Designed by Enthan Thamizh

Latest Posts


!! நீ தனியாகத்தான் வந்தாய், தனியாகத்தான் போவாய்.
இங்கு உனக்கு என்று ஒன்றும் கிடையாது.

பணியாளர்கள் குறைவு என்று வருந்தாதே ! 
நீ தனியாகத்தான் போராட வேண்டும். யாரையும் நம்பி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே !

உற்றார் உறவினர் நண்பர்கள் சக பணியாளர்கள் என்பதெல்லாம் மாயை, அவை அனைத்தும் மா
யையின் சின்னங்கள்.

அதிகமாக உழைக்கும் காரணமாக உன்னை மீறி நடக்கும் பிழைகளுக்கும் அதற்கு உண்டான தண்டனைகளுக்கும் வருந்தாதே !

நீ அடுத்த பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று ஏங்காதே !
தற்போது எந்த பதவியில் இருக்கிறாயோ அதில் திருப்தி பட்டுக்கொள் !

நீ எப்பொழுது இங்கு இல்லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம் நடந்து கொண்டுதான் இருந்தது.  நீ எப்பொழுது இருக்கப்போவதில்லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம் நடந்து கொண்டுதான் இருக்கும்.

இதில் நீ என்று எதுவும் கிடையாது.
இன்று உனது வேலை எதுவோ
அது நேற்று வேறு ஒருவருடையதாக இருந்தது,
நாளை வேறு ஒருவருடையது ஆகி விட போகிறது.

நீ என்பது ஒரு மாயை.  தான் என்ற கர்வம் வர கூடாது.
இந்த மாயை மட்டுமே உனது அனைத்து கவலைகளுக்கும் காரணம்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு, விடுமுறைகள், . என்கிற வார்த்தைகளை நீ மறந்து விடு.  மாயையிலிருந்து விடு படு.

அப்படி இருக்கும் பட்சத்தில் நீதான் இந்த அலுவலகம், இந்த அலுவலகம்தான் நீ என்பது உனக்கு புலப்படும்...

😱 வேண்டாம் 🐓 நான்😱

பெயர்:
➡🐓பிராய்லர் கோழி,

➡ 🐓என்னை தயவுசெய்து உண்ணாதிர்கள்,

➡ 🐓நான் ஒ௫ தரமற்ற உணவு பொ௫ள்,

➡🐥 ஒ௫ முழுமையான நாட்டுக் கோழி வளர்ச்சியடைய குறைந்தது 6 மாத காலம் ஆகும்

➡🐓 நான் வளர்ச்சியடைய ஒ௫ மாத காலமே போதும் அதுவும், எனக்கு உணவு, ரசாயன பொருட்கள்(antibiotic resistant Bactria ) உணவு,  

➡💉 இதன் மூலம் ம௫ந்து கொடுக்கப்படுகிறது

▶🚫😱உண்மை தெரியுமா எனது ஆயுட்காலம் - 1 மாதம் தான்

💥🌻உங்கள் ஆரோக்கியமான வாழ்வில்,  என்னை போன்ற சுகாதரமற்ற, தரமற்ற உணவை, தயவு செய்து சேர்ந்தது கொல்லாதிர்கள்,

👉🌿 உணவே மருந்து எனும், வாசகத்திற்க்கு ஏற்ப்ப,

🍎🍏🍊🍑🍉🍇🍒🍋🍠🍅🌽🍆🌽🍅🍍🍪🍚🍲🍌🍈 🌿🌼🐬🐠🐟இது போன்ற இயற்கை உணவை உண்ணுங்கள்,

தயவு செய்து படித்தவர்கள், forward ( மற்றவர்களுக்கு அனுப்புதல்)  செய்வதோடு இல்லாமல், இதை உட்கொள்ளாமல் இ௫ங்கள்
💪 ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடுங்கள்,

👶👭👬 குழந்தைகளுக்கு தயவுசெய்து கொடுக்காதிர், 🐓என்னை

🐾🍚🍜🍲🍴?🍵ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் உள்ளது,

📌இப்படிக்கு,

🙏பொதுநலம்

இவன், 👦

♻ உங்களில் ஒ௫வன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎭🗿🎭🗿🎭🗿🎭🗿🎭🗿

ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களுக்குள்   சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்

"நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே"

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக  சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?

அவன் சொன்னான்,"என்ன கேட்டாலும் தருகிறேன்"

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்"

இப்பதிலை அவன் ஜெயித்த  மன்னனிடம் சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.

அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்"

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

அவள் சொன்னாள்,
"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக  இருப்பேன்.இதில் எது உன் விருப்பம்?" என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்"இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க வேண்டும்" என்று

அவள் சொன்னாள்"முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!" என்றாள்

ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!

         ( படித்ததில் ரசித்தது )

😀😛
😄😜😃😝

18 முறை கஜினி முகமது நம் இந்திய திரு நாட்டி மீது படையெடுத்துவந்தான் (கொள்ளை அடிக்க) அதை இன்றளவும் விடாமுயற்ச்சி என்று பாராட்டி படிக்கிறோம்.
ஆனால் அவனை 17 முறை வெற்றி பெறாமல் துரத்தி அடித்த நம் முன்னோர்கள் வீரத்தை நம் தலைமுறைக்கு சொல்லவில்லை.

அலெக்சாண்டரை மாவீரன் என்று போற்றுவோம்.
ஆனால் அவனை கலங்கடித்த மன்னன் புருஷோத்தமரைப்பற்றி எந்த பாட புத்தகத்திலும் சொல்லமாட்டோம்.

சேகுவேரா போன்ற வெளி நாட்டு போராளியை தலையில் தூக்கிவைத்து ஆடுவோம். ஆனால்செக்கிழுத்த வ.உ.சி, கொடிகாத்த குமரன் போன்றவரைப்பற்றி பேச மாட்டோம்.

72 வயதில் திருமணம் செய்த பெரியாரை சிலை வைத்து வழி படுவோம்.
ஆனால் பிரம்மசாரியாக வாழ்ந்து தன் வாழ்நாள்  அனைத்தையும் தன்  நாட்டுக்கும்  நாட்டுமக்களுக்கும்  அர்ப்பணித்த ஐயா  காமராஜரை  மறந்து விடுவோம்.

பிரான்ஸில் உள்ள இரும்பிலான ஈபிள் டவரை ஆஹா என புகழ்வோம்.
நெஞ்சை அள்ளும் தஞ்சை பொிய கோவிலின் கலைநயத்தை கண்டு கொள்ள மாட்டோம்.
மொத்தத்தில் வெளிநாட்டோடு ஒப்பிட்டு தாய்நாட்டை குறைத்து பேசும் தரங்கெட்ட செயலை
மாற்றுவோம்.
அதற்கான முதற்படி எடுத்து வைப்போம்.

தேசத்தை நேசிப்போம்.

"ஜெய்ஹிந்த்"


கார்கில் போரின்போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.
எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.
நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வர எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான். மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.
நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார். அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர்.
இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான் கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.
நான் போனது தான் சார் சரி என்றான்.
என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.
நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்."என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா" என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை…
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.

கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்.! சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே... என்று பாய....

அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், 'ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ' என்று அலற.. ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க...

அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை.

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்...

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில்
ஆவின் பாலாக பிறந்திருந்தால்
மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்.. 😀😀😝😁

ஒரு பெண்மணி செல்லப் பிராணிகள் விற்கும் கடையில், மிகவும் அழகான கிளி ஒன்றைப் பார்த்தாள். அதன் விலை வெறும் 50 ரூபாய் என்று எழுதியிருந்தது.!

"ஏன் இவ்வளவு குறைவான விலை, இத்தனை அழகான கிளிக்கு?"

"அது ஒண்ணுமில்லைம்மா, இந்தக்கிளி முன்னாடி ஒரு விபச்சார விடுதியில இருந்துது. சமயத்துல ரொம்ப கெட்ட கெட்ட வார்த்தையாப் பேசிடுது." என்றாள் அந்தக் கடை உரிமையாளர்.

சற்று யோசித்த அந்தப் பெண்மணி, கிளியை விட மனமில்லாமல், வாங்கி, வீட்டுக்குக் கொண்டு சென்று, ஹாலில், கிளிக்கூண்டை தொங்கவிட்டு,....

... எதாவது பேசுமா என்று பார்த்தாள்.
அந்தக் கிளி நிதானமாக அந்த ஹாலை சுற்றிப் பார்த்துவிட்டு,...

"புது வீடு,... புது மேடம்!" என்றது!

கிளி என்ன அர்த்தத்தில் சொல்கிறது என்று புரிந்தாலும்,...

"இது ஒண்ணும் கெட்ட வார்த்தையில்லையே!" என்று சமாதானமானாள்.

அப்போது அங்கு வந்த அந்தப்பெண்மணியின் இரண்டு டீன் ஏஜ் மகள்களைப் பார்த்து,...

"புது வீடு,... புது மேடம்,... புதுப் பொண்ணுங்க!!" என்றது கிளி !

தர்மசங்கடத்திலும், அந்த கிளி முன்பு இருந்த இடத்தை நினைத்து, மூவரும் வாய்விட்டு சிரித்தனர்.

சிறிது நேரம் கழித்து, அந்தப்பெண்மணியின் கணவர் சேகர், உள்ளே நுழைந்தார்.

கிளி அவரைப்பார்த்து,... "ஹாய் சேகர்" என்றது!
---------------------------------- செத்தான் சேகரு!

யாராலும் மறுக்க முடியாத உண்மை:

     அன்றாடம் நம் கைகளிலும், சட்டைப் பாக்கெட்டிலும், சில சமயங்கள் நம் வாயிலும் புழங்கும் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் "நோய் பரப்பும் காரணிகள்".

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம். ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?
   அப்படியாக  பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.
2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.

"காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1,  TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.
     இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான  கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள். பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.
3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள்.

அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.
  இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள். ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?
4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.
5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம் ( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.
அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?

6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
பரவும் அபாயத்தை மறக்கிறோம்.

மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான். அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள். ஆனால் நாம்.....................?
இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும். இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம். ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.
   
நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.
  
எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.
 
அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்
    
கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.
 
இந்த குறுந்தகவலை குறைந்த பட்சம்  நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.
   சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........!
        நன்றி.

இது அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.
🙋💇👰🙎🙍🙆💁👪
===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது நமக்கு
அம்மா வீடுதான் !

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம் !
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம் !

===================

காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை !
அடிக்கடி வந்து
தொட்டுப்பார்க்கும்
அம்மாவின் கையே
போதுமானது !

===================

இவ்வளவு
வயதாகியும்
புதுச்சட்டைக்கு
மஞ்சள்வைத்து
வருபவனைக்
கேலி செய்யும்
நண்பர்களே ..........
அது,
அவன் வைத்த
மஞ்சள் அல்ல !
அவன்,
அம்மா வைத்த
மஞ்சள் !
===================

டைப்பாய்டு வந்து
படுத்த அம்மாவுக்கு
'சமைக்க முடியவில்லையே'
என்கிற கவலை !

===================

'அம்மா தாயே'
என்று
முதன் முதலில்
பிச்சை கேட்டவன்
உளவியல் மேதைகளுக்கெல்லாம்
ஆசான் !

===================

எந்தப் பொய்
சொல்லியும்
அம்மாக்களை
ஏமாற்றிவிடமுடியும்
'சாப்பிட்டு விட்டேன் '
என்கிற
அந்த ஒரு பொய்யைத்தவிர !
===================

அத்தி பூத்தாற்போல
அப்பனும்
மகனும்
பேசிச்சிரித்தால்
விழாத தூசிக்கு
கண்களை தேய்த்துக்கொண்டே
நகர்ந்து விடு்கிறார்கள்
அம்மாக்கள் !

===================

வெளியூர் செல்லும்
பிள்ளைகளின்
பயணப்பைக்குள்
பிரியங்களைத்
திணித்து வைப்பவர்கள்
இந்த அம்மாக்கள் !

===================

பீஸ் கட்ட
பணமென்றால்
பிள்ளைகள்
அம்மாவைத்தான்
நாடுகின்றன ........
காரணம்,
எப்படியும்
வாங்கிக் கொடுத்துவிடுவாள் !
அல்லது
எடுத்துக் கொடுத்துவிட்டு
திட்டு வாங்கிக்கொள்வாள் !

===================

வீட்டுக்குள்
அப்பாவும்
இருந்தாலும்
அம்மா என்றுதான்
கதவு தட்டுகிறோம் !

===================

அம்மாக்களைப்
பற்றி
எழுதப்பட்ட
எல்லா
கவிதைகளிலும்
குறைந்தபட்சம்
இரண்டு சொட்டுக்கண்ணீர்
ஈரம் உலராமல் !

===================

அகில உலக
அம்மாக்களின்
தேசிய முழக்கம்
இதுதான் ..........
" எம்புள்ள
பசி தாங்காது! "

#பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...

நினைவிருக்கிறதா..?
1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!
போபால் ரயில்வே ஸ்டேஷனில்
'துருவே' என்ற
ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப்
பணி.
போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ
வில்
இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு
சிக்னல்
க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு
வெளியே வந்தார்.
அவரால் காற்றில் ஏதோ
வித்தியாசத்தை
உணர முடிந்தது. அவசர அவசரமாக
சிக்னல்
அறைக்கு ஓடினார். எப்படியாவது
லக்னோ டு
மும்பை ரயிலைத் தடுத்துவிடுவதுத
ான் அவரது
நோக்கம். ஆனால், அந்த ரயில்
ஏற்கெனவே கிளம்பிவிட்டது.
துருவேயால்
ஒன்றும் செய்ய முடியவில்லை.
லக்னோ-மும்பை
ரயில் வந்தது. அதில் இருந்து
இறங்கிய
பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத்
தாங்க முடியாமல் சுருண்டு
விழுந்தார்கள்.
ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம்
இறந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் போபால் ரயில்
நிலையத்தில் 191 பிணங்கள்கிடந்தன.
அந்தக்
காட்சி துருவேயை
நிலைகுலையவைத்தது.
பதற்றத்தோடு
சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு
அவருக்குக்
கீழ் பணிபுரியும் சிக்னல் மேன்
வாயில் ரத்தம்
வழிய செத்துக்கிடந்தார். அவரை
ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, 'எந்த
ரயிலும்
போபால் வழியே வந்துவிட
வேண்டாம்' என்று
தகவல் அனுப்பத் தொடங்கினார்.
அதையும் மீறி வரும் ரயில்கள்
ஜன்னலை
மூடிக்கொண்டு போபால்
ஸ்டேஷனில்
நிற்காமல் வேகமாகப் போய்விடுமாறு
அறிவுறுத்தினார்.
மூக்கிலும் வாயிலும் வழிந்த
ரத்தத்தைத்
துடைத்துக்கொண்டு, இரவு
முழுவதும்
விழித்திருந்து வேலை பார்த்தார். அந்த
இரவு
விடிந்தது. அடுத்த நாள் சிக்னல்
அறையைத்
திறந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர்
துருவே வாயில்
ரத்தம் வழிந்த நிலை யில் சிக்னல்
அனுப்பும்
கருவியை ஒரு கையால் பிடித்தபடி
செத்துக்கிடந்தார்.
துருவே மட்டும் இல்லை எனில்,
போபால் விஷ
வாயுக் கசிவின் மரண எண்ணிக்கை
இன்னும்
சில ஆயிரங்கள் கூடியிருக்கும்.
ஆனால்,
போபால் நகரத்தில் விஷவாயு கசிந்த
அந்த
இரவில் மாநில முதல்வர் அர்ஜுன் சிங்,
நகரில் இருந்து 14 கி.மீ ஓடோடிச்
சென்று
தப்பித்தார்.
'துருவே' போன்றவர்களின் தியாகம்
ஏனோ
அங்கீகரிக்கப்படுவதுமில்லை,ஞாபகம்
இருப்பதும் இல்லை.
-ஆனந்த விகடன் இதழிலிருந்து....

காற்றோட்டம் பெற
மரங்களுக்கிடையில்
நடந்துசென்றேன் !

மரங்கள் என்னோடு
பேசத்தொடங்கின!

வேப்பமரம்!
ஏய் இனியவரே
எனக்கு கீழ் ஒரு அம்மன்
உருவத்தை வைத்துவிட்டு
செல் என்றது!

திகைத்தேன்!
நான் என்ன ஞானியா?
மந்திர வாதியா ?
சிலையை உடன் வரவழைக்க !

அரசமரம்!
ஏய் இனியவரே
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார்
சிலையொன்றை வைத்துவிட்டு
செல் என்றது!

புன்னகைத்துவிட்டு
மேலும் சென்றேன்!

ஆலமரம்!
ஏய் இனியவரே
எனக்கு கீழ் ஒரு பைரவர் .
சூலத்தை வைத்துவிட்டு
செல் என்றது!

ஒரு பெரு மூச்சை
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன்!

அடுத்த மரம் என்னிடம்
எதையும் கேட்கவில்லை ..
வியப்படைந்தேன்!

ஏய் மரமே!
உனக்கு கடவுள் நம்பிக்கை
இல்லையா?
ஏன் எதையும்
கேட்கவில்லை என்று நான்கேட்டேன்!

போங்க இனியவரே !
அவைகளெல்லாம் ஞானத்தால்
சிலைகளை கேட்கவில்லை!
தம்மை வெட்டி விட கூடாது
என்ற பயத்தால் கேட்கிறார்கள்!

அப்படியென்றாலும் தம்மை
வெட்டும் அளவு குறையுமே என்ற
அற்ப ஆசை தான் இனியவரே!

அப்போ உன் நிலை?

என்னை விலைபேசி விட்டார்கள்!
இன்று நான் இறக்கபோகிறேன்!
எதையும் நான் கேட்டு பயனில்லை!
முடிந்தால் இனியவரே!
அவர்களை காப்பாற்றுங்கள்!

அவர்கள் விரும்பியதை செய்யுங்கள்!

இப்போதுதான் புரிந்தது!
மூதாதையர் மூடநம்பிக்கையால்
சிலைகளை வைக்கவில்லை !

தூய காற்று தரும் மரங்களை
பாதுகாக்கவே சிலைகளை
வைத்தார்கள்!

அன்றைய கருவி
அன்றைய விழிப்புணர்வு இவைகளே!

இன்றைய நவீன உலகில் வாழும்
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை
அறிவிலிகள் என்கிறார்கள்!

மரம் வளர்ப்போம்! மனிதம் காப்போம்!

கண்டிப்பாகப் படிக்கவும் & ஷேர் பண்ணவும்

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு ஏராளமான பரிசுப் பொருட்கள் வரும். வெளிநாடுகளில் இருந்தும் ஏகப்பட்ட பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கும். அவற்றையெல்லாம் அப்துல் கலாம் போட்டோ எடுத்து வைத்து வகைப்படுத்துவார். பின்னர் அப்படியே அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார். ஒரு பொருளை கூட திரும்பி பார்த்ததது இல்லை. ஒரு பென்சிலை கூட தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசுபொருட்களை அப்துல்கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் 'இப்தார்' விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு. கடந்த 2002ஆம் ஆண்டு அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம். என்னைஅழைத்த அப்துல் கலாம், இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும்? என்று கேட்டார். நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றேன். இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்? அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடுவோம். அந்த தொகைக்கு இணையாக அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய சொன்னார். பின்னர் தனியாக என்னை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என அப்துல்கலாம் கூறிய போது, மனித நேயமிக்க மனிதரிடம் பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமையடைந்தேன். கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் 'இப்தார்' விருந்து அளிக்கப்பட்டதில்லை.

அப்துல் கலாம் 'யெஸ் சார்' வகை அதிகாரிகளை பக்கத்தில் வைத்து கொண்டதில்லை. ஒரு முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். இருவரும் விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் நின்ற என்னை பார்த்து மிஸ்டர். நாயர் நான் சொல்வது சரியா? என்று வினா எழுப்பினார். அது சரியாக இருக்காது என்றும் அதற்கான காரணங்களையும் நான் அடுக்கி கூறினேன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பிரமிப்பு. ராஷ்டிரபதியின் கருத்துக்கு சாதாரண அதிகாரி எதிர் கருத்து சொல்வதும் அதனை அவர் அனுமதிப்பதையும் கண்டு நீதிபதி அசந்தே போனார்.

குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர். அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க ஒரு பஸ் அமர்த்தி தரப்பட்டது. அந்த பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை. கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது. அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை.

அப்துல் கலாமின் 5 ஆண்டு பதவி காலம் முடிய சில நாட்கள் இருந்த சமயத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் ஊழியர்கள் அவரை சந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது நானும் அவரை சந்தித்தேன். என்ன மிஸ்டர் . நாயர் உங்கள் மனைவியை காணோம்? என்று கலாம் கேட்டார். எனது மனைவி ஒரு விபத்தில் சிக்கி கால் உடைந்து வீட்டில் இருக்கிறார் என்றேன். அடுத்த நாள் எனது வீட்டை சுற்றி ஒரே போலீஸ். என்னவென்று பார்த்தால் கலாம் எனது மனைவியை பார்க்க வீட்டுக்கே வந்து விட்டார். ஒரு குடியரசுத் தலைவர் சாதாரண ஊழியரின் மனைவியை சந்தித்து பேசுகிறாரே என்று நான் வியந்து போனேன்.

இவ்வாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பற்றி பி.எம். நாயர் கூறியுள்ளார்.

கண்டிப்பாகப் ஷேர்(Share) பண்ணவும்-Please Share This

ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

"நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?"

"ஆம் மன்னா!"

"அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு" என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, "சரி மன்னா" என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், "அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??"

"இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!" என்றார் அமைச்சர்.

"தொடரும்" என்றார் மன்னர்.

"மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்."' என்றார் அமைச்சர்.

"சரி அடுத்து"

"இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்"

"களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?"

"அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்."

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் "அடுத்தது" என்றார்.

""நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது" என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

"உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்" என ஒத்துக் கொண்டார் மன்னர்.

"சரி எங்கே முதலாவது முட்டாள்?"

அமைச்சர் சொன்னார்."மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு whatsapp thaan குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!"

‪#‎ஆத்தீ‬ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்.
" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"
" ஓரணாம்மா"
"ஓரணாவா....? அரையணாதான் தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா".
" அதெல்லாம் முடியாது. அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா" என்கிறாள்
"முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான் தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.
கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க
"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ" என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள்.
எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....? என்று கேட்க
அதற்கு அந்த தாய்,
"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது,
தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று கூறினாள்