல.

மஹா சிவராத்திரி:
சிவன்–இதில் மறைந்துள்ள ஒவ்வொரு எழுத்தின் ஒலி ஓசைக்கான உண்மை விளக்கம் வேறு ஆனால் இவற்றை ஒரு சமயம் சார்ந்த விளக்கமாக மாற்றி மதங்களுக்கிடையே விவாதம் செய்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் வல்ல இறைசக்தி ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் போது பிற மதங்களின் கோட்பாடுகளில் மட்டும் ஏன் இருக்க முடியாது?
இது நம் சிற்றறிவைதான் குறிக்கிறது. இவையனைத்தையும் கடந்தவர்கள் தான் சித்தர்கள்.

மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.

அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி உள்முகமாகிறான். இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.

மனிதன் சமநிலை தவறாத வண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த கொண்டாட்டங்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமியை கவனியுங்கள், சித்திரா பெளர்ணமி - வைகாசி விசாகம் என அனைத்து பெளர்ணமியும் ஏதோ இரு விசேஷ தினமாக கூறி அன்று கோவிலுக்கு செல்லும் சூழலை அமைத்தார்கள். ஆனால் இன்று நடப்பதோ வேறு...

பெளர்ணமி நல்ல நாள் என திருமணம், தொழில் துவங்குதல் என வெளிமுகமான விஷயங்களை மக்கள் செய்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது.

அமாவாசை, பெளர்ணமியில் ஏற்படும் நிகழ்வுகள் போன்று பிற நாட்களிலும் சூரியன் சந்திரன் பூமியின் நிலை மனிதனை உள்முகமாக செயல்படுத்தும் நிலை ஏற்பட்டால் அன்றும் மனிதன் உள்முகமாக இருக்க முயல வேண்டும். மாதா மாதம் வரும் ஏகாதசி, திரயோதசி காலங்கள். வருடத்தில் வரும் கிரகண காலம் மற்றும் மஹாசிவராத்திரி தினங்கள் ஆகியவை மனிதனை உள்முகமாக்க தன்னிச்சையாக செயல்படும்.

ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும்.

சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.

உணவு உண்ணாமல், உறங்காமல் இருப்பது உடல் செயலை தவிர்க்கவே மேற்கொள்ளப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பலர் இரவில் சினிமாவுக்கு செல்லுவதும், கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும் செய்கிறார்கள். அது தவறான செய்கை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

சிவகங்கையின் சிறப்பு:
தமிழில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அர்த்தத்தை தெரிந்து உருவாக்கியவர்கள்தான் சித்தர்கள். தமிழிலுள்ள உயிரெழுத்துக்கள் 12ம் மெய் எழுத்துக்கள் 18 உயிரும் மெய்யும் மற்றும் இவை இரண்டும் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஆகியவற்றின் பிறப்பிடங்கள் நம் உடலில் எங்கிருந்தெல்லாம் பிறக்கின்றன என்பதை ஆய்வு செய்து அதனை மொழிவடிவமாக்கி உருவாக்கியவர்கள் நம் சித்தர்கள்.

மஹா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட கிரகங்களின் மற்றும் பேரண்டங்களின் கதிர்வீச்சுக்கள் இந்த பூமி முழுவதும் வியாபித்துக் காணப்படும், அதே சமயம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியில் இருந்து நீரூற்று பிறப்பெடுத்து ஓடும். இந்த நீரூற்றுதான் சித்தர்கள் கூறும் முப்பு, அண்டக்கல் என்றழைக்கப்படும் அனைத்தையும் மாற்றியமைக்கப் பயன்படும் திரவியம். இதைப் பயன்டுத்தி் ஒருவரால் அனைத்தையும் மாற்றியமைக்க முடியும்.

இரும்பையும் தங்கமாக மாற்ற முடியும் என்பதால் இதை கண்டறிய ஒரு கூட்டமே சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் இது அசாத்திய யோக சாதனை பெற்றவரால்தான் அதன் இருப்பிடம் அறிய முடியும்.

இத்தகைய சிறப்புபெற்ற ஊற்று பிறப்பெடுப்பதாலே அவ்விடத்திற்கு சிவகங்கை எனப் பெயர் சூட்டினர்.
இதுமட்டுமல்லாது அன்றைய தினம் இப்பூமி முழுவதும் பரவி இருக்கும் அற்புத சக்தியை சித்தர்கள் தியானத்தின் மூலம் தங்களின் ஆத்ம வளர்சிக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.

அதாவது அன்றைய நாளில் அவர்கள் செய்யும் தியானமானது, மூன்று மாதங்கள் ஒருவர் இடைவிடாது தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுக்கும். இது சித்தர்களின் சாதனை முறை. இதையே நம் முன்னோர்கள் அன்றைய தினம் கண் விழித்து இறைவனை துதி பாட வேண்டும் என்றுக் கூறினார்கள்.ஆனால் அவர்கள் இங்கு குறிப்பிட்டது புறக்கண் விழிப்பையல்ல, அகக்கண் விழிப்பு நிலையுடன் கூடிய தியான நிலையைதான்.

இனவே நாமும் இப்புனித தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலைக் கிரகித்து மகிழ்வுடன் வாழ்வோமாக..

"அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார்
அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின் 
அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே. "
-திருமூலர்