Designed by Enthan Thamizh

Latest Posts

அனைவருக்கும் காலை வணக்கங்கள்  உரித்தாகுக. இன்று முதல் கதை ஆரம்பம். எந்த நற்செயல் செய்யும் முன்பு,  இரு கைகலப்பு தொழல் வேண்டும் என்ற மரபிற்கேற்ப, கடவுள் வாழ்த்து பாடலையும் அதன் சிறப்பையும் அறியலாம்

பாடல் :

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா 
அலகு இலா விளையாட்டு உடையார்அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண்நாங்களே.


பொருள் :

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்(எல்லா உலகங்களையும் தாமே படைத்தலும்)
 
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா(பாதுகாத்தலும், அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் நீங்காத)
 
அலகு இலா விளையாட்டு உடையார்அவர் (முடிவு இல்லாத விளையாட்டுகளாக உடையவராகிய அவரே)
 
தலைவர் அன்னவர்க்கே சரண்நாங்களே (இவ்வுலகங்களுக்கு எல்லாம் தலைவர், அத்தன்மை பெற்ற இறைவர்க்கே நாங்கள் அடைக்கலம்)


இந்த கடவுள் வாழ்த்தில்கம்பர் ஒரு தெய்வத்தின் பெயரையும்குறிப்பிடவில்லை. ஒருவேளை கம்பர்மறந்திருப்பாரோ? யார் 11,000 பாட்டுகள்படைத்த கம்பர் தனது கடவுள் வாழ்த்தில்தனி பெரும் பொருள்இராம்ப்பெருமானே என்று பாடமறந்திருப்பாரா, இல்லை! ஒரு வேளைகம்பர் தெய்வத்தின் பெயரை பாடலில்சொருக முடியாதபடி தினறியிருப்பாரோ?கம்பர் கவிச்சக்கரவர்த்தி! அவருக்குதமிழிலும், கவியிலும், பொருளிலும்தடங்கல் என்பதே இல்லை. அவர்சொல்லும் பொருளையும், கவியைடும்உணர்ந்துக் கொள்ள வேண்டுமென்றால்நமக்கு வேண்டுமானால் சிரமமாகஇருக்கலாம்! கம்பர் நினைத்திருந்தால்"இராமா, இராமா" என்றே பாடல்முழுவதும் புகுத்தி அதை சிலேடைவடிவமாக்கி ஒரே சொல் பல்வேறுபொருளை உணர்த்தும வகையில்பாடலை இயற்றியிருக்கலாம்! பின்பு ஏன்கம்பர் இப்படி பொத்தம் பொதுவாககடவுள் வாழ்த்து பாடினார்?
                 கம்பர் அவை நாகரீகம்அறிந்தவர். கம்பராமயண அரங்கில்சைவ சமய பெருமக்களும்குழுமியிருப்பர். மற்ற சமயங்களானசமணம், பௌத்தம் போன்றவைகளில்இருந்தும் மக்கள் குழுமி இருந்தனர்.அதனால் கடவுள் வாழ்த்து என்பது இந்தசமயங்கள் எல்லாவற்றையும் ஒத்துஒருங்கிணைத்து, உருவங்கள்பலவானாலும், மார்க்கங்கள்வேவேரானாலும் பரம் பொருள் ஒன்றேஎன்று உரைக்கும் விதமாக எங்கும்நிறைந்திருக்கும் அந்த பரம்பொருளைஎண்ணி அமைய பெறல் வேண்டும். சமயபொதுவுடைமை (secularism) என்பதற்குஉலகத்திற்கே முன்னோடியாக தமிழும்,தமிழ் அறிஞர் பெருமக்களும்திகழ்ந்தனர் என்பதற்கு இது ஒருஎடுத்துக்காட்டு!

இராமனது வரலாற்றைக் கூறும் நுால் இராமாயணம் எனப்பட்டது. அயனம் என்பது வடமொழி சொல்,பயணம் என்னும் பொருள் தரும். இராமனின் வாழ்க்கை பயணம் குறித்த கதையாதலால் அப்பெயர் பெற்றது. கம்பராமாயணம் எனும் நுால் கம்பா்எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். 

இதுவொரு வழி நுாலாகவே இருந்தாலும் கம்பா் தனக்கே உாித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளாா். வடமொழி கலவாத துாய தமிழ்ச்சொற்களைத் தனது நுாலில் கையாண்டதால் கம்பா்,தொல்க்காப்பிய நெறி நின்றவா் என்று புகழப்படுகிறாா்.

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுநந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும் நுாற்றுப்பத்தொன்பது (119) படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிாிவினையும் படலம் என்பது அதன் உட்பிாிவினையும் குறிக்கும்.

கம்பாின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞா் பெருமக்கள் அழைப்பதுண்டு. 

வாழ்க்கையின் தத்துவங்களை,  ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்களை,  சகோதர ஒற்றுமையை,  விதியின் வலிமையை,  நட்பின் மேன்மையை இராமாயணம் எடுத்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு காண்டத்தையும், அதன் உட்பிரிவான ஒவ்வொரு படலத்தின் வருணனைகளையும், கம்பரின் கவிநடையில் பின்வரும் நாட்களில் காணலாம்.... 🙏🏻🙏🏻🙏🏻

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்' கோத்திரம்' என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?"

குலதெய்வம்

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ
அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.

பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா…..?

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.

நன்றி - 
சித்தர் அறிவியல்
இரத்தம் பற்றிய சில தகவல்கள் இது, இதை நீங்கள் படித்து உங்களின் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,
❣இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
❣இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
❣ இரத்த வகைகள் - A, B, AB, O
❣இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்
❣ இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)
❣ இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)
❣சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
❣ இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
❣ இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
❣ இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
❣மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
❣இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
❣அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
❣அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
❣ 120 mmHg என்பது - Systolic Pressure
❣80 mmHg என்பது - Diastolic Pressure
❣இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
❣இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
❣ இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
❣ இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
❣ இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
❣ ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்
❣பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்
❣ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்
❣பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
❣ இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
❣ இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
❣இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
❣ இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
❣ இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
❣இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
❣இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
❣ இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
❣ உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்
❣ லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
❣துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் 3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
❣துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்.
❣ மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
❣இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:
❣ நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
❣ இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
 பேசோஃபில்கள் - 0.1%
❣லிம்போசைட்டுகள் - (20 - 30%)
❣ மோனோசைட்டுகள் - (1 - 4%)
3. இரத்த தட்டுகள் :-
❣ இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
❣இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்.
❣இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
❣இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000
❣ இரத்த தட்டுங்கyள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் - டெங்கு ஜுரம்

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\"  

2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\".  

3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\" 
 
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).  

5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\"  

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\".  
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\" 
 
8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\" 
 9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\"  

10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\"  

11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"  

12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\" 
 
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\" 

 14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\" 

 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\"  

16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"  

17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\" 

 18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\"  

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\"  

20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\"  
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\" 

 22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை) 

 23) கேரட்   மல்லிகீரை   தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.  

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"  

25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\"  
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\"  

27) மஞ்சள் காமாலை விரட்டும் "கீழாநெல்லி"  

28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் "வாழைத்தண்டு".  

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.
�� வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��

�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில ��  பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.

�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது

�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! 

✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. 

�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,

�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,

�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், 

�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். 

�� இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..

�� இந்த தகவலை �� குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். �� �� ��

❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், 
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!
           �� �� ��
�� வாட்ஸ்அப்பிர்க்காக �� பகிருபவர்
ஓம் சிவ ஓம்..
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி
தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக்
கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச்
சென்றபோது "சுடுகாட்டில் கிடைத்ததை நீயே
வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து
அபிஷேகம் செய்" என்று ஏளனமாக அரசன்
கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று
தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள்
ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த
சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம்
செய்து வழிபட்டான்ஒருநாள் திடீரெனப் பெய்த
மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும்
கரைந்து விட்டது.
 
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும்
விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் "நான் இந்த தீயில் விழுகிறேன். என்
உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்" என்று கூறினான்.
ஆனால் மனைவியோ "நீங்கள் அப்படி இறந்து விட்டால்
இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில்
குதிக்கின்றேன்" என்று கூறிக் கொண்டே தீயில் வீழ்ந்தாள். 

இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார்.

இதைக் கேட்ட அரசனும் தங்கத்தால் ஆன
சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும்
வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்கு காட்சிதராத இறைவன், சுடுகாட்டுச் சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு
மோட்சம் அளித்துள்ளாரே, என்று வருந்தினாலும் 'பக்தி'
என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே
மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்...

ஓம் நம சிவாய நம ஓம்
🙏🌺🙏🌺🙏🌺🙏
*.*

ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன. 

பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் 
கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. 

'நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?' என்று மிகவும் 
ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.

அந்தக் காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம். 

அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் 
கட்டத் தீர்மானித்தார்கள்.

புதுக் கோவிலுக்கு மூலவர் மற்ற சிலைகள் எல்லாம் 
வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டுச் சிற்பிகள் 
நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சிற்பங்களைச் 
செதுக்குவதற்காக கற்களைத் தேடிக் காட்டுக்குள் 
வந்தார்கள்.

அவர்களில் ஒரு சிற்பி இந்தப் பாறைகளைக் கவனித்தார். 

மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்துச் சொன்னார். 

'இந்தப் பாறைங்க ரெண்டும் சரியான அளவில இருக்கற
மாதிரி தெரியுது. நாளைக்கே ஆள் வெச்சுத் தூக்கிட்டுப் 
போயிடலாம்!'

சிற்பிகள் திரும்பிச் சென்றபிறகு முதல் பாறை பேசியது. 
'ஹையா ஜாலி ஜாலி! நம்ம பல நாள் கனவு நிறைவேறப் 
போகுது! நாளைக்கு நாம நகரத்துக்குப் போறோம்!'

இரண்டாவது பாறை கோபமாகச் சீறியது. 'அட மக்குப் பயலே! 
அவங்க உனக்கு நகரத்தைச் சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் 
போறாங்கன்னு நினைச்சே? உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, 
சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா?'

'அதுக்கு என்ன பண்றது? ஒண்ணைப் பெறணும்ன்னா 
இன்னொண்ணை இழந்துதானே ஆகணும்?' என்றது 
முதல் பாறை. 

'நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை!'

'என்னால அது முடியாது!' தீர்மானமாகச் சொன்னது இரண்டாவது பாறை.

'நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாப் 
போய் உட்கார்ந்துக்குவேன். அவங்க எல்லோரும் சேர்ந்து 
எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது.'

மறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். 

முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். 

இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.

'சரி விடுங்க. அதான் ஒரு பாறை கிடைச்சுடுச்சே. அதுவே போதும்.'

அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.

இப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக 
எல்லோராலும் வணங்கப்படுகிறது. இரண்டாவது பாறை இன்னும் 
காட்டுக்குள்தான் கிடக்கிறது.b

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.
இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. 
உடலிலுள்ள கோடிக்கணக்கானசெல்களைதினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கிபுத்துணர்வு  [Refresh]பெறவும்,உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான்உடலின் வளர்ச்சிஅதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.தூங்குவதற்கு ஏற்ற காலம்இரவு மட்டும்தான் என்பது இயற்கையின்விதிகளில்ஒன்று.பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறிஇரவில் குளிர்ச்சிபொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஆனால்  இன்றைய நாகரீக உலகில்இணையதள நிறுவனங்க ளில்வேலை பார்க்கும் பலரும்இரவில் கண் விழித்துபகலில் தூங்கு கின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி...,

 சித்தர் பாடல் ஒன்று;-

"சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரைநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண்!"

இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில்
புத்தி மயக்கம்,தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல்,போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரைபற்பல நோய்கள்கவிக் கொள்ளும்.எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதைசித்தர்கள் அன்றேதெளிவாகக் கூறியுள்ளனர்.

"உத்தமம் கிழக்கு!
ஓங்குயிர் தெற்கு!
மத்திமம் மேற்கு!
மரணம் வடக்கு!

கிழக்குதிசையில் தலை வைத்து படுப்பதுமிகவும் நல்லது.தெற்குதிசையில் தலை வைத்துப் படுத்தால்ஆயுள் வளரும்.மேற்குதிசையில் தலை வைத்துப் படுத்தால்கனவு,அதிர்ச்சி உண்டாகும்.வடக்குதிசையில் ஒரு போதும் தலை வைத்துதூங்கக் கூடாது.இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வடக்கு திசையில் இருந்து வரும்காந்தசக்தி தலையில்மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால்மூளைபாதிக்கப் படுவதுடன்,இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சிஉண்டாகும்.மேலும்மல்லாந்துகால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால் இவர்களுக்குத் தேவையானஆக்ஸிஜன் [பிராண வாயு]உடலுக்குக் கிடைக்காமல்குறட்டை உண்டாகும். 
குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

#நன்மை;-
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும்இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாகஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும்.இதனால்வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில்ஓடும்.இதில்எட்டு அங்குலம்மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால்நீண்ட ஆயுள்வளரும்.மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்துபித்தநீரைஅதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்துஇதயம் பலப்படும்.

#தீமை;-
வலது பக்கம் ஒருக்களித்துபடுப்பதால்இடது பக்க மூக்கின்வழியாகசந்திரகலை சுவாசம்ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும்.இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.இரவில் உண்ட உணவு சீரணமாகாமல்புளித்துப் போய் விஷமாகநேரிடும்.

நன்றி!;-இமயகிரி சித்தர்&சித்தர் பிரபஞ்சம்.
அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே . மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல
விரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே. 

மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி  குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம்.  கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு. 

ஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ''ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா'' என்று கோபாலனை அனுப்பினார். 

அவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான். வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்திரி என்கிற வியாதிக்கார நம்புதறி காத்திருந்தார். ஏன் அவன் இன்னும் வரவில்லை? 

சற்றைக்கெல்லாம் அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி

''என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா? ''

'' ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது'' என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது'' 

''அப்படி என்ன ஜோசியர் சொல்லி விட்டார்?''

கோபாலன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி ''புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்'' என்றான். 

''குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம்  செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார். 

அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன். 
நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ?'' கோபால குட்டன் அழாத குறையாக சொன்னான். 

பட்டத்திரி யோசித்தார். அவருக்கு சிரிப்புவந்தது. ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.

மனம் சந்தோஷம் அடைந்தது. ''கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கோ''

''ஏய், இதென்ன அக்கிரமம். நான் வரமாட்டேனாக்கும்'' என்றான் கோபாலன். உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது. நான் ஒப்புத்துக்க மாட்டேன். உங்களுக்கு வேணா எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாபத்துக்கு நான் துணை போக விரும்பலே.'' ரொம்ப கோபத்துடன் கோபாலன் கத்தினான். 

பட்டத்திரி என்ன சமாதானம் பண்ணியும் கோபாலன் கோபம் அடங்கவில்லை. '' ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா'' என்று திருப்பித் திருப்பி சொல்லி கடைசியில் கோபாலன் ஒரு வழியாக அமைதியானான். 

''ஜோசியன் சொன்னது நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே. அதற்கு அர்த்தம் வேறே. ''மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்'' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான். 

''மத்ஸ்யம் தொட்டு'' என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன். நீ என்ன பண்றே. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.'' அப்பாடா, கடைசியில் சுலபமாக வாத நோய் குணமாக ஒரு பரிகாரம் கிடைத்ததே என்ற சந்தோஷம் அவருக்கு. 

''ஒ, நான் ஒரு முட்டாளாக்கும் . இப்படி ஒரு அர்த்தமோ இதுக்கு. அதுவும் நம்பூதிரி, அதுவும் குருவாயுரப்பன் கோவில்லே உள்ளே மீனை வாயில் வைத்துக்கொண்டு............'' என்று அந்த ஜோசியன் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்ஜிண்டுட்டேன். நம்பிவிட்டேன் . அதாக்கும் கோபம் வந்துது. ''

பட்டத்திரிக்கு இன்னுமொரு சந்தோஷம் என்ன வென்றால் அவருடைய குரு கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று. அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது. 

''நாராயண பட்டத்திரிக்கு எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன ? '' என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர். 

நடக்க முடியாதே பட்டதிரிக்கு. ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்துத் கொண்டு குருவாயூர் சென்றனர். ''எப்போ குருவாயூர் வரும், எப்போ நாராயணனைப் பார்ப்போம்'' --- பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளைக் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம்'' என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். '' ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' -- அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர். 

தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள்,  அனைவரும் அவனைத் தொழ வருவார்களே. அவர்களில் ஒருவராக பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.

பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்? இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி. 

அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, '' என் கண்ணா'' என பக்தியுடன் கதறினார்.  சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை. 

அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ''ஏ உன்னிக் கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!'' என்று கதறுகிறார். 

'' இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா'' என்று அழுது கண்ணீர் மல்குகிறார். 

அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம்

'' சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு'' என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .

குருவாயூரப்பன் சும்மாவா இருப்பான் ? அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை வேலை செய்து, அவருக்கு வாத ரோகத்தை வேறு கொடுத்து இழுத்து வந்திருக்கிறான். முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான் .

''நாராயண பட்டத்திரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா ?''

'' அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? ''

'' பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா ?. பட்டத்திரி. நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி'' என்று கூறி கிருஷ்ணன் அனுக் ரஹம் செய்கிறார். 

(இப்பொழுதும் குருவாயூர் ஆலயத்தில் 'நாராயண பட்டத்ரி மண்டபத்தில்' உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.)

அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, 'நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்'' என்று எழுதி வைத்திருக்கின்றனர். சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், ''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ''பட்டத்ரி மண்டபம்'' என்று பேர்'' குருவாயுரப்பனே கூறினார்.)

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.

'' நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க, 
'' உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்'' என்று குருவாயூரப்பன் கூறுகிறான். 
'' நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்''

ஒரு முக்ய விஷயம். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார். 

குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம் 

"ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்" 


⭐சசிகுமார் அடுத்தாக 'குட்டிப்புலி' இயக்குனர் 🎬முத்தையா இயக்கத்தில் 🎥'கொடி வீரன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் ⭐சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் 👿ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சசிகுமார் தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.   


சேலம் அருகே தாரமங்கலம் வழியாக, பல கோடி ரூபாய்💰 மதிப்புள்ள மரகத லிங்கம்🙏 கடத்தப்படுவதாக 👮போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பால்பண்ணை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த 🚗காரை மறித்து 👮போலீசார் சோதனையிட்டனர். அதில் 7⃣ கிலோ எடை கொண்ட பச்சை மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.25 கோடி💰 இருக்கும் என ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். இதுதொடர்பாக காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 5⃣ பேர் கைது⛓ செய்யப்பட்டனர்.   


 மனைவி இறந்த இரண்டு மாதங்களில் சந்திர ஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

கமல் ஹாஸனின் சகோதரர் சந்திரஹாஸன்(82) மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அனு ஹாஸனின் வீட்டில் அவர் தங்கியிருந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

கமலின் இரண்டாவது அண்ணனான சந்திர ஹாஸன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேனல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார். தம்பி கமலுடன் சேர்ந்து படங்களை தயாரித்து வந்தார்.

சந்திர ஹாஸனின் மனைவி கீதாமணி கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். மனைவி இறந்த 2 மாதங்களில் சந்திர ஹாஸனும் இறந்துள்ளார்.

அனு ஹாஸனுக்கு நிர்மல் ஹாஸன் என்ற சகோதரர் உள்ளார்.l

சந்திர ஹாஸன், நிர்மல் ஹாஸனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை கடந்த ஆண்டு கமல் சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சந்திர ஹாசனின் மனைவி கீதா மணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார். பரமக்குடியில், 1936-ம் ஆண்டு பிறந்த சந்திர ஹாசன் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.  
*Professional Ethics:* 😜

தொண்டன்: எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் ஐஞ்சாயிரம் தர்றீங்க?
வாங்கிட்டு போடலன்னா?"

தலைவன்: "அட...விடுடா...
வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? 
குடிப்பான்.
அவன் குடிக்குற பார் நம்மளது.

ஓவரா குடிச்சா குடல் வெந்து ஆஸ்பத்திரி சேர்வான்.
ஆஸ்பத்திரியும் நம்மளது.

அதுவும் இல்லாட்டி--ஸ்கூல்-காலேஜ் பீஸ் கட்டுவான்.இது ரெண்டுமே நம்மளது...

கவலப்படாத-எங்க சுத்துனாலும்,நம்ம பணம் நம்மட்ட வந்துரும்...

என்ன நடுவுல ஒரு ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும்... அவ்வளவு தான்...

*#படித்ததில்  நொந்தது..*😂 😅 


நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட 🏠வீடுகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 3⃣ ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் புகுந்து வருகின்றன. வயல்கள் மற்றும் தோட்டங்களில் விளைவிக்கப்படும் நெல், வாழை, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திவிடுகின்றன😟. நூற்றுக்கும் மேற்பட்ட 🐐ஆடு, 🐮மாடு, 🐶நாய் வளர்ப்பு விலங்குகளை தூக்கிச் செல்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது பொதுமக்கள், வனத்துறையினரை தடுத்து நிறுத்தி, சிறுத்தை வருவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வலியுறுத்தினர். வனவிலங்குகளால் உயிருக்கு ஆபத்து ஏற்ப்டுமோ என்று அச்சம் இருப்பதாகவும், அதிகாரிகள்👮 உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


ராஜமௌலி இயக்கத்தில்🎬 பிரபாஸ், 💃அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் 'பாகுபலி-2'. இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு பெரும் சாதனையை அடைந்துள்ளது😳. இதனையெடுத்து, இப்படத்தின் வெளியீடு தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது😍. வரும் ஏப்ரல் 28ந் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வ🤗 தகவல் வந்துள்ளது. மேலும், இதில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் 'பாகுபலி-2' முற்றிலும் புதுமையான முறையில் ஐமேக்ஸ் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிட போகிறார்களாம். 



இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. தமிழக விவசாயிகளுக்கு🏛 மத்திய அரசு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்😯. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ராஜலட்சுமி என்ற விவசாயி🔈 கூறுகையில், "எங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி மத்திய 🏛அரசிடம் கொடுத்தோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைகளை கண்டுக்கவில்லை😟. நாலு நாட்களாக பசியும் பட்டினியுமாய் உள்ளோம்😟. பனியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டத்தில் இருந்த 4 பேரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம்😳. எங்கள் மரணத்தை😢 பார்த்தாவது உங்களுக்கு ஈவு இரக்கம் வருமா?", என்று கூறியுள்ளார். இந்தநிலையில் இன்று மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணா இவர்களுது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததாகவும், அதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கை விட்டதாகவும் கூறப்படுகிறது😳.


மணி அடித்து பூஜை 
செய்வது என்பது நாம் 
அனைவரும் அறிந்த ஓன்று .
அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன . 

பூஜை ஆரம்பிப்பதற்கு 
முன்னால் மணி அடித்தால், 
அந்த மணி சப்தம் கேட்டதும் 
வீட்டில் எதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் 
அது வெளியே ஓடிவிடும்.

துர்தேவதை, 
போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; 
அதனால், மணியடித்து 
அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.

ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும்
ஒருவேளை வந்து விடலாம். 
அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், 
அவை இருக்குமிடத்தில் தெய்வங்கள் வரமாட்டார்கள்! தினமும் மணி அடிப்பதால் 
அந்த மணி துர் சக்திகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதோடு மட்டுமில்லாமல், 
தேவர்களையும், 
தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் 
போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அதனால்.! 
மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். பூஜையின்போது, 
இறைவனுக்கு படையல் போடுவதை நைவேத்யம், நிவேதனம் என்று சொல்வர். நிவேதனம் என்ற சொல்லுக்கு அறிவித்தல் என்று பொருள். 
அந்த அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே மணியாகும்.

கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் 
கொண்டே இருக்கும். 
அப்படி கோயில்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, 
இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் கிராமத்தை விட்டு ஓடி விடும்.

இத்தகைய சிறப்பு மிக்க அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் 
கூறுகின்றன ! 

இந்த பூஜா மணியின் 
அதிதேவதை வாசுதேவர் !

மணியின் நாக்குக்கு 
     அதிதேவதை சரஸ்வதி ! 

அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியன்.!

நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன் !

எனவே , 
மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

காண்டா மணி 
    பூஜைக்கான மந்திரம்:

"ஆகமார்த்தம் துதேவாநாம்  
     கமநார்த்தம் து ரக்ஷஸாம்
      காண்டாரவம் கரோம்யத்ய
        தேவதாஹ் வானலாஞ்ச நம:"

உள்ளத்தில் தூய்மையான 
உணர்வு எழுவதற்கும், 
தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அப்போது சொல்லும் 
ஸ்லோகத்தின் பொருள். 

மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, 
அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

                       நன்றி

   அழகிய கிராமத்திற்கு
ஒரு முனிவர் வந்திருந்தார்
.ஊருக்கு மத்தியில் இருந்த
மரத்தடியில் அமர்திருந்தார்
.யாருமே ஊரில் அவரைக்
கண்டுகொள்ளவில்லை . முனிவர்
அல்லவா ?
கோபத்தில் சாபமிட்டார் அந்த
ஊருக்கு .." இன்னும்
50வருடங்களுக்கு இந்த
ஊரில் மழையே பெய்யாது
.வானம் பொய்த்துவிடும் " … இந்த
சாபம் பற்றி கேள்விப்
பட்ட அனைவரும் என்ன
செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின்
காலடியில் அமர்ந்து
மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு
விமோசனம்
கிடையாது என்று
கூறிவிட்டார் முனிவர்
.வேறு வழியின்றி
அனைவருமே அவரின்
காலடியில் அமர்ந்து இருந்தனர் …
மேலிருந்து
இதைக் கவனித்த பரந்தாமன்
தனது சங்கினை எடுத்து
தலைக்கு வைத்து
படுத்துவிட்டான்
( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை
வரும் என்பது
நம்பிக்கை ). இன்னும் 50
வருடங்கள்மழை பெய்ய
வாய்ப்பில்லை என்பதால்
இனி சங்குக்கு ஓய்வு
என்றே வைத்து விட்டான் …) அந்த
ஊரில் ஒரு அதிசயம்
நடந்தது …
ஒரே ஒரு உழவன்
மட்டும் கலப்பையைக்
கொண்டு தினமும்
வயலுக்குச் சென்று வந்து
கொண்டிருந்தான் .அவனை
அனைவரும் பரிதாபமாகவே
பார்த்தனர் .மழையே
பெய்யாது எனும்போது
இவன் வயலுக்கு போய் என்ன
செய்யப் போகிறான் என்ற
வருத்தம் அவர்களுக்கு … அவனிடம்
கேட்டே விட்டனர் . நீ செய்வது
முட்டாள்தனமாக
இல்லையா என்று ..அதற்கு
அவனின் பதில்தான்
நம்பிக்கையின் உச்சம் "' 50
வருடங்கள் மழை பெய்யாது
என்பது எனக்கும் தெரியும் .
உங்களைப் போலவே நானும்
உழுதிடாமல் இருந்தால் 50
வருடங்கள் கழித்து உழுவது
எப்பிடி என்றே எனக்கு
மறந்து போயிருக்கும்
..அதனால்தான் தினமும் ஒருமுறை
உழுது
கொண்டு இருக்கிறேன் "
என்றான் .
இது வானத்தில் இருந்த
பரந்தாமனுக்கு கேட்டது
.அவரும் யோசிக்க ஆரம்பித்தார் .."50
வருசம்
சங்கு ஊதமால் இருந்தால்
எப்பிடி ஊதுவது என்று
மறந்து போயிருமே ".என்றே
நினைத்து சங்கை எடுத்து
ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி
இடித்தது …மழை பெய்ய
ஆரம்பித்தது …நம்பிக்கை
ஜெயித்து விட்டது .
" தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் "
"Self confident never fail"
வெற்றி நிச்சயம் !!



நீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே சேர்ந்து அருணாச்சலத்தை வலம் வருமாம்!!! 

இதற்குக் காரணம், அத்தனை கோடிப் பிறவிகளுக்கும் முற்றுப்புள்ளி இடும் ஆன்மசாதனமே அண்ணாமலை கிரிவலம் என்பதால்தான்!
நமது பிரபஞ்சத்தில் அருணாச்சலமான திரு அண்ணாமலையில் மட்டுமே இது சாத்தியமாகும்.இது நிகழ்ந்தாகிப் பிறவிப்பெரும்பயன் அடைய வேண்டுமென்றால், பவுர்ணமி தினம் போன்று மாதசிவராத்திரி நாளிலும் அருணாச்சல கிரிவலத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
நன்றி:பக்கம் 11,ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜனவரி 2010 மாத இதழ்.